Tuesday, August 10, 2010

யாருடா அந்த yaar....???

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இது நான் AURANGABAD ல மூணு

 

வருஷம் முன்னால இருந்த

 

போது நடந்தது....



புதுசா கம்பெனில சேர்ந்து சும்மா

இருந்த வரைக்கும் இந்த

பிரச்சனையில்லை. அதுக்கு அப்பறம்

லைன் ல  போட்டானுங்க...

நம்மள  தவிர எல்லாருக்கும்

ஹிந்தி தெரியுது... எங்க executive ,

எப்ப ஆரம்பிச்சாலும் ஹிந்தில தான்

ஆரம்பிப்பான் ... அந்த சனியனுக்கு

ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது...

அடிக்கடி உஸ்கே பாத், உஸ்கே பாத்னு

சொல்லிக்கிட்டு இருப்பான் அந்த மாயாவி

மீசை..... நான் கூட காரா பாத், கேசரி பாத்

மாதிரி அது ஒரு பாத் போல

இருக்குனு நினைச்சிக்கிட்டேன்...


அங்க  இந்த காரா பாத் (உப்புமா),

கேசரி பாத், சவ் சவ் பாத்

(கொஞ்சம் உப்புமா, கொஞ்சம் கேசரி)

இதெல்லாம் ஃபேமஸ்.. நானும் ஒரு நாள்

ஓட்டல்ல போய் உஸ்கே பாத் இருக்கானு

கேட்டேன். அவன் என்னை பார்த்த

லுக் இருக்கே. சரி அந்த கொடுமைய

இப்ப எதுக்கு சொல்லிட்டு.

அப்பறம் தான் தெரிஞ்சிது அது

சாப்பிடற ஐட்டம் இல்லைனு.

அதுக்கு அப்பறம் அது என்னனு

 நான் தெரிஞ்சிக்கிற ஆசைலயே இல்லை...


அப்பறம் நம்ம கூட இருக்கறவனுங்க

இங்கிலீஸ்ல பேசும் போதும்

What yaar, no yaar, come on yaarனு

சொல்லிக்கிட்டே திரியுவானுங்க. .

நான் கூட அது இங்கிலீஸ் வார்த்தை

தான்னு ரொம்ப நாள் நினைச்சிட்டு

இருந்தேன்... நமக்கு தான் இந்தி

வார்த்தையே தெரியாதே ..

(ஏக், தோ, தீன், சார், சே, சௌ மட்டும் தெரியும்).

இங்கிலிஸ்லயும் ஸ்டைலா பேச தெரியாது...


அப்பறம் ஒரு நாள் europe ல இருந்து 

ஆடிட்டிங் வந்தானுங்க... அப்போ  No yaar னு

ஒருத்தவன் சொல்ல. What is that yaar னு

அவன் கடைசியா கேட்டான்...

அப்பதான் இந்த yaar வண்டவாளம்

தண்டவாளம் ஏறிடுச்சி. இப்படி

பேசிட்டுத்தான் இத்தனை நாள்

ஃபாதர் ஆப் ஃபாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு

பில்ட் அப் கொடுத்து இருக்கானுங்க  ....???


yaar னா friendly யா  சொல்றதாம்...

நம்ம பாஷைல சொன்னா

மச்சினு வெச்சிக்கோங்களேன்...

அதுக்கு அப்புறம் நாமலும் இப்படியே

 பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்...

மானே தேனே பொன் மானே மாதிரி

 what yaar, come on yaar னு

அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி... 


என் ஹிந்திய பார்த்துட்டு இங்க

அவனவன் ஆச்சர்ய படுறான்... 

நானும் நெறைய ஹிந்தி படம்

பார்த்து தாங்க கத்துகிட்டேன்...

( பாஷையை சொன்னேன்...)

நான் அங்க இருந்த peroid ல தான்

நம்ம INRAN ASMI நடிச்ச..



AKSAR ,

AASHIQ BANAYA AAPNE 












போன்ற ஹிந்தியின் மிக சிறந்த  

படங்கள் வெளி வந்து இருந்தது...

( என் பேச்சை கேட்டு வீட்ல

எல்லாரும் இருக்கும் போது

போட்டு பார்த்து அடி வாங்குனா

நான் பொறுப்பல்ல...)


ஒரு வில்லன் ரேப்  பண்ண

HEROINE AH    தொரத்திகிட்டு போகும்

போது.. அந்த பொண்ணு பச்சாவ்...பச்சாவ்.. 

னு கத்துச்சுனா  என்ன அர்த்தம்...

என்ன காப்பாத்துங்க  ..காப்பாத்துங்க

னு தானே அர்த்தம்...



 மன்னிக்கணும்...

நான் பார்த்த  படங்கள்

அப்படி...


படம் பாருங்க..


பாஷையை  பழகுங்க..