Thursday, March 11, 2010

நீதிக்கதைகள்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒவ்வொரு கதையின் நீதியும் பதிவின் கடைசியில்...


முதல் கதை :


அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில்

 ஒரு சிறு கிராமம்...


சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன்  வீட்டில்

 ஒரு நாயை வளர்த்து வந்தார்...


அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி

அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...


யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...


இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்...

எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு

 சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில்

பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து

 கொண்டு இருந்தார்...



அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு

 குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு

 மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில்

இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு ஒரு போன் கால் வந்தது...

அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயை

எடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு அவர் தம்பி நேரிலே வந்து

அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து

இறந்து விட்டார் என்று சொன்னார்..


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


மூன்றாம் கதை :


ஒரு  விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு

 புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன்

 எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்து

தங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..


அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக

கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN  என கத்தினான்...


இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து

வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...


நான்காம் கதை :


அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை

சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...



அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை

லவட்டி கொண்டு போனது...


பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது..


வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி ..

நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...


பாடுனா  ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோ

 னு பீலா வுட்டுச்சாம்...


அத்த நம்புன அந்த காக்கா பக்கி

வாய தொறந்த உடனே.. நரி வடையை  

தூக்கினு ஓடிடிச்சாம்...


அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது

 தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும்

தண்ணி வைங்கப்பா...




இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..




மூன்றாம்  கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா

பீதியை..





நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...

No comments: