Sunday, July 8, 2012

ஏன் இப்படி ... 64

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





கெட்டவனா இருந்து கொஞ்சம் திருந்தி வாழ்வது

ரொம்ப கஷ்டம்..விளக்கம் கொடுத்தே வாழ்க்கை

முடிஞ்சிடும் போல இருக்கே..


கெட்டவனா இருக்கும்போது எதிர்கொண்ட கேள்விகளைக் 


காட்டிலும் திருந்தியதுக்கு அப்புறம் தான் அதிகம்

கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கு..



 


தப்பு செய்ய தானே காரணம் வேணும்..திருந்துவதற்கு நாம 

செய்யுறது தப்புன்னு உணர்ந்தாலே  போதுமே..இன்னொரு 

காரணமா வேணும்..?


 


வெறுத்து ஒதுக்கப்படுவதை விட,நம்பலாமா வேணாமானு 

யோசிச்சு பழகுறது தான் கொடுமையானது…

 


ப்ராங்கா இருந்தா ப்ராடுனு திட்டுறாங்கப்பா..



சந்தோஷத்தில இருக்கும்போது சாதாரணமா தெரியுற 

பிரச்சினைகள் ,வருத்தத்தில் இருக்கும்போது விஸ்வரூபமா 

தெரியுது ..#என்ன எழவுடா இது ..


மற்ற நேரங்களைக் காட்டிலும் வருத்தத்தில இருக்கும்

போது நகைச்சுவை உணர்வு ஏனோ அதிகமா இருக்கு ..

ஹ்ம்ம்..கண்டிப்பா தேவையும் கூட .. 


ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கேவலமாக 

பார்க்கும் மக்கள்,தமிழைத் தப்புத்தப்பா பேசுவதை பத்தி

கவலைப் படவே மாட்றானுங்க..



 


தாய்மொழியை எழுதும்போது பிழை வந்தாலே அது அசிங்கம்..

இதுல பேசும்போதே "ஸ்பெல்லிங் மிஸ்டேக்" பண்றவனுங்களை 

ன்ன பண்ணுறது..?#பிழைனா என்னனு கேட்டுடப் போறானுங்க..


நாம வருத்தத்தில்  இருக்கும்  நேரங்களை  விட 

நமக்கு ரொம்ப பிடிச்சவங்க வருத்தத்தில் இருக்கும் 

போது தான் மனசு அதிகம் வலிக்குது . .

No comments: