Friday, January 27, 2012

ஏன் இப்படி ...56

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





உனக்கு உன்னை பிடிக்கிற மாதிரி நீ இரு டா..அப்புறம் 

எல்லாருக்கும் உன்னை பிடிக்கும்னு சொல்றா..

#கமல் படம் ஏதாவது பார்த்திருப்பானு நினைக்கிறேன்..




நமக்கு பிடிச்சவங்களே நம்மை சில நேரங்களில்

காயப்படுத்துறாங்க..நாம அதிகம் முக்கியத்துவம் 

கொடுக்காதவங்க சில நேரங்களில் நெகிழ வைக்கிறாங்க..

#என்ன வாழ்க்கைடா இது..




இந்த உலகத்தில மிகச்சிறந்தது.. ஒரு பெண்ணோட 

உண்மையான அன்பு.. - விடுதலை படத்தில

விஷ்ணுவர்தன்..ஹ்ம்ம்..எனக்கில்ல..எனக்கில்ல..




எதை எதையோ கண்டுபிடிக்க முடியுது..ஆனா சிரிச்சுக்கிட்டே 

சில்லறை வேலை பார்க்குறவனுங்களை லேட்டா தான் 

கண்டுபிடிக்க முடியுது..

#என்னா ட்ரிக்சா வேலை பார்க்குறானுங்க. 



ஒண்ணுமே இல்லாத விஷயம்னு நாம நெனச்சா,அதை பெரிய 

விஷயமா மாத்துறதும்,பதறி துடிச்சா சின்ன விஷயத்துக்கு 

ஏன்டா இப்படி பதறுறேனு கேட்குறதும்

#முடியலை பொண்ணுங்களா..


முகம் அழகா இருக்குறதை விட,அகம் அழகா இருந்தா போதாது…

# வெள்ளையா இருக்குறவன் விஷமில்லைன்னு 

சொல்லிக்கிட்டு திரியுறானுங்க..




அடுத்தவன் பிரச்சினைக்கு மட்டும் எல்லா நேரமும் 

ஆளாளுக்கு ஏதாவது தீர்வு வச்சிக்கிட்டே இருக்கானுங்க..

# வேலையைப் பாருங்கடா டேய்..


கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே அவனுங்களா முடிவு பண்ணி 

ஒரு பதிலை சொல்றானுங்க..( கொல்றானுங்க)

# அப்புறம் ஏண்டா கேள்வி கேக்க சொல்றீங்க பிக்காலிங்களா..



சின்ன வயசுல பாயில தூங்கி  காலையில தரையில 

எந்திரிச்சா சிரிப்பாங்க..இப்போ சரக்கடிச்சு அதையே 

செஞ்சா கழுவி கழுவி ஊத்துறாங்க..#சத்திய சோதனை.




ஸ்வீட் கடை வேலைக்கு சர்க்கரை வியாதிக்காரனை 

வேலைக்கு வச்சாப்புல இருக்குது..

#57 வயசுல இவனுக்கு 22  வயசுல ஒரு PA வா..ஹ்ம்ம்..

No comments: