Monday, February 15, 2010

அஜித்குமாரின் அர்த்தமுள்ள பேச்சு...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
Ajith Kumar





Pic Info: Ajith at FEFSI Function

It was realms of Thala that was a happening moment in last evening’s function held at Nehru Indoor Stadium. The entire film industry had gathered together to honor the Chief Minister M. Karunanidhi for his graceful gesture of offering free lands for film actors and technicians.

Thala was spotted stunning with silk shirt and dhothi. As he walked straight onto the dais, it was a striking speech.



Pic Info: Rajini gives a Standing Ovation to Ajith’s Speech

He said, “Very often most of our actors are threatened by few personalities in film industry to get connected with political issues. Now and then, lots of protests are held by the members in union. I request everyone to let the actors get on with their profession and save them for the best.”

Superstar Rajinikanth gave a Standing applause to Thala’s Speech and the audience in the gallery were Stunned.

Amitabh Bachchan, who later got his turn, appreciated our ‘Thala’ for making a great speech and so was chief minister Kalainyar Karunanidhi.







பாசத்தலைவருக்கு பாராட்டு விழா! கலையுலகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் பல நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் நேரமின்மை காரணமாக இடம் பெறவில்லை. முக்கியமாக கமல் நடிக்கவிருந்த சாக்ரடீஸ் நாடகம். மேடைக்கு முன்புறம் இருந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் தங்கள் நிகழ்ச்சி வருவதற்கு சற்று முன்னர்தான் மேக்கப் போடவே போனார்கள். அப்படி கூட்டத்திலிருந்து எழுந்து போன ஸ்ரேயா கடைசிவரை மேடையில் தோன்றவேயில்லை.





விழாவின் இனிமையான சூழல் அஜீத்தின் பேச்சுக்கு பிறகு மாறியது போல ஒரு தோற்றம். அது நிஜமாகவும் இருக்கலாம். அப்படி என்னதான் பேசினார் அஜீத்?

கலைஞர் 60 வருடங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். சூரியனை வாழ்த்த வயது தேவையில்லை. ஒவ்வொரு பொங்கலின்போதும் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கிறோம். அது போல்தான் இந்த விழா. (இதுவரை துண்டு சீட்டில் எழுதி வைத்த படித்த அஜீத், சீட்டை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்)

ஐயா, கொஞ்ச நாட்களாக உங்களுக்கு எங்க மேல கோபம் இருக்கலாம். ஒவ்வொரு சென்சிடிவான மக்கள் பிரச்சனையின் போதும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கறதுக்கு முன் சினிமாவில் பொறுப்பில் இருக்கும் சிலர் அறிக்கை விடுறாங்க. ஊர்வலம் நடத்துறாங்க. இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கதான் நீங்க இருக்கீங்க. அமைச்சர்களும் இருக்காங்க. அதனால் தன்னிச்சையா செயல்பட வேண்டாம்னு சொல்லுங்க ஐயா.

இந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. அப்படி வராவிட்டால் மிரட்டுறாங்க ஐயா. அல்லது எங்களை தமிழன் இல்லேன்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. இதற்கு நீங்கதான் ஐயா ஒரு முடிவு கட்டணும். நாங்க ரொம்ப டயர்டா ஆகிட்டோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்னு சொல்லுங்க ஐயா...

இவ்வாறு அஜீத் பேச பேச, ரஜினி, சேரன், உள்ளிட்ட பிரபலங்கள் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்தார்கள்.

 தனது உரையை முடிப்பதற்கு முன்பாக "இந்த விழாவுக்கு யாரும் எங்களை கட்டாயப்படுத்தல. நாங்களே விரும்பிதான் வந்தோம்" என்று முடித்தார் அஜீத்.

Dinakaran


தமிழ் சினிமாக்காரர்களுக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வருக்கு கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் கருணாநிதி 5.10 மணிக்கு விழா அரங்கிற்கு வந்தார்.

அவருடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் வந்தனர். முதல்வர் கருணாநிதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.

விழாவில் நடிகர் அஜீத் பேசுகையில், “முதல்வர் கலைஞர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.

ஆனால் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நடிகர்கள் யாரும் அரசியலுக்கு செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.

நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்.

தமிழ் திரையுலகத்துக்கு கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.

நடிகர் அஜீத்தின்

இந்தப் பேச்சுக்கு

எழுந்து நின்று கை

தட்டினார்


ரஜினி..

No comments: