Monday, August 30, 2010

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??



ஒரு சலவை தொழிலாளிகிட்ட 

ஒரு நாயும்கழுதையும் இருந்துச்சு
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி 

 ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும் 

போது வீட்டுக்குள்ள கதவை  

உடைச்சிட்டு ஒருதிருடன்  

வந்துட்டான்
 சலவை தொழிலாளி நடப்பது  

தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க

திருடனைப்பார்த்த நாய் 

குரைக்காமல்கம்முன்னு 

இருந்துச்சு.



சரியா சோறே போடறதில்லை,
 
இவனுக்கு நாம ஏன்  

உதவிபண்ணனும்னு நாய்  

குரைக்கவில்லை.  
அதைப்பார்த்த கழுதை

என்னடா இவன் கம்முன்னு

இருக்கான்
 குரைச்சு முதலாளியை

எழுப்புவான்னு பார்த்தா  

சும்மா இருக்கான்
 சரி நாமளாவது சத்தம்போட்டு 

 முதலாளிக்கு திருடன் வந்ததை 

 அலர்ட் பண்ணுவோம்னு

கத்த ஆரம்பிச்சுது.  
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து 

 எந்திருச்ச சலவைதொழிலாளி  
ஒருகட்டையை எடுத்து

பளார்னு கழுதை தலைல 

ஒரே அடி.  
கூறுகெட்டகழுதை  

நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு 

 இருக்கேன்னு கழுதையை

திட்டிவிட்டு திரும்பவும்

படுத்துகிட்டான்.



நீதி : ஆபிஸ்ல என்னவேலை

கொடுத்திருக்கோஅதைமட்டும்தான்

செய்யனும் ஓவரா சீன்  

போட்டாஇப்படித்தான்.


இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...




கழுதை கத்தியதும் எழுந்த  

சலவைத்தொழிலாளி,  
கழுதை சும்மாகத்தியிருக்காது 

காரணாமாகத்தான் கத்தியிருக்கும் 
என்று எழுந்துபார்த்து திருடன்

வீட்டுக்கு
வந்ததால்தான் கழுதை 

 கத்தியதுஎனப்புரிந்துக்

கொண்டான்.  
அடுத்த நாள் கழுதைக்கு

வகைவகையா

சாப்பாடு போட்டான்.  
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.




கழுதையோட ஆர்வக்கோளாறும்,

விசுவாசமும் முதலாளிக்கு

பிடித்துவிட
 
 இவன் ரொம்ப நல்லவன்டா 

 எவ்ளோ வேலைகொடுத்தாலும்

செய்யிறான்னு முதலாளியின்

எல்லாவேலைகளையும் 

 கழுதையை செய்ய வைத்தான்.  

நாய்செய்துக்கொண்டிருந்த  

வேலையும் கழுதையின்  

மேல்சுமத்தப்பட்டது
 நாய் சுகமாக வேலையே 

செய்யாமல் கழுதையைபார்த்து 

சிரித்துக்கொண்டிருந்தது 

வேலை செய்து அலுத்துப்போன



கழுதை இப்போது வேறு  

வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...



நீதிஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா

ப்படியும் நடக்கலாம்.

அட ராமா... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..

 அய்யா பாருங்க...அம்மா பாருங்க...

இந்த கொடுமைக்கு எல்லாம்

நான் ஆளாகவே மாட்டேன்...


நாட்டுல இருக்குற கட்சிகள்

எல்லாம் போதாதுன்னு இவனுங்க

வேற ஈசல் மாதிரி 

புதுசு புதுசா , வித விதமா , 

ரக ரகமா , தினுசு தினுசா 

சாவடிக்கிறானுங்க...




பொட்டிக்கடைல கடன் சொன்னது , 

பீடிய திருடி குடிச்சது  , 

கருப்பட்டிய நக்கிட்டு ஓடனது 

இப்படி எல்லா நாயும் ஆளுக்கு ஒரு 

வெப்சைட் உருவாக்குனா நாம 

என்ன பண்ண முடியும்...










அதுல ஒரு கொடுமை இதோ...


அ .இ.கா.க.


அந்த கெரகம் புடிச்ச கழகத்தோட

தானை தலைவர் , காதல் காவலன் , 

அண்ணன் குமார் ஸ்ரீ ஸ்ரீ யின்

தக தக புகைப்படங்கள் இதோ...


அவனா நீயி..


மகா ஜனங்களே  ... ஆஹ்.. மகா ஜனங்களே..


என்ன பண்ணலாம்னு நீங்களே 

முடிவு பண்ணிக்குங்க...



Saturday, August 21, 2010

ஒரு இன்ஜினீயர எப்படி பயமுறுத்துறது..












Happy Week End Engineers....
.    

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...



எல்லாருக்கும் பீர் குடிப்பதற்கு

ஒரு காரணம் வேணும் இல்லியா..? 

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை

ஒரு புண்ணியவான் சொல்லிருக்க 

அதனை நாம் சிரம் தாழ்த்தி  

கேட்டுக்கொள்ள வேணும் தானே.. !

 இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. 


மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. 

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

கவனிக்கவும்- அருந்துவது.

வயிறு முட்ட குடித்து விட்டு 

வண்டியை  மெயின் ரோடில்
ட்ராபிக் மெரிடியனில் முட்டி 
விட்டு மல்லாந்து 
கிடக்க அல்ல.





. பீர் குடிப்பது மன அழுத்தத்தை

குறைக்கிறது. உண்மை ...


பொதுவாகவே அளவான ஆல்கஹாலில்

இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது

மன நிலையை இயல்பான,

மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு

செல்கிறதாம்.






2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.


1982-1996 இந்த வருட இடைவெளிகளில்

நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு

நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில்

பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 

20 - 50 சதவீதம் இருதய நோய் 

வரும் சந்தர்ப்பம் குறைவு.






3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக 

வைக்க உதவுகிறது.


பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை

Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) 

தருகிறது.எனவே இது இரத்தம் தன் 

பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)






4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 

இந்த நார் சத்தானது மால்டட் 

பார்லியில் இருந்து கிடைகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக நம்

உடலுக்கு தேவையான நார் சத்தில் 

சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் 

இருந்து கிடதுவிடுமாம்.இப்படி 

எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும்

நார் சத்து இருதய நோயிலிருந்து 

நம்மை காக்கும்.








5 . பீர் வைட்டமின் செறிந்தது. 

 ( பழைய போர்ன்விடா விளம்பரம் 

மாதிரி இருக்கு)


பீரிலிருந்து பல வகை விட்டமின்கள்

கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,

பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
 
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.








6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின்

படி மது அருந்துபவர்களுக்கு இதய

நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.

காரணம், அளவான மது இரத்தத்தின்

அடர்த்தியை குறைகிறது.இதனால் 

மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்

தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக

சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள

மூளையில் இரதம் கெட்டியாகாமல் 

அதனால் மாரடைப்பு வராமல் எளிதான

இரத்த ஓட்டம் அமைய 

வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.








7. பீர் உங்கள் மூளையை
இளமையாக வைக்கிறது.


2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .






8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.


மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன


 This is from Beer Net Publication, 
April 2001 Biological Institute.








9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)


லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.






10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.


நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

****************************************




என்ன, ரொம்ப குஷியா ..?? 
இனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...


சரி சரி அளவோட இருந்தா
தான் இதெல்லாம்..
இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்..


ஆல்கஹால் அருந்தி...
ஆரோக்கியமா வாழ்வோம்...


cheers ....   

Friday, August 20, 2010

உளறல்கள்...( உணர்வுகள் னும் சொல்லலாம் )



பொத்தி..பொத்தி..வச்சது...

இப்ப பொங்கிடுச்சு...

பிடிச்சி இருந்தா சொல்லுங்க... 


பிடிக்கலைனாலும் சொல்லுங்கப்பா...




உன்
முத்தத்திற்கு
தினம் தினம்
படையெடுக்கும்
நானும்
கஜினி முகமதுதான்





அன்பே
ஏனடி இப்படி
பொங்குகிறாய்..


நீ என்ன
அடுப்பில் வைத்த
பாலா!?!?


இல்லை
ஆட்டி குலுக்கிய
பீரா!?!?


மாமா நான்
பாவம் இல்லை.... 





உனக்காக நான் காத்திருக்கும்
போதும் நீ எனை கொல்கிறாய்...
நான் பிடிக்கும் சிகரெட்டுகளாய்..


இரு வரி கவிதை
உன் இதழ்கள்
அதில் வார்த்தைகளாய்

எந்தன் முத்தம்....


ஆரஞ்சு சுளைக்கு
திருஷ்டிப்பொட்டு... 
உன் உதட்டு மச்சம்...







அலையும் கூந்தல் முகத்தை மறைக்க
ரகசிய உதடுகள் காது கடிக்க
உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க
மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக
கால்கள் அகற்றி தொடைகள் உரச
கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த
இந்த இறுக்கம்
காதலா..?
காமமா...?
நம்பிக்கையின்மையா..?
அறிந்து கொள்ள ஆசை
மனம் பிறழ்ந்து போகும் முன்..

கடைக்கண் பார்வைதனை
கன்னியர்கள் காட்டிவிட்டால்
மண்ணில் மாந்தர்கு
மாமலையும் ஓர் கடுகாம்...!

படித்து சிரித்த வரிகளை
படித்து ரசிக்க வைத்தாயடி..

எத்தனை முறை
கேட்டாலும் கூட
அலுப்பதே இல்லை - எனக்கு
உன் செல்போன் முத்தம்...!!
 

கொடுத்தால்
மட்டுமல்ல - கவ்வி
எடுத்தாலும் சலிக்காதது
முத்தம்..

நான் முத்தம்
கேட்கும் போது
மறுத்து நீ சிணுங்குவது
உன் முத்தத்தை விடவும்
கிக்கானதுதான்..
முத்தமே தந்திடடி...

நீ பேசும்
எல்லா பேச்சையும்
எனக்கு சொல்லும்
உன் அலைபேசி - நீ
எனக்கு தரும்
முத்தங்களை மட்டும்
திருடிக்கொள்கிறது...

நேரில் வரும் போது 
சேர்த்து தந்திடு...
கொஞ்சிக் கொஞ்சி
ஒரு முத்தம் கேட்டேன்
கெஞ்ச வைத்து
விட்டாயடி...

குடுத்தால் என்ன
குறைந்தா போய்விடுவாய்
எப்போது வேண்டும் சொல்
திரும்ப தந்துவிடுகிறேன்..
என் காது மடல்களில் இன்று 
கற்கண்டு சுவை..
பேசி முடிக்கையில் நீ தந்த
செல்போன்  முத்தினால்...

 
நானே
நானாக இல்லை - காதில்
கேட்பதெல்லாம்
வேறாக தொல்லை
எல்லாம்
உன்னால் பெண்ணே
நான் முத்தம் கேட்டு
அடம்பிடிக்கும்
சிறு குழந்தை...!

முத்தம் பெற்றதும்
பலம் கொண்ட
மத யானை...!



நிகோடின் ஏறிய என் இதழ்களில்
இன்று இனிப்பு சுவை..
உன் உதடுகள் தந்த
ஒத்தடத்தால்...
காதல் பேசும்போது
வெட்கி சிவக்கிறாயாம்..
உன் தோழி சொல்கிறாள்..
வெளியில் சொல்ல போகிறாள்..
காதல் மேல்
ஃபேர் அண்ட் லவ்லி - கம்பெனி
கேஸ் போட போகிறார்கள்...

நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
மனதுக்குள் வைத்திருப்பேன்
தண்டனை உண்டு
எல்லாவற்றிற்கும்..!!







இதுதான் உனக்கான
தண்டனை என
நிழற்படம் அனுப்பினால்
ச்சீ என்கிறாய்....
வேண்டாமடி... தண்டனை
அதிகமாகிகொண்டே போகும்...!!!

மணல் வீடாய்
காதல்..
மழையோ
அலையோ
உடைந்திடும்
கனவாய்..
வாழ்க்கையை
யோசிக்கிறேன்
நான்..
நான் மாறியதாய்
யோசிக்கிறாய்
நீ...






படித்து முடித்திட
முடியா பாற்கடல்
படித்த பின்பும்
புரியா பாடமவள்





காலைச் சுற்றும்
நாயவள்
விழித்திருக்கும் போதும்
கனவு அவள்
 



இருப்பதைப் போல்
இல்லாதவள்
இல்லாதவள் போல்
இருப்பவள்



தேவதை கட்டிய
தாவணியவள்
சுடிதார் போட்ட
தேவதையவள்  



அங்கும் இங்குமாய்
ஈருடல்
நினைவுகளுடன் தினம்
போராடல்
 



கொஞ்சும் குழந்தையவள்
இளமை பொங்கும்
குமரியவள்
தாய் அவள்  



சிரிப்பில் கொல்பவள்
அன்பில் வெல்பவள்
இயக்கிடும் இயக்கமவள்



உயிர் அவள் ..
என்னை மயக்கிடும்
க்ளோரோபார்ம் அவள்..
உயிரியக்கிடும் ஆக்ஸிஜனும் அவள்...
வெட்கத்தை எல்லாம் - நீ
அங்கே சிந்திக்கொண்டிருக்கிறாய்
நான் எப்போதடி பார்ப்பததை...
நீ ஓர் இடத்தில்
நான் ஓர் இடத்தில்
சேமித்து வையடி
எனக்காகவும் கொஞ்சம்....




கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்

அடுத்தாய் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. 



நேற்று என் கனவில்
நீ வந்த
ஐந்தாவது நிமிடம்..
உன் வெட்கமும்
என் வெட்கமும்
என் கட்டிலின்
இடது மூலையில்..
அன்பை பொழிந்தாள்
மழையாய்..
மனதை மாற்றினாள்
சிறுபறவையாய்..
மிதக்க செய்தாள்
புவியிருந்து
அரையடி
மேலாய்..

கண்கள் சொருகும்
ஆல்கஹால் மயக்கம்
அவளின்
சிறு சிரிப்பினில்  

மனதின்
அருகினில் வந்தாள்
மயில்போல் நின்றாள்
விழி வீச்சினில்
கொன்றுவிட்டாள்

தேவதை அவள்
தரிசனம்
கிடைக்கிறது
அனுதினம்...
வாழ்விலே
புது இன்பம்
தருகிறாள்
நித்தம் நித்தம்..

உச்சி முதல்
உள்ளம்கால் வரை
ஆசை துடிக்குது
அள்ளித் தின்ன...
அதை சொன்னால்
வெட்கத்தினால்
ஓடுகிறாள்
கால்கள் பின்ன...

கவிதை போலவே
வாசிக்க விரும்புகிறேன்
காதலியே உன்னை..
தாள்கள்
அனைத்தும்
வெள்ளையாய்...
நீ
இங்கில்லா
வெறுமை போல...


வாழ்க்கையில் சுனாமியை
அறிந்து இருக்கிறேன்
உணர்ந்ததில்லை
என் வாழ்க்கையில் நீ
என்னை அடித்து செல்லும் வரை....

தூக்கத்தை தொலைத்த
என் இரவுகளுடனும்....
துரத்தி துரத்தி கொத்தும்
உன் நினைவுகளுடனும் ...
காத்திருக்கிறேன் உனக்காக...




"புல்வெளி மீது நடக்காதீர்"
அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."

"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."

"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."

"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."

"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."

"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"

"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."
"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."


முத்தமிடப்படும்
ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
உடைகள் நழுவுவதையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்...