உயிரைக் கையில பிடிச்சிகிட்டு ஒரு மலைப் பயணம்
முடிச்சு வந்தாச்சு..#படுகாஸ் டான்ஸ் ஆடி பாதம்
வீங்கி போச்சு..
காட்டுயானை கூட செல்ஃபி எடுக்கணும்னு சொன்னான்
ஒருத்தன் .. பொணத்துக்கு எவனும் பொண்ணு தர
மாட்டான்னு சொன்னதும் வேணாம்னுட்டான்..
டைல்ஸ்
போட்ட பாத்ரூம் பார்த்திருக்கேன்.. யானைகளுக்கு
தார் போட்ட பாத்ரூம் இப்போ
தான் பார்த்தேன்..
#கூட்டத்துக்கே பேதி போல..ரோடெங்கும் சாணம்..
6
மணிக்கு மேல அனுமதிக்க மாட்டோம்னு சொன்னவங்க
அமவுண்ட் கொடுத்ததும் போக
விட்டானுங்க..
#அடேய் ஆஃபிசருங்களா இப்போ மட்டும் யானை வராதாடா..???
மலைப்பாதையில
பைக்ல போனதுக்கு வண்டி ஸ்பேர்
பார்ட்ஸும் எங்க ஸ்பேர் பார்ட்ஸும் இடம்
மாறி
பழுதானது தான் மிச்சம்..# "பம்பர் குலுக்கல்கள்"..
எலிஃபன்ட்ஸ்
க்ராஸ் ஆனா ஹெட்லைட் ஆஃப் பண்ணிட்டு
சைலென்ட்டா இருங்க..#"தமிழ்நாடு"
வனத்துறை..
(உங்க ஆங்கிலப் புலமையைக் காட்ட நாங்களா கிடைச்சோம்..)
வண்டி ஓட்டும்போது செல்போன் எடுக்குறதே தப்பு..
இதுல செல்பி வேற எடுக்குறானுங்க..#அடேய்..
அரைகுறை ஆர்வக்கோளாறுகளா அடங்கமாட்டீங்களாடா...
புகை சிகரெட்டுல இருந்து வருதா இல்ல ஜீவனில் இருந்து
வருதானே தெரியலை..#உயிரைக் குடிக்கும் பனி..
மஞ்சூர் மரண பயம் காட்டிடுச்சு..
சென்னையில வெயில் ஊசி போல குத்தினா அங்க
பனி குத்துது..#இங்க குளிரினாலே எழுந்திரிக்க முடியலை..
அங்க தூங்க முடியலை..
6.30 மணிக்கு எழுந்து அந்தக் குளிரில குளிச்சக் கொடுமையை
கம்பேர் பண்ணா இன்னும் எவ்ளோ கஸ்டமர் கம்ப்ளைன்ட்ஸ்
வந்தாலும் சமாளிக்கலாம்
ஹீட்டர் ல வர்ற தண்ணி சூட்டை விட உச்சா
சூடா வருது..அவ்வவ் அதுல குளிக்க முடியாதே..
இன்னும் எத்தனை நாளைக்கு தான் பசங்க கூடவே
படுத்து தூங்கணும்னு தெரியலை..#சத்திய சோதனை..
நல்லவேளையா ஒரு பேங்க் GM வீட்டுல தங்கவச்சாங்க..
லாட்ஜுக்கு நான் போகலை..#கூட வந்தவனெல்லாம்
மொடாக் குடிகாரனுங்க..BAD BOYS
வடை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள டீ ஆறிப்போச்சு..
# பனியோட சனியும் சேர்ந்துக்குது..#பாய்லர்லயா
வாய் வச்சி குடிக்க முடியும்..???
கோவிலுக்கு
போலாம்னு சொன்னவங்களை நம்பி போனா..
சாமி கும்பிடாம செல்ஃபி
எடுக்குறானுங்க.. அடேய்..
ஆண்டவனையே அப்டேட் பண்ண வச்சிடுவீங்க போலேயே...
மலை மேல ஆக்சிஜன் தான் பற்றாக்குறை..
ஆல்கஹால் பற்றாக்குறையே இல்லை..
# அவ்வளவும் கர்நாடகா இறக்குமதி.. எத்தனை மூட்டை..!!!!
ஸ்டார்ட்
மியூசிக்..காந்தக் கண்ணழகி.. லெஃப்ட்ல பூசு..
தோ பார்.. ரைட்ல பூசு னு
நைட்டு 12 மணி வரை ஆட்டம்..
# அந்த ராத்திரியில சோறு குழம்பு வடிச்சிப்
போட்ட அன்பு
உள்ளங்களை என்னனு சொல்றது..# இவங்க எல்லாம்
ரொம்ப நாளைக்கு
நல்லா இருக்கணும்..
கால்கள் ரெண்டும் அந்த ஆட்டம் ஆடுச்சு..
அது குளிரினாலையா,குடிச்சதாலையா இல்ல குத்தாட்டம்
ஆடவானு தெரியலை..
படுகாஸ் டான்ஸ் கூட சேர்த்து கண்ணம்மாபேட்டை
குத்தையும்,பேட்டா ராப்பையும் கலந்து அடிச்சி
# கால் வீங்கி போச்சுப்பா!@#$%^&*
பாட்ஷா படத்துல தலைவர் சொல்ற மாதிரி "நான் ஆடி
நீ பார்த்திருக்கியானு",ஆடாதவங்களை எல்லாம்
ஆட வச்சிட்டாங்க..# என்னா பீட்டு..!!!!!
சிட்டில கல்யாணத்துக்கு
சொந்தக்காரங்க வர்ற மாதிரி
காலை 9 மணிக்கு சூரியன் வந்து 10.30
மணிக்கெல்லாம்
போயிடுச்சு..# பகல் 12.30 மணிக்கு மேல பனி இறங்கி
மலையையே
மறைச்சிடுச்சு..ஹ்ம்ம்ம்ம்...
இப்பவும்
மலை,கடல்,ரயில்,விமானம்,யானை எல்லாம்
பார்க்க அவ்ளோ பரவசமா இருக்கு..#ஆனா
யானையை
காட்டுல பார்க்க மட்டும் செம டர்ரா இருக்கு..
பசியை
விடக் கொடுமையானது பந்தியில உக்கார
காத்திருக்குறது தான்..#ஒருத்தன்
உட்காந்தா ஊருக்கே
இடம் பிடிக்கிறான்.. சமைக்கிற இடத்துக்கே போகலாமோனு
யோசிக்க வச்சிட்டாங்க..
சரக்கடிக்கவும்,சாப்பிடவும்
பசங்க எவனுக்கும்
காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும்
முந்து.. முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!!
என்னதான் உடம்பு வலி இருந்தாலும் இன்னும்
ஆறு மாசத்துக்கு தேவையான உற்சாகம் வந்துடுச்சு..
# நன்றி மக்களே..!!!!