Showing posts with label என்னமோ போ.... Show all posts
Showing posts with label என்னமோ போ.... Show all posts

Monday, August 31, 2015

10 செகண்ட் கதைகள்.. Part 2




செடியில் முதன்முதலாக பூ பூத்ததையும், 

பக்கத்து வீட்டு மனிதர் முதன்முதலாக சிரித்ததையும், 

உடல் மீது முதல் மழைத்துளி விழுந்ததையும் 

விழாவென கொண்டாடுகிறோம்..

# ஆம் நாங்கள் ஆண்ட்ராய்ட் யுக மனிதர்கள்..




எனக்கு அடுத்தவங்களைப் பத்தி புறம் 

பேசுறவங்களைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கும்..

அப்படியா மச்சி என்றவனிடம் சொன்னேன்..

ஆமாம்டா.. கிளார்க் ரவி என்ன பண்ணான் தெரியுமா...?????



கண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன குடி 

வேண்டி இருக்கு.. இவனுங்களால தான்டா குடிக்கிற 

அத்தனை பேருக்கும் அசிங்கம்னு சொல்லிட்டு கீழ 

குனிஞ்சி தேடிக்கிட்டு இருக்கேன்.. என் வேட்டியை...




எவ்ளோ வெயில் அடிக்குது..பாவம் மக்கள்னு 

பரிதாபப் படுற நான் தான்.. கொஞ்சம் முன்னாடி 

பசிக்குதுனு கை ஏந்திய மூதாட்டியை 

தவிர்த்து விட்டு வந்தவன்..




ABCD கூட தெரியலையா உனக்குனு கலாய்ச்சேன் 

பக்கத்து வீட்டு பாப்பாவை.Candy crush level 70 ல 

திணறிக்கிட்டு இருந்தேன்.போனை வாங்கி கேமை 

முடிச்சிட்டு என்னைப் பார்த்தா பாருங்க 

ஒரு பார்வை..!!!

வேணாம் விடுங்க..



வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் 

தெரியுமானு ஆரம்பிச்ச தாத்தாகிட்ட, 

பாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு 

ஞாபகம் இருக்கானு கேட்டேன்.. 

நடுங்கிட்டார்.. 

திருக்குறள் < திருமதிகுரல்...????

Tuesday, August 25, 2015

10 செகண்ட் கதைகள்..


3 மணி நேரம் போராடியும் தீயின் ஆரம்பப் புள்ளியை 

கண்டறிய இயலாதவர்களிடம் நான் சரியாய் 

அடையாளம் காட்டினேன்.. ஆம்.. நான் அங்கே தான் 

சிகரெட் துண்டினை வீசியிருந்தேன்...




9.40 க்கு வேகமாய் ஒன் வேயில் சென்ற என்னை 

மடக்காத காவலர்கள்.. 10.10 க்கு திரும்பி வந்த 

என்னை மடக்கி சொன்னனர்.. "ஊதுடா.."




5 வருடங்களாக உன்னிடம் சொல்லத் தயங்கிய 

என் காதலை.. நீயாகவே வந்து என்னிடம் 

சொன்னதும் எனக்குள் மணியடித்தது..

# ஆம்..கருமம் பிடித்த அலாரமே தான்..




பைக்கில் செல்லும்போது நீ கொடுத்த செல்போன் 

முத்தத்தால் நான் காற்றில் மிதப்பது போலவே 

ஒரு உணர்வு..ஆனால் என் உடம்பை சுத்தி ஏன் 

இவ்ளோ பேர் நிக்குறாங்க...




எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க..

ஏன்னே புரியலை.. கண்ணாடியில தெரியிறவனும் 

அதையே சொல்றான்.. பைத்தியக்காரன்...




பசிக்குதுனு  சொன்ன நண்பனிடம் என்ன 

சாப்பிடலாம்னு கேட்டேன்.. ப்ரைடு ரைஸ், சிக்கன் 

அதுக்கு முன்னாடி 2 பீர்னு சொல்றான்..




உன்னைக் காதலிக்க தொடங்கியபின் யாரும் 

என் கண்களுக்கு தெரிவதில்லை.. நீயும் தான்..

# எனக்கு தான் பார்வை இல்லையே..

Thursday, March 26, 2015

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்"..




இதுக்கு தான் யுவராஜ்,ஷேவாக்,கம்பீர் வேணும்னு 
 
சொல்ற கனவான்களே.. கடந்த 7 மேட்ச்ல கருத்து 
 
சொல்லாம எங்க ஐயா போனீங்க..???




சொந்த மண்ணில் தோற்கும் அவமானம் என்னவென்று 
 
காலம் எங்களுக்கு கற்று தந்து இருக்கிறது.. 
 
அந்த கவலையை அடுத்தவர்களுக்கு அளிக்க கூடாது 
 
என்ற உயர்ந்த எண்ணத்தோடு..!@#$ அவ்வ்வ்





அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களின் 
 
மண்ணிலேயே அடுத்த உலகக் கோப்பையை வெல்ல 
 
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தினால்...!@#$




190+ நாடுகள் விளையாடும் கால்பந்து தகுதி சுற்றுலையே 
 
 வெளிய வந்தோம்..அத எவனும் கண்டுக்கலை.. 
 
14 நாடுகள் விளையாடும் கிரிக்கெட்டிற்கு...!@#$



புலி படத்தை தியேட்டர்ல போயி பார்க்கிறேன் னு 

கடுமையான வேண்டுதல் பண்ணியும் கண்டுக்காத 

கடவுளை வன்மையாக கண்டிக்கிறேன்..#ச்ச்ச

Tuesday, May 7, 2013

பரதேசி



BILL FORGE  பெருமையுடன் வழங்கும்  பரதேசி..

APRIL 1 







APRIL 15






MAY 7 







பெரும்பாலான பிரைவேட்    கம்பெனியில 

இதான் நடக்குது ...ஹ்ம்ம்ம் ..

Tuesday, January 8, 2013

கோழைகளின் கோபம் மரணம்..


முகம் தெரியா மனிதரின் மரணமும்  

பாதிக்கத்தான் செய்கிறது.

 


ஆண்கள் உணர்ச்சிகளாலும் , பெண்கள் உணர்வுகளாலும் 

நிறைந்து  உருவாக்கப்பட்டு இருக்கிறார்ள்போலும்..

 



ஆண்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளுக்கு 

உணர்ச்சிகளும் , பெண்கள் எடுக்கும் முட்டாள்தனமான  

முடிவுகளுக்கு உணர்வுகளும் காரணமாய் இருக்கின்றன..

 



ஆண்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவதைக் 

காட்டிலும் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுவது 

மிகக் கொடூரம்

 



ஆண்களை விடவும் பெண்கள் துணிச்சலானவர்கள் தான்..

ஆனால் ஏனோ,முட்டாள்தனமான முடிவை 

எடுப்பதில் அதைக்காட்டுகிறார்கள்..
 


கண்ணீர் விடும் பெண்களைக் காட்டிலும்,

காயப்பட்ட ஆண்களை தேற்றுவது மிகக்கடினம்.

 



தற்கொலை செய்து கொள்பவர்கள் , அவர்களை நேசிக்கும் 

அத்தனை உறவுகளையும் கொன்று விடுகிறோம் என ஏனோ 

யோசிக்க மறக்கிறார்கள்..

 


காதலில் மட்டும்  ஏனோ பாசத்தின் 

சம்பளம் மரணம்..

 


கோழைகளை விட முட்டாள்கள் எவ்வளவோ 

பரவாயில்லை
 

கோழைகளின் கோபம் மரணம்..

Sunday, January 1, 2012

மது,மாது





அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு 

அவை மட்டுமே..# மது , மாது




தொடங்கும் போது ஆர்வம்..முடிக்கும் போது பெரு மூச்சு..

பாட்டிலும் படுக்கையும் ஒண்ணு தானோ.. # மது,மாது
 
காரணம் ஆயிரம்..# மது,மாது
 
தான் செய்யும்போது யாருக்கும் தெரியாமலும்..
அடுத்தவனுக்குனா அட்வைஸ்களை அள்ளித் 
தெளிக்கவும் ஆரம்பிக்கிறானுங்க..# மது,மாது
 
போக,வர சிறந்த இடம்.. நிரந்தரமாக தங்குவதற்கு 
அல்ல..# மது,மாது
 
பெரும்பான்மை ஆண்களின் விருப்பம்..
இரவில் மட்டும்..# மது,மாது
 
கொஞ்ச நேர போதை..# மது,மாது
 
பழக்கமாய் இருக்கும் வரை பிரச்சினை இல்லை..
அடிமை ஆனால் ஆப்பு தான்..# மது,மாது
 
தற்காலிகத் தீர்வு #.# மது,மாது
 
விடுபட விரும்பாத மயக்கம்..# மது,மாது
 
தெளிவான குழப்பம்.. # மது,மாது
 
நம்முள் நுழைந்து நம்மையே மறக்க செய்யும்..# மது,மாது
 
ஒவ்வொன்றும் ஒரு விதம்..# மது,மாது
 
கண்களை கவரும் கவர்ச்சிக்கே முன்னுரிமை..# மது,மாது
 
ரெண்டுமே நமக்குள்ள இருக்கும்போது மத்தவங்களுக்கு 
ஈசியா தெரிஞ்சுடும்..# மது,மாது
 
எந்த சந்தேகமும் இல்லாம நம்மை முழுசா 
ஒப்படைக்கும்போது மட்டுமே ஆனந்தத்தின் 
எல்லை தெரியுது..சில நேரம் துன்பத்தின் 
எல்லையும்..# மது,மாது

Sunday, December 25, 2011

புரிஞ்சுக்கடி பம்ப்ளிமாஸ்...





பொண்ணுங்களை மதிக்கிற நல்லவங்க ஒரு வகை.

போகப்பொருளா மட்டுமே பார்க்கும் கெட்டவங்க 

இன்னொரு வகை னு சொன்னா..

நான் எந்த வகைடி னு கேட்டேன்..

நீ ரொம்ப நல்லவன் டா மூணாவது ஒரு 

வகையை சொல்றா..





நீ எப்பவும் பவுர்ணமி நிலா போல பிரகாசமா இருப்பியா..

அதான் உன் முகம் கொஞ்சம் டல் ஆனதும் பிறை நிலா 

போல தெரியுற..

எப்படி பார்த்தாலும் நீ அழகு தானடி..



உன்னைப்பார்க்காமல் பல வருடங்கள் வாழ முடிந்த 

என்னால், இப்போது நீ இல்லாமல் ஒரு நாள் கூட 

இருக்க முடிவதில்லை..





காதல் வழிய பேசினால் கண்டிக்கிறாய்..

காதலியிடம் வேறு என்ன கந்த புராணம் பற்றியா 

பேச முடியும்..?





கண்டிப்பினில் அன்பை காட்ட அன்னை எனில்,

கண்டிப்பினில் காதலைக் காட்ட என் ஹனி 

நீ மட்டும் தான்டி..



எனைக்குறித்து எதெற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படாதேடா

என்கிறாய்.நானும் இயல்பாய் இருப்பது போல 

நடிக்கிறேன்..உடைந்த என் குரலில் எனைப்புரிந்து 

ஆறுதல் சொல்கிறாய்.. லவ் யூடி ஹனி..





நீ நினைப்பது போல என்னால் காதலுடன் பேச 

முடியாது டா என்கிறாய்..அதனாலென்ன.. 

பரவாயில்லை ஹனி..உனக்கும் சேர்த்து 

நானே காதலித்துவிட்டு போகிறேன்..





ஒவ்வொரு முறையும் உன்னை முத்தமிட எத்தனிக்கும்

போதும் அதில் காமத்தின் அளவை விட காதலின் 

அளவே மேலோங்கி இருக்கிறது..





நான் காமம் கொள்ள ஒரு பெண் இருந்தால் போதும்.

ஆனால் காதல் கொள்ள நீ வேண்டுமடி.

லவ்யூடி ஹனி..





அரை மணி நேர காமத்திற்காக ஆயுள் முழுதும் கிடைக்கும் 

உன் காதலை இழக்க நான் விரும்ப வில்லை.

உன்னை தொடாமல் இருக்கமுடியும்..

ஆனால் உன் பார்வை படாமல்..?

Friday, December 23, 2011

ஊடல்..




நீ சிரிச்சா சிலிர்க்கிற நான்,நீ சைலெண்ட்டா இருந்தா 

ஸ்தம்பிச்சு போயிட மாட்டேனா..? 

பேசுடி பம்ப்ளிமாஸ்..



பெண்கள் மட்டுமே என் தேவை என்றால் யார் 

பின்னே வேண்டுமானாலும் நான் போயிருப்பேன்..

என் தேவை தேவதை நீ மட்டுமே..



என் ஆசைகளாலும்,ஆர்வத்தினாலும் நீ அழ நேரிடும்போது 

எனக்கு நானே அருவெருப்பாய் தெரிகிறேன்..



காதலின் இன்னொரு பரிமாணம் காமம் என்பது என் எண்ணம்..

அன்பு மட்டுமே வேண்டும் என்றால் எனக்கு 

ஒரு நாய்க்குட்டி போதுமே..



சுகம் மட்டுமே பிரதானம் என்றால் வேசி போதுமே..

ஒவ்வொரு கணமும் உன்னை காதலித்து இருக்க

வேண்டாமே..#புரிஞ்சிக்க மாட்றியேடி பம்ப்ளிமாஸ்..



கட்டாயப்படுத்தி காமம் கொள்ள நானென்ன காட்டு 

மிராண்டியா..? இயல்பாய் கூடுவதே இன்பம்..

#எத்தனை காலமெனினும் காத்திருப்பேன்டி  ஹனி..



அவளால தான் சிகரெட்டை விட்டேன்..இப்போ அவளால 

காயப்பட்டு இருக்கும்போது கூட அதை பத்த 

வைக்க மனசு வரலை..



நான் உன்னுடன் பேசாமல் இருப்பது என் ஈகோவினால் அல்ல..

உன் மனதை புரிந்து கொள்ள முடியாத என் 

இயலாமையால் தான்..



ஒருமுறை அழைத்து என்னை திட்டி தீர்த்து விடேன்..

மவுனமாய் இருந்து ஒவ்வொரு கணமும் கொல்வதற்கு 

அது எவ்வளவோ பெட்டர்..



உன் கோபத்தைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும்..

ஆனால் ஒரு போதும் என் முன்னால் அழுது விடாதே..

உடைந்து போவேன்..



தெரிந்தே செய்த பல தவறுகளை மன்னித்தாய்..

உன் மீதான காதல் வேகத்தில் வெளிப்பட்ட 

வார்த்தைகளுக்கு மட்டும் மன்னிப்பே கிடையாதா..

#ப்ளீஸ் ஹனி..

Monday, December 19, 2011

ஹனியுடன் நான்..




நான் இப்படி ஓரளவிற்கு மாறி இருப்பது ஒரு பெண்ணால் தான் 

என்று பலருக்கும் தெரியும்..ஆனால் அது உன்னால் தான் 

என்று உனக்கு தெரியுமாடி பம்ப்ளிமாஸ்.


நீ சிரிச்சி பேசினாலே நான் சின்னப்பையன் ஆயிடுவேன் ..

கொஞ்சிப் பேசும்போது குழந்தையாவே மாறிடுறேன்..

கோச்சுக்காதடா அம்முனு சொல்றாளே..ஹ்ம்ம்…


உனக்கு எப்படிடா எல்லா விஷயமும் தெரியுது ..

எனக்கு எதுவுமே தெரிய மாட்டுது னு சொல்றா ..

எனக்கு எல்லாம் தெரியும்னு நம்புறவ என்னை பத்தி 

என்னை விடவும் அவ அதிகம் தெரிஞ்சி வச்சி இருக்கா ..

அப்போ அவ தானே சிறந்தவள் .



நான் கன்வே பண்ண வார்த்தைகள் தப்பா இருக்கலாம்..

ஆனா உணர்வுகள் நிஜம் டி ஹனி..



என் மனதை நீ உணர்ந்தபோது ஒன்றுமே சொல்லாமல்..

அதை நான் வார்த்தைகளாக வெளிப்படுத்திய உடன் விலகி 

சென்று வதைப்பது ஏனடி..



யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத என் விருப்பங்களை 

உனக்காக மாற்றிக்கொண்டபோதே உணர்ந்தேன்..

முன்பை விட அதிகம் மகிழ்ச்சியாய்..

லவ் யூடி பம்ப்ளிமாஸ்..



கொஞ்சம் காமம்,நிறைய்ய்ய காதல் கொண்டு,

நீ அணைக்கும் அணைப்பினில் அத்தனையையும் 

மறந்து மொத்தமாய் அடங்கி விட ஆசை..



என்னை நான் இனி அதிகம் கவனித்துக்கொள்வேன்..

எனக்காக அல்ல..என்னை விடவும் அதிகம் துடிக்கும் 

உனக்காக..லவ்யூ ஹனி..



என் மீதான உன் காதலும்,காற்றும் ஒன்று தான்..

இரண்டுமே என்னை ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பித்து 

கொண்டு இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை..

உணர்கிறேன் ஹனி..லவ் யூ..



எந்த உறவும் இல்லாம என்னோட ஹெல்த்தை பத்திக் 

கவலைப்படவும் ஒரு பொண்ணு இருக்கானு நினைக்க 

சந்தோஷமா இருக்கு..அதுவே அவ காதலியா இருந்தா 

எவ்வளவு நல்லா இருக்கும்..#அடம் பிடிக்கிறாளே..

Wednesday, February 2, 2011

ஒருவேளை நடக்குமோ...??

நமக்கு அடுத்த வரப்போகும் தலைமுறை 

ABCD யை இனி இப்படி படித்தாலும்

ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..


A for APPLE 

B for Blue tooth

C for Chatting

D for Download

E for E mail

F for Facebook

G for Google

H for HTML

I for Ipod

J for Java

K for Kingston

L for Lap top

M for Memory card

N for Nero

O for Orkut

P for Picasa

Q for Quarter Bottle

R for Roming


S for Server

T for Twitter

U for USB

V for Vista

W for Windows 

X for X box 360

Y for Youtube

Z for Zorpia 

Saturday, August 21, 2010

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...



எல்லாருக்கும் பீர் குடிப்பதற்கு

ஒரு காரணம் வேணும் இல்லியா..? 

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை

ஒரு புண்ணியவான் சொல்லிருக்க 

அதனை நாம் சிரம் தாழ்த்தி  

கேட்டுக்கொள்ள வேணும் தானே.. !

 இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. 


மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. 

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

கவனிக்கவும்- அருந்துவது.

வயிறு முட்ட குடித்து விட்டு 

வண்டியை  மெயின் ரோடில்
ட்ராபிக் மெரிடியனில் முட்டி 
விட்டு மல்லாந்து 
கிடக்க அல்ல.





. பீர் குடிப்பது மன அழுத்தத்தை

குறைக்கிறது. உண்மை ...


பொதுவாகவே அளவான ஆல்கஹாலில்

இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது

மன நிலையை இயல்பான,

மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு

செல்கிறதாம்.






2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.


1982-1996 இந்த வருட இடைவெளிகளில்

நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு

நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில்

பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 

20 - 50 சதவீதம் இருதய நோய் 

வரும் சந்தர்ப்பம் குறைவு.






3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக 

வைக்க உதவுகிறது.


பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை

Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) 

தருகிறது.எனவே இது இரத்தம் தன் 

பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)






4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 

இந்த நார் சத்தானது மால்டட் 

பார்லியில் இருந்து கிடைகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக நம்

உடலுக்கு தேவையான நார் சத்தில் 

சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் 

இருந்து கிடதுவிடுமாம்.இப்படி 

எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும்

நார் சத்து இருதய நோயிலிருந்து 

நம்மை காக்கும்.








5 . பீர் வைட்டமின் செறிந்தது. 

 ( பழைய போர்ன்விடா விளம்பரம் 

மாதிரி இருக்கு)


பீரிலிருந்து பல வகை விட்டமின்கள்

கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,

பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
 
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.








6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின்

படி மது அருந்துபவர்களுக்கு இதய

நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.

காரணம், அளவான மது இரத்தத்தின்

அடர்த்தியை குறைகிறது.இதனால் 

மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்

தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக

சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள

மூளையில் இரதம் கெட்டியாகாமல் 

அதனால் மாரடைப்பு வராமல் எளிதான

இரத்த ஓட்டம் அமைய 

வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.








7. பீர் உங்கள் மூளையை
இளமையாக வைக்கிறது.


2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .






8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.


மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன


 This is from Beer Net Publication, 
April 2001 Biological Institute.








9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)


லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.






10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.


நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

****************************************




என்ன, ரொம்ப குஷியா ..?? 
இனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...


சரி சரி அளவோட இருந்தா
தான் இதெல்லாம்..
இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்..


ஆல்கஹால் அருந்தி...
ஆரோக்கியமா வாழ்வோம்...


cheers ....