Friday, October 3, 2014

ஏன் இப்படி ...79

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




தமிழ்,தெலுங்கு சினிமாவுல வருவதை விட எதிர்பார்க்காத,

அதிகமான ட்விஸ்ட் என் வாழ்க்கையில வருது.. 

அட தேவுடா...!!!!!!!!!!!!!!!!




நம்ம ஊருல எறும்பு புத்து,ATM க்கு அடுத்து எண்ணிக்கையில 

இன்ஜினியரிங் காலேஜ் தான் இருக்கும் போல.. ஏன் இப்படி..



இஞ்சினியர்கள உருவாக்க சொன்னா இயந்திரங்களை 

உருவாக்குறானுங்க..நல்லதில்லை.. நல்லதில்லை.. 

இது நாட்டுக்கு நல்லதில்லை...





இந்தியா FIFA வேர்ல்ட் கப் உள்ள போக ஒரே வழி நாம 

அத நடத்துறது தான்..# யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா ப்ளீஸ்..




தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு 

மொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..? 

# ஆபிஸ் அலப்பறைகள்




இங்கிலீஷ் ல சொல்லிக்கொடுத்தாலே அது இன்டர்நேஷனல் 

ஸ்கூல் ஆயிடுமாடா.. # ச்ச.. ஊருக்குள்ள எங்க 

பார்த்தாலும் INTERNATIONAL SCHOOL




வாழைப்பழத்தை விட அதோட தோல் அதிகமான 

எடை இருக்கு..கேண்டீனுக்கு கொடுக்கவே ஸ்பெஷலா 

விளைய வைக்கிறானுங்களா..? # ஆபிஸ் அலப்பறைகள்




ஹைவேஸ் ல போகும்போது இந்த அரை லூசுங்க அடிக்கிற 

ஹாரன் சத்தத்துல ஹார்ட் அலேக்கா வெளிய வரும் 

போல இருக்கு.





திருவிழா பேனர்ல அம்மனை விட அரை அடி 

பெருசா அனுஷ்கா ,ஹன்சிகா போட்டோ..

# அம்மன் அருள் பொருகனு தமிழை தப்பா வேற எழுதிக்கிட்டு 

# பாவம் டா அம்மன்




ஆடி மாத தள்ளுபடி ல அவ கூட ஜவுளிக்கடைக்கு போகாம 

ஆடிட்டிங் னு  சொல்லி தப்பிச்சு,போன சண்டே மாட்டிக்கிட்டேன்..

# 3 கடை, 7 மணி நேரம், 4200 ரூபா சுவாகா...

2 comments:

மகிழ்நிறை said...

office alaparai :)))
தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவைங்க சகோ, படிச்சு எதிர்கால தலைமுறைகள் பயன்படுத்தட்டும்:)) juz kidding:)

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நீங்க சொல்றதும் சரி தான்..நான் இதை பத்தி கல்வி அமைச்சர் கிட்ட பேசிட்டேன்.. பாடப்புத்தகத்துலையே சேர்த்துடலாம்னு சொல்லி இருக்காங்க .பார்ப்போம்.