Monday, December 29, 2014

ஏன் இப்படி ...84


QUALITY DEPARTMENT ல இருக்குற ஒரே தொல்லை 

எவன் கக்கா போனாலும் நாம தான் கழுவணும்..

ச்ச # கருமம் பிடிச்சவனுங்க கண்ட இடத்தில் 

பிரச்சினை பண்ணி வைக்கிறானுங்க..



சட்டை வேர்க்குற அளவுக்கு வேலை செய்யுறது தப்பில்லை..

ஆனா இங்க நான் சாக்ஸ் நனையுற அளவுக்கு வேலை 

செய்யுறேன்..# கொத்தடிமைகள் குடோனின் கொடுமைகள்.. 



தப்பு செய்வதை விட மோசமான விஷயம் ஆகாவலி எல்லாம்

அட்வைஸ் பண்ணும்போது தலையை சொறிஞ்சிக்கிட்டு

நிக்கிறதுதான்..# விட்ருங்கடா டேய்..



ரஹீம் ஐயங்கார் பேக்கரி,பெரம்பூர் ஹைதராபாத் பிரியாணி 

வரிசையில அஸ்வினி சைவ உணவகம் "100% ஹலால்"னு 

ஒரு போர்டு..#காப்பி அடிங்க..ஆனா கவனமா அடிங்க..



சட்டையில ஒட்டு போட்ட மாதிரி ரோடெங்கும் பேட்ச்சிங் 

பண்ணி இருக்கானுங்க..நேஷனல் ஹைவேஸ் லையே 

இப்படி இருந்தா,மத்த ரோடு..?#வெளங்கிடும்..

Tuesday, December 23, 2014

மாத்தி யோசி .. 79




"ஆ" படம் எப்படிடா இருக்குனு கேட்டான் ஒருத்தன்..

என் பொழப்பே "ஊ" னு  இருக்கு,ஏன்டா படத்தைப் பத்தி 

கேட்குறனு கடிச்சி வச்சிட்டேன்..



சீசனுக்கு சீசன் நல்லவன் வேஷம் போடுறவனை விட 

அயோக்கியனுங்க சவகாசமே தேவலாம்..

#சாமி சரணம்னு சாவடிக்கிறானுங்க..


முன்னெல்லாம் அரசியல் தலைவர்களை வரவேற்க பல 

பேனர் வைப்பாங்க..இப்போ ஒரே பேனரை பல இடத்தில் 

வைக்கிறாங்க..# கற்பனைப் பஞ்சம்..



ஜன்னல் மூடி இருந்தாலும் சாலையோர செடிகள்,

மரங்கள் வந்தா தலையை குனிஞ்சுக்கிறேன்..#அனிச்சை செயல்..



நம்ம ஊருல "ஒவ்வொரு குழிக்கும்" இடையில எவ்வளவு 

அழகா "ரோடு" போட்டு இருக்காங்க..!!! # மழைக்கால மெர்சல்கள்..

Wednesday, December 17, 2014

காதல்



அன்பு காட்டி அக்கறை கொள்வது என் அன்னை எனில்,

காதலுடன் கண்டிப்பு காட்டுவது நீயடி ஹனி..



எல்லாருக்கும் தாய் தான் முதல் தேவதை.. 

நீ எனக்கு இன்னொரு தாயாய் வந்த தேவதை..

# லவ்யூடி ஹனி..


பல பெண்களின் கண்கள் கவிதை பேசும்..

ஆனால் கவிதையாய் கண்கள் கொண்டவள் நீயடி..


அன்பான பார்வையில் ஹைக்கூவையும்,

காதல் பார்வையில் கஸலையும் பேச உன்னால்

மட்டுமே முடிகிறது..



உன் கண் அசைவுகளின் முன்னே கவிதையின் 

அத்தனை வடிவங்களும் சரண்டர் ஆகுதடி..

Saturday, December 13, 2014

ஜோக்கூ..63



உன்னுடன் ஒப்பிடுகையில் வாத்து முட்டை கூட  

வாசனையாய் இருக்குதடி # குளிச்சுத் தொலைடி குரங்கே..



என் கண்களின் வழியே காதல் வைரஸ் செலுத்தி உன் 

முகத்தை சிவக்க வைக்கிறேன்..#"சென்னைக் கண்" பாதிப்பு..


GLORY ஆகும் கண்களினால் என் இதயத்தை திருடும் 

CHORI யே..#லவ்யூடி ஹனி..


நீ உளறிக்கொட்டுவதை கூட என்னால் புரிந்து 

கொள்ள முடியும்..கண்களால் பேசுகிறேன் என்று 

காண்டு ஆக்காதே ப்ளீஸ்..


என் கண்களைப் பார்த்து கவிதை சொல்லுடா 

என்கிறாய்..நான் கழுதையைப் பார்த்தே கவிதை

சொல்லுவேன்..கண்களைப் பார்த்து சொல்ல முடியாதா என்ன..?