Friday, November 28, 2014

மாத்தி யோசி .. 78




கார்,பீர் ரெண்டுக்கும் பேரு வைக்கும் முன்னாடி நியூமராலஜி 
 
பார்க்க சொல்லணும்..நிறைய பிராண்டு வருது,
 
நல்லா இருக்கவும் மாட்டுது விற்கவும் மாட்டுது..



அண்ணா நகர்ல இருந்து நான் ஆபிஸ் வர்றதுக்கு 
 
பதிலா ஆப்போசிட்ல போனா ஆந்திராவுக்கே 
 
போயிடலாம் போல..# TERRIFIC TRAFFIC..



பீர் 100 ரூபாயா இருக்கும்போது கூலிங் இல்லாமையே 
 
110 க்கு வித்தானுங்க..இப்போ விலை ஏறினதுக்கு அப்புறம் 
 
கூலிங் பீர் மட்டும் தான் இருக்காம்..அது 130 ரூபாயாம்.. 
 
கேரளா போல இனி வீட்டிலேயே தான் காய்ச்சணும்..



வீடு வாங்குறீங்களானு கேட்டு ஒரு பொண்ணு 
 
போன் பண்ணுச்சு..கல்யாணம் பண்ணிக்க பொண்ணுதான் 
 
கிடைக்க மாட்டுது..மெயில் ஐடி கொடுங்க என் 
 
போட்டோவும் ஜாதகமும் அனுப்புறேன்..அப்புறம் தான் 
 
வீடு பத்தி யோசிக்கணும்னு சொன்னேன்..
 
சிரிச்சுக்கிட்டே போன் வச்சிட்டா..SMS வருமா...? 
 
# I am waiting  



சட்டையில 4வது பட்டன் 4சென்டிமீட்டர் கீழே இறக்கி 
 
காஜா எடுத்து இருக்கானுங்கன்ற ரேஞ்சுக்கு ஃபெயிலியருக்கு 
 
காரணம் சொல்றானுங்க..

Tuesday, November 25, 2014

மாத்தி யோசி .. 77



க்ளைமேட் மாறினதுல ஒரு தொல்லை ஆபிஸ்க்கு ரெண்டு 
மணி நேரம் பஸ்ல போறது தான்..# ஹக்கீஸ் 
போட்டுட்டா போக முடியும்.. நானும் எவ்ளோ நேரம் 
எச்சில் துப்பியே சமாளிக்கிறது.. 



சிகரெட் விளம்பரத்தில பிழியுறதைப் பார்த்தா நான் 
வெளியில இருக்குற கருப்பை விட பல மடங்கு உள்ளே 
இருக்கும் போலயே..# கிங்ஸ் குழிக்குள்ள தள்ளாம 
விடாது போல    



நான் கம்யூனிசத்துக்கு மாறிட்டேன்..இனிமே இட்லி 
சுடாதீங்கனு என் அம்மா கிட்ட சொன்னேன்..உனக்கு 
வேணாம்னா போடானு சொல்லிட்டாங்க..
#அவங்க அ.தி.மு.க. ஆதரவாளர் போல..



கோயம்புத்தூர் க்ளைமேட்கே எனக்கு எட்டாவது , 
ஒன்பதாவது ஓட்டையில புகை வந்துச்சு..இங்க வந்ததுக்கு 
எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டை உருவாகி புகையா போகுது..



இப்படி எல்லாம் புலம்பும்போது தான் தோணுது 
இன்ஜினியரிங் படிச்சதுக்கு பதிலா இட்லி மாவு 
அரைச்சி வித்து இருக்கலாம் போல..

Saturday, November 22, 2014

ஏன் இப்படி ...83


பல வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் எக்சர்சைஸ் 

பண்ணலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்..

செம மழை..# இந்த சிங்கிள் பேக் தான் நிரந்தரம் போல..



காலையில எழுந்து எக்சர்சைஸ் செய்யணும்னு அலாரம் 

வைக்கும்போது இருக்குற எனர்ஜி அலாரம் அடிக்கும்போது 

எங்க போகுதுனே தெரியலை..#எவ்வளவு சோம்பலா இருக்கு 



ட்ராபிக் ஆக காரணமே ஒழுக்கமின்மை தான்னு புலம்பிட்டு 

எங்களை ஓவர்டேக் பண்ணி எதிர் திசையில் இருந்து 

வண்டி வர முடியாத அளவுக்கு ப்ளாக் பண்ணி

நிக்கிறான் ஒருத்தன்..#டேய்.. உங்களுக்கு 

வெட்கமே இல்லையாடா..?



மச்சி நீ சொன்னதை நான் லைக் பண்றேன்டா..

எங்கடா கமெண்ட் போடுறதுன்னு கேட்குறான் ஒருத்தன்..

நேர்ல பேசிக்கிட்டு இருக்கும்போது

#அடேய்..பித்து பிடிச்சி திரியுறீங்களேடா



உதார் விட்டுட்டு போன இடத்தில உதை வாங்காத 

குறையா அசிங்கப்பட்டு வந்து கூட மறுபடியும் அதே 

தவ்லத்தோட திரியுறானுங்க#டேய்..நான் தான் 

கூட இருந்து பார்த்தேனேடா..

Thursday, November 20, 2014

மாத்தி யோசி .. 76



லவ் பண்றவனிடம் கூட நட்பு வச்சுக்கலாம்..
 
ஆனா காலம் கடந்தும் இன்னும் கல்யாணம் ஆகாதவனுங்க 
 
கூட மட்டும் சகவாசமே வைக்கக்கூடாது..
 
#காது வலிக்க புலம்புறானுங்க



என் அண்ணனுக்கு(கஸின்) 3 வருஷமா பொண்ணு 
 
தேடுறாங்க..இப்போ வந்தவாசில ஒரு பொண்ணு 
 
இருக்குனு சொன்னாங்க..காட்டுவாசியா இருந்தாலும் 
 
ஓகே கட்டி வைங்கன்னு சொல்லிட்டேன்.. 



அவதார்ல வர்ற இக்ரானை கூட ஈஸியா மெயின்டைன் 
 
பண்ணிடலாம் போல..இந்த பொண்ணுங்களை மேய்க்கிறது 
 
கஷ்டம்டா சாமி..#எத்தனை கேள்வி கேட்குறாளுங்க..



எவன் தான் ஊழல் பண்ணலை,லஞ்சம் வாங்கலைன்னு 
 
நாமே சமாதானம் சொல்லிக்கிற அளவுக்கு கெட்டுப்போயி
 
இருக்கோம்..#சுஜாதா காலமாயிட்டார்..
 
ஷங்கர் மட்டும் போராடுனா போதுமா..? 
 
யோசிப்போம் மக்களே..



பாஸ் கிட்ட பேசும்போது நவரசங்கள் போக பாதரசத்தோட 

சேர்த்து பத்து ரசமும் காட்டுறானுங்க முகத்தில..

எங்கடா கத்துக்கிட்டீங்க இந்த வித்தையை..

# சொம்புகளின் சாகசங்கள்..

Tuesday, November 18, 2014

ஏன் இப்படி ...82


பத்தாவது படிக்கிற பக்கத்துவீட்டு பையன்கிட்ட 

விளையாட்டா கேட்டேன்.. பள்ளிப்பேருந்துக்கு எவ்ளோ 

கட்டணம்னு.. புரியாம முழிச்சவன்கிட்ட விளக்கி சொன்னதும் 

ஸ்கூல் பஸ் கு எவ்ளோ சார்ஜ்னு தமிழ்ல கேட்க 

வேண்டியது தானேனு சொல்றான்..# தமிழ் வாழ்க..!!!!!!!!!!!!



வனரோஜா இல்ல வாசமில்லாத ரோஜா போனா கூட 

வயித்தை உள்ளே இழுத்துக்குறேன்..

#ஐயையோ வயசாயிடுச்சோ..தொப்பை தொல்லை 

தாங்க முடியலையே நாராயணா..



காலா காலத்துல கல்யாணம் ஆகாம இருக்கவன் 

கனவுல கன்னிப்பெண்கள் தானே வரும்..வெட்கமே 

இல்லாம CANDY CRUSH வருதுனு சொல்லுது ஒரு நாயி..



நண்பர்களின் சோகத்தில் பங்கெடுத்துக்கலாம்னு 

துணைக்கு போனா,நம்மை சிக்க வச்சி நுங்கை 

எடுத்துட்டு விடுறானுங்க..

#கூட வந்தது ஒரு குத்தமாடா..???



லோக்கல் கேபிள்ல ராத்திரி 10 மணிக்கு செம 

சூடான பொண்ணை வச்சி லேகியம் வித்தானுங்க..

குப்புறப்படுத்துட்டு காலையில எழுந்து பார்த்தா 

கந்த சஷ்டி கவசம் ஓடுது..

Sunday, November 16, 2014

மாத்தி யோசி .. 75


4 நாளா இந்த சமூகத்தை கம்யூனிஸக் கண்கள் 

கொண்டு பார்க்கிறேன்..#"சென்னைக் கண்" 

செமையா சிவந்துடுச்சு



யுவி எப்படியும் உலகக்கோப்பை அணியில் இடம் 
பிடிப்பார்னு இன்னும் நம்புறானுங்க..# தட் நெல்லா..? 
இனிமே தான் வயலை வாங்கி,நட்டு மொமெண்ட்..



ராயுடு,ரோஹித் சதமடிச்சதுக்கு திட்டுறானுங்க 
கம்பீர்,ஷேவாக்,யுவராஜ் சிங் எல்லாரும் அணியில் 
இடம் பிடிக்கணும்னா 20 பேரு வச்சி தான்டா விளையாடணும்..



மேட்சில ஒரு கட்டத்துக்கு பிறகு எவனுமே டீம்
ஸ்கோர் பார்க்கலை..ரோஹித் ஷர்மா ஸ்கோர் மட்டும் 
தான் கவனிச்சோம்..#நீ பின்னு மச்சி..இன்னும் நாள் இருக்கே..



தங்கம் தகதகனு மின்னும்னு சொன்னானாம் தமன்னா 

இடுப்பை பார்க்காதவன்..என்னை வேலை செய்ய 

விட்டாதானேடா தெரியும்..#நான் செய்வேன்டா..

நல்லா செய்வேன்..

Wednesday, November 12, 2014

கம்யூனிசக் கத்தி..



எப்பவுமே கதை கேட்காதவரு இந்த படத்தில தான் கேட்டு 
 
இருப்பாரு போல..நல்லவேளை கத்தி அவ்ளோ 
 
மொக்கையா இல்ல..



கதிரேசனோட சுருக்கம் கத்தியாம்.. ஒருவேளை சுந்தரேசனு 
 
பேரு வச்சி இருந்தா படம் பேரு சுத்தினு இருக்குமோ..?



து.ம.து படத்துல வர்ற பாத்ரூம் அழுகை போல இல்லாம 
 
சுமாராவே அழுது இருக்காரு..இருக்காத பின்னே..?
 
சாரோட சமீபத்திய படங்களைப் பார்த்து நாம கதறி 
 
அழுததை கவனிச்சு இருக்காருல..



ப்ரோ..ஒரு சின்ன வேண்டுகோள்.. கண்ணை சிமிட்டி 
 
வாயைக் கோணி வசனம் பேசி காமெடி ட்ரை 
 
பண்ணாதீங்க ப்ரோ..கஷாயம் குடிக்கிற மாதிரி 
 
செம கடுப்பா இருக்கு..



கோலா கம்பெனிக்காரன் தான் இந்த வேலை 
 
பார்த்து விட்டுட்டான்..நகைக் கடைக்காரன் மேல 
 
ஏதாவது கேஸ் இருக்கானு பார்த்துக்குங்க ப்ரோ.. 
 
அப்புறம் ஈமு கோழி கதை ஆகிட போகுது..




நீங்க விளம்பரப்படம் நடிக்கிறதை நிப்பாட்டிட்டு கதைக் 
 
கேட்டுட்டு நல்ல படமா நடிங்க ப்ரோ..அது போதும்..
 
பயபுள்ளைங்க சமாளிக்க படாதபாடு படுறானுங்க பாவம்..



ப்ரோ..நீங்க எதுக்கும் சொல்வதெல்லாம் உண்மை,நீயா நானா
 
ஷோவெல்லாம் பாருங்க..ரியாக்ஷன் எப்படி குடுக்கணும்னு
 
தெரியும்..இன்னொரு விஜயை பார்க்கும் போது நீங்க கொடுத்த
 
ரியாக்ஷன்ல காலையில சாப்பிட்ட இட்லி வெளிய வர்றது 
 
போலவே இருந்துச்சு எனக்கு..



மக்கள் பிரச்சினையைப் பேசுற சமூகப்படம்னு சொன்னதும் 
 
எனக்கு புதிய கீதை,மதுர,தலைவா லாம் ஞாபகம் வந்து 
 
கிலி ஆயிடிச்சு..நல்லவேளை..நன்றி ப்ரோ..


மோடி கூட கை குலுக்கி,ராகுலை பார்க்கிறேன்னு
 
பீதியக்கிளப்பி அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கி அப்படியே
 
கம்யூனிசம் பேசி குழப்பி..#ண்ணா.. சூப்பர் ஸ்டார் ஆக 
 
அரசியல் தகுதி வந்துடுச்சிங்கண்ணா..

Wednesday, November 5, 2014

மாத்தி யோசி .. 74





இன்னைக்கு லீவ் போடு மச்சி கத்தி படத்துக்கு போலாம்னு 

சொன்னான் ஒருத்தன்..நான் கம்பெனிக்கே போறேன்னு
 
சொல்லிட்டேன்..# ஏழாம் அறிவுக்கு 1000,அஞ்சானுக்கு 500,

யானுக்கு 420 செலவு பண்ணதே இன்னும் வலிக்குது



மழையில நனையும்போது அவ்ளோ ஆனந்தமா இருக்கு..

அப்புறமா நச நச னு அவஸ்தையா இருக்கு..#DELICATE POSITION



பொண்ணுங்களோட விதண்டாவாதத்துக்கு முன்னாடி 

பசங்க எவ்ளோ விவாதம் பண்ணாலும் எடுபட மாட்டுது..

என்னமா பேசுறாங்க..#அதனால தான் "MOTHER TONGUE " கோ..



விட்டுக் கொடுத்து வாழணும் இது TEAM WORK.. 

போட்டுக் கொடுத்து பொழப்பை ஓட்டணும்..

இது SHAME WORK..அது தான் நடக்குது இங்க..

#ஆபிஸ் அவஸ்தைகள்






இப்போ வெல்லாம் அப்புறம் மச்சி னு கேட்டாலே 

சரக்கடிக்கலாமா னு கேட்குறானுங்க..

# நல்ல நட்பு வட்டாரம்..(என்னையும் சேர்த்து தான்..)

Monday, November 3, 2014

ஏன் இப்படி ...81


காய்ச்சலா இருக்குனு சொன்னா Y ma Rain la Dipped ah னு 

கேட்குறா ஒருத்தி ..# காய்ச்சலே தேவலாம் போல 

இருக்கே கடவுளே ..



எவனுக்கோ பொண்ணை கட்டிக் குடுத்துட்டு என் கிட்ட 

வந்து ஏன் இன்னும் குழந்தை பிறக்கலைன்னு கேட்டா 

நான் என்ன பண்ணுவேன்..# MR ஆன என் ஆபிஸ் அவஸ்தைகள்..




தீபாவளிக்கு ஒரு ஹோட்டல் கூட இல்லை .. 

ஆனா அத்தனை ஒயின்ஸ் ஷாப் பும் திறந்து இருக்கு..

# பாண்டிச்சேரி பகீர் இம்சைகள்..# குடும்பத்தோட 

பயணம் பண்ணுவதில் எவ்ளோ பிரச்சினைகள்..



குழந்தைகளுக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்னு 
 
தெரிஞ்சும் உனக்கு யாரைப் பிடிக்கும்னு ஓயாம கேட்டு 
 
இம்சை பண்றதைப் போல உங்க சந்தோஷத்துக்காக நாங்க 
 
உங்களுக்கு கட்டுப்பட்டு உங்க சொல்படி தான் 
 
நடக்கிறோமானு எத்தனை தடவை தான் கேட்பீங்க..? 
 
முடியல பாஸ் / கேர்ள்ஸ்..




தீபாவளியை எப்படிடா கொண்டாடுனீங்க னு கேட்டா 

செம சரக்கு மச்சி.. புல் போதை னு சொல்றானுங்க..

# டேய்..என் கிட்ட மட்டும் ஏன்டா இப்படி சொல்றீங்க..

ஏற்கனவே எவனும் எனக்கு பொண்ணு குடுக்க மாட்றான்..