Monday, December 31, 2012

ஹனி.. இச்சை செயல்..



என்னை மறந்துவிட்டாயா என்கிறேன்..

" நான் இன்னும் உயிரோடதான்டா இருக்கேன் " என்கிறாய்..

# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..



 


உன்னுடன் பேசவேண்டாமென நினைக்கிறேன்..கைகள் 

ஏனோ உன் அலைபேசி எண்களை தானாக அழைக்கிறது 

என்கிறாய்.. இது அனிச்சை செயல் இல்லை 

ஹனி.. இச்சை செயல்..


 


உன்னைப்பிரிய எத்தனிக்கையில் உன் குரல் கேட்டவுடன் 

மனம் மாறுகிறேன் என்கிறாய்.. பைத்தியக்காரி.. 

இப்போது புரிகிறதா..? எதுவாயினும் என் கண்களைப் 

பார்த்து சொல் என்பதன் அர்த்தம்..



 


 
என்னிடம் அத்தனை உண்மைகளையும் மறைக்காமல் கூறும் நீ,

நான் உனக்குள் இருப்பதை மட்டும் வெளிப்படுத்த மறுக்கிறாய்..

# ராட்சஸி..

 

 
எனக்காக வலிகளைத் தாங்கும் நீ,அதையே நான் செய்தால் 

மட்டும் ஏற்க மறுக்கிறாய்..உன்னை விட்டு நான் எங்கேடி 

செல்ல…? # பம்ப்ளிமாஸ்..


 


மிகவும் குளிர்ச்சியாக சூரியன் தோன்றிய தருணம் நீ 

என்னுடன் கடற்கரையில் இருந்த நேரம்..என்னைப்பிரிந்த 

ஐந்து நிமிட இடைவெளியில் அதே சூரியன் உக்கிரமாகவும் 

தோன்றுதடி..

 



நீ முத்தமிட்ட பிறகு நீண்ட நேரம் என் நாவில் ஏதோ ஒரு 

இனிப்பு கரைந்துக் கொண்டே இருக்கிறது.. முடிந்து விடும் 

முன் மீண்டும் ஒன்று தா..!!!

 



பத்து குதிரைகள் ஓடும் மைதானம் போல மாறுகிறது 

என் இதயம்..நீ முத்தமிட என்னை நெருங்கும் ஒவ்வொரு முறையும்..


 


ஆழ்கடலின் அமைதியும் அதீத அழுத்தமும் உண்டாகும் 

தருணம்..நீ என்னை முத்தமிட்ட கணம்..

 


மரணவலியில் துடிக்கிறேன்..உன் மார்பு சூட்டில் என்னைப் 

புதைத்து மருந்திடேன் ஹனி.. பிழைத்துவிடுவேன்..

Sunday, December 30, 2012

ஏன் இப்படி ...70




தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கூட 

IRCTC ல டிக்கெட் புக் பண்ணினான்னா "போங்கடா !@#$%^&"

னு சொல்லுவான்...#நாக்குத்தள்ளுதுடா சாமி

 



நல்லதுக்கு ஒண்ணு சேருறாங்களோ இல்லையோ ஒருத்தனை 

போட்டு விட அத்தனை பேரும் எங்க இருந்து தான் 

கிளம்பி வர்றானுங்கனே தெரியலையே ஆண்டவா..

 



" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் " படத்தோட 

சிடி வாங்குனேன்..அட கெரகமே..நடுவுல கொஞ்சம் படத்த 

காணோம்..# தியேட்டருக்கு போங்கப்பா..
 



கொடுத்த வேலையை ஏன் முடிக்கலைன்னு கேட்கும்போது 

தான் தெரியுது…ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்கும் 

கதை சொல்லிகள்…# காதுகள் வலிக்குதுடா சாமி..

 



சலிக்காம பேசுறதை பெருமையா எண்ணுபவர்களே,அந்த 

கருமத்தை எல்லாம் சகிச்சுக்கிட்டு கேட்கும் எங்களை 

கொஞ்சம் நினைத்து பாருங்களேன்..

#வெளிய விடமாட்றாங்கடா டேய்..
 




ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு 

சொல்லிக் குழப்பிட்டு,உங்களுக்கு எத்தனை தடவை தான் 

சொல்றதுன்னு அலுத்துக்குறவங்களை அடுப்பில் போட்டா என்ன..?

 



"வழிகாட்டியாய்" இருக்க வேண்டிய பலர் , நமக்கு 

"வலி காட்டிகளாகவே" இருக்கிறார்கள்..

# பாஸ் பாறைகள்.. 




கேட்குறதுக்கு கொஞ்சம் பேர் இருக்கானுங்கனு பேச 

ஆரம்பிக்கிறவங்களுக்கு இன்னொரு வாய் வந்துடுமா 

என்ன..? எப்படிடா முடியுது உங்களால…?

 



இவன் ஒரு வாயால பேசுறதை எங்களுக்கு ரெண்டு காது 

இருந்தும் கேட்க முடியலையே..? கேட்குற நாங்க 

டயர்ட் ஆகி கொட்டாவி விடுறோம்..தக்காளி 

தெம்பா பேசுறானே..?

 




அடுத்தவன் பிரச்சினைகளுக்கு ஏகப்பட்ட ஐடியாக்களை 

அள்ளித் தெளிக்கிறவனுங்களை , ஏன் உங்க வேலை 

முடியலைன்னு கேட்டா கரகாட்டக்காரன் செந்தில் 

போல ரியாக்ஷன் கொடுக்குறானுங்க..

# உனக்கு ஏன் இந்த வேலை…?

Saturday, December 29, 2012

முற்றுப்புள்ளி முத்தம்


 
கண்களில் சிரித்து உதட்டில் நீ தரும் முத்தத்துடன் 

உதயமாகும் ஆசிர்வதிக்கப்பட்ட என் தினங்கள்,இரவினில் 

இறுக்கமான அணைப்பின் வழியே உன் 

கருங்கூந்தலில் அஸ்தமிக்கின்றன..


 
என் நினைவுப்பாசிகளை தெளிய வைக்கும் படிகாரமாய் 
 
உன் பார்வை..


உன் அருகில் வர எத்தனிக்கையில் ,ஏதோ ஒன்று என் 
 
கால்களைக் கட்டி இருக்கும் கயிறாய் இறுக்க..உன் 
 
புன்னகைக்கும் பார்வையில் கட்டவிழ்க்கிறாய் நீ.
 
#தேவதை ஸ்த்ரீயடி நீ..



பாழடைந்த கிணறாய் தோன்றும் இந்த 
 
வாழ்க்கையில்,படிகளெனத் தோன்றுதடி உன் பாதச்சுவடுகள்..



தென்னங்கீற்றுகளுக்கு இடையே தோன்றும் சூரிய ஒளியாய்..
 
உன் கற்றைக்கூந்தலின் வழியே என் மீது சிதறுதடி உன் 
 
வெட்கப் புன்னகைகள்..



உறைந்த கிணறாய் இருந்த என்னுள்..சிறுவர்களின் 
 
உற்சாகக் கூச்சலாய்  உன் சிரிப்புச் சத்தங்கள்..


நீ  குளித்து முடித்து வருகையில் பாதி ஈரத்தை தூவாலையால் 
 
நீயும்,மீதி ஈரத்தை என் விழிகளால் நானும் துடைக்கிறோம்


பூக்களால் செய்த உன் உடலில் பனித்துளிகளாய் 
 
தோன்றும் நீர்த்திவலைகள்.. என் உதடுகளால் ஒத்தி 
 
எடுக்கிறேன் வா.!!!

நீ கூந்தல் உலர்த்துகையில் தெறிக்கும் நீர்த்துளிகள்.. 
 
என் மீது மட்டும் பொழியும் இனிமை சாரல்..

 

நம் உரையாடலின் முற்றுப்புள்ளியாய் முத்தம் 
 
வைக்கிறேன் நான்..மேலும் சில முத்தங்கள் தந்து 
 
அதை தொடர் வாக்கியமாய் மாற்றுகிறாய் நீ 
 
# லவ்யூடி பம்ப்ளிமாஸ்