Showing posts with label விளம்பரம்.... Show all posts
Showing posts with label விளம்பரம்.... Show all posts

Friday, March 11, 2011

பஸ்ல படம் போட்ட என்னோட காலேஜ் கானா

பக்கத்து வீட்டு நிர்மலா..

உன்னை மயக்கியது என்கண்களா

மனசுக்குள்ள என்னை நீயும் விரும்புற

நான் ஆசையோடு பக்கம் வந்தா ஒதுங்குற



அடுத்த வீட்டு தேவியே

உன்னை பார்க்காதவன் பாவியே
 
என் இதயத்துக்கு நீ தாண்டி சாவியே

என்னை கட்டிகிலேன்னா போடுவேன் நான் காவியே



அடியே பொண்ணு ரேவதி

என் உசுருல பாதி நீ

ரெண்டு பெரும் பீச்சுக்கு தான் போவோமா

நானும் கெஞ்சுறனே  நாலு நாளா பாவமா





வாடி யம்மா வளர்மதி

அழகுல நீ முழு மதி

படத்துக்கு தான் போய் வருவோம் ஜாலியா

உன்னால ஆயிடுச்சே என் பர்சு காலியா


மாடி வீட்டு மாலா வா

நான் நிக்குறேண்டி சோலோ வா

என் கூட பார்க்குக்கு  நீயும் கொஞ்சம் கூலா வா

உனக்கு பிடிச்ச கூல் ட்ரின்க் என்ன coca cola வா



எதிர் வீட்டு ஹேமா

நீ வாசலுக்கு வாம்மா

ஆசையோடு காத்திருக்கேன் உன் மாமா

அடி..கொஞ்ச நேரம் கொஞ்சி பேசுவோமா



கொடி இடையாள் வள்ளி

என் மனசு சுத்த வெள்ளி

சிரிப்பால் என்னை மயக்குறியே கள்ளி

உன்னை சீண்டி நானும் பார்க்கவாடி கிள்ளி





கோடி வீட்டு சுந்தரி..

நீ சீக்கிரமா எந்திரி..

காலேஜுக்கு போறியே நீ பஸ்சுல..

உன்னை பைக்ல நான் ட்ராப் பண்ணவா லஸ் ல..



புதுப்பொண்ணே  மோகனா

நான் உன்னை மறந்தே போவனா


பளபளப்பா இருக்குது உன் கன்னம்






உன்னை காதலிப்பது மட்டும் தாண்டி என் எண்ணம்



எங்கடி உங்கக்கா ப்ரியா..

இன்னிக்கு அவ ப்ரீயா..

நம்ம தெருவுலேயே இருக்கா நல்ல அழகா..

அவ ரொம்ப ரொம்ப ஜாலி தாண்டி பழக..



தங்க தாரகை தாரா..

அவ தனியாக போறா…

அழகுல அவள் ஒரு மணிப்புறா…

நான் வேற பொண்ணு கூட பேசினாக்கா முறைக்குறா..



தாவணி போட்ட தீபா..

ஒரு மாதிரியா என்னை பார்ப்பா..

அந்த பார்வையில மயங்கி நின்னேன் நானு..

எனக்கு பிரச்சனைனா அது அவ அண்ணன் சீனு..


 
அய்யர் வீட்டு அழகே காயத்ரி..

மாடிக்கு வா நீ ராத்திரி..

உன்னோட பார்வையில் நான் உருக..

ரொம்ப ஆசை படுறேன் உன் இதழ்களை  பருக…



கண்ணே கலைவாணி..

கோவிலுக்கு வா நீ..

கிடைக்காதா எனக்கு உன் தரிசனம்…

அன்பே காட்டு நீயும் என் மேல கரிசனம்…


 
மானே மணி மேகலை..

நான் உன்னை வெறுத்து போகலை..

காத்திருக்க சொன்னியேடி என்ன..

உன்னை எதிர் பார்த்தே நானும் அங்க நின்னேன்..



ஆனா நீ  கடைசி வரைக்கும் வரல..

நானும் நம்பிக்கையை விடல..

உனக்கு என்ன ஆச்சோ மணி இப்போ பத்தரை..

உன்னை நெனச்சி எனக்கு வரலயேடி நித்திரை…




பச்சை சுடிதாரு பத்மினி..

என்னை கட்டி புடிச்சிக்கோ சேர்த்து நீ..

பெண்களிலே நீ தாண்டி சிறப்பு…

நீ தேவலோக ரம்பையின் மறுபிறப்பு…

பச்சை கிளி பாத்திமா..

பஸ் ஸ்டாப்பில் உன்னை பார்த்தேன்மா..

மகுடி கண்ட பாம்பு போல் நான் மயங்குறேன்…

உன் பக்கம் வந்து பேச நானும் தயங்குறேன்…



அதுக்கு காரணம் உன் status..

நீ பணக்கார வீட்டு lotus…

ஒரு தடவ என்னை பார்த்து சிரிடி..

உன்னை இழுத்துக்கிட்டு ஓட நானும் ரெடி டி…




அழகு பொண்ணு அனிதா…

என்னை அலையவிட்டு பார்த்தா..

கொடைக்கானல் கூட்டிட்டு போக சொன்னா..

என்னை கொலை வெறியோடு தேடுறான் அவ அண்ணா..



மச்சி..நான் சொல்லுறதை நம்பு..

இந்த பொண்ணுங்க னாலே வம்பு..

திருவண்ணாமலை சுத்தினா அது கிரிவலம்..

இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தினா அது கேவலம்…




கண்ணுக்கு வெப்பாளுங்க கண் மை..

அவளுங்க பேச்சில இல்ல உண்மை…

தயவு செய்து நம்பிடாத பொண்ண.

உன்னை குழில தள்ளி மூடிடுவா மண்ணை…




படிக்க வச்ச தாய் தந்தையை நேசி நீ…

சுடிதார் , ஜீன்ஸ் எல்லாம் துடிக்க வைக்கும் யோசி நீ..

அரசர்கள் அன்று போனாங்க நகர்வலம்..

மச்சி..நாம இன்னைக்கு போறதெல்லாம் பிகர்வலம்..



 
நாமதான் பொண்ணுங்க பின்னாடி வருவோம்..

அவ மரணத்தின் மறு உருவம்..

காதல் னா கண் கட்டி வித்தை..

அவளுக்கு செலவு பண்ண அழிக்கணும் ங்கொப்பன் சொத்தை…



ராமனும் ஒடச்சானே வில்லை..

அப்புறம் நிம்மதியே இல்லை..

அவன் பட்ட துன்பத்துக்கு ஏது எல்லை..

மச்சான்..கல்யாணம்னா எப்பவும் படு தொல்லை...




So , Friends Avoid the Marriage…

Life ல இல்ல Damage..

So that we can live very Happy..

Beware of Beautiful baby..




 

Friday, December 24, 2010

ஆனந்த விகடனும்..அமலா பாலும்..அடியேனும்..



அல்லாருக்கும் 3G யோட சலாம்...


என்னோட ட்வீட் ஒண்ணு இந்த 

வார ஆனந்த விகடன்ல வந்து இருக்கு...


எனக்கு முதன்முதலா ஒரு 

அங்கீகாரம் ( !@$#$%^&*?) கொடுத்த 

ஆனந்த விகடனுக்கும் அதுக்கு 

காரணமாயிருந்த அமலா பாலுக்கும் 





அப்புறம் எனக்கு அப்போ அப்போ 

சிஸ்டம் கொடுத்து உதவிய எங்கள் 

சிஸ்டம் அதிகாரிகளுக்கும்

( மாமா..இப்போ ஓகே வா..)


ஆயிரம் நன்றிகள்..




இத எதுக்குடா ஒரு பதிவா 

போட்டு எங்க பாவத்தை 

கொட்டிக்குற...அப்படின்னு 

கேக்குறவங்களுக்கு என்னோட பதில்...




சும்மா..ஒரு விளம்பரம்தேன்..




டிஸ்கி..முஸ்கி..எல்லாம் எனக்கு

ஒத்துவராது.. அதனால இங்கயே

சொல்லிடுறேன்...




இந்த பொழப்புக்கு போயி 

பிச்சை எடுக்கலாம்...

நீ வாங்குற இந்த பத்து அஞ்சு... 

போன்ற பின்னூட்டங்கள்

தடை செய்யப்படுகின்றன..




இல்லனா மட்டும் படிக்கிறவங்க 

போட்டுட்டு போறாங்களானு

( பின்னூட்டத்தை )    

நீங்க சந்தேகப்படக்கூடாது..



கடமையை செய்யோனம்  இல்லீங்களா...


அடுத்து அமலா பால்

விஷயத்துக்கு வருவோம்...


கவிதை எழுறது கஷ்டம்னு

சொல்றாங்க..அமலா பால் 

கண்களை பார்த்தா ஒரு லைப்ரரியே

போடலாம் போல..

என்னா பொண்ணு சார் இவ..



அது என்னமோ தெரியல.

என்ன மாயமோ தெரியல..


இப்பவெல்லாம் எனக்கு தமன்னாவை

பிடிக்கவே மாட்டுது...





அது சரி...பசங்க மனசு எலிகளை 

போல தானே...( புதுப்புது வளைகள்...)


தமிழ்நாட்டு ஆண்கள் தமன்னா 

ஜூரத்தில் இருந்து விடுபட்டு 

மைனா ஜூரத்தில் 

மாட்டிகிட்டோம்னு நினைக்கிறேன்...




கோயம்புத்தூர்ல இருக்குறதுனாளவோ

என்னவோ தெரியலை..


இப்பவெல்லாம் எனக்கு கேரளாவையும்..

அங்கே இருந்து வர்ற சரக்கையும்

ரொம்ப பிடிக்குது..




அவளை சரக்கு னு

சொன்னதுக்கு யாரும் கோவிக்ககூடாது..


சாராயம் போதை தரும்..

தாய்ப்பாலும் போதை தரும்..

பாடல் வரிகளை இங்கே சொல்லிக்கிறேன்.. 

புரியலையா.. கமல்னாலே 

புரியாதுன்னு தானே அர்த்தம்..


அதை விடுங்க.. 

பக்கத்துக்கு மாநிலங்கள்ல

இருந்து தமிழ்நாட்டுக்கு சரியா 

தண்ணி வருதோ இல்லையோ...

அழகழகான கன்னிகள் 

நிறைய வருது..




அம்சமான அசின்ல இருந்து.. 

ஆர்ப்பாட்டமான அனுஷ்கா வழியா.. 

இப்போ அமர்க்களமா அட்டகாசமா

அமலா பால் வரைக்கும்...

இதுக்கு தாராளமா ஸ்வீட்

எடுத்து கொண்டாடலாம்ங்க..












 
இதுதாங்க அந்த ட்வீட்டோட

முழு வடிவம்... 


தேவதை..ஆண்பாலா..

இல்லை..பெண்பாலானு 

எனக்கு தெரியாது...

என் கண்களுக்கு இப்போதைக்கு

அது அமலாபால்...

யம்மயம்மயம்மா...

ஊத்துக்குளி வெண்ணைபோல..

சும்மா தலுக் மொழுக்குன்னு இருக்காளே...
 
என்றும் ஜொள்ளுடன்... 3G



















Thursday, September 2, 2010

டிக் 20 திருமணம்... மைசூரில் மஜா..

சில நாட்களுக்கு முன்பு... எங்கள் ஆருயிர்  தோழன் .. 
திலிப் அவர்களுக்கு யாருமே ( ஏன் அவரே ) எதிர் பாராத வண்ணம்
திருமணம் நடந்தது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு
( சிறிது வயிற்றெரிச்சலோடும் )
தெரிவித்துக்கொள்கிறேன்...

சும்மா ஒரு ஜோடனைக்காக  சொன்னேன்...

வலைப்பூவிற்கு வருகை தரும்  
உங்கள் அனைவரையும்

மணமக்கள் மகிழ்ச்சியோட வாழ 
வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்...
விண்டோ பக்கத்தில் விஷம்...




ஜன்னலோரம் சைத்தான்...

அண்ணாச்சியும் அப்பாவியும்...

கோயம்புத்தூர் மாப்பிள்ளை..
நண்பேன் டா...
மைசூர் மண மண்டபம்...
புன்னகை புரியும் புன்னகை தேசம் தருண்...
ஒய்யாரமாக நாங்கள்...

ரொமாண்டிக்  லுக்கு  ...



Gorgeous Gilma Ganesh with Great God Ganesh
மண மேடையில்  ...
தியாக திரு உருவம்... அம்மா... நீ நல்லா இருக்கணும்மா...
பொண்டாட்டிய பாருடானா .. போட்டோ வுக்கு போஸ் கொடுக்குது நாயி..
மைசூர் அரண்மனை...

சனியன்... ஏன்.. எப்ப பாரு உர்ர்ருன்னு இருக்குதுன்னு தெரியல .. 
டே கட்டம் போட்ட சட்டை சிரிடா...


நான் ஒண்ணும் பொண்ணுங்களை பராக்கு பாக்கலை...
அரண்மனையின் முன்பு...