Showing posts with label ஏன் இப்படி .... Show all posts
Showing posts with label ஏன் இப்படி .... Show all posts

Friday, June 12, 2015

ஏன் இப்படி..? 96





தண்ணீர் பந்தலில் பானை,டேங்க் விட போஸ்டர்,
பேனர் பெருசா,புதுசா,பளபளனு இருக்கு..
# இதுக்கு பேரு சேவை..ஆமா..சேவை..




ஷாப்பிங் மால்களில் சாப்பிட வாயைத் திறக்கும் 
முன்னாடி விலையைக் கேட்டாலே பர்ஸுக்கு 
பதிலா திறந்துடுறேன்#வாயை..வாயை..
டிக்கெட் விலை 120.. பாப்கார்ன் விலை 160..
#மால்   கொள்ளைகள்...#புளி சோறும் உருளைக்கிழங்கு 
வறுவலும் எடுத்துட்டு போகவிடுங்கடா டேய்..
தலப்பாக்கட்டி பிரியாணி சாப்பிடாம சீன் போட 
சைனீஸ் ரெஸ்டாரன்ட் போனா ஐட்டம் எல்லாம் 
அவன் ஊர் பேரா இருக்கு..




கடைசியில ப்ரைட் ரைஸ் சாப்பிட்டா,அவன் இறால் ஓடு

உரிக்காம சமைச்சு இருக்கான்..#பசிக்கொடுமையில 

பைன் ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன்..அவ்வ்வ்வ்வ்

Saturday, May 30, 2015

ஏன் இப்படி..? 95




வண்டியோட DIFFERENTIAL ல திருஷ்டி பொம்மையை
 
வரையுறானுங்க..# அடேய்.. ஆர்டிஸ்டுகளா..
 
அடியில எவன்டா கண்ணு வைக்குறான்..???





காஃபி ஷாப்ல பொண்ணுங்க போடுற சீனை விட ,
 
ரோட்டுக்கடையில பானிபூரி பேல்பூரி சாப்பிடும்போது
 
போடுற சீன் இருக்கே..!@#$%^& ஐயோ ராமா 





ரீமேக் பண்றதுல ஒரு விவஸ்தை வேணாமாடா..?
 
விளம்பரத்தைக் கூடவா..? விஜயை முந்திடுவான் 
 
போல விஷால்..#thums up





அக்ஷயைத் திருதியை அன்னைக்கு காஞ்சனா 2 க்கு 
 
வந்த கூட்டத்தை விட கஜானா ஜுவெல்லரியில 
 
கூட்டம் அலை மோதுது..#காஞ்சிபுரம் 





ஹைவேல ஒரு நாயி கார் ஹெட் லைட்டை சீரியல் 

லைட்டு போல ஏகத்துக்கும் போட்டுக்கிட்டு போகுது..

#அடேய்..உனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா போதாதுடா..

எதிர்ல வர்றவனுக்கு தெரியணும்.. 

இல்லைனாலும் சங்கு சங்கு தான்..

Wednesday, May 20, 2015

ஏன் இப்படி..? 94



பிரிட்ஜ் ல இருந்து ஜில்லுனு தண்ணீர் எடுத்து 


பானையில ஊத்தி வச்சி குடிக்கிறானுங்க..

# அட பதருகளா....!@#$%^&




 


சென்னையில செம வெயில்டா..அங்க எப்படி 

இருக்குனு கேட்குறான்..அடேய்.. நான் 

 சுவிட்சர்லாந்துலயாடா இருக்கேன்..

சுங்குவார்சத்திரம் தான் டா.. 


 


ஈர வெங்காயம் போல பீலிங்கா ஸ்டேடஸ் போடுறவன் 

மேல வர காண்டை விட..என்ன ஆச்சுடானு அவன்கிட்ட 

கேட்டு "ஒண்ணுமில்லைடானு" மொக்கை வாங்குறவனுங்க 

மேல பரிதாபம் தான் வருது..








நாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது 
 
கூட பரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத 
 
எதையோ பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் 
 
கொடுக்குறீங்களே அதத்தான் பொண்ணுங்களா 
 
தாங்கிக்க முடியலை..வீ பாவம்.



தர்பூசணி,ஐஸ் போட்டகிர்ணி, சுள்ளுன்னு மோரு,

ஜில்லுனு பீரு,வெள்ளரிப்பிஞ்சு, ஈரப்பஞ்சுனு 

எதுக்குமே அடங்க மறுக்குதே..# வெயில்..

Sunday, May 10, 2015

ஏன் இப்படி ...93



இயற்கை உபாதை எல்லாம் அடக்கிட்டு மேட்ச் 

பூரா உளறிக்கிட்டு ரிசல்ட் வந்தப்புறம் மேட்ச் 

பிக்ஸிங் னு சொல்றவனுங்களை என்ன பண்ணலாம்..???



அடிச்சி பிடிச்சி ஜன்னலோரம் காத்தாட உட்கார்ந்தா,

பக்கத்திலேயே பெரிய உருவமா ஒருத்தர் வந்து 

மூச்சு திணற வைக்கிறார்..#முடியல..



பெரிய பதவியில இருக்குறவங்க பெரும்பாலும் 

ஏதாவது பினாத்திக்கிட்டே இருக்காங்களே..ஏன்..?



இவனுங்க என்னமோ பிளைட் ஓட்டுற பைலட் மாதிரி,

பஸ் ஓட்டுற டிரைவரை குறை சொல்றானுங்க..

#உசுப்பேத்தி விட்டு சும்மா ஓட்டுறவனை எங்கயாவது 

சொருவ வச்சிடுவானுங்க ..போலயே.!@#$%^&



இங்கிலீஷ் புக் வச்சிக்கிட்டு படிக்கணும் இல்ல 

மூடிட்டு  தூங்கணும்..பிகர்கள் முன்னாடி 

பரிதவிக்குது ஒரு பக்கி..

Friday, May 1, 2015

ஏன் இப்படி ...92



மனசு லேசாக சிரிங்கடானு சொன்னா மூளை குழம்பி 

லூசான மாதிரி சிரிக்குறானுங்க..

#எனக்கு பயந்து பயந்து வருதுடா டேய்.. 



ரைமிங்கா 5 வார்த்தை பேசினா அதுல ஒரு வார்த்தை 

அசிங்கமான அர்த்தமா ஆயிடுது..# எல்லா வார்த்தையையும் 

கெடுத்து வச்சி இருக்கோம்..



"ஜன கண மன" என்ன பாட்டுனு தெரியுமா னு கேட்டா 

ஆய்த எழுத்து படத்தோட பாட்டுனு சொல்லுது 

பக்கத்து வீட்டு பக்கி..



காங்கிரஸ்ல உனக்கு தெரிஞ்ச லீடர் யாராச்சும் 

சொல்லுடானு கேட்டா எதிர்பார்த்தது போலவே 

குஷ்பூனு சொல்றான்..# நல்லா வருவீங்கடா...!@#$%^&



முன்கோபம் அறவே கூடாதுனு சொல்லி முடிக்கலை..

 "நான் எப்போ கோபப்பட்டேன்"னு சூடாகிடுறானுங்க..

# இவனுங்களுக்கு போயி ஒருத்தன் புத்தி சொல்றான்

பாரு..லூசுப்பய..

Tuesday, April 7, 2015

ஏன் இப்படி ...91




கனவில மோனல் கஜ்ஜாரை காதலிச்சு கல்யாணம் 

பண்ணி குழந்தையும் பிறந்து ஸ்கூல் அட்மிஷன் ஃபார்ம்

வாங்க வரிசையில நிக்கும்போது அலாரம் அடிச்சுடுச்சு..

# ரொம்ப காஞ்சு போயி இருக்கேன் போலயே கடவுளே..



பசியினாலே மயக்கம் வரும்.. எனக்கு கேண்டீன்ல 

சாப்பிட்ட உடனே மயக்கம் வருது..# எத்தனை பேருக்கு 

தான் "கும்பி பாகம்" கொடுக்கணுமோ தெரியலையே..



ஜெயா டிவில மட்டும் தான் டப்பிங் சீரியல் 

போடாம இருந்தானுங்க..இப்போ வந்துடுச்சு..

பிரியமானவளே வாம்..#புது பிசாசுகள்..



ஒரு விஷயத்தை பத்தி பேசி மொக்கை போடுறானுங்களேனு

சாமர்த்தியமா பேச்சை மாத்தினா அதுல இதை விட

மொக்கை போடுறானுங்க..#முடியலைடா டேய்...



சில பேரு கூட இருக்குறதை விட தனியாவே 

இருந்துடலாம் போல..# காது வலிக்குதுடா டேய்.. 

Wednesday, April 1, 2015

ஏன் இப்படி ...90




பைக்ல பில்லியன் சீட்டை உயரமா வச்சி ஒவ்வொரு 

ஸ்பீட் பிரேக்கர் ஏறும்போதும் ஹெட்லைட்டுக்கு 

முத்தம் கொடுக்குறானுங்க..



எனக்கு தற்பெருமை அடிச்சுக்கிறதே பிடிக்காதுன்னு

 பீத்திக்குறானுங்க.. இதுக்கு நீங்க தற்பெருமையே அடிச்சிக்கலாம்..

# 9 ஓட்டைல ரெண்டை அடைச்சுக்கலாம் போல..



10 நிமிஷத்துல வர்றேன்னு பாஸ் கிட்ட பொய் சொல்லிட்டு 

மொபைலை ப்ளைட் மோடுல போட்டு பாண்டிச்சேரி 

வந்தான் ஒருத்தன். 10 நிமிஷத்துல பாத்ரூமுக்கு தான் 

போக முடியும்னு புரிஞ்சிக்காத பாஸைக் காரி துப்புறதா..? 

இல்ல பொய்யைக் கூட சரியா சொல்லத் தெரியாத 

நாயை அடிக்கிறதா...?





கல்யாண பேனர்ல சுய விளம்பரத்துக்கு போட்டோ 

போட்டுக்கிட்டா தப்பில்லை..கண்ணீர் அஞ்சலி பேனர்ல 

எதுக்குடா...?# யார் செத்தாங்கனே தெரிய மாட்டுது..




கைக்குட்டையை கர்ச்சீப் னு சொல்லிட்டேன்..

அதை ஹேண்ட் கீ னு  சொல்லணுமாம்..

#இதுக்கெல்லாமா 10 நிமிஷம் தாளிக்குறது..!!!!

Thursday, February 19, 2015

ஏன் இப்படி ...89



இந்த வருஷமும் சனிக்கிழமை வாழ்த்துக்கள் னு 

சொல்ல வைச்சிட்டாங்க..#ஹ்ம்ம்ம் எனக்கில்ல..

எனக்கில்ல..அவ்வ்வ்வ் 



என் போன்ல பொண்ணு குரல் கேட்டாலே பசங்க 

பொறாமையில பொங்கிடுறானுங்க..

#அடேய்..இருங்கடா..ஏன் இன்னும் கிரெடிட் கார்டு 

பில்லு கட்டலைன்னு கேட்குறா..!!



ஒரு பக்கம் காதலி இல்லாதது கடுப்புனா,

இவனுங்க கவிதை சொல்றது காண்டாகுது.. 

# வாங்கடா வாயில கத்தியை விட்டு சுத்துறேன்..



மிர்ச்சி டைம் செக்னு 3 நிமிஷம் விளம்பரம் போட்ட 

அப்புறம் டைம் சொல்றானுங்க..#பக்கத்தில இருந்தவர் 

கிட்டயே நேரம் என்னனு கேட்டு இருக்கலாம் போல ..



ஒரு விஷயத்தில இருக்குற உண்மைத்தன்மை 

என்னனு தெரிஞ்சுக்கிறதை விட,அது தப்புன்னு நிரூபிக்க

அதிகம் மெனக்கேடுறானுங்க..

Friday, January 30, 2015

ஏன் இப்படி ...88




இந்த நாதஸ்வரம் சீரியலை ஞாயிற்றுக்கிழமை மட்டும்

தான் போடலை போல..மற்ற எல்லா நாளும்

ஊதுறானுங்க..#முடியலைடா டேய்..



50 கி.மீ. தினமும் ட்ராவெல் பண்ணி அசதியா வந்து

"அம்மா பசிக்குதுனு" நான் ஈனஸ்வரத்தில முனகினாலும்

நாதஸ்வரம் முடிஞ்சு தான் சோறு கிடைக்குது..




நேத்து அடுத்தடுத்து ரெண்டு சீரியல் பார்க்கிற துர்ப்பாக்கிய

நிலைமைக்கு ஆளானேன்.. ஒண்ணுல டைவர்ஸ் கேஸு 

ஓடுச்சு..ஆன்ட்டியை உஷார் பண்ணவன் பக்கத்திலேயே

நின்னான்.. இன்னொண்ணுல ஒரு படி மேல போயி 

டைவர்ஸ் ஆகாமையே ,கல்யாணம் பண்ணி ரெண்டாவது

புருஷன் கிட்ட முதல் புருஷன் வந்து இருக்கான்னு 

சொல்லுது..# நான் ஒரு நாள் சீக்கிரம் வந்தது குத்தமாடா...????



எல்லா சீரியலையும் ஒரு டைவர்ஸ்ஆனது,

ஆகப்போறது,கல்யாணத்துக்கு அப்புறம் உஷார் ஆனது,

உஷார் பண்ணி மாட்டுனது இப்படியே ஓடும் போல..!@#$%

Sunday, January 18, 2015

ஏன் இப்படி ...87




வர வர யாரும் உங்க பேரு என்னனு கேட்க மாட்றாங்க..

பேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர் ஹேண்டிலும் தான் கேட்குறாங்க..



எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணிட்டு என்னை மட்டும்

அடி வாங்க விடுறானுங்க..#குவாலிட்டி

டிபார்ட்மென்ட் கொடுமைகள்..



நல்லவேளை சிட்டியில எந்த ரோடு ஓரத்திலையும் 

மரங்கள் இல்லை..போற வேகத்தில ப்ரேக் அடிச்சா 

மரக்கிளையில மாட்டிக்குவானுங்க போல..

#பொறுமையா போங்கடா டேய்..



NOKIA LUMIA,AIRTEL 2G ல கொட்டாவி விட்டுகிட்டே 

கூகுள் ஓப்பன் பண்ணேன்.. நான் தூங்குற வரைக்கும்

லோட் ஆயிக்கிட்டே இருக்கு..# அடேய்..!@#$%



"பாதுகாப்பின் காவலரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"

னு கர்த்தரைப் பார்த்துக் கேட்குறாங்க..

#அடேய்..அப்போ நீங்க என்னடா பண்ணுவீங்க...?????

Tuesday, January 13, 2015

ஏன் இப்படி ...86




தம்,சரக்கு எல்லாம் அடிச்சிட்டு ஊதிக்காட்டி வாசனை
வருதானு கேட்குறானுங்க..#சனியனுங்களா அது நாத்தம்டா..
சரக்கு அடிச்சா சந்தனம் மணமா வரும்..
இதுல என்னடா சந்தேகம் உங்களுக்கு..



கல்யாண வாழ்த்து பேனர்ல ஒருத்தன் அரிவாளோட 
நிற்கிறான்..# டேய்.. நீ வாழ்த்த போறியா இல்ல
வெட்டப் போறியாடா..



அரசியல்வாதிகள் வீட்டு கல்யாண பேனர்ல மாப்பிள்ளை
பொண்ணு போட்டோவை பூதக்கண்ணாடி கொண்டு தான்
பார்க்கணும் போல..# ஆணுக்கும் ஆணுக்கும் 
கல்யாணமோனு ஜெர்க் ஆயிட்டேன்..



நைட் ல இருக்குற நை,ட் ரெண்டும் தமிழ் எழுத்துக்கள் தானே..

அப்போ இது தமிழ் வார்த்தை தான்னு தர்க்கம் பண்றான்

 8 வது படிக்கிற பையன்.. அப்போ இங்கிலிஷ்ல 

 என்னடான்னு கேட்டா NIGHT னு சொல்றான்.. 



இரவு னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டு இருக்கியாடானு 

கேட்டா, ம்..கடன் வாங்குறதுனு சொல்றான்..

(எவனோ இரவலை தப்பா சொல்லிக் கொடுத்து இருக்கான்..)

Monday, January 5, 2015

ஏன் இப்படி ...85



ச்ச இந்த வருஷமும் GOOD FRIDAY வெள்ளிக்கிழமை வருது..

சனிக்கிழமை வந்தா  ரெண்டு நாள் லீவா இருக்கும்ன்றான்

ஒருத்தன்..#அடேய்..என்கிட்டே வர்றவன் எல்லாம் 

ஏன்டா இப்படியே இருக்குறீங்க..



Hy nw yr னு மெசேஜ் அனுப்புறாங்க.. அடேய்..

அரைத்  தூக்கத்தில ஒண்ணும் புரியாம அலறி 

அடிச்சி எழுந்தேன்டா..



பாஸ்பரஸ் நியூ இயர் னு ஒரு மெசேஜ்..

 நான் பொட்டாசியம் பொங்கல் வாழ்த்துக்கள்னு

ரிப்ளை பண்ணிட்டேன்..




மாபெரும் கடன் திருவிழா னு ஒரு போஸ்டர்..

அடுத்தவனை கடன்காரனா மாத்துறதில உங்களுக்கு 

அவ்வளவு கொண்டாட்டமாடா...???



சம்பந்தமே இல்லாத ரெண்டு விஷயத்தை 

எப்படியெல்லாம் சம்பந்தப்படுத்தி பேசுறீங்க..!!! 

சத்தியமா இந்த சூட்சுமம் மட்டும் புரியவே மாட்டுது 

பாஸ்/கேர்ள்ஸ்..

Monday, December 29, 2014

ஏன் இப்படி ...84


QUALITY DEPARTMENT ல இருக்குற ஒரே தொல்லை 

எவன் கக்கா போனாலும் நாம தான் கழுவணும்..

ச்ச # கருமம் பிடிச்சவனுங்க கண்ட இடத்தில் 

பிரச்சினை பண்ணி வைக்கிறானுங்க..



சட்டை வேர்க்குற அளவுக்கு வேலை செய்யுறது தப்பில்லை..

ஆனா இங்க நான் சாக்ஸ் நனையுற அளவுக்கு வேலை 

செய்யுறேன்..# கொத்தடிமைகள் குடோனின் கொடுமைகள்.. 



தப்பு செய்வதை விட மோசமான விஷயம் ஆகாவலி எல்லாம்

அட்வைஸ் பண்ணும்போது தலையை சொறிஞ்சிக்கிட்டு

நிக்கிறதுதான்..# விட்ருங்கடா டேய்..



ரஹீம் ஐயங்கார் பேக்கரி,பெரம்பூர் ஹைதராபாத் பிரியாணி 

வரிசையில அஸ்வினி சைவ உணவகம் "100% ஹலால்"னு 

ஒரு போர்டு..#காப்பி அடிங்க..ஆனா கவனமா அடிங்க..



சட்டையில ஒட்டு போட்ட மாதிரி ரோடெங்கும் பேட்ச்சிங் 

பண்ணி இருக்கானுங்க..நேஷனல் ஹைவேஸ் லையே 

இப்படி இருந்தா,மத்த ரோடு..?#வெளங்கிடும்..

Saturday, November 22, 2014

ஏன் இப்படி ...83


பல வருஷம் கழிச்சி இன்னைக்கு தான் எக்சர்சைஸ் 

பண்ணலாம்னு மொட்டை மாடிக்கு போனேன்..

செம மழை..# இந்த சிங்கிள் பேக் தான் நிரந்தரம் போல..



காலையில எழுந்து எக்சர்சைஸ் செய்யணும்னு அலாரம் 

வைக்கும்போது இருக்குற எனர்ஜி அலாரம் அடிக்கும்போது 

எங்க போகுதுனே தெரியலை..#எவ்வளவு சோம்பலா இருக்கு 



ட்ராபிக் ஆக காரணமே ஒழுக்கமின்மை தான்னு புலம்பிட்டு 

எங்களை ஓவர்டேக் பண்ணி எதிர் திசையில் இருந்து 

வண்டி வர முடியாத அளவுக்கு ப்ளாக் பண்ணி

நிக்கிறான் ஒருத்தன்..#டேய்.. உங்களுக்கு 

வெட்கமே இல்லையாடா..?



மச்சி நீ சொன்னதை நான் லைக் பண்றேன்டா..

எங்கடா கமெண்ட் போடுறதுன்னு கேட்குறான் ஒருத்தன்..

நேர்ல பேசிக்கிட்டு இருக்கும்போது

#அடேய்..பித்து பிடிச்சி திரியுறீங்களேடா



உதார் விட்டுட்டு போன இடத்தில உதை வாங்காத 

குறையா அசிங்கப்பட்டு வந்து கூட மறுபடியும் அதே 

தவ்லத்தோட திரியுறானுங்க#டேய்..நான் தான் 

கூட இருந்து பார்த்தேனேடா..

Tuesday, November 18, 2014

ஏன் இப்படி ...82


பத்தாவது படிக்கிற பக்கத்துவீட்டு பையன்கிட்ட 

விளையாட்டா கேட்டேன்.. பள்ளிப்பேருந்துக்கு எவ்ளோ 

கட்டணம்னு.. புரியாம முழிச்சவன்கிட்ட விளக்கி சொன்னதும் 

ஸ்கூல் பஸ் கு எவ்ளோ சார்ஜ்னு தமிழ்ல கேட்க 

வேண்டியது தானேனு சொல்றான்..# தமிழ் வாழ்க..!!!!!!!!!!!!



வனரோஜா இல்ல வாசமில்லாத ரோஜா போனா கூட 

வயித்தை உள்ளே இழுத்துக்குறேன்..

#ஐயையோ வயசாயிடுச்சோ..தொப்பை தொல்லை 

தாங்க முடியலையே நாராயணா..



காலா காலத்துல கல்யாணம் ஆகாம இருக்கவன் 

கனவுல கன்னிப்பெண்கள் தானே வரும்..வெட்கமே 

இல்லாம CANDY CRUSH வருதுனு சொல்லுது ஒரு நாயி..



நண்பர்களின் சோகத்தில் பங்கெடுத்துக்கலாம்னு 

துணைக்கு போனா,நம்மை சிக்க வச்சி நுங்கை 

எடுத்துட்டு விடுறானுங்க..

#கூட வந்தது ஒரு குத்தமாடா..???



லோக்கல் கேபிள்ல ராத்திரி 10 மணிக்கு செம 

சூடான பொண்ணை வச்சி லேகியம் வித்தானுங்க..

குப்புறப்படுத்துட்டு காலையில எழுந்து பார்த்தா 

கந்த சஷ்டி கவசம் ஓடுது..

Monday, November 3, 2014

ஏன் இப்படி ...81


காய்ச்சலா இருக்குனு சொன்னா Y ma Rain la Dipped ah னு 

கேட்குறா ஒருத்தி ..# காய்ச்சலே தேவலாம் போல 

இருக்கே கடவுளே ..



எவனுக்கோ பொண்ணை கட்டிக் குடுத்துட்டு என் கிட்ட 

வந்து ஏன் இன்னும் குழந்தை பிறக்கலைன்னு கேட்டா 

நான் என்ன பண்ணுவேன்..# MR ஆன என் ஆபிஸ் அவஸ்தைகள்..




தீபாவளிக்கு ஒரு ஹோட்டல் கூட இல்லை .. 

ஆனா அத்தனை ஒயின்ஸ் ஷாப் பும் திறந்து இருக்கு..

# பாண்டிச்சேரி பகீர் இம்சைகள்..# குடும்பத்தோட 

பயணம் பண்ணுவதில் எவ்ளோ பிரச்சினைகள்..



குழந்தைகளுக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்னு 
 
தெரிஞ்சும் உனக்கு யாரைப் பிடிக்கும்னு ஓயாம கேட்டு 
 
இம்சை பண்றதைப் போல உங்க சந்தோஷத்துக்காக நாங்க 
 
உங்களுக்கு கட்டுப்பட்டு உங்க சொல்படி தான் 
 
நடக்கிறோமானு எத்தனை தடவை தான் கேட்பீங்க..? 
 
முடியல பாஸ் / கேர்ள்ஸ்..




தீபாவளியை எப்படிடா கொண்டாடுனீங்க னு கேட்டா 

செம சரக்கு மச்சி.. புல் போதை னு சொல்றானுங்க..

# டேய்..என் கிட்ட மட்டும் ஏன்டா இப்படி சொல்றீங்க..

ஏற்கனவே எவனும் எனக்கு பொண்ணு குடுக்க மாட்றான்..

Tuesday, October 28, 2014

ஏன் இப்படி ...80


#Save us @ sangam cinemas னு tag போடலாமான்னு 

யோசிக்க வச்சிட்டானுங்க #யான்



யான் படத்துல நிறைய காரணங்கள் இருக்கு 

ஆனா கதையை மட்டும் காணோம் # பெஸ்டிவல் 

மூடையே பாழாக்கிட்டானுங்க



JESUS SAVES MINISTRIES தானே..எங்க ஏரியால ஒரு 

போஸ்டர்.. JESUS SAVES "MINISTERS" மதம் பார்க்காமல் 

மம்மியை இயேசு காப்பாத்துவார்னு..


 
நீதி தேவதைக்கே தண்டனை வழங்கிய நீதிபதியைக் 

கைது செய்னு இன்னொரு போஸ்டர்..#பாஸ்போர்ட் 

வாங்கிட்டு பாரின் போயிடலாமா...???



அடுத்தவனுக்கு அடிவயித்துல அடுப்பைப் பத்த 

வச்சி பார்க்கிறதுல அப்படி  என்னடா உங்களுக்கு 

ஆனந்தம் #போனஸ் புலம்பல்கள்

Friday, October 3, 2014

ஏன் இப்படி ...79





தமிழ்,தெலுங்கு சினிமாவுல வருவதை விட எதிர்பார்க்காத,

அதிகமான ட்விஸ்ட் என் வாழ்க்கையில வருது.. 

அட தேவுடா...!!!!!!!!!!!!!!!!




நம்ம ஊருல எறும்பு புத்து,ATM க்கு அடுத்து எண்ணிக்கையில 

இன்ஜினியரிங் காலேஜ் தான் இருக்கும் போல.. ஏன் இப்படி..



இஞ்சினியர்கள உருவாக்க சொன்னா இயந்திரங்களை 

உருவாக்குறானுங்க..நல்லதில்லை.. நல்லதில்லை.. 

இது நாட்டுக்கு நல்லதில்லை...





இந்தியா FIFA வேர்ல்ட் கப் உள்ள போக ஒரே வழி நாம 

அத நடத்துறது தான்..# யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா ப்ளீஸ்..




தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு 

மொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..? 

# ஆபிஸ் அலப்பறைகள்




இங்கிலீஷ் ல சொல்லிக்கொடுத்தாலே அது இன்டர்நேஷனல் 

ஸ்கூல் ஆயிடுமாடா.. # ச்ச.. ஊருக்குள்ள எங்க 

பார்த்தாலும் INTERNATIONAL SCHOOL




வாழைப்பழத்தை விட அதோட தோல் அதிகமான 

எடை இருக்கு..கேண்டீனுக்கு கொடுக்கவே ஸ்பெஷலா 

விளைய வைக்கிறானுங்களா..? # ஆபிஸ் அலப்பறைகள்




ஹைவேஸ் ல போகும்போது இந்த அரை லூசுங்க அடிக்கிற 

ஹாரன் சத்தத்துல ஹார்ட் அலேக்கா வெளிய வரும் 

போல இருக்கு.





திருவிழா பேனர்ல அம்மனை விட அரை அடி 

பெருசா அனுஷ்கா ,ஹன்சிகா போட்டோ..

# அம்மன் அருள் பொருகனு தமிழை தப்பா வேற எழுதிக்கிட்டு 

# பாவம் டா அம்மன்




ஆடி மாத தள்ளுபடி ல அவ கூட ஜவுளிக்கடைக்கு போகாம 

ஆடிட்டிங் னு  சொல்லி தப்பிச்சு,போன சண்டே மாட்டிக்கிட்டேன்..

# 3 கடை, 7 மணி நேரம், 4200 ரூபா சுவாகா...

Wednesday, September 24, 2014

ஏன் இப்படி ...78




நேற்று நண்பனிடம் ரவை உப்புமாவின் கொடுமைகளை 


பட்டியலிட்டு மனதை மாத்தி சேமியா உப்புமா சாப்பிட வச்சேன்.

இரவு என் ரூம் மேட்ஸ் கிண்டியது ரவை

உப்புமா..#வாழ்க்கைன்றது,,!@#$%
 



என்னதான் உலகத்திரைப்படமா இருந்தாலும் அதை தமிழ்ல 
டப்பிங் பண்ணி பார்த்தாதான் நமக்கு திருப்தி..
(ஜாக்கி சான் படமே சைனீஸ்ல வெறியாகுது)


தண்ணீர் கலக்காத மோர் தெரியும்..
தயிர் கலக்காத மோர் தினமும் குடிக்கிறேன்..
#ஆபிஸ் கேண்டீன் அவலங்கள்..




5 நிமிஷம் பேசிட்டு இதை வார்த்தை விடாம 4 வரி மெயிலா
அனுப்புங்கனு சொல்றது  என்ன விதமான டார்ச்சர்
# பாஸ் பாறைகள்..



இந்த CANDY CRUSH கருமத்தை விளையாட ஆரம்பிச்ச 
அப்புறம் கனவுல எல்லாம் கலர் காம்பினேஷன் பார்த்துட்டு
இருக்கேன்..# DELICATE POSITION




இந்த "CANDY CRUSH" விளையாட ஆரம்பிச்ச அப்புறம் என்

 "LIFE" வீணாப் போச்சு.. # நல்லவேளை நண்பர்கள்  

LIFE அனுப்புனாங்க..இதோ மறுபடி வரேன்..




எல்லா இஞ்சினியரிங் காலேஜ் வாசலிலும் ஏதோ ஒரு 

பேங்க் ATM இருக்கு..# நல்லா இருக்குடா உங்க குறியீடு..



அப்படியே மெடிக்கல் காலேஜ் வாசலில் பேங்க் கட்டி 

விடுங்கடா.. போற போக்கை பார்த்தா ஸ்கூல் வாசலிலும் 

கட்டணும் போல..




6 மாசத்துக்கு ஒரு தடவை சிகரெட் விலையை ஏத்திடுறானுங்க.. 

10 வருஷத்துக்கு மேலாக விலை ஏறாம இருக்குற ஒரே 

பொருள் BOOMER BUBBLE GUM தான் போல ..




அவனவன் 6 லட்ச ரூபா சம்பளம் வாங்கிகிட்டு அழகான TL 

ஆன்ட்டிகிட்ட ஆசையாசையா வேலை செய்யுறான்..நான் 4 லட்ச 

ரூபா சம்பளத்துக்கு நரமாமிசம் சாப்பிடுற நாதாரிகள் கிட்ட 

நாயா வேலை செய்யுறேன்..

# சாப்ட்வேர் சரசங்கள் Vs ஆட்டோமோடிவ் 

இண்டஸ்ட்ரி அவஸ்தைகள்..

Sunday, November 17, 2013

ஏன் இப்படி ...77


உங்களைத் தவிர நாங்க வேற யார்கிட்ட சிரிச்சு பேசினாலும் 
 
சூர காண்டு ஆகுரீங்களே..ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?



உங்களுக்கு மட்டும் எல்லாரும் நண்பர்களா இருக்கணும்..
 
நாங்க ம்!@#$%^ பிடிச்சி இழுத்து சண்டை போட்டுக்கணும்..
 
இது என்ன நோய் பாஸ் / கேர்ள்ஸ்..?




எங்களுக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை 
 
இருக்குனு சொல்லும்போது ஒரு மொக்கை காரணம் சொல்லி 
 
எங்களை உங்க கூட இருக்க வச்சி இம்சை பண்றீங்களே.. 
 
ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?




பக்கத்தில இல்லைனாலும் நாங்க சந்தோஷமா இருக்கும்போது  

ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி எங்க நிம்மதியைக் 

கெடுப்பதில் என்ன ஆசை பாஸ் / கேர்ள்ஸ்..?











நாங்க சொல்ற எந்த கருத்தையும் ஒத்துக்காம ஏதாவது 

காரணம் சொல்லி தட்டிக்கழிக்குறீங்க..அப்புறம் ஏன் எங்க 

கிட்ட கேட்குறீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?




கொலைகாரனைக் கூட மன்னிச்சுடுவாங்க போல.. 

குடிக்கிறவன்னு சொன்னா கோரமா பார்க்குறாங்க..?


 



எக்ஸாம் ஹாலில் அடுத்தவன் பேப்பரை 

பார்க்கிறதை விட,ஹோட்டலில் அடுத்தவன் என்ன 

சாப்பிடுறான்னு பார்க்கிறதில நம்ம மக்கள் கில்லாடிங்க..




குழப்பத்தில் எடுக்கும் தவறான முடிவுகள் பெரும்பாலும் 

கூட இருப்பவர்களின் குடைச்சலாலேயே எடுக்கப்படுகின்றன..

#கொலை பண்ணிடலாமா.?

 



தன்னைப்பத்தி கேவலமா பேசுறதை சிரிச்சுக்கிட்டே 

ஏத்துக்குறவன் இன்னொருத்தனைப் பத்தி புகழ்ந்தா உடனே 

உர்ருன்னு ஆயிடுறானுங்க..#அட மானங்கெட்ட பதருகளா..



 


குழப்புவதில் தெளிவாகவும் , புரிந்துகொள்வதில் 

எப்போதும் குழப்பமாகவும் இருக்க பொண்ணுங்களாலும் , 

பாஸ்களாலும் மட்டும் தான் முடியும்..#ப்ப்பா...