ஒரு காலத்தில நானும் யோகாசனம் பண்ணுனேன்..
சவாசனம் பண்ணும்போது எங்க அம்மா பார்த்துட்டு
தூங்குறேன்னு தண்ணி ஊத்திட்டாங்க..
இனிமே பொறுமைக்கு எருமையை உதாரணம்
சொல்லாம ஆடித்தள்ளுபடியில பெண்களோட துணிக்கடைக்கு
போகும் ஆண்களை சொல்லலாம்..# அசராம இருக்காங்கப்பா..
எனக்கு இன்னும் பயிற்சி வேணும் போல..
யா யா படம் பார்த்தேன்..சட்டியில இருந்தா தானே அகப்பையில்
வரும் பழமொழிக்கு சிறந்த உதாரணம்..சிவாவின்
சவ பெர்பார்மன்ஸ்..
என்ன தைரியத்துல இப்படி படம் எடுக்கிறானுங்க னு யோசிக்காம
என்ன தைரியத்துல நீ தியேட்டருக்கு போனேன்னு எனக்கு
நானே கேள்வி கேட்கும் நிலைமை.
கொலையும் கூலிங்க்ளாசும் இல்லனா சரக்கும் சைடிஷ்ஷும் னு
பெயர் வச்சாத்தானே அது மிஷ்கின் படமாகும்..என்னமோ போங்க..
ஐயையோ
இவனுங்க கொடுக்குற அலப்பறையை பார்த்தா
சற்குணம் தனுஷுக்காக
சறுக்கிருப்பாரோ..? அடுத்த
மர்ஷியல் குப்பையா இருக்கக்கூடாது ஆண்டவா..!!
நான் சொன்ன மாதிரியே சறுக்கிட்டார் சற்குணம். உங்க காசு
தண்டமா போச்சேனு நமக்கும் தயாரிப்பாளருக்கும்
நய்யாண்டி காமிச்சுட்டார்..
ரெண்டு நல்ல படம் கொடுத்து மூணாவதா கமர்சியல் படம் ,
பெரிய ஹீரோனு சுசீந்திரனுக்கு ராஜபாட்டை,
சற்குணத்துக்கு நய்யாண்டி.மாமா பௌ...
சிறுத்தைல ஆந்திரா வாடை ரொம்ப அதிகமா இருந்துச்சே..
அஜித் படத்துக்கு "காரம்"னு பேரு வச்சி இருக்கலாம்.
அஜித்தின் ஆரம்பம் பில்லா 2 போல "ஆ..ரம்பம்."னு நம்மை
அலற வச்சா அணில் குஞ்சுங்க அலப்பறை பண்ணி
ஆகாசத்துல பறப்பானுங்களே..