அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
போன பதிவோட என்னோட பழைய ஏரியா பொண்ணுங்க
நினைவுகள் முடிஞ்சது… (ஸ்ஸ்ஸ்…யப்பா… ஓவரா கண்ணை
கட்டுடிச்சு…) இனிமே என்னோட புது ஏரியா… அந்த ஏரியா வில
மொத்தம் 19 தெரு இருக்கு… ஆனா எங்க தெருவில மட்டும் தாங்க
நிறைய பொண்ணுங்க…( எப்படிடா… இதுக்காகவே தெருத்தெருவா
போனியா…) எங்க பசங்க மூலமா கேட்டு தெரிஞ்சிகிட்ட
detail அது…ஹ்ம்ம்ம்…
ரொம்ப பயப்படாதீங்க… புது ஏரியா வில அந்த அளவுக்கு
அடிக்கடி லவ் பண்ணலை… அனிதா , பாத்திமா , ரேவதி ,
அமுதா னு நாலே நாலு பொண்ணுங்களை பத்தி மட்டும் தான்
சொல்ல போறேன்… (அப்பாடா…நல்ல வார்த்தை சொன்னடா
மவனே…) இருந்தாலும் இவளுங்களை பத்தி அதிகம் சொல்ல
வேண்டி இருப்பதால்… ஒவ்வொரு பொண்ணுக்கும் தனித்தனி
பதிவு… (செத்தானுங்கடா…படிக்கறவனுங்க…) ஏன்னா…
அது தான் எனக்கு காதல் உச்சத்தில் இருந்த சமயம்…
( என்னடா…ஏதோ சனி உச்சத்தில் இருக்குற மாதிரி சொல்ற…
சரி விடு… ரெண்டும் ஒண்ணு தான்…) நான் ஏற்கனவே சொன்ன
மாதிரி… 4 அக்கா , 2 ஆன்டி , 2 பொண்ணுங்களை பத்தி சொல்ல
முடியாத நிலைமையிலே இருக்கேன்… ( நல்ல வேளை…
இல்லைனா அதுக்கும் 6 பதிவு போட்டு இருப்பே…)
சரி…நான் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் நடந்ததை
முதலில் சொல்லிடுறேன்… ( அப்ப 8 வதில் இருந்து காலேஜ்
சேரும் வரை வந்த காதல்கள் எல்லாம் வேற இருக்கா….)
முதல் பெண் , அனிதா…
எனக்கு செல்லமா ஹனி…
( நெறைய இங்கிலீஷ் படம் பார்த்த பாதிப்போ…)
எங்க பசங்களுக்கு கூட தெரியும்… நான் எப்படி எல்லாம் நிக்
நேம் வச்சி கூப்பிடுவேன்னு… ( பசங்களுக்கா…? ) அதாவது
பொண்ணுங்க கூட பேசும்போது அவனுங்க கேட்டு
இருக்கானுங்கன்னு சொல்ல வந்தேன்…
அந்த காலத்தில் அரசர்கள் எல்லாம் பெண்களுக்காக
அடிச்சிகிட்டாங்க நான் படிச்சி இருக்கேன்…
( ஏன்டா நாயே…வரலாறுல எத்தனை விஷயங்கள் இருக்கு…
அதெல்லாம் விட்டுட்டு ஏன்டா இத மட்டும் தேடி தேடி படிச்ச…)
அது உண்மை தான்னு இவளை பார்த்ததுக்கு அப்புறம் தான்
தெரிஞ்சி கிட்டேன்…( அப்படி போடு..நீ அடங்க மாட்டியே...செய்..)
நான் எங்க தெருமுனையை தாண்டுற வரைக்கும் ரொம்ப
நல்ல பையன்… உண்மையை சொன்னா நான் ஒருத்தன்
இருக்குறதே அந்த தெருவில பாதி பேருக்கு தெரியாது…
( ஏன்டா… எப்பவும் திருடன் மாதிரி பதுங்கி பதுங்கி போவியா…)
பஸ் ஸ்டாப் வந்துட்டா போதும்…நாங்க குடுக்குற ரவுசுல
பொட்டை நாய் கூட வெட்கப்படும்… ( அட கருமாந்திரம்
புடிச்சவனுன்களா..நாய் எல்லாம் வெட்கப்படுற அளவுக்கு
என்னடா செஞ்சீங்க…) ரவுசு னா ஜாலியா ஜில்லிப்பு தட்டி
அவங்களை காயப்படுத்தாம கலாய்க்கிறது தான்…
இந்த மாதிரி அலப்பறை பண்ணியதால எங்க தெருவில
இருக்குற பொண்ணுங்களுக்கும் , சில ஆன்டிகளுக்கும் மட்டும்
நான் யாருன்னு தெரியும்…என் அம்மா அவங்ககிட்ட எல்லாம்
என் பையன் ரொம்ப அமைதியானவன்…அவன் உண்டு அவன்
வேலை உண்டுன்னு இருப்பான்னு சொல்லும்போதெல்லாம்
என்னை பார்த்து ஒரு லுக்கு விடுவாளுங்க பாருங்க…
வேப்பெண்ணை குடிச்சிட்டு விஜய் படம் பார்க்கிறவன் மாதிரி
முழிப்பேன்…(இங்கயும் ஏன்டா அவனை வம்புக்கு இழுக்குறே…)
பொதுவாவே என் முகத்தை பார்க்கிற எந்த பொண்ணும் அவளா
வந்து என் கிட்ட பேச பிரியப்படமாட்டா… நெத்தியிலேயே
எனக்கு பொறுக்கி , கெட்டவன் , போக்கிரி , மன்மதன் னு சில
பல சினிமா பட பேரா எழுதி இருப்பான் போல…
( என்ன ஒரு தெளிவு..3G ஒரு தீர்க்க தரிசி…)
ஆனா சில நாட்கள் என்னோடு பேசி பழகினாலே என்னை
புரிஞ்சிக்கலாம்…(என்னனு… ஏன்டா இவன் கூட பழகினோம் னா…)
அப்புறம் நிச்சயம் நீங்க என்ன மிஸ் பண்ண விரும்ப மாட்டீங்க…
( நம்பிக்கை வாக்குறுதி எல்லாம் குடுக்குற நிலைமைக்கு
போயிடுச்சேடா உன் பொழப்பு…) அதுபோல தான் இவளும்
இருந்து இருக்கா…நானும் இவளை பார்த்து இருக்கேன்…
ஆனா ஒரு நாளைக்கு 60 , 70 பொண்ணுங்களை பார்த்து ஜொள்ளு
விட்டுகிட்டு செம பிசியா இருக்குற நான் அவளை ஞாபகம்
வச்சிக்கலை … (ஒஹொஹ்.. ஜொள்ளு விடுறது ஒரு ஜாப் பா…)
பஸ் ல போகும்போது கானா பாட்டுகள் நிறைய பாடுவேன்…
பசங்க எல்லாம் தாளம் போட்டுகிட்டே வருவானுங்க…
இந்த விஷயத்தை பத்தி கட கட பேருந்தும் , கல்லூரி சாலையும் ,
கானக்குயிலும் னு ஒரு பதிவே போட்டு இருக்கேன்…படிச்சுக்குங்க…
அப்படி கொஞ்ச நாள் போச்சு… யாரையும் காயப்படுத்துவது
போல பாடாததால நிறைய பேரு நல்லா இருக்குனு
பாராட்டுவாங்க… அப்படி தான் அவளும் வந்தா… உங்க குரல்
ரொம்ப நல்லா இருக்குனு சொன்னா…
( ஐயையோ…நீ சும்மா வே ஆடுவே… இதுல சரக்கு ஊத்திவிட்டு
சலங்கை ஒலி பாட்டு வேற போட்டு விட்டா கேட்கவா வேணும்…)
நான் அதிகம் பொண்ணுங்ககிட்ட பேசி பழக்கம் இல்லாததால….
( அடி..செருப்பால…இந்த பிட்டை எல்லாம் சிட்டுகள் கிட்ட
மட்டும் போடு…)
மன்னிச்சுக்குங்க… என் லைப் ல வந்த பொண்ணுங்களை பத்தி
மட்டுமே 5 பதிவு போட்டதை மறந்துட்டேன்… இதுக்கு தான்
பொய் பேச கூடாதுன்னு காந்தி சொன்னார்…
(டே…காதலுக்கெல்லாம் கூடவா காந்தி கருத்து
சொல்லி இருக்கார்…) இந்த மாதிரி சில பல நலம்
விசாரிப்புகளிலேயே நாட்கள் ஓடுச்சு…அப்புறம் நேயர்
விருப்பமா அது மாறுச்சு…(நேயர் னா அவ தானே…)
பசங்க எல்லாம் என்னடா வர வர காதல் வாடை அதிகமா
வீசுதேன்னு நச்சரிக்க ஆரம்பிச்சிட்டானுங்க…
உண்மையை சொன்னா நான் அவளை காதலிக்கலை…
என்னையும் ஒரு பொண்ணு காதலிக்கிறா னு மத்தவங்க
கிட்ட பெருமையா சொல்லணும்னு தான்… ஆனா அது
உண்மை இல்லைன்னு பின்னாடி தான் நானே
உணர ஆரம்பிச்சேன்…( யாரு பின்னாடி…? )
ஆனா அவ கிட்ட நான் காதலை கடைசி வரை சொல்லவே
இல்லை… ( கடைசி வரைனா… அவ கல்யாணம் வரையா…)
நல்லா ஞாபகம் இருக்கு…( உனக்கு பொண்ணுங்க விஷயம்
எப்படி ராஜா மறக்கும்…) FEB 14 – 2004 அவ என்கிட்டே காதலை
சொன்ன நாள்… அது ஏன் பெரும்பாலும் FEB 14 அன்னைக்கு
தான் சொல்லணும் னு நினைக்கிறாங்களோ தெரியலை…
அண்ணா நகர் ரவுண்டானா தாண்டி ஒரு ICE CREAM பார்லர்
போகலாம்னு சொன்னா…என்னால யூகிக்க முடிஞ்சது…
இவ என்னை காதலிக்கிறான்னு…ஆனா அவளா சொல்லுவான்னு
நான் நினைக்கலை…வெண்ணிலா ice cream ஆர்டர் பண்ணினோம்…
அவ அந்த ice cream சாப்பிடும்போது…
ஹனி.. இதை பார்த்தா எனக்கு ஒண்ணு
தோணுதுன்னு சொல்லிட்டு…
ஒரு வெண் நிலவே வெண்ணிலாவை
சாப்பிடுகிறதே…அடடே…ஆச்சர்யக்குறி னு கலாய்க்க…
அங்க இருந்த ஜோடிகளெல்லாம் எங்களை பார்த்து
சிரிச்சுகிட்டே கை தட்ட…அவ வெட்கப்பட்டு முகம்
சிவந்ததுல…எனக்கு முன்னால இருந்த வெண்ணிலா
ice cream ஸ்ட்ராபெர்ரி போல மாறிடுச்சு…
( அடடடா…என்ன ஒரு வர்ணனை…அவ முகம் என்ன
அவ்வளவா சிவந்துச்சு…) என்னமோ பேசிகிட்டு இருந்தோம்…
திடீருன்னு அவ என்னோட ice cream கப்பை எடுத்து சாப்பிட
ஆரம்பிச்சா…( பொண்ணு நிறைய சினிமா படம் பார்க்கும் போல…)
ஆஹா…அடி போட்டுடாளே னு நான் ஜெர்க்காக…
கணேஷ் , நீ என்னை காதலிக்கிறியானு நான் கேட்க மாட்டேன்…
உன் பேச்சிலையும் , பார்வையிலுமே அது தெரியுது…
எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் வீட்டில எதாவது
பிரச்சினை னா என்னை கூட்டிகிட்டு போயி வாழ்வியா…?
அதை மட்டும் சொல்லு டா னு அழுதா…
(கொய்யால…அழுதே சாதிச்சிடுறாளுங்க…)
ஏன் அவ அப்படி கேட்டான்னா அவ கிறிஸ்டியன் ,
நான் ஹிந்து…( மறுபடியும் கிறிஸ்டியனா…உனக்கு தான்
ராசி இல்லையே டா…) அங்க வச்சி நான் உன்னை லவ்
பண்ணலைன்னு சொன்னா அவ அழுகையை நிப்பாட்ட
மாட்டா…சங்கடமா போயிடும்னு…என்ன டி பேசுறே நீ…
இழுத்துகிட்டு ஓட நாம என்ன தப்பா பண்ணிட்டோம்…
அதெல்லாம் எந்த பிரச்சினையும் வராதுன்னு சொல்லி
சமாளிச்சேன்… அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு…
ஹனி…அன்னைக்கு நீ அழுததால தான்…நான் அப்படி
சொன்னேன் னு ஆரம்பிச்ச உடனேயே…அவ கண்ணுல தண்ணி…
நான் பதறி போயி .. யே..அழாத டி னு சொல்லி துடைக்க போக…
அவ என் கையை தட்டி விட்டுட்டு பரவா இல்லை… இப்ப சொல்லு…
நான் அழ மாட்டேன் னு விம்ம… அந்த நேரத்தில
அவளை பார்க்கணுமே… காலை நேரத்தில் பூக்களின் இதழ்கள் ல
இருந்து பனி துளி இறங்க ஆயத்தமா ஆகுமே அது போல இருந்தா…
(கொஞ்சமாவது பீல் பண்றானான்னு பாருங்க சார்…
ஒரு பொண்ணு காதலை சொல்லிட்டு அழுது கிட்டு இருக்கு…
இவரு இப்பதான் கவிதையா வர்ணிக்கிறாரு…)
இல்லை ஹனி…நான் உன்னை லவ் எல்லாம் பண்ணலை…
நீ னா எனக்கு ரொம்ப பிடிக்கும்… எப்பவும் உன் கூடவே
இருக்கணும் ஆசையா இருக்கு…( அப்படினா அதுக்கு பேரு
என்னடா…ஏன்டா இப்படி கமல் மாதிரி எழவு கொட்டுறே…?)
நான் இது வரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் பழகினது இல்லை…
நீ தான் நான் பார்த்து , பேசி ரசிச்ச முதல் பொண்ணு….
அதனால நான் உன்கிட்ட கொஞ்சம் அதிகமா கூட நடந்து
இருக்கலாம்…நான் செய்றது தப்போன்னு எனக்கு பல முறை
தோணி இருக்கு…ஆனா அதெல்லாம் உன்கிட்ட தானே னு ஒரு
வித உரிமையும் தோணுது…( எப்படி போட்டான் பாருங்க பிட்டை…)
இப்ப கூட உன்மேல எனக்கு காதல் வராதுன்னு சொல்ல முடியாது…
ஏன்னா… இவ்வளவு சீக்கிரம் என்னை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டது
நீ மட்டும் தான்…நீ இருந்தா என் வாழ்கை சந்தோஷமா
இருக்கும்னு நான் நம்புறேன்…மொத்ததில உன்னை இப்போதைக்கு
நான் காதலிக்கலை…இனிமே காதலிக்க மாட்டேனும்
சொல்லலை… நீ என்னை விட்டு போனாலும் என்னால
தாங்கிக்க முடியாது ஹனி…
சொல்லி முடிச்சதும்… சிரிக்க ஆரம்பிச்சிட்டா…
( அட கருமம் புடிச்சவனே… நல்லா இருந்த ஒரு பொண்ணை
விசு படத்தில வர்ற மாதிரி உனக்கும் புரியாம ,
கேட்குறவங்களுக்கும் புரியாம பைத்தியம்
பிடிக்க வச்சிட்டயே டா…)
இப்போ எதுக்காக டா இவ்வளவு நேரம் மூச்சை அடக்கி
கேப் விடாம பேசின…இப்ப என்ன சொல்ல வர்ற…
இப்போதைக்கு உனக்கு என் மேல லவ் இல்லை…
ஆனாலும் நான் உன் கூடவே இருக்கணும் அவ்வளவுதானே
னு கேட்க… நான் மஞ்ச தண்ணி தெளிச்ச ஆடு மாதிரி
முழிச்சிகிட்டே மண்டையை ஆட்டினேன்..என் தலையை
கோதிவிட்டு சத்தியமா நீ ஒரு லூசு தாண்டா னு சொல்லி
என் கையை பிடிச்சிகிட்டு நடந்து போனா…
( அவளுக்கும் தெரிஞ்சி போச்சா…)
அவங்க அப்பா ஹிந்து , அம்மா கிறிஸ்டியன்…
( நாளைக்கு உன் குழந்தைகளும் இதையே சொல்லிக்கலாம் டா…
கண்ணா…லட்டு தான்னு இல்ல திராட்சை ரசமும் நல்லா
தான் இருக்கும்…) இவளுக்கு ஒரு அக்கா , அண்ணன்…
அப்பா பேங்க் ஆபீசர்…அம்மா ஹவுஸ் ஒய்ப்… அக்கா
MARRIED…அண்ணன் படிக்கிறான்… ஒரு நாள் நானும் என்
அப்பாவும் வண்டியில் அண்ணா நகர் PARK ROAD ல
போயிகிட்டு இருந்தோம்…( நம்ம ஊரு மக்களுக்கு தெரியுமே…
ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து…ரெண்டு கிலோமீட்டருக்கு
மேல இருக்கும்…) அப்போ எதிர்ல அவ அவங்க அப்பா கூட
வண்டியில் வந்துகிட்டு இருந்தா…சொல்ல மறந்துட்டேன்…
நான் கலெக்டர் நகர்…அவ வாவின்… பக்கத்து பக்கத்து ஏரியா…
அவ தான் என்னை முதலில் பார்த்தா…( நீ வழக்கம் போலவே
மத்த பிகரை வேடிக்கை பார்த்து இருப்பே…) நானும் அவளை
பார்த்து சிரிச்சி சிக்னல் குடுத்தேன்…
திடீருன்னு அவ அப்பன் கை காட்டி வண்டியை நிறுத்த
சொன்னான்…எனக்கோ டர் ஆயிடுச்சி…அவ கொஞ்சம் கூட
பயப்படவே இல்லை…( பொண்ணுங்க என்னைக்கு டா
பயந்து இருக்காளுங்க…)
அப்புறம் பார்த்தா என் அப்பாவும் , அவ அப்பாவும் பழைய
நண்பர்களாம்…என்னடா உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சு
னு குசலம் விசாரிக்க… இவன் தான் என் பெரிய பையன்னு
என் அப்பா சொல்ல… கணேஷ் தானேடா னு அவ அப்பா கேட்க…
டே…பையா…என்னை ஞாபகம் இருக்கானு கேட்டாரு என் மாமா…
( ஆமாண்டா… இந்த மூணு மாச குழந்தையை தூக்கி வச்சிக்கிட்டு
அது கிட்ட போயி மாமா சொல்லு , மாமா சொல்லு னு
கொன்னு எடுப்பானுன்களே…அந்த குரூப் தானே அந்த ஆளு…)
யோவ்… தம்மாத்தூண்டு இருக்கும் போது உன்னை பார்த்து
இருப்பேன்…இப்ப எப்படியா தெரியும்னு நினைச்சிகிட்டு…
FLY னு சிரிச்சேன்… அதாங்க ஈ னு… இதான் என் இரண்டாவது
பொண்ணுன்னு அவர் சொல்ல… அவ கொஞ்சம் கூட முகத்தை
மாத்தாம வணக்கம் சொன்னா பாருங்கா…
அடி பாவிங்களா…எப்படி எல்லாம் ஏமாத்துறாளுங்க …
அப்புறம் என்ன… அடிக்கடி நான் அவ வீட்டுக்கு போக…
அவ என் வீட்டுக்கு வர…( அவ வரும்போது தனியா வந்து
இருக்க மாட்டாளே…) ஆனா எல்லா வாட்டியும் யாரையாவது
கூட்டிகிட்டு தான் வருவா… எங்க அம்மா கிட்ட ஒரு நாள்
அவ கேட்டா பாருங்க…அத்தை… உங்க பெரிய பையன்
இவ்வளவு அமைதியா இருக்காரே…உங்களுக்கு நிச்சயமா என்னை
மாதிரி ஒரு வாயாடி தான் மருமகளா வருவா பாருங்க னு
சொல்ல… எலெக்ட்ரிக் கம்பத்தை தொட்ட மாதிரி எனக்கு
தூக்கி வாரி போட்டுச்சு… ( என்ன பொண்ணு சார் இவ…)
எங்க அம்மாவும் சிரிச்சிகிட்டே அதுக்கென்ன டி…நீயே என்
பையனை கட்டிக்கோ னு சொல்ல… எல்லாரும் சிரிக்கிறாங்க…
நான் மட்டும் பேன்ட் ல உச்சா போன மாதிரி பேந்த பேந்த
முழிச்சிகிட்டே நின்னேன்… ( அப்போவெல்லாம் உன் கல்யாணத்தை
பத்தி பேசினவங்க… இப்ப ஏன்டா ஒண்ணுமே பேச மாட்றாங்க…?)
அதுக்கு அப்புறம் அவ அழிச்சாட்டியம் இருக்கே…
என்னை அடிக்கடி கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பா…
காலேஜ் முடிச்சி நான் நார்த் இந்தியா வில் வேலைக்கு
போயிட்டேன்… மகாராஷ்டிரா வில ஔரங்காபாத் னு ஒரு ஊரு…
அஜந்தா , எல்லோரா கேள்விப்பட்டு இருப்பீங்களே…
அதுக்கு பக்கத்தில…( காட்டுக்குள்ளையா…?) அதுக்கு அப்புறம்
போன் பேச்சு அதிகமா போச்சு… 2007 ஜூன் ல அவ அப்பாவுக்கு
ஹைதராபாத்துக்கு transfer ஆக…எல்லாரும் அங்க போயிட்டாங்க…
நான் அவுரங்கபாத்தில் இருந்து ஹைதராபாத் வழியா தான்
சென்னை வருவேன்… புனே ட்ரெயின் எப்பவுமே கூட்டமா
தான் இருக்கும்… ரெண்டு முறை அவ வீட்டுக்கு போயி
இருக்கேன்…அதுக்கு அப்புறம் Feb 2008 ல நான் வேற வேலை
கெடச்சி கோயம்புத்தூர் வந்தேன்…( உனக்கு கெரகம் பிடிச்சி
நீ இந்த கரக கும்பல்ல வந்து மாட்டினது அப்போ தானா…? )
நாளாக நாளாக அவ என்னை எப்படா கல்யாணம் பண்ணிக்க
போற னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டா…
ஒரு முறை அப்படி தான் பொள்ளாச்சி பக்கத்தில அவ
பிரெண்டுக்கு கல்யாணம்…ஒரு நாள் முன்னாடியே புறப்பட்டு
வந்துட்டா… கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கிட்டு
போன் பண்ணினா…அலறி அடிச்சிகிட்டு ஓடினா…
பார்த்ததும் பளார் பளார்னு கன்னத்திலேயே ரெண்டு விட்டா…
அழுது கிட்டே கட்டி அணைச்சுகிட்டா…
எனக்கோ ஒரு மாதிரியாக…அவளை உடனே
கூட்டிகிட்டு என் ஏரியா வுல இருந்த பியுட்டி
பார்லர் போனேன்… நீ பேசியல் பண்ணிக்கிட்டு
ரெடி ஆகு…நான் அரை மணி நேரத்தில் வர்றேன்னு
சொல்லிட்டு… குளிச்சி முடிச்சி அவளோட பொள்ளாச்சி
போனேன்…2000 கிலோமீட்டர் தாண்டி இருந்தா எனக்கு
என்ன எதுவும் தெரியாதா…உனக்காக ஆறு வருஷமா
காத்துகிட்டு இருக்குற என்னை கேனைச்சினு நெனச்சியா
னு போகும்போது எல்லாம் செம அர்ச்சனை…
( ஏன்டா…எவனாவது நீ 2 , 3 லட்டு தின்னதை
போட்டு குடுத்துட்டானுன்களா…)
நான் மறுபடியும் பழைய பல்லவியையே பாட… சரி டா…
நான் தற்கொலை பண்ணிக்கிட்டு அதுக்கு நீ தான் காரணம்னு
லெட்டர் எழுதி வச்சிடுவேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்…
உன்னை கொன்னுடுவேன் னு டெர்ரரா பேச ஆரம்பிச்சிட்டா…
அப்படி இப்படி அவளை சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு
எல்லாம் கூட்டிகிட்டு போயி அவளை ஊருக்கு அனுப்பி வச்சேன்…
வீட்ல மாப்பிள்ளை பாக்குறப்போ என்னை பத்தி சொல்ல…
அவங்களும் எங்க வீட்டுல கேட்க… நான் இப்போதைக்கு எனக்கு
கல்யாணம் வேணாம் னு சொல்ல… அன்னைக்கு அழுதவ தான்…
அதுக்கு அப்புறம் என் கிட்ட பேசவே இல்லை…
( ஏன்டா…பாவி…இப்படி பண்ணே..) அந்த நேரத்தில எனக்கு
ஒண்ணுமே தோணலை… கடைசியில அவ அண்ணனோட
கோயம்புத்தூர் ஆபீஸ் ல வேலை பார்த்த ஒருத்தனுக்கு அவளை
பேசி முடிச்சிட்டாங்க… எங்க வீட்டுலயோ நீயே போயிட்டு
வான்னு சொல்லிட்டாங்க… வேற வழி இல்லாம ஏழு எட்டு
மாசம் முன்னாடி அவளோட கல்யாணத்துக்கு நான் போயி
இருந்தேன்… அவங்க வீட்டில எல்லாருக்கும் சந்தோசம்…
நான் அவ கிட்ட பேச எவ்வளவோ முயற்சி பண்ணேன்…
ஆனா அவ என்கிட்டே பேசவே இல்லை…
நான் உன்னை இழக்க விரும்பலை ஹனி… ஆனா ஏதோ
ஒண்ணு என்னை தடுத்துச்சு… நீ என்னை பார்த்து விட்ட ,
அந்த கடைசி சொட்டு கண்ணீரில நானே கரைஞ்சி போன
மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு… நீ அழுததை என்னால
பார்க்க முடியலை ஹனி… உன்னை என்னால என்னைக்குமே
வெறுக்கவும் முடியாது…மறக்கவும் முடியாது… உன் ஸ்பரிசம்
இன்னமும் என் தலை ரோமங்களில்…நீ அடிக்கடி சொல்லுவியே…
நீ ஒரு லூசு டா னு… உண்மைதான் ஹனி…கையில கெடச்ச
வைரத்தை தாரை வார்த்து கொடுத்த கிறுக்கன் நான்…
ஒரே ஒரு ஆசை தான் ஹனி…என்னை வெறுத்துடாதே...
நீ எப்பவுமே என்னை முழுசா புரிஞ்சிப்பேங்கற
நம்பிக்கையில் தான் நான் இருக்கேன்…
கடைசியா அவ கல்யாணம் முடிஞ்சி நான் கிளம்புறேன்னு
மாப்பிள்ளை கிட்ட சொல்ல போனேன்…
அப்போ அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாருங்க…
நிமிஷமும் அணுஅணுவா கொன்னுட்டு
என் பொணத்தோட கல்யாணத்தை
பார்க்க வந்தியா னு கேட்ட
மாதிரி இருந்தது…
No comments:
Post a Comment