விட்டுக்கொடுக்கும் பழக்கமே இல்லாதவன் நான்..
இன்று உன்னை அடைய என்னையே இழக்கும் படி
செய்த தேவதை ஸ்த்ரியடி நீ..
கவலை இன்றி பாயும் காட்டாறைப்போல என்னைப்பற்றியே
சிந்திக்காத
என்னை , இன்று அடுத்தவர் நலனில்
அக்கறை காட்டுபவனாய் மாற்றிய தேவதை
ஸ்த்ரீயடி நீ..
என்னுடன் சண்டையிடவும், கோபித்துக்கொள்ளவும் உனக்கு
உரிமை உண்டு என்கிறேன் நான்..உனக்கு மட்டுமே
உரிமை உண்டு என்கிறாய் நீ..தேவதை ஸ்த்ரியடி நீ..
நீ இல்லாத வெறுமைகளில் மட்டுமே நினைவுகளின்
அருமை புரிகிறது..# ஹனி பெயர்ச்சி..
யாருமே
இல்லை என்ற என் வாட்டத்தை தணித்தவள் நீ..
இன்று என்னை விட்டு விலகி எனக்கென
எதுவுமே
இல்லை என்ற நிலைக்கு தள்ளுகிறாய்..#போ..நீ..போ..
எல்லா திருடர்களும் தன்னையறியாமல் தடயங்களை
விட்டுசெல்வதை போல..என்னை திருடிய நீ,விட்டு
சென்றது உன்னை..
விட்டுசெல்வதை போல..என்னை திருடிய நீ,விட்டு
சென்றது உன்னை..
தாய்ப்பாசம்
அறியாத சேயை விட..திகட்ட திகட்ட
அனுபவித்து பின் இழந்த குழந்தைக்கே வலி
அதிகம்..
# உன் காதலை இழந்த எனக்கும்..# ஹனி பெயர்ச்சி..
காதல் வானில் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்த
என்னை,உன் டெலஸ்கோப் கண்கள் கொண்டு
கண்டுபிடித்த தேவதை ஸ்திரீயடி நீ..
உன்னைப்போல உருவ ஒற்றுமையில்
இன்னொருத்தி இருக்கலாம்..ஆனால்
எனக்கானவள் நீ மட்டுமே..
நீண்ட நாள் கழித்து உன்னைப் பார்க்கையில் எப்படி இருக்கே
என்கிறேன் நான்.."என்னைப்பார்க்காமல் எப்படிடா /
ஏன்டா இருந்தே " என
சண்டையிடுகிறாய் நீ..லவ்யூடி ஹனி..