அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
எனக்குள்ள இருக்குற கவிஞன ஊருக்கு வெளிச்சம் போட்டு
காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு...
( ஒண்ணுமில்லைங்க... கொஞ்ச நாளாவே
புரிஞ்சவன் தான் பிஸ்தா பதிவ
போட்டேன் இல்லையா... அதான்
இது பாவ விமோசனம்...)
இந்த பதிவு...
முழுக்க முழுக்க
பெண்களுக்கு சமர்ப்பணம்...
இப்படி ஒரு பெண்ணா..
இப்படி ஒரு பெண்ணா..
இது..இது..இது வரையில்
பார்த்ததில்லை....
இப்படி ஒரு கண்ணா..
இப்படி ஒரு கண்ணா..
இது..இது..இது வரையில்
கண்டதில்லை...
இப்படி ஒரு பதுமை பிறந்ததில்லை...
இப்படி ஒரு முழுமை இருந்ததில்லை...
உன்னை முழுதும் பாட இனி
மொழியில் வார்த்தை இல்லை..
இப்படி ஒரு பெண்ணா..
உன் சிரிப்போ சிதறிடும் முத்தாக..
உன் நினைவில் அலைகிறேன் பித்தாக..
உந்தன் ஓர விழிப்பார்வை
ஒன்றே உயிரின் சத்தாக..
இப்படி ஒரு பெண்ணா..
உன் கொலுசின் ஓசை கேட்டாலே...
உடல் முழுதும் சிலிர்க்கிறேன் தன்னாலே..
இந்த பூமியில் நான்
வாழ்வெதெல்லாம் உன்னாலே...
இப்படி ஒரு பெண்ணா..
உன் புருவம் வளைந்திடும் வில்லாக...
உன் பெயர் என் வேத சொல்லாக..
நீ தீண்டும் வரையில் நான்
இருந்தேன் வெறும் கல்லாக..
இப்படி ஒரு பெண்ணா..
என் வாழ்வில் வந்தாய் தேவதையாய்..
என்னை ஜனித்தாய் மீண்டும்
ஒரு தாயாய்..
உந்தன் பிரிவு என்னை இங்கு
வாட்டுகிறதே தீயாய்...
இப்படி ஒரு பெண்ணா..
( இந்த இடம் எனக்கு
மனைவியா வர போறவங்களுக்கு...)
உன் இதழ்கள் பேச மறுத்தாலும்...
விழிகள் ரெண்டும் பேசிடும் அது போதும்...
நீ I LOVE YOU என்று சொன்னால்
என் வலி தீரும்...
இப்படி ஒரு பெண்ணா..
( அட.. அது யார்னு தான்
நாக்கை தொங்க போட்டுக்கிட்டு
தேடிகிட்டு இருக்கேன்...)
ரோஜாப்பு வண்ணம் கொண்டவளோ...
காஷ்மீர் ஆப்பிள் கன்னம் உடையவளோ...
அந்த பிரம்மன் படைப்பில் மிக
சிறந்த பெண்ணும் இவளோ...
இப்படி ஒரு பெண்ணா....
( இந்த பிட்டை தான் சண்டை
வரும் போது எல்லாம் சொல்லி
சமாதான படுத்தலாம் னு இருக்கேன்..
நீங்களும் உங்க காதலி கிட்டயோ..
மனைவிகிட்டயோ சொல்லி முயற்சி
பண்ணுங்க..)
அப்புறம் ஒரு
முக்கியமான விஷயம்...
பதிவ படிச்சிட்டு கமெண்ட்
போடாம போறவங்க
ரத்தம் கக்கி சாவாங்க...
( நானும் வலிக்காத மாதிரியே
எவ்வளவு நாள் தான் நடிக்கிறது...
அட.. எதாவது சொல்லிட்டு
போங்கையா...)