மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது..
வாரம் முழுக்க சும்மா இருந்துட்டு சரக்கடிக்க ஆரம்பிச்ச
உடனே பாசம் பீறிடும் நண்பர்களை நினைத்து..
பெண்களுக்கு இங்கே அனுமதி இல்லை...
இது அப்பாவி ஆண்கள் கவலைகளை மறக்க
வந்து செல்லுமிடம்..டாஸ்மாக்
மூடியை திறக்கும்போது சந்தோஷப்படும் மனது..
முழுதாய் முடித்தவுடன் மூர்க்கமாகி விடுகிறது..
நீ சரக்கு பாட்டிலா இல்ல சாத்தானா..
உன்னை பிரிந்து கவலையோடு இருந்த நான்..
மிகவும் சந்தோஷப்பட்டேன்..என் ப்ரெண்டும்
காசில்லாம காண்டுல இருக்கானு தெரிஞ்சதும்..
மட்டை ஆவதை நான் மிகவும் விரும்புகிறேன்..
மல்லாக்க விழுந்து கிடக்க அல்ல..என் மனதிற்கு பிடித்த
உன்னை இன்னும் சிறிது நேரம் என் குடலில் குடிவைக்க..
எத்தனை முறை குடித்தாலும் இனி மறுமுறை எப்போது
என குடல்களை ஏங்க வைப்பதே உண்மையான சரக்கு..
என குடல்களை ஏங்க வைப்பதே உண்மையான சரக்கு..