அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
அது ஒரு அழகான sunday ... எங்க 200 பேருக்கும் மட்டும் அது ஒரு
பாடாவதியான sunday வா போச்சு...
நானும் ஒரு ஆந்திரக்கார பையனும்
படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி கெளம்புனும் ...
இரும்புக்கொட்டை மு. சி படம் HOUSEFULL
ஆனதால நான் தீர்த்தம் சாப்பிட்டுட்டு மலை ஏறலாம்னு
சொன்னேன்... அவன் கேட்காம சுறா படத்துக்கு
போகலாம்னு சொன்னான்..
அந்த கவுன்ட்டர் ல கூப்பிட்டு கூப்பிட்டு
டிக்கெட் குடுத்தானுங்க...
அப்பவே அவன் கிட்ட சொன்னேன்...
டே... வாடா...வாடா...வாடா... னு..
அவன் கேட்கலை...
உள்ள போறதுக்கு FIRST கிளாஸ் டிக்கெட் வெறும்
35 RS சொன்னானுங்க... அது வேற AC DTS..
எனகென்னமோ உள்குத்து இருக்கும்னே தோனுச்சு...
உள்ள போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது...
ENTRY டிக்கெட் 35 RS.. EXIT டிக்கெட் 200 RS ..
படம் ஆரம்பிக்கும் முன்னாடி ரொம்ப ஆர்ப்பாட்டமா இருந்துச்சி...
SCREEN ல மருத்துவர் வந்ததுமே அத்தனை
உற்சாகமும் போயி மயான அமைதி ஆயிடிச்சி...
OPENING SCENE ல கடல்ல இருந்து சார்
ஒரு நீச்சல் அடிச்சிக்கிட்டு வந்தாருங்க பாருங்க.....
எனக்கு கடப்பா நீச்சல் தெரியும்...
முங்கு நீச்சல் தெரியும்...
இது என்ன புது விதமான நீச்சல்னே தெரியல சார்...
முட்டி அளவு தண்ணில மனுஷன் பறந்து பறந்து நீச்சல் அடிக்கிறார்...
காதுக்குள்ள சொயிங் னு ஒரு சத்தம்...
உடனே இவர் தான் நல்லவரு..வல்லவரு...
உயிரை எடுக்குறதுலன்னு
OVER BUILD UP பாட்டு ஒன்னு......
ஆமா..ஆமா... உடனே எழுந்து வெளிய போயிட்டோம்ல...
அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி...
இவர் தான் குப்பதுக்கே LEADER ...
ஒரு நிமிஷம்... 10 பைசா க்கு பிரயோஜனம் இல்லாத
அந்த படத்தோட கதை எதுக்குனு
நீங்க கேட்குறது எனக்கு புரியுது....
சரி... வாணாம்...வுட்ருவோம்...
படம் பார்க்கிறவங்க பொதுவா என்ன சொல்லுவாங்க ..
படம் எனக்கு பிடிக்கல.. தூக்கம் வருது..
இல்ல படம் பிடிச்சிருக்கு... டைம் போறதே தெரியல...
இல்ல மச்சான்..போரடிக்குது.. வா தம் அடிக்கலாம்...
இப்படி எதாவது சொன்ன பரவா இல்லைங்க...
அவன் எனக்கு வாந்தி வருது னு சொன்னான் ...
மொழி தெரியாத அவனுக்கே வாந்தி வருதுனா
என் நிலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க...
ஆன ஒரு விஷயம்ங்க..
முதல் பாட்டு தவிர வேற எந்த பாட்டுக்கும்
நான் எழுந்து வெளியில போகலைங்க...
ஏன் போகணும்... அட ஏங்க போகணும்...
எல்லா பாட்டுலயும் நல்லதா 4 பொண்ணுங்கள
கூப்பிட்டு ஆட்டம் போட வச்சி இருக்கானுங்க...
பத்தாததுக்கு தமன்னா வேற..
தமிழ் நாடு பேர தமன்னாடு னு மாத்த சொல்லி
போராட்டம் நடத்தலாம் னு பார்க்குறேன்...
interval குள்ளேயே 1 பாக்கெட் கிங்க்ஸ் சிகரெட்டும்
காலினா பாத்துகுங்களேன்...
இண்டர்வல் முடிஞ்சி 10 நிமிஷம் தாங்க ஆகி இருக்கும்..
.
அவங்க மாமா ஊருல இருந்து வந்துட்டதா சொல்லி
ஓடி போயி தப்பிச்சுட்டான்...
ஆந்திராவுல இருக்குற அவனுக்கு
ஊத்துக்குளி மாமாவாம்...
சரி போ நாயே னு விட்டுட்டேன் ..,...
மக்களை ஒரு கொடிய கிருமிகிட்ட
இருந்து அழிக்கிற பணியில ஈடுபட்டதுக்கு அப்புறம்
என்னோட சுக துக்கங்களை பார்க்க முடியாதுல்ல...
விஜய் சாருக்கு ஒரு விண்ணப்பம்...
இனிமே உங்க டான்ஸ் பார்த்துட்டு
மட்டும் படம் ஓடிடும்னு தயவு
செய்து நினைக்காதீங்க...
குட்டி பிசாசு படத்துல வர்ற
பாப்பா கூட செம ஆட்டம் ஆடுது...
கச்சேரி ஆரம்பம் படம் எல்லாம்
கல்லா கட்டிடுச்சு...
இன்னும் நெறைய எழுதணும்னு தோணுது ..
முடியலைங்க...
சரி.. எங்க போயிட போறாரு...
எப்படியும் அடுத்த படத்துல
ஆப்போட தான் வருவாரு...
அப்ப பார்த்துக்கலாம்...
இனி படத்தோட பாட்டுகள்...
நான் நடந்தா காமெடி..
நடிச்சா சிரிப்படி...
என் மூஞ்சி ஸ்க்ரீன்ல வந்தா பறக்கும் செருப்படி....
சாம்பாருன்னா பருப்படி...
சமைக்க வேணும் நெருப்படி...
என் படம்னா தமிழ்நாட்டுக்கே வெறுப்படி...
நான் இன்னும் திருந்த வில்லை...
என் படம் வந்தா தொல்லை...
மக்களின் உயிரை எடுப்பதிலே நான் எமனோட பிள்ளை...
நடிகன் இவன்தான் நடிகன்...
நம்புங்க சத்தியமா இவன் நடிகன்...
படம் பாக்க theatre வந்தா சனியன் சாவடிப்பான்...
No comments:
Post a Comment