Monday, August 31, 2015

10 செகண்ட் கதைகள்.. Part 2




செடியில் முதன்முதலாக பூ பூத்ததையும், 

பக்கத்து வீட்டு மனிதர் முதன்முதலாக சிரித்ததையும், 

உடல் மீது முதல் மழைத்துளி விழுந்ததையும் 

விழாவென கொண்டாடுகிறோம்..

# ஆம் நாங்கள் ஆண்ட்ராய்ட் யுக மனிதர்கள்..




எனக்கு அடுத்தவங்களைப் பத்தி புறம் 

பேசுறவங்களைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கும்..

அப்படியா மச்சி என்றவனிடம் சொன்னேன்..

ஆமாம்டா.. கிளார்க் ரவி என்ன பண்ணான் தெரியுமா...?????



கண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன குடி 

வேண்டி இருக்கு.. இவனுங்களால தான்டா குடிக்கிற 

அத்தனை பேருக்கும் அசிங்கம்னு சொல்லிட்டு கீழ 

குனிஞ்சி தேடிக்கிட்டு இருக்கேன்.. என் வேட்டியை...




எவ்ளோ வெயில் அடிக்குது..பாவம் மக்கள்னு 

பரிதாபப் படுற நான் தான்.. கொஞ்சம் முன்னாடி 

பசிக்குதுனு கை ஏந்திய மூதாட்டியை 

தவிர்த்து விட்டு வந்தவன்..




ABCD கூட தெரியலையா உனக்குனு கலாய்ச்சேன் 

பக்கத்து வீட்டு பாப்பாவை.Candy crush level 70 ல 

திணறிக்கிட்டு இருந்தேன்.போனை வாங்கி கேமை 

முடிச்சிட்டு என்னைப் பார்த்தா பாருங்க 

ஒரு பார்வை..!!!

வேணாம் விடுங்க..



வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் 

தெரியுமானு ஆரம்பிச்ச தாத்தாகிட்ட, 

பாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு 

ஞாபகம் இருக்கானு கேட்டேன்.. 

நடுங்கிட்டார்.. 

திருக்குறள் < திருமதிகுரல்...????

Tuesday, August 25, 2015

10 செகண்ட் கதைகள்..


3 மணி நேரம் போராடியும் தீயின் ஆரம்பப் புள்ளியை 

கண்டறிய இயலாதவர்களிடம் நான் சரியாய் 

அடையாளம் காட்டினேன்.. ஆம்.. நான் அங்கே தான் 

சிகரெட் துண்டினை வீசியிருந்தேன்...




9.40 க்கு வேகமாய் ஒன் வேயில் சென்ற என்னை 

மடக்காத காவலர்கள்.. 10.10 க்கு திரும்பி வந்த 

என்னை மடக்கி சொன்னனர்.. "ஊதுடா.."




5 வருடங்களாக உன்னிடம் சொல்லத் தயங்கிய 

என் காதலை.. நீயாகவே வந்து என்னிடம் 

சொன்னதும் எனக்குள் மணியடித்தது..

# ஆம்..கருமம் பிடித்த அலாரமே தான்..




பைக்கில் செல்லும்போது நீ கொடுத்த செல்போன் 

முத்தத்தால் நான் காற்றில் மிதப்பது போலவே 

ஒரு உணர்வு..ஆனால் என் உடம்பை சுத்தி ஏன் 

இவ்ளோ பேர் நிக்குறாங்க...




எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க..

ஏன்னே புரியலை.. கண்ணாடியில தெரியிறவனும் 

அதையே சொல்றான்.. பைத்தியக்காரன்...




பசிக்குதுனு  சொன்ன நண்பனிடம் என்ன 

சாப்பிடலாம்னு கேட்டேன்.. ப்ரைடு ரைஸ், சிக்கன் 

அதுக்கு முன்னாடி 2 பீர்னு சொல்றான்..




உன்னைக் காதலிக்க தொடங்கியபின் யாரும் 

என் கண்களுக்கு தெரிவதில்லை.. நீயும் தான்..

# எனக்கு தான் பார்வை இல்லையே..

Monday, July 13, 2015

பாகுபலி - "தேவதை தமன்னா" ரசிகனின் பார்வையில்...


சிறுத்தை,வீரம் படங்களின் இயக்குனர் சிவாவை விட, 

தமன்னா எனும் பேரழகியை திரையில் எவராலும் 

அலங்கரித்து காட்ட முடியாது என்ற என் எண்ணத்தை 

மாற்றியுள்ளார் ராஜமௌலி...
 

ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை "தமன்னாடு" னு 

மாற்ற துடிக்கிறேன். இனி அகராதியில தேவதையை 

தூக்கிட்டு தமன்னா னு மாத்திடலாம்.


படத்தோட கதையைப் பத்தி தான் எல்லாரும் 

சொல்றாங்களே..நாம அதுக்கும் மேல சில 

விஷயங்களைப் பார்ப்போம்..


முதல் சீனிலேயே ரம்யா கிருஷ்ணனை 

"பின்னாடி குத்திடுறாங்க".. கத்தியால.. முதுகில..

(ம்ஹும்..நான் திருந்துவேன்னு எனக்கே நம்பிக்கை இல்லை..)

வயசானாலும் வாளிப்பா தான் இருக்காங்க..ஹ்ம்ம்ம்ம்..

அம்மன் படத்திலேயே ஜொள்ளு விட்டவன் நான்...


பிரபாஸ் வளர்கிற அந்த கிராமத்தில ரோஹிணியைத் 

தவிர வேற பெண்களையே காட்டாத இயக்குனருக்கு என் 

வன்மையான கண்டனங்கள்...



அவ்ளோ பெரிய சிவலிங்கத்தை தூக்குறது கூட 

பரவா இல்லைங்க..அப்படியே ஜம்ப் பண்ணான் பாருங்க..

சிரிப்பை அடக்க முடியல.. பயலுக்கு ஒரு சின்ன கீறல் 

கூட இல்லை..

 
பிரபாஸ் எப்போ பாரு "ஏறிக்கிட்டே" இருக்கான்.. 

மலை மேல,மரத்து மேல, "தமன்னா" மேலனு.. 

மலையில இருந்து தாவுனான் பாருங்க.. 

அணிலு பிச்சை வாங்கணும்..


ஹாலிவுட் படங்களிலும்,சைனீஸ் படங்களிலும்,

சில "விஜய்" படங்களிலும் மட்டுமே பார்த்து வந்த 

அதிஅற்புத அந்தரத்தில் தாவும் கலையை அழகா 

காட்டி இருக்காங்க..ஏனோ எனக்கு தான் சிரிப்பை 

அடக்க முடியலை.. (200 கோடி அப்பே..200 கோடி..?? 

ஆமா 200 கோடி.. நீ பார்த்தே..??)


சரி தமன்னாவுக்கு வருவோம்.. நீலப் பட்டாம்பூச்சிகள் 

சூழ திரும்புனா பாருங்க.. செயலிழந்து போயிட்டேன்.. 

அருவி பேக்ட்ராப்ல வெள்ளி மழையில நனையுற 

தங்க சிலையா ஜொலிச்சா தமன்னா டார்லிங்..



தமன்னாவை சில வீரர்கள் துரத்த,அவ ஓட,எனக்கு 

கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. ஒருத்தன் அவளைக் 

கொள்ள பாய, நான் ஸ்க்ரீனை நோக்கி ஓட அவ 

கத்தியால அவனைக் குத்தினா.. நான் திரும்பிட்டேன்.. 

அழகுப் பதுமையினுள் ஆக்ரோஷ புயல்..



அவளோட அந்த "கூர்மையான இதுல" இருந்து 

என்னால பார்வையை எடுக்கவே முடியலை.. 

ஆங்.. அந்த கத்தி..கத்தி..

 

அடுத்ததா..அவ தனிமையில படுத்துகிட்டு தண்ணிக்குள்ள 

கையை விடுவா பாருங்க.. அவ கையைத் தொட்ட 

மீனெல்லாம் தேனா தித்திக்கும்..ஹ்ம்ம்ம்ம்... 



அவ கூட ஒரு தோழி வருவா.. நல்ல ஃபிகர்..நல்ல ஃபிகர்.. 

அவளுக்கு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் வச்சி இருக்கலாம்...

 

பிரபாஸ்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் அரும்பும் 

காட்சி இருக்கே.. அடடடடா.. அவங்க உருள..எனக்கு 

உடம்பு வலி வந்துடுச்சு.. ஹ்ம்ம்ம்ம்ம்..அதுலயும் அந்த 

தண்ணீரில் அவ மொத்த உருவமும் தெரியும் காட்சி.. 

சொல்ல வார்த்தைகளும் இல்ல.. "ஜொள்ள வாயும்" இல்ல..


 
என்னடா தெலுங்கு படத்தில இன்னும் ஹீரோயினை 

தண்ணியில நனைய விடலயேனு நெனச்சேன்.. 

உடனே தமன்னாவை குளிப்பாட்டிட்டானுங்க.



அனுஷ்காவை "அழுக்கு தேவதையா" காட்டி இருக்காங்க.. 

அட போங்க பாஸ்.. செகண்ட் பார்ட்டிலயாவது சிறப்பா

காட்டுங்க..அவங்க காட்டுவாங்க..



அந்த 100 அடி சிலையை நிறுவும்போது கயிறு கட்டி 

இழுக்கிறவங்க எல்லாம் கை வலி,கால் வலின்னு 

கத்தாம "பாஹுபலி"னு கத்துறாங்க..என்னமோ போ.. 



200 கோடி பட்ஜெட்டாலையோ என்னவோ சம்பந்தமே 

இல்லாம ஆனா "மிகஅவசியமான"(ஹி..ஹி..) ஒரு ஐட்டம் 

சாங் இருக்கு.. மூணு பிகர்கள் கூட..ஒருத்தியை மட்டும் 

துள்ளல்னு  ஒரு சூப்பர் ஹிட் படத்தில பார்த்திருக்கேன்..

வில்லன்ற காரணத்துக்காக ராணாவை ஆட்டத்திலேயே

சேர்த்துக்கலை.. ராஜமௌலி வேற வர்றாரு அந்த சீன்ல.

எல்லாம் K.S ரவிகுமாரால வர்றது.. 



முதல் பாதி முழுக்க சூப்பர் பவர்னு காமெடியா

இருந்தாலும்,தமன்னாவைக் காட்டி ஜொள்ளு விட்டு 

வாயைப் பிளக்க வைச்சு.. இரண்டாம் பாதியில அரண்மனை

செட்டுகளாலும்,போர்க்காட்சிகள் பிரம்மாண்டத்தினாலும் 

வாயைப் பிளக்க வைக்கிறாங்க..


ட்ராய்,ஹெர்குலிஸ் இது எல்லாம் போர் அடிக்குதுனு 

நான் பார்க்க மாட்டேன்..என்னைப் போல ஆட்களையும் 

பார்க்க வைக்கிற விஷயத்தில..இந்த படம் WORTH TO WATCH..


ஹர ஓ சம்பா.. அழகுனா தமன்னா தாம்பா...
 
என்றும் ஜொள்ளுடன்.. 3G

Tuesday, June 30, 2015

ஜோக்கூ..65





இன்னைக்கு மேட்ச் இருக்கா..? என நீ 
 
கேட்கும் தொனியிலேயே,தனிச்சையாய்
 
கூறுகிறேன்.. நான் ப்ரெண்ட் வீட்ல பார்த்துக்குறேன் மா..




உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாருங்க எனும் 
 
உன் கேள்விக்கு "பண்டரிபாய்" என பொய் 
 
சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய..???




உன் காதல் பொங்கும் தருணங்களில் என் கண்களில் 
 
ஜீவனே இல்லை என கோபிக்கிறாய்..
 
#காஞ்சிப் பட்டா,கஜானா ஜுவெல்லரியா என 
 
கலவரம்தான் தோணுதடி..




என்னிடம் உங்களுக்கு பிடித்தது என்னவெனக் 
 
கேட்கிறாய்.. இப்படி கேட்கும் உன் "நகைச்சுவை உணர்வு" 
 
தான் என எப்படி சொல்ல..!!!




உன் தோழிகளுடன் எடுத்த குழுப்புகைப்படத்தை 
 
காட்டி என் பார்வை உன் மீது மட்டுமே நிலைத்திருக்க 
 
வேண்டுமென எதிர்பார்ப்பது ஏன்டி..?

Thursday, June 25, 2015

அர்த்தம் தெரியுமா..? 18


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...


சுனைனா,ஆத்மியா வுக்கு எல்லாம் அடுத்த பட 

வாய்ப்பு இல்லையேனு நினைக்கும்போது.. 

தனன்யா,மோனிகா,வசுந்தரா வுக்கு எல்லாம் 

கல்யாணம்னு  வரும்போது...



இந்த வருஷமாச்சும் பல்க்கா அப்ரைசல் வரும்னு 

நம்பி இருக்கும்போது புது பாஸ் வரும்போது...



பசங்களோட பார்ல உட்காந்து சரக்கடிக்கும்போது 

கேர்ள் ப்ரெண்டோ/பொண்டாட்டியோ போன் பண்ணும்போது...



பொண்ணு அழகா இருக்கேன்னு பளபளனு முன்னாடி 

வந்து நின்னா,அவ கோண வாயைத் திறந்து 

கொட்டாவி விடும்போது...



குடிக்கும்போது மட்டும் கூட்டு சேரும் நாயிங்க 

எல்லாம் குழுவோடு இணைந்து வேலை 

செய்யணும்னு சொல்லும்போது..

Tuesday, June 23, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.. Part 68






உயிர் தூவலை பயிர் தூவல் போல பக்குவமா

பண்ணாம...உயிர் ஊட்டலை வெறுமனே உறுப்பு

நாட்டல்னு நினைக்கிறதாலதான் உறவுல விரிசலே..

#ஹர ஓ சம்பா..




அரிய வகை மூலிகைகளினாலே அடைய நினைக்கிற

எவனும் அன்பு,அரவணைப்பினாலே அடையணும்னு

நினைக்கிறதில்லை..##ஹர ஓ சம்பா..




உன் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு பெர்மிஷன் 

போட்டாக்கூட திட்டும் பொண்டாட்டி தான்,அவ 

சினேகிதி கல்யாணத்துக்கு ஸிக் லீவ் போட்டு 

கூட்டிட்டு போக சொல்லுவா..




சிவகார்த்திகேயன்,துல்கர் சல்மான் லாம் செம க்யூட்டுனு
சொல்ற அதே வாய் தான்,நாம நிக்கியையும்,
டாப்சியையும் ரசிக்கும் போது பேயைக் கூட ஜொள்ளு
விடுறான் பாருன்னு சொல்லும்...
#என்னாங்கடி உங்க நியாயம்..???




வர வர எவனும் உண்மையை பேசுறதில்லை..
உளறிடுறானுங்க.. போதையில..#ஹர ஓ சம்பா..

Saturday, June 20, 2015

அர்த்தம் தெரியுமா..? 17


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எவன்கிட்டயாவது பிச்சை எடுத்தோ,கடன் வாங்கியோ 

புல் போதையான பின்னாடி இன்னொருத்தன்,

வா மச்சி இன்னைக்கு ட்ரீட் இருக்குனு சொல்லும்போது...



ஊரையே கலக்கி வைரல் ஆன வீடியோ/ஆடியோ/

போட்டோ இன்னும் நமக்கு வராத போது...



திராபையான ட்விட்/போஸ்ட் போட்டு RT,FAVORITE /

 LIKE,SHARE வருதானு வெறிக்க வெறிக்க 

வேடிக்கை பார்க்கும்போது...



காவ்யா மாதவன்,மஞ்சு வாரியர் எல்லாம் 

காலேஜ் பையனுக்கு அம்மாவா நடிக்கிறாங்கனு 

கேள்விப்படும்போது...



ஜெயம் ரவி,நான் கடவுள் ராஜேந்திரன் எல்லாம் 

சொந்த குரலில் பாடுறத கேட்கும்போது, 

கானா பாலா டான்ஸ் ஆடுறத பார்க்கும்போது...

Thursday, June 18, 2015

கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும் ...

Monday, June 15, 2015

அர்த்தம் தெரியுமா..? 16


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எதிர்பார்ப்போட பார்க்க போன படம் படுதிராபையாவோ 

இல்ல கொரியன்,இங்கிலீஷ்,சைனீஸ் பட 

காப்பியாவோ இருக்கும்போது...# ஆமா 7ம் அறிவு,

அஞ்சான்,யான்,மாசு இப்படி பல..



ஆர்வமா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண 

படத்தோட சிடியோ,டொரண்ட் லிங்கோ கிடைக்கும்போது...




கூட்டமா இருக்குற பஸ்ல படிக்கட்டுல 

தொங்கிக்கிட்டே டிக்கெட் வாங்குன உடனே 

பஸ் ப்ரேக் டவுன் ஆகும்போது...




சாய்ஸ்ல விடலாம்னு நெனச்சி படிக்காம விட்ட 

கேள்விகள் மட்டும் பரீட்சையில கேட்கும்போது...




ஷேர் ஆட்டோ,ட்ரெயின்ல எல்லாம் ஹன்சிகா 

போல பிகர்களோ,சோனா,சோனியா போல 

ஆன்ட்டிகளையோ நாம எதிர்பார்த்தா, ஆயாவும் 

சொர்ணாக்காவும் வந்து உட்காரும்போது... 

Friday, June 12, 2015

ஏன் இப்படி..? 96





தண்ணீர் பந்தலில் பானை,டேங்க் விட போஸ்டர்,
பேனர் பெருசா,புதுசா,பளபளனு இருக்கு..
# இதுக்கு பேரு சேவை..ஆமா..சேவை..




ஷாப்பிங் மால்களில் சாப்பிட வாயைத் திறக்கும் 
முன்னாடி விலையைக் கேட்டாலே பர்ஸுக்கு 
பதிலா திறந்துடுறேன்#வாயை..வாயை..
டிக்கெட் விலை 120.. பாப்கார்ன் விலை 160..
#மால்   கொள்ளைகள்...#புளி சோறும் உருளைக்கிழங்கு 
வறுவலும் எடுத்துட்டு போகவிடுங்கடா டேய்..
தலப்பாக்கட்டி பிரியாணி சாப்பிடாம சீன் போட 
சைனீஸ் ரெஸ்டாரன்ட் போனா ஐட்டம் எல்லாம் 
அவன் ஊர் பேரா இருக்கு..




கடைசியில ப்ரைட் ரைஸ் சாப்பிட்டா,அவன் இறால் ஓடு

உரிக்காம சமைச்சு இருக்கான்..#பசிக்கொடுமையில 

பைன் ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன்..அவ்வ்வ்வ்வ்

Wednesday, June 10, 2015

அர்த்தம் தெரியுமா..? 15



ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



சம்பளம் கிரெடிட் ஆன பேங்க் மெசேஜ் 

எதிர்பார்த்திருக்கும்போது, ப்ளாட்,இன்ஸூரன்ஸ் 

மெசேஜ்லாம் வரும்போது... 



லீவ் போட்டு மேட்ச் பார்க்கலாம்னு ப்ளான் 

பண்ணா க்ரவுண்ட்ல மழை வரும்போது ,

வீட்ல கரெண்ட் போகும்போது..



நேரம் போக்க ட்விட்டர் வந்த டைம்லைன்ல 

மொக்க டேக் போட்டு ட்ரெண்ட் ஆகும்போது.. 

புரியாத சண்டை போகும்போது...




பேஸ்புக் போனா கோணமூஞ்சியை கேவலமான 

ஆங்கிளில் எடுத்து அதுல நம்மை டேக் பண்ணி 

விடும்போது,candy crush notification வரும்போது...



ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ணும் நண்பர்கள் 

அவங்களுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு

உனக்கு எப்போடா னு கேட்கும்போது..

Monday, June 8, 2015

ஜோக்கூ..64...




இப்போவெல்லாம் உன்னைப் பார்த்துக்கிட்டே 
இருக்கணும்னு தோணுதுடா என்றாள்..ஆம் என் 
ஜாதகத்தில் கூட ஆறு மாதத்திற்கு சனியின் 
பார்வை உக்கிரமாக இருக்குமாம்..




உன்னை சமாதானப்படுத்துவதை விட கொடுமையான 

விஷயம்..நீ சிணுங்குவதை பார்ப்பது தான்..

#சகிக்கலை..எருமை மாடு போல இருந்துகிட்டு 

இப்போ தான் கொஞ்சுறா..

 
என் அத்தனை ருசிகளும் உன் கைகளில் 
அடங்கிவிடுகிறது என்கிறாய்..# சனியனே..
இன்னைக்கும் நான் தான் சமைக்கணுமா...?????

 
என்னைப் பிரிந்து உங்களால் இருக்க முடியுமா 
என ஏக்கத்தோடு நீ கேட்கும் போது தான் புரிகிறது...
# சம்மருக்கு அம்மா வீட்டுக்கு போகணும் அதானே..




ஏங்க.. ஆபிஸ்ல இருந்து வர லேட்டாகுமா..? என நீ 
கேட்ட உடனே ஆர்டர் செய்து விட்டேன்..
தலப்பாக்கட்டி பிரியாணியும் தந்தூரி சிக்கனும்..

Saturday, June 6, 2015

அர்த்தம் தெரியுமா..? 14


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



நீ நேசிக்கும் ஒருத்தர் அவங்களை நேசிச்ச இல்ல 

அவங்க நேசிக்கிற ஆளைப் பத்தி சொல்லும்போது...



வாலு,பூலோகம்,ரெண்டாவது படம் எல்லாம் இந்த  

மாதமாவது ரிலீஸ் ஆகிடும்னு நம்பும்போது...



பசியோட ஆர்டர் செஞ்சிட்டு காத்திருக்கும்போது 

பக்கத்து டேபிளில் இருந்து உணவு வாசனை வரும்போது..



அடிச்சி பிடிச்சி ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி தியேட்டர் 

போனா படம் ரிலீஸ் ஆகாதுனு தெரியும்போது..

#ஆமா உத்தம வில்லனே தான்..



ராதிகா ஆப்தே, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியா 

நடிக்கிறானு தெரியும்போது..

Tuesday, June 2, 2015

சிற(ரி)ப்பு வைரல் வெடிகள்


வணக்கம் மக்களே.. தீபாவளிக்கு இன்னும் நாள் இருந்தாலும் 

இப்போ நடக்குற விஷயங்களைப் பார்த்தா கொள்ளு கிடைக்காத 

என் கற்பனைக் குதிரை குண்டக்க மண்டக்க ஓடுது.. 



இமயமலைக்கு போயி வெடிக்கும் ரஜினி வெடி,அடுத்த 

வெடியைக் கெடுக்கும் காங்கிரஸ் வெடி,மாமியார் வெடி,

மன்னர் வெடி,தலைவர் வெடினு நமத்துப் போன வெடி 

வெடிக்காம இப்போ உள்ள விஷயங்களை சேர்த்து 

கொஞ்சம் ட்ரெண்டியா வெடிக்கலாமே னு தோணியதோட 

பலன் தான் பின்வரும் பட்டாசுகள்..



விஜயகாந்த் வெடி - குண்டக்க மண்டக்க பத்த வச்சிட்டா 

தூக்கி வெ(அ)டிச்சிடும் பார்த்துக்க..


வாட்ஸப்  வெடி - நீங்க பத்த வச்சா ஒவ்வொரு வீடா போயி 

வைரலா வெடிக்கும்..



பேஸ்புக்/ட்விட்டர் டபுள் டக்கர் - வெடிச்சதுக்கு அப்புறம் 

எவனாவது நம்மை பத்தி பேசுறாங்களான்னு பார்க்கும்..

அப்புறம் டமால், டுமீல்னு டிரண்ட் செட் பண்ணும்..



மீம்ஸ்/டப்ஸ்மாஷ் டகால்டி வெடி - பக்கத்து வீட்டு வெடி 

சவுண்டுக்கு இது ந(வெ)டிக்கும்..



அமைச்சர்கள் சங்கு சக்கரம் - எங்கே பத்த வச்சாலும் 

பக்கத்தில இருக்குற கோவிலை மட்டும் தான் சுத்தி வரும்..



ஓ.பி.எஸ் புஸ்வாணம் - நேரா வச்சி தான் பத்த வைப்பீங்க 

ஆனாலும் அதுவா படுத்துடும்..



மோடி ராக்கெட் - பத்த வச்சிட்டு பாஸ்போர்ட்,விசா 

எல்லாம் காட்டினா, உடனே கிளம்பிடும்..



திருமா திருகல் பட்டாசுகள் - இத நீங்க தனியா பத்த 

வச்சாலும் இன்னொரு வெடி கூட போயி சேர்ந்துக்கும்.. 

அது வெடிக்கும்போது இது புஸ்னு சத்தம் போடும்..



குமாரசாமி சரம் - ரொம்ப நேரத்துக்கு வெடிச்சி கலவரம் 

உண்டாக்கும்னு நெனச்சா எல்லா வெடியும் ஒரே 

நேரத்துல புஸ்னு சத்தம் கொடுக்கும்..



பா.ஜ.க பட்டாசுகள் - பசு இறைச்சி சாப்பிடாத இந்துக்கள் 

பத்த வச்சா மட்டுமே வெடிக்கும்..



ஆதினம்/உமாஷங்கர் டபுள் டக்கர் - கனவுல வந்து 

கடவுள் சொல்ற வரைக்கும் வெடிக்காது..



ஹன்சிகா ஆட்டம் பாம் - இத நீங்க இட்லி குண்டால 

வச்சி நீராவியில தான் வெடிக்கனும்..



லாரன்ஸ் பென்சில் பட்டாசுகள் - இது இன்னொரு 

பட்டாசுக்குள்ள புகுந்துட்டு தான் பெர்பார்மன்ஸ் 

பண்ணும்.. எப்படி வெடிக்கும்னு கணிக்கவே முடியாது..



மணிரத்னம் வெடி - இது எப்பவுமே ம்யூட் மோடுல 

தான் வெடிக்கும்..சத்தமே வராது..



ஹரி பொட்டு வெடிகள் - பொட்டு வெடி தான் ஆனா 

சத்தம் மட்டும் அணுகுண்டு மாதிரி இருக்கும்..



ஷங்கர் ஷாட்கள் - இது கொஞ்சம் காஸ்ட்லியான வெடி..

செட் போட்டா தான் வெடிக்கும்..



ட்ரெண்ட் செட்டிங் இயக்குனர்கள் வெடி - வெடிச்ச அப்புறம் 

வரும் புகையில கொரியன்,சைனீஸ்,பிரெஞ்ச் போன்ற 

பல மொழிகளில் copy னு காட்டும்..



விநியோகஸ்தர்கள் வெடி - இது வெடிக்கிற மாதிரி நடிச்சு 

த(க)ண்ணீரை பீய்ச்சி அடிக்கும்..



அனிருத் அல்ட்ரா மாடர்ன் வெடி - இது ராத்திரியில மட்டும் 

தான் செமையா வெடிக்கும்..அப்புறமா தான் நமக்கு தெரியும் 

அது வேற எங்கேயோ வெடிச்ச வெடின்னு..



2 வருஷம் படம் எடுக்கும் இயக்குனர்கள் வெடி - இது வெடிக்கும் 

போது தமிழ்,தெலுங்குனு ரெண்டு மொழிகளில் 

சத்தம் கேட்கும்.. (மொழிகளில் சத்தம்...????)



சிம்பு,த்ரிஷா டபுள் டக்கர் - வெடிக்கிற மாதிரி முதலில் 

ட்ரைலர் மட்டும் காட்டும்..அப்புறம் எப்போ வெடிக்கும்னு 

அதுக்கே தெரியாது..



சன்னி லியோன் பாம் - பத்த வச்ச அப்புறம் பேப்பர் எல்லாம் 

உறிஞ்சி வெறும் திரி மட்டும் தான் எரியும்..



விராட் கோலி வெடிகள் - பெருசா வெடிக்கலைனாலும் 

குப்பை மட்டும் அதிகமா இருக்கும்.. அப்புறம் 

பொண்ணுங்களை பார்த்தா உடனே அணைஞ்சிடும்..



பாஸ் பட்டாசு - நீங்க எவ்வளவு முயற்சி பண்ணினாலும் 

அதுக்கா தோணினா மட்டும் தான் வெடிக்கும்..



மனைவி மத்தாப்புகள் - நீங்க கொளுத்த நினைக்கும் 

முன்னாடியே வெடிச்சி சிதறும்.. இது மட்டும் தான் 

இருப்பதிலேயே கொஞ்சம் அபாயகரமானது..

Saturday, May 30, 2015

ஏன் இப்படி..? 95




வண்டியோட DIFFERENTIAL ல திருஷ்டி பொம்மையை
 
வரையுறானுங்க..# அடேய்.. ஆர்டிஸ்டுகளா..
 
அடியில எவன்டா கண்ணு வைக்குறான்..???





காஃபி ஷாப்ல பொண்ணுங்க போடுற சீனை விட ,
 
ரோட்டுக்கடையில பானிபூரி பேல்பூரி சாப்பிடும்போது
 
போடுற சீன் இருக்கே..!@#$%^& ஐயோ ராமா 





ரீமேக் பண்றதுல ஒரு விவஸ்தை வேணாமாடா..?
 
விளம்பரத்தைக் கூடவா..? விஜயை முந்திடுவான் 
 
போல விஷால்..#thums up





அக்ஷயைத் திருதியை அன்னைக்கு காஞ்சனா 2 க்கு 
 
வந்த கூட்டத்தை விட கஜானா ஜுவெல்லரியில 
 
கூட்டம் அலை மோதுது..#காஞ்சிபுரம் 





ஹைவேல ஒரு நாயி கார் ஹெட் லைட்டை சீரியல் 

லைட்டு போல ஏகத்துக்கும் போட்டுக்கிட்டு போகுது..

#அடேய்..உனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா போதாதுடா..

எதிர்ல வர்றவனுக்கு தெரியணும்.. 

இல்லைனாலும் சங்கு சங்கு தான்..

Monday, May 25, 2015

கண்களின் சிரிப்பு



இறப்பில் மட்டுமே முழுமையான இழப்பின் வலியை

உணர முடியும் என்றிருந்தேன்..இப்போது 

இருக்கும்போதே உணர்கிறேன்..# ஹனி பெயர்ச்சி..




உன் பார்வையின் கூர்மையே என்னால் தாங்க 
முடியாது..நீ கண்களில் சிரிக்கையில் கரைந்தே 
விடுகிறேனடி..




என் மீதான அத்தனை காதலையும் இரண்டு 
கண்களில் கொண்டுவர உன்னால் மட்டும் 
எப்படி முடிகிறது ஹனி..?

 
நீ கேட்கும் "சாப்பிட்டியா"வில் அடங்கி விடுகிறது..
என் மீதான உனது மொத்த அக்கறையும்..




உன் கோப முள்ளால் மற்றவர்களுக்கு சப்பாத்திக் 
கள்ளியாய் தெரிகிறாய்.. உன்னுள் இருக்கும் அன்பு 
நீரை உணர்ந்தவன் நான் மட்டுமே ஹனி ..

Wednesday, May 20, 2015

ஏன் இப்படி..? 94



பிரிட்ஜ் ல இருந்து ஜில்லுனு தண்ணீர் எடுத்து 


பானையில ஊத்தி வச்சி குடிக்கிறானுங்க..

# அட பதருகளா....!@#$%^&




 


சென்னையில செம வெயில்டா..அங்க எப்படி 

இருக்குனு கேட்குறான்..அடேய்.. நான் 

 சுவிட்சர்லாந்துலயாடா இருக்கேன்..

சுங்குவார்சத்திரம் தான் டா.. 


 


ஈர வெங்காயம் போல பீலிங்கா ஸ்டேடஸ் போடுறவன் 

மேல வர காண்டை விட..என்ன ஆச்சுடானு அவன்கிட்ட 

கேட்டு "ஒண்ணுமில்லைடானு" மொக்கை வாங்குறவனுங்க 

மேல பரிதாபம் தான் வருது..








நாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது 
 
கூட பரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத 
 
எதையோ பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் 
 
கொடுக்குறீங்களே அதத்தான் பொண்ணுங்களா 
 
தாங்கிக்க முடியலை..வீ பாவம்.



தர்பூசணி,ஐஸ் போட்டகிர்ணி, சுள்ளுன்னு மோரு,

ஜில்லுனு பீரு,வெள்ளரிப்பிஞ்சு, ஈரப்பஞ்சுனு 

எதுக்குமே அடங்க மறுக்குதே..# வெயில்..