Monday, January 28, 2013

தேநீர் தேவதை



நீ வருந்தக்கூடாது என நானும்,எனக்காக நீயும் மகிழ்ச்சியாய் 

இருப்பது போல நடித்துக்கொண்டு இருக்கிறோம்.. 

பொய்யாய் நாம்..நமக்கிடையில் உண்மையாய் / ஊமையாய் காதல்..




காதல் வழியும் உன் கண்களின் ஒளியே காயம் பட்ட 

என் உயிரின் வளி..(ஆக்ஸிஜன்) 


உன்னை சமாதானப்படுத்த கவிதைகளை தூது அனுப்புகிறேன் 

நான்.. என்னை சமாதானப்படுத்த கண்ணீருடன் காதலை 

தூது அனுப்புகிறாய் நீ..# ஹ்ம்ம்..கெட்டிக்காரிடி நீ ஹனி..
 



என் மீதான உந்தன் காதலை மறைக்க,என் கண்களைப் 

பார்ப்பதை தவிர்த்து காற்றுக்குள் ஒளிந்துக்கொள்ளும் 

வித்தையை எப்படி கற்றாய் ஹனி…?

 



சற்று அதிகமாக பால் கலந்த தேநீர் நிறத்தில் இருக்கும் 

ஒரே தேவதை, நீ மட்டுமே ஹனி..லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 



என்னுடைய இதயம், காதலால் முழுமையடயவில்லை என்று 

எனக்கு நெடுநாள் வருத்தம்..உன் கண்களைக் கண்டதும் தான் 

காதலின் முழுமை அடைந்த இதயத்தை உணர்ந்தேன்..

லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 



சூரிய வெளிச்சம் பெற்ற நிலவை அனைவரும் நேசிப்பது

போல..மகிழ்ச்சியையும்,காதலையும் நான் உன்னிடம் 

பெற்றே பிரதிபலிக்கிறேன் என தெரியாமல் 

என்னைக் கொண்டாடுகிறார்கள்..

 



எந்த நேரம் உன்னை நான் நெருங்கினாலும் உன்னிலிருந்து 

காதல் வீசிக்கொண்டே இருக்கிறது..என் மீது..லவ்யூடி ஹனி..

 



இத்தனை அழகையும் நீ ஒருத்தியே வைத்துக்கொள்வது 

தவறு ஹனி.. ஒரு குட்டி தேவதைக்குக் கொடுப்போம்..வா..!!!

 



கண்கள் முழுக்க காதலை நிரப்பிக்கொண்டு, வெளிவரத் 

துடிக்கும் வார்த்தைகளை கொஞ்சம் விழுங்கி பின் நீ பேசும் 

அழகைக் காணவேணும் உன்னுடனே இருந்துவிடுகிறேன் ஹனி..

Friday, January 11, 2013

கறுப்புக் கற்றைகள்




நீ கூந்தல் உலர்த்தியதை பார்த்த கணம் முதல், என் 

உலகின் கொடி "கறுப்புக் கற்றைகள்" என்றானது..

 


மனது முழுக்க காதலுடன் ஆண்மகனாய் உன்னை நெருங்கும் நான், 

உன் கருவிழிகளையும்,புன்னகையையும் கண்டவுடன் 

மருண்டு நிற்கும் சிறுவனாகிறேன்..# ராட்சஸி.. லவ்யூடி ஹனி..

 



நீ ஒவ்வொரு முறையும் வார்த்தைகளை விழுங்கி விழுங்கி 

பேசுகையில், உன்னை விழுங்கிவிடலாம் எனக் 

கூட யோசித்திருக்கிறேன்..

#ஹ்ம்ம்..அழகென்ற சொல்லுக்கு ஹனி..

 


உன்னைக்கண்டு திரும்பிய பின் நான் கண்களை 
மூடுவதேயில்லை.. இமையும்,இமையும் சேரும் இடத்தில் 
என் இதயம் துடிக்குதடி..உன்னை மீண்டும் காண..

 

நான் சில "பொய்களால்" உன்னை வர்ணிப்பது தெரிந்தும்,
நீ "உண்மையாய்" காதலை மட்டுமே கண்களில் காட்டுகிறாய்..
#லவ்யூடி ஹனி..

 

பூங்காவின் இருக்கையில்,ஒரு மூலையில் நீயும் மறு 
மூலையில் நானும்..நமக்கிடையே யார் அமர்வது என 
காற்றும்,காதலும் சண்டையிட முடிவில் வென்றதென்னவோ 
காதல் தான்..

 

"ஒருவருக்கொருவர் நம்மை பிணைத்திருப்பது காதலா..?"
என்கிறாய்..இல்லை ஹனி.. நாம் தான்.. உனக்குள் 
இருக்கும் நானும்..எனக்குள் இருக்கும் நீயும்...

 

நீ என்னுடன் இருக்கும் நாட்களில் பகலின் நீளம் குறைந்தும் , 
இல்லாத நாட்களில் இரவின் நீளம் நீண்டும் இம்சிக்கிறது 
என்னை..# MISS YOU HONEY.. 
நீ இன்றி தனியாய் இருக்கும் என்னை நோக்கி நாளுக்கு நாள் 
சூரியன் நெருங்கி வருவது போன்று ஒரு 
தவிப்பு..நிலாப்பெண்ணே..நெருங்கி வந்து என் வெப்பம் 
தனியேன் ஹனி..

 
பலரும் பலதை தொலைத்து பின் கண்டுபிடிப்பார்கள்..
நானோ தொலைக்காத என் காதலை கண்டுபிடித்துவிட்டேன்..
உன் கண்களில்..# லவ்யூடி ஹனி..

Tuesday, January 8, 2013

கோழைகளின் கோபம் மரணம்..


முகம் தெரியா மனிதரின் மரணமும்  

பாதிக்கத்தான் செய்கிறது.

 


ஆண்கள் உணர்ச்சிகளாலும் , பெண்கள் உணர்வுகளாலும் 

நிறைந்து  உருவாக்கப்பட்டு இருக்கிறார்ள்போலும்..

 



ஆண்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளுக்கு 

உணர்ச்சிகளும் , பெண்கள் எடுக்கும் முட்டாள்தனமான  

முடிவுகளுக்கு உணர்வுகளும் காரணமாய் இருக்கின்றன..

 



ஆண்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவதைக் 

காட்டிலும் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுவது 

மிகக் கொடூரம்

 



ஆண்களை விடவும் பெண்கள் துணிச்சலானவர்கள் தான்..

ஆனால் ஏனோ,முட்டாள்தனமான முடிவை 

எடுப்பதில் அதைக்காட்டுகிறார்கள்..
 


கண்ணீர் விடும் பெண்களைக் காட்டிலும்,

காயப்பட்ட ஆண்களை தேற்றுவது மிகக்கடினம்.

 



தற்கொலை செய்து கொள்பவர்கள் , அவர்களை நேசிக்கும் 

அத்தனை உறவுகளையும் கொன்று விடுகிறோம் என ஏனோ 

யோசிக்க மறக்கிறார்கள்..

 


காதலில் மட்டும்  ஏனோ பாசத்தின் 

சம்பளம் மரணம்..

 


கோழைகளை விட முட்டாள்கள் எவ்வளவோ 

பரவாயில்லை
 

கோழைகளின் கோபம் மரணம்..

Sunday, January 6, 2013

சிதறும் காதல்



காதலைத் தொலைப்பவர்கள் மத்தியில் நான் சற்றே

வித்தியாசமானவன்.. என் காதல் உன்னிடம் தான் இருக்கிறது 

என்று தெரியும்.. நான் தான் தொலைந்து விட்டேன்..

உன் கண்களில்..

 


உறவுகளுக்காக சுயம் தொலைத்து வாழும் நான்..

என் சுயத்தினால் கண்டு கொண்ட ஒரே உறவு..

நீ மட்டுமே ஹனி..# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 



வலிகளை மறைத்து நடித்துப் பழக்கப்பட்ட நான்..

உன்னிடமும் நடிக்கிறேன்..உனக்கு தெரியும் என அறிந்தே..

மவுனமாய் நீ..மரணத்தை நோக்கி நான்..

 


காற்றைக் கண்டதும் வெடித்து சிதறும் நீர்க்குமிழ் போல, 

உன் கண்களைக் கண்டதும் என் காதல் சிதறுதடி..

 


உடலைத் துளைத்து வெளியேறும் உன் கோபப் பார்வையைக் 

கூட என்னால் தாங்க முடியும்..ஆனால் அதீத காதல் 

கொண்டு நீ என்னைப் பார்க்கும் பார்வையில் கரைந்தே 

விடுகிறேன் நான்..# ராட்சஸி..லவ்யூடி ஹனி..

 


நீ கண்களில் சிரிக்கும் ஒவ்வொரு முறையும், அந்த சிரிப்பு 

உடனே என் இதயத்துக்கு சென்று ஒரு துடிப்பை தவறவிட 

செய்கிறது..# ராட்சஸி..

 


எனக்கும் உனக்கும் இடையில் வெறும் காற்று இருந்ததாக 

நினைத்ததால் நீ என்னைப் பார்க்கவில்லை..காதல் 

இருந்ததாக நினைத்ததால் நான் இமைக்கவே இல்லை..

 



நீ இருக்கும் இடத்தில் உன்னால் சற்று ஒளி 

கூடியே இருக்கிறது..

 



நீ கோபமாய் என்னைப் பார்க்கும் தருணம்..துடிக்கும் இதயம் 

ஏனோ விலா எலும்பில் விட்டு விட்டு அடிக்குதடி..

# அப்படி பார்க்காதே ஹனி..



 


உனக்காக காத்திருக்கையில் நகர மறுக்கும் கடிகார முட்களை 

விட, உன் மீதான என் காதலின் சுமையே அதிகம் 

அழுத்துகிறது ஹனி..

Friday, January 4, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 62




ண்டைக்கு அப்புறம், காதலி காட்டுற பாசத்தை விட, 

பசங்க போதையில காட்டுற பாசம் தாங்க முடியலைடா சாமி..
 


ரெண்டு பசங்க நட்புகொள்ளும் அளவுக்கு வேகமாக , 

ரெண்டு பெண்கள் நட்பு கொள்வதில்லை..
 


இப்போவெல்லாம் சண்டை போடுறதை விட அதை வேடிக்கை 

பார்க்க அதிக தைரியம் வேணும் போல..#ஏன் பயப்...ப..டு..ற ..

என்னை மாதிரி தை...ரிய..மா... இரு..அவ்வ்வ்வ்...
 


ஒரு விஷயம் தனக்கு கிடைக்கலையேன்னு நினைத்து

வருத்தப்படுறவங்களை விட,அடுத்தவனுக்கு கிடைத்து 

விட்டதேனு பொறாமைப் படுறவங்க தான் அதிகம்..
 



வலிகளை தாங்குவதைக் காட்டிலும்,இயலாமையில் 

துவள்வது பெருங்கொடுமை..

 



கதவு திறந்திருக்கையில் சாவித்துவாரம் வழியே

பார்க்கிறவனும்..பொண்டாட்டி இருக்கும்போது பிட்டு 

படம் பார்க்கிறவனும் ஒண்ணு ..

 
 
 
 தன் வீட்டுக் கதவு திறந்திருப்பதைப் பத்தி கவலைப்படாதவன் ,
 
அடுத்தவன் வீட்டு சாவித்துவாரம் வழியே எட்டிப்பார்த்தானாம்..
 
 
 
 
 
கவனம் - டைட்டா டிரஸ் போட்டு வெளிய வரும் 
 
பொண்ணுங்களை விட,லூசா டிரஸ் போட்டு
 
வீட்டிலையும்,வீதியிலையும் திரியும் ஆன்ட்டிகள்..

 


காதலனாய்  இருப்பதை விட கள்ளக்காதலனாய் 
 
இருப்பதே கடினம்..#ஹர ஒ சாம்பா.



மீசையை முறுக்கலைனாலும் பரவாயில்லை..

வெறுமனே மிக்சர் திங்கிறவனா மட்டும் ஆகிடக் கூடாது..

#ஹர ஒ சாம்பா.

Thursday, January 3, 2013

கல்லாதது காதலளவு..


இரவும் , பகலும் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது 
 
என்பதை எப்படி கூற முடியாதோ..அது போன்றே 
 
நம்மிடையே காதல் உண்டான தருணமும்..
 
 
 
"எப்போதும் காதல் பற்றியே பேசுகிறாயே..உனக்கு வேறு 
 
எதுவும் தெரியாதா" என்கிறாய்..ஆமாண்டி ஹனி...
 
நான் கற்றது என் காதலளவு மட்டுமே..கல்லாதது உன் காதலளவு..

 
 
என்னைப் பிரியும்போதெல்லாம் தண்ணீரில் விழுந்த 
 
வெள்ளிக்காசைப் போல பளபளக்கும் உன் கலங்கிய 
 
கண்களைக் கண்ட பிறகு நான் எப்படி உன்னை விட்டு செல்ல..? 
 
# லவ்யூடி ஹனி..

 
 
 
நீ வந்ததை கவனிக்காதது போல நடிக்கவே அதிகம் 
 
கவனமாய் இருக்கிறேன்.. ஆனால் கண நேரத்தில் என் 
 
காதல் என்னை ஜெயிக்கிறது..# ரொம்ப வீக்கா இருக்கேனோ ஹனி..

 
 
 
ஐஸ் தரையில் நடப்பது போல,நீ கவனமாய் எடுத்து வைத்த 
 
ஒவ்வொரு அடியும்.. ஏனோ எனக்குள் சிலிர்ப்பை உண்டாக்குதடி..
 
# அழகுடி நீ ஹனி..

 
 
காதல் கொண்டு நீ பேசும் தருணங்களில் உன் உதடுகள் 
 
அசைவதை வைத்தே நீ பேசுகிறாய் என உணர்கிறேன்..
 
உன் காதலைக் காற்றுக்குக் கூட தராமல் எனக்கு 
 
மட்டுமே தரவேண்டுமோ..? ஹ்ம்ம்..# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 
 
என்னை சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும், நான் 
 
இயங்கிக் கொண்டிருப்பது என்னவோ உன் காதலால் 
 
தான்..# லவ்யூடி ஹனி..

 
 

நல்லவேளை என் இதயம் பாதுகாப்பாக உள்ளே இருக்கிறது..
 
இல்லையெனில் கண்கள் தளும்ப காதலை வைத்துக்கொண்டு 
 
நீ "ப்ளீஸ்டா" என்று கொஞ்சிய கணத்தில் அது தானாக 
 
உன் கைகளுக்குள் அடங்கி இருக்கும்…# அழகு ராட்சஸி…

 

உன்னோடு பேசுகையில் மட்டும் ஏனோ என் வாயில் 
 
இருந்து வார்த்தைகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு 
 
வெளிவரத் துடிக்கின்றன..# லவ்யூடி ஹனி..



 

உனக்கு / நமக்கு நல்லது என நீ எடுக்கும் அத்தனை 

முடிவுகளையும் ஏற்கிறேன். எனக்கு நல்லது என நீ 

எடுக்கும் முட்டாள்தனமான முடிவை ஏற்கமுடியாது 

என்னால்..# ஹனி பெயர்ச்சி…

Wednesday, January 2, 2013

மாத்தி யோசி .. 69




சின்ன சின்ன விஷயங்களுக்காக அதிகம் வருத்தப்படுபவர்கள்,

அதிகம் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள்..

 



சில பிரச்சினைகளுக்கு முடிவு மரணம் மட்டுமேனு நினைக்கும் 

பலர்,பல பிரச்சினைகளுக்கு அது தான் தொடக்கம்ன்னு 

உணர மாட்றாங்க..

 



எழுதுவதற்கு மனதில்  எண்ணம் இருந்தால் போதும்..

வார்த்தைகளை வசமாக்கவே சிறிது பயிற்சி அவசியம்..

 

பெரும்பாலான வார்த்தைகள், உண்மையை சொல்லப் 

பயன்படுவதை விட,மறைக்கவே அதிகம் பயன்படுகின்றன..

 



பொண்ணுங்க கூட பழகும்போது ஒரு பிரச்சினையும் வராம 

நல்லபடியா போய்க்கிட்டு இருந்தா, ரிலேஷன்ஷிப் 

சீக்கிரமே முடியப்போகுதுன்னு அர்த்தம்..

 



தொலைந்த இடத்தில் இருக்கும் பொருளைக் 

கண்டுபிடிப்பது சுலபம்..இந்த மானங்கெட்ட மனசை 

தொலைச்சிட்டேன்..அது ஒவ்வொரு அழகான பொண்ணு 

பின்னாடியும் அலையுது..# ஹே..ஓடாத..நில்லு...
 


சீக்கிரம் முடிக்கணும்னு எவனையாவது ஹெல்ப் கேட்டு 

அது தப்புன்னு தாமதமா புரிஞ்சிக்கிட்டு அப்புறம் நாமே 

செய்வதை விட, தாமதமானாலும்  நாமே தப்பு செய்து 

அதை திருத்திக்கிறது எவ்வளவோ நல்லது..


 



குழந்தைகளுக்கு HUGGIES போல, சில "பெரியவங்களுக்கு" 

வாயில இருந்து வார்த்தைகள் அத்தனையும் உறிஞ்சிக்கிற 

மாதிரி ஏதாச்சும் கண்டுபிடிங்கப்பா..வாங்கி கட்டி விடணும்..





தெரியாதுன்னு சொல்றதை விட,"நீங்க சொல்லுங்க..

தெரிஞ்சுக்குறேன்னு" சொல்லிப்பாருங்க .. பில்டப் 

இருந்தாலும் பலன்கள் நல்லா இருக்கு..