Tuesday, March 27, 2012

அப்ரைசல் பூதம்.. நெருங்கி வருது..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்கஎல்லா கம்பெனிகளிலும் இன்னும் ஒரு மாசத்துக்கு களேபரம் தான்..

இனிமே டாஸ்மாக்ல இன்னும் கல்லா கட்டும்.. எப்படியும் 

எதிர்பார்க்கிறதை விட கம்மியா தான் அப்ரைசல் போடுவானுங்க...

அது எப்படி தான் வருஷம் பூரா வேலையே பார்க்காம அப்ரைசல் 

பீரியட் ல மட்டும் எதிர்பார்ப்பானுங்களோ தெரியல..

சரி..இனி அப்படியே கொஞ்சம் வேகமா,சுருக்கமா 

என்னோட புலம்பல்கள்..PERFORMANCE APPRAISAL..போடப்போற நாமத்துக்கு

புதுப்பெயர்..போங்கடா புண்ணாக்கு ரங்கனுன்களா..
நாங்கள் அப்படி செய்தோம்..நாங்கள் இப்படி செய்தோம் னு

அரசியல்வாதிகள் போல அறிக்கை கொடுக்க சொல்றானுங்க..

# ஏதாவது செய்திருந்தா தானே டா சொல்ல முடியும்..?
சிகரெட்,சரக்கு விலை எல்லாம் எழுதி வச்சி…எல்லாமே விலை 

ஏறி போச்சு…தயவு செய்து சம்பள உயர்வு கொடுங்க சாமின்னு 

ரெண்டு ஸ்மைலி போட்டுடவா..?


எனக்கு உண்மை தான் பேச வராது…பொய் எல்லாம் நல்லா கதை 

அடிச்சி விடுவேன்..ஆனா படிக்கிற என் பாஸ் க்கு 

நெஞ்சுவலி வந்துடுமேனு பார்க்க வேண்டியதா இருக்கு…

என்ன பண்ணலாம்..?


வருஷம் பூரா வீக் எண்டு னு கூட பார்க்காம வேலை

செஞ்சிருக்கேன்டா..உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல 

கொத்தடிமை கிடைக்க மாட்டான்டா னு HR கு 

மெயில் அனுப்பலாமா..?


இந்த அப்ரைசல் போடுற வரைக்கும் ஒரு மாசம் நமக்கு 

கீழ இருக்குறவங்களை வேலை வாங்குவது உண்மையிலேயே 

ரொம்ப கஷ்டம்..# சாணி அப்பின மாதிரியே மூஞ்சிய 

வச்சிக்கிட்டு திரியுறானுங்க..


என் பாஸ் க்கு அந்த பிரச்சினையே இல்ல..நான் தான் வருஷம் பூரா,

ஜட்டியில உச்சா போன குழந்தை போல ஒரே ரியாக்ஷன்

கொடுக்குறேனே..


அப்ரைசல் போட்டு முடிஞ்சதும் இந்த பாஸ் எல்லாம் வந்து 

ஆறுதல் சொல்லுவானுங்க பாருங்க..பாவம்..நம்ம பக்கமும் 

பேச முடியாம,மேனேஜ்மென்ட் பக்கமும் பேச முடியாம..

#பரிதாப ஜீவன்கள்..


ஒரு வருஷமா உண்டான காண்டை காட்டுவதற்கு சரியான 

நேரம் அப்ரைசல் போட்டதுக்கு அப்புறம் வரும் நாட்கள் தான்..

காலில் விழாத குறையா கெஞ்சினாலும் வேலை செய்யவே 

தேவை இல்லை..


அப்ரைசலுக்கு ஒரு மாசம் முன்னால ஆபிஸ்ல 

இருக்குறவனுங்களைப்    பார்க்கணுமே..அதுவரைக்கும் 

பிகர் கூட நடப்பது போல போனவனெல்லாம்,பீக் அவர் ல 

போறது போல பறப்பானுங்க..


அப்ரைசலுக்கு முன்னாடி , அவனவன் வேலையவே 

அரைகுறையா செய்யும் அப்பாடக்கர் எல்லாம் இந்த ஒரு 

மாசம் மட்டும் வாலண்டியரா வேலையைக் கேட்டு கேட்டு 

வேற ஒருத்தன் கிட்ட கொடுத்து செய்வானுங்க..

#ஏண்டா இந்த மானங்கெட்ட பொழப்பு...

ஆபிஸ் டைம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷம் ஓடி போகும்

நாயெல்லாம்..பொறுப்பு வந்த பருப்பு போல படம் 

போடுவானுங்க பாருங்க..அப்படியே பத்திக்கிட்டு வரும்..

#வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லைன்னு 

ஆபிஸ்ல இருக்குறவங்க இந்த லிஸ்டில சேர மாட்டாங்க..


அப்படி பத்து மணி வரைக்கும் இருந்து என்னடா 

பண்ணினான்னு பார்த்தா , காலையில செய்ய வேண்டிய 

வேலை எல்லாம் சனியன் சாயங்காலம் தான் 

செஞ்சி இருக்கும்..அதையும் தூக்க கலக்கத்தில 

தப்பு தப்பா..


இன்க்ரிமென்ட்  கம்மியா இருக்குது இல்லை , நான் 

இவ்வளவு எதிர்பார்க்கிறேன்னு நம்ம பாஸ் கிட்ட 

சொல்லபோகும்போது தான் அவரு நமக்காகவே காத்துக்கிட்டு 

இருந்து நாம இன்னும் நிறைய இம்ப்ரூவ்மென்ட் 

பண்ணனும் னு சொல்வாரு பாருங்க..

சரக்கு வாங்க காசில்லைன்னு நாம சொல்லும்போது 

க்ளாஸ் கழுவவே இல்லைன்னு சொன்னா ஒரு 

எரிச்சல் வரும் பாருங்க...அப்படி இருக்கும்...

நாமம் போட்டுட்டானுங்களேனு  நாமே கடுப்பில இருப்போம்..

சும்மாவே சொம்படிச்சி சம்பளம் வாங்கும் சப்பை எல்லாம் 

வந்து ச்ச..இவ்வளவு நாள் வேலை செஞ்சதுக்கு பலனே 

இல்லை மச்சி..நம்மளை ஏமாத்திட்டாங்கன்னு 

சொல்வானுங்க பாருங்க..அதை தான் தாங்கவே  முடியாது..


செம காண்டுடன்...கண்ணீரும் கம்பலையுமாக...

3G ...

1 comment:

niro said...

dont worry be happy :) :)