Monday, August 9, 2010

பெ’ண்’களூர்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


கடந்த மாதம் 28 ம் தேதி...

நான் பெங்களூர் போயிருந்தேங்க...

ஏற்கனவே நாலைந்து முறை

போயிருக்கேன்...

ஆனா.. இது


ஜாலி டூர் எல்லாம் 

ஒண்ணும் இல்லைங்கோ,,,


நாங்க பார்ட்  சப்ளை பண்ணது

சரி இல்லைன்னு எங்க பெங்களூர்

பிளான்ட் ல இருந்து  கஸ்டமர்

கம்ப்ளைன்ட்  வந்துடுச்சு...


ஆனா நான் யாரு...

தப்பு எங்க மேல இருந்தாலே

இல்லைன்னு சாதிச்சுட்டு தான் வருவேன்...

ஆனா  இந்த தடவை

உண்மையிலேயே தப்பு

எங்களோடது இல்லை...


அட .. ச்ச... மறுபடியும்


கம்பெனியவே கட்டிக்கிட்டு


அழுவுறேனே...
அதை எல்லாம் விடுங்க...

சாயங்காலம் ஒரு அஞ்சு மணி இருக்கும்... .

MG ரோடு போயி  இறங்குனேன்...

பஸ்ல வரும்போதே ஜீன்ஸ்

போட்ட நெறைய ஜில்லுகளை

பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டே

வந்திருந்தேன்...

சீட்ட நனச்சுகிட்டே travel

பண்ணி வந்தேன்னா பாருங்களேன்...
அது வேற AC பஸ்...

ஏசியை நினைக்கும் போது

சுஜாதாவின் ஒரு நடுப்பகல்

மரணம் கதையில் ஒரு வசனம்

வரும் ”ஏசி ரூம் இருக்குமா?”

“பெங்களூர் முழுக்கவே ஏசி..

தனியா ஏசி வேறயா“ என்பது போல்

வசனம் வரும்.

குளோபல் வார்மிங்.


************************************************************************************************


பொண்ணுங்க எல்லோரும் செய்து

வைத்ததை போல்...

கடைகளில் வைத்திருக்கும் பொம்மை

போல இருக்கிறார்கள் அதே அளவுகளில். .

இவர்களை எல்லாம் எங்கிருந்து

செய்து அனுப்புறாங்களோ..? நீங்க

எல்லாம் எந்த எந்த தெருவிலடி

இருக்கிறீங்கோ...

அதிலும் அந்த பிரிகேட் ரோட்,

எம்.ஜி.ரோடில் நடப்பவர்கள்

முக்கால்வாசி பேர் ஏறக்குறைய

தேவதைகள்.

சரிவான அந்த ரோட்டில் அவர்கள்

"மிதந்தபடி" நடப்பதை பார்த்து

கொண்டிருந்தாலே போதும் போலிருக்கிறது.

வித விதமா.. ரக..ரகமா..

கலர்..கலரா.. பிகரு ..

சார்..பிகரு..  

கருப்பாய், மாநிறமாய், சிகப்பாய்,

பக்கத்துக்கு வீட்டு அக்கா போல..

எதிர் வீட்டு ஆன்டி போல...
ஈரானிய சிகப்பாய், நீட்டு மூக்காய்,

கொஞ்சம் விரிந்த மூக்காய்,

பெரியதாய், சின்னதாய், மீடியமாய்,

( இது என்னனு வேற சொல்லணுமா...) அழகான கண்கள், மருண்ட கண்கள்,

அரை போதையில் மயக்கும் கண்கள்,

ஓரப்பார்வை பார்க்கும் கண்கள் ,

ரகசியம் பேசும் கண்கள், நீண்ட முடி,

ஷார்ட் கட், பாய்கட், உயரம், குள்ளம்,

மீடியம், சற்றே அகண்ட இடை, மெல்லிடை,

அட இதுதான் இடை பெருத்தவள்,நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ,

பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக்

கொண்டு, லேசான போதையுடனும்,

ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட்

பிடிக்கும் மெல்லிய, தடித்த,

உதடுகளின் (அதரங்களின்) அழகும்,

என்று

“கடவுளே உனக்கு ஏன்


என்மேல இத்தனை காண்டு”

னு கத்திட்டேங்க  ...
அத்தனையும் பார்த்துகிட்டே

அனில் கும்ப்ளே circle கிட்ட

போனா... ஒரு பொண்ணு

 என்ன கை காட்டி கூப்பிட்டுச்சு  ..

அது இருந்த அழகை பார்த்தா

சத்தியமா என்ன கூப்பிடாதுனு

உள்மனசு சொன்னாலும்..

வாலிப வயசு.. பெங்களூர் குளிரு

ரெண்டும் அந்த பொண்ணுகிட்ட

என்ன போக வைத்தது...

மணி அப்போ சரியாய் 6 .45 ..

பொண்ணுங்க கிட்ட பேசும்

போது மட்டும் எனக்கு இங்கிலீஷ்

கொஞ்சம் வரும்..

அவ என்கிட்டே கேட்டா

மொதல் கேள்வி...

நீங்க தமிழா ???..

நானும் ஆமாங்கனு அசடு வழிய...

ஏங்க ரொம்ப நேரமா பே னு

முழிச்சிகிட்டு  நிக்குறீங்க... 

வழி தெரியிலையானு  கேட்டு

அசிங்க படுத்திட்டா  ... 

நானும் வெக்கமே இல்லாம

ஆமாம்னு சொல்லிட்டேன்..

பொண்ணுங்க கிட்ட பேசும்போது

மட்டும் இந்த மானம் மாரியாத்தா ..

வெக்கம் வேலாயுதம்..

சூடு சூலாயுதம் எல்லா

காணாம போயிடுதுங்க  ...  ..
அதுக்குள்ளே இவனுங்களுக்கு

எப்படி தான் தெரியுமோ...

ஏதோ ஒரு சொறி புடிச்ச

மொன்ன நாயி அவளுக்கு

போன் பண்ணி கூப்பிட்டான்...

அவளும் எனக்கு வழி சொல்லிட்டு

டாட்டா காமிச்சுட்டு போயிட்டா...

இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்...

அப்புறம் நான் என் நண்பனை

பார்த்துட்டு ஒரு வழியா

ஊர்  வந்து சேர்ந்தேன்..  ...

ஆனா அந்த  ஊரு நிச்சயமாய்...


பெங்களூர் இல்லங்க...


பெ’ண்’களூர்..