வணக்கம் மக்களே.. தீபாவளிக்கு இன்னும் நாள் இருந்தாலும்
இப்போ நடக்குற விஷயங்களைப் பார்த்தா கொள்ளு கிடைக்காத
என் கற்பனைக் குதிரை குண்டக்க மண்டக்க ஓடுது..
இமயமலைக்கு போயி வெடிக்கும் ரஜினி வெடி,அடுத்த
வெடியைக் கெடுக்கும் காங்கிரஸ் வெடி,மாமியார் வெடி,
மன்னர் வெடி,தலைவர் வெடினு நமத்துப் போன வெடி
வெடிக்காம இப்போ உள்ள விஷயங்களை சேர்த்து
கொஞ்சம் ட்ரெண்டியா வெடிக்கலாமே னு தோணியதோட
பலன் தான் பின்வரும் பட்டாசுகள்..
விஜயகாந்த் வெடி - குண்டக்க மண்டக்க பத்த வச்சிட்டா
தூக்கி வெ(அ)டிச்சிடும் பார்த்துக்க..
வாட்ஸப் வெடி - நீங்க பத்த வச்சா ஒவ்வொரு வீடா போயி
வைரலா வெடிக்கும்..
பேஸ்புக்/ட்விட்டர் டபுள் டக்கர் - வெடிச்சதுக்கு அப்புறம்
எவனாவது நம்மை பத்தி பேசுறாங்களான்னு பார்க்கும்..
அப்புறம் டமால், டுமீல்னு டிரண்ட் செட் பண்ணும்..
மீம்ஸ்/டப்ஸ்மாஷ் டகால்டி வெடி - பக்கத்து வீட்டு வெடி
சவுண்டுக்கு இது ந(வெ)டிக்கும்..
அமைச்சர்கள் சங்கு சக்கரம் - எங்கே பத்த வச்சாலும்
பக்கத்தில இருக்குற கோவிலை மட்டும் தான் சுத்தி வரும்..
ஓ.பி.எஸ் புஸ்வாணம் - நேரா வச்சி தான் பத்த வைப்பீங்க
ஆனாலும் அதுவா படுத்துடும்..
மோடி ராக்கெட் - பத்த வச்சிட்டு பாஸ்போர்ட்,விசா
எல்லாம் காட்டினா, உடனே கிளம்பிடும்..
திருமா திருகல் பட்டாசுகள் - இத நீங்க தனியா பத்த
வச்சாலும் இன்னொரு வெடி கூட போயி சேர்ந்துக்கும்..
அது வெடிக்கும்போது இது புஸ்னு சத்தம் போடும்..
குமாரசாமி சரம் - ரொம்ப நேரத்துக்கு வெடிச்சி கலவரம்
உண்டாக்கும்னு நெனச்சா எல்லா வெடியும் ஒரே
நேரத்துல புஸ்னு சத்தம் கொடுக்கும்..
பா.ஜ.க பட்டாசுகள் - பசு இறைச்சி சாப்பிடாத இந்துக்கள்
பத்த வச்சா மட்டுமே வெடிக்கும்..
ஆதினம்/உமாஷங்கர் டபுள் டக்கர் - கனவுல வந்து
கடவுள் சொல்ற வரைக்கும் வெடிக்காது..
ஹன்சிகா ஆட்டம் பாம் - இத நீங்க இட்லி குண்டால
வச்சி நீராவியில தான் வெடிக்கனும்..
லாரன்ஸ் பென்சில் பட்டாசுகள் - இது இன்னொரு
பட்டாசுக்குள்ள புகுந்துட்டு தான் பெர்பார்மன்ஸ்
பண்ணும்.. எப்படி வெடிக்கும்னு கணிக்கவே முடியாது..
மணிரத்னம் வெடி - இது எப்பவுமே ம்யூட் மோடுல
தான் வெடிக்கும்..சத்தமே வராது..
ஹரி பொட்டு வெடிகள் - பொட்டு வெடி தான் ஆனா
சத்தம் மட்டும் அணுகுண்டு மாதிரி இருக்கும்..
ஷங்கர் ஷாட்கள் - இது கொஞ்சம் காஸ்ட்லியான வெடி..
செட் போட்டா தான் வெடிக்கும்..
ட்ரெண்ட் செட்டிங் இயக்குனர்கள் வெடி - வெடிச்ச அப்புறம்
வரும் புகையில கொரியன்,சைனீஸ்,பிரெஞ்ச் போன்ற
பல மொழிகளில் copy னு காட்டும்..
விநியோகஸ்தர்கள் வெடி - இது வெடிக்கிற மாதிரி நடிச்சு
த(க)ண்ணீரை பீய்ச்சி அடிக்கும்..
அனிருத் அல்ட்ரா மாடர்ன் வெடி - இது ராத்திரியில மட்டும்
தான் செமையா வெடிக்கும்..அப்புறமா தான் நமக்கு தெரியும்
அது வேற எங்கேயோ வெடிச்ச வெடின்னு..
2 வருஷம் படம் எடுக்கும் இயக்குனர்கள் வெடி - இது வெடிக்கும்
போது தமிழ்,தெலுங்குனு ரெண்டு மொழிகளில்
சத்தம் கேட்கும்.. (மொழிகளில் சத்தம்...????)
சிம்பு,த்ரிஷா டபுள் டக்கர் - வெடிக்கிற மாதிரி முதலில்
ட்ரைலர் மட்டும் காட்டும்..அப்புறம் எப்போ வெடிக்கும்னு
அதுக்கே தெரியாது..
சன்னி லியோன் பாம் - பத்த வச்ச அப்புறம் பேப்பர் எல்லாம்
உறிஞ்சி வெறும் திரி மட்டும் தான் எரியும்..
விராட் கோலி வெடிகள் - பெருசா வெடிக்கலைனாலும்
குப்பை மட்டும் அதிகமா இருக்கும்.. அப்புறம்
பொண்ணுங்களை பார்த்தா உடனே அணைஞ்சிடும்..
பாஸ் பட்டாசு - நீங்க எவ்வளவு முயற்சி பண்ணினாலும்
அதுக்கா தோணினா மட்டும் தான் வெடிக்கும்..
மனைவி மத்தாப்புகள் - நீங்க கொளுத்த நினைக்கும்
முன்னாடியே வெடிச்சி சிதறும்.. இது மட்டும் தான்
இருப்பதிலேயே கொஞ்சம் அபாயகரமானது..