Showing posts with label போதைமொழிகள்.... Show all posts
Showing posts with label போதைமொழிகள்.... Show all posts

Thursday, June 25, 2015

அர்த்தம் தெரியுமா..? 18


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...


சுனைனா,ஆத்மியா வுக்கு எல்லாம் அடுத்த பட 

வாய்ப்பு இல்லையேனு நினைக்கும்போது.. 

தனன்யா,மோனிகா,வசுந்தரா வுக்கு எல்லாம் 

கல்யாணம்னு  வரும்போது...



இந்த வருஷமாச்சும் பல்க்கா அப்ரைசல் வரும்னு 

நம்பி இருக்கும்போது புது பாஸ் வரும்போது...



பசங்களோட பார்ல உட்காந்து சரக்கடிக்கும்போது 

கேர்ள் ப்ரெண்டோ/பொண்டாட்டியோ போன் பண்ணும்போது...



பொண்ணு அழகா இருக்கேன்னு பளபளனு முன்னாடி 

வந்து நின்னா,அவ கோண வாயைத் திறந்து 

கொட்டாவி விடும்போது...



குடிக்கும்போது மட்டும் கூட்டு சேரும் நாயிங்க 

எல்லாம் குழுவோடு இணைந்து வேலை 

செய்யணும்னு சொல்லும்போது..

Tuesday, June 23, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.. Part 68






உயிர் தூவலை பயிர் தூவல் போல பக்குவமா

பண்ணாம...உயிர் ஊட்டலை வெறுமனே உறுப்பு

நாட்டல்னு நினைக்கிறதாலதான் உறவுல விரிசலே..

#ஹர ஓ சம்பா..




அரிய வகை மூலிகைகளினாலே அடைய நினைக்கிற

எவனும் அன்பு,அரவணைப்பினாலே அடையணும்னு

நினைக்கிறதில்லை..##ஹர ஓ சம்பா..




உன் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு பெர்மிஷன் 

போட்டாக்கூட திட்டும் பொண்டாட்டி தான்,அவ 

சினேகிதி கல்யாணத்துக்கு ஸிக் லீவ் போட்டு 

கூட்டிட்டு போக சொல்லுவா..




சிவகார்த்திகேயன்,துல்கர் சல்மான் லாம் செம க்யூட்டுனு
சொல்ற அதே வாய் தான்,நாம நிக்கியையும்,
டாப்சியையும் ரசிக்கும் போது பேயைக் கூட ஜொள்ளு
விடுறான் பாருன்னு சொல்லும்...
#என்னாங்கடி உங்க நியாயம்..???




வர வர எவனும் உண்மையை பேசுறதில்லை..
உளறிடுறானுங்க.. போதையில..#ஹர ஓ சம்பா..

Saturday, June 20, 2015

அர்த்தம் தெரியுமா..? 17


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எவன்கிட்டயாவது பிச்சை எடுத்தோ,கடன் வாங்கியோ 

புல் போதையான பின்னாடி இன்னொருத்தன்,

வா மச்சி இன்னைக்கு ட்ரீட் இருக்குனு சொல்லும்போது...



ஊரையே கலக்கி வைரல் ஆன வீடியோ/ஆடியோ/

போட்டோ இன்னும் நமக்கு வராத போது...



திராபையான ட்விட்/போஸ்ட் போட்டு RT,FAVORITE /

 LIKE,SHARE வருதானு வெறிக்க வெறிக்க 

வேடிக்கை பார்க்கும்போது...



காவ்யா மாதவன்,மஞ்சு வாரியர் எல்லாம் 

காலேஜ் பையனுக்கு அம்மாவா நடிக்கிறாங்கனு 

கேள்விப்படும்போது...



ஜெயம் ரவி,நான் கடவுள் ராஜேந்திரன் எல்லாம் 

சொந்த குரலில் பாடுறத கேட்கும்போது, 

கானா பாலா டான்ஸ் ஆடுறத பார்க்கும்போது...

Monday, June 15, 2015

அர்த்தம் தெரியுமா..? 16


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எதிர்பார்ப்போட பார்க்க போன படம் படுதிராபையாவோ 

இல்ல கொரியன்,இங்கிலீஷ்,சைனீஸ் பட 

காப்பியாவோ இருக்கும்போது...# ஆமா 7ம் அறிவு,

அஞ்சான்,யான்,மாசு இப்படி பல..



ஆர்வமா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண 

படத்தோட சிடியோ,டொரண்ட் லிங்கோ கிடைக்கும்போது...




கூட்டமா இருக்குற பஸ்ல படிக்கட்டுல 

தொங்கிக்கிட்டே டிக்கெட் வாங்குன உடனே 

பஸ் ப்ரேக் டவுன் ஆகும்போது...




சாய்ஸ்ல விடலாம்னு நெனச்சி படிக்காம விட்ட 

கேள்விகள் மட்டும் பரீட்சையில கேட்கும்போது...




ஷேர் ஆட்டோ,ட்ரெயின்ல எல்லாம் ஹன்சிகா 

போல பிகர்களோ,சோனா,சோனியா போல 

ஆன்ட்டிகளையோ நாம எதிர்பார்த்தா, ஆயாவும் 

சொர்ணாக்காவும் வந்து உட்காரும்போது... 

Wednesday, June 10, 2015

அர்த்தம் தெரியுமா..? 15



ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



சம்பளம் கிரெடிட் ஆன பேங்க் மெசேஜ் 

எதிர்பார்த்திருக்கும்போது, ப்ளாட்,இன்ஸூரன்ஸ் 

மெசேஜ்லாம் வரும்போது... 



லீவ் போட்டு மேட்ச் பார்க்கலாம்னு ப்ளான் 

பண்ணா க்ரவுண்ட்ல மழை வரும்போது ,

வீட்ல கரெண்ட் போகும்போது..



நேரம் போக்க ட்விட்டர் வந்த டைம்லைன்ல 

மொக்க டேக் போட்டு ட்ரெண்ட் ஆகும்போது.. 

புரியாத சண்டை போகும்போது...




பேஸ்புக் போனா கோணமூஞ்சியை கேவலமான 

ஆங்கிளில் எடுத்து அதுல நம்மை டேக் பண்ணி 

விடும்போது,candy crush notification வரும்போது...



ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ணும் நண்பர்கள் 

அவங்களுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு

உனக்கு எப்போடா னு கேட்கும்போது..

Saturday, June 6, 2015

அர்த்தம் தெரியுமா..? 14


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



நீ நேசிக்கும் ஒருத்தர் அவங்களை நேசிச்ச இல்ல 

அவங்க நேசிக்கிற ஆளைப் பத்தி சொல்லும்போது...



வாலு,பூலோகம்,ரெண்டாவது படம் எல்லாம் இந்த  

மாதமாவது ரிலீஸ் ஆகிடும்னு நம்பும்போது...



பசியோட ஆர்டர் செஞ்சிட்டு காத்திருக்கும்போது 

பக்கத்து டேபிளில் இருந்து உணவு வாசனை வரும்போது..



அடிச்சி பிடிச்சி ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி தியேட்டர் 

போனா படம் ரிலீஸ் ஆகாதுனு தெரியும்போது..

#ஆமா உத்தம வில்லனே தான்..



ராதிகா ஆப்தே, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியா 

நடிக்கிறானு தெரியும்போது..

Friday, May 15, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 67


அந்த நேரத்தில மூர்க்கமா செயல்படுவது தான் 

ஆண்மைன்னு கலர் போஸ்டர் அடிக்கிறவனுங்களை

நம்புறவங்களே..#எப்போ தான் திருந்த போறீங்க..



சரக்குக்காக காத்திருப்பதை விட அதன் பிறகு 
சாப்பாட்டுக்காக காத்திருப்பதே கொடுமையானது..
#ஹர ஓ சம்பா..

 
செல்போனை பயன்படுத்துங்க.. சக மனுஷனை 
நேசிங்கடானு சொன்னா... செல்போனை நேசிக்குறானுங்க..
சக மனுஷனை பயன்படுத்திக்கிறானுங்க..
!@#$%^& ஹர ஓ சம்பா..



வார்ம்அப் பண்ணாலே வெயிட் குறையும்னு 
நினைக்கிறது போலதான்,பார்த்தாலே ஃபிகர் பிக்கப் 
ஆயிடும்னு நினைக்கிறதும்..# வொர்க் அவுட் பண்ணனும் 
மச்சி..ஹர ஓ சம்பா..

 
அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் 
என்றெல்லாம் வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின் 
அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் 
பொறுத்தது..#ஹர ஓ சம்பா..

Monday, April 27, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 66



அழுதுகிட்டே அன்பு காட்டவும், சிரிச்சுக்கிட்டே 

செருப்பால அடிக்கவும் பொண்ணுங்களால 

மட்டும் தான் முடியும்..# ஹர ஓ சம்பா..



எல்லா விஷயத்திலயும் பாஸிடிவ்வா வர 

நினைக்கணும்.. தப்பில்லை..அதுக்காக HIV டெஸ்ட் 

ரிசல்ட்ல அப்படி நினைக்க கூடாது..# ஹர ஓ சம்பா..



நல்லவனா வாழ்வதை விட, நடிக்கிறதை 

மெயின்டெயின் பண்ணுறது தான் கஷ்டமான விஷயம்..

# ஹர ஓ சம்பா..




வேலைப் பளு இருக்கோ இல்லையோ மூளைப் 

பளு அதிகமாயிடுச்சு..அழிந்து வரும் உயிரினங்கள் 

லிஸ்ட்ல சேர்ந்துடுவோமோ..?? #ஹர ஓ சம்பா..



பந்தாவுக்காக ஸ்டுடியோ போயி போட்டோ எடுத்தது,
 
இப்போ செல்போன் செல்ஃபி யால பாத்ரூம் 
 
வரைக்கும் வந்து பதறடிக்குது.. #ஹர ஓ சம்பா..

Saturday, April 4, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 65




நல்லவனுக்கு எதிரி கெட்டவன் இல்லை..

நல்லவனாவும் இருக்க முடியாம,கெட்டவனா மாற 

பயந்துகிட்டும் ஒரு கும்பல் திரியுதே..அவனுங்கதான்..



பசங்களுக்கு எனெர்ஜி தர எவ்வளவு விஷயங்கள் 

இருந்தாலும் ஒரு பொண்ணோட பார்வைக்கு ஈடு 

இணையே இல்ல..# லவ் யூ ஆல் பொண்ணுங்களா..!!!!!!



சரக்கடிக்கவும்,சாப்பிடவும் பசங்க எவனுக்கும் 

காத்திருக்குறதே இல்ல..# பந்திக்கும் போதைக்கும் முந்து..

முடியலேன்னா ஓரமா குந்துனு.. என்ன ஒரு பாலிசி..!!!!!! 



இப்போவெல்லாம் யாரும் உன் மனசுல நான் 

இருக்கேனானு கேட்குறதில்லை.. உன் WHATSAPP , 

FACEBOOK ல யாரெல்லாம் இருக்காங்கனு தான் கேட்குறாங்க..



ரோட்டுல நடக்குற விபத்துகளில் கணிசமானவை 

சாலை வளைவுகளை பார்க்காம முன்னாடி வண்டியில 

பின்னாடி உட்காந்து இருக்குறவங்க வளைவுகளை 

பார்க்கிறதால தான்..# ரோட்டைப் பார்த்து ஓட்டுங்கடா டேய்.. 

Monday, March 23, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 64


சரக்கு,டோப்பு போதையை விட SAND CLOCK ஷேப் 

தரும் போதையே அலாதியானது..ஹ்ம்ம்ம்ம்...

ஹர ஓ சம்பா..



தப்பு செய்ய இரண்டு விஷயங்கள் வேணும்..

பொய் சொல்லணும்,குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கணும்..

# ஹர ஓ சம்பா..



சந்தோஷமா இருந்தா செல்ஃபி எடுக்குறதும்..

கோவமா இருந்தா செருப்பு எடுக்குறதும்னு..

# என்னமா இப்படி பண்றீங்களேமா..???



ஆசையா அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் பேசினா 

அஞ்சலி பாப்பாவா மாறிடுறீங்க..

விளையாட்டா பேசினா வேற மாதிரி எடுத்துகிட்டு 

வெறுப்பாகிடுறீங்க..# என்னமா இப்படி பண்றீங்களேமா..???



க்ரூப்பா இருக்கும்போது கமெர்சியல் ஹீரோயின் போல 

கெக்கே பெக்கே னு இருக்கீங்க.. 

தனியா வரும்போது அவார்டு பட ஹீரோயின் போல

ஆக்ட் கொடுக்குறீங்க..# என்னமா இப்படி பண்றீங்களேமா..???

Thursday, August 8, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63



முரண்டு பிடிக்கும் பெண்களையும்,மிரண்டு நிற்கும் பெண்களையும் 

சமாளிப்பது சுலபம்..கண்களில் நீருடன் மருண்டு நிற்கும் 

பெண்களை சமாளிப்பதே கடினம்..
 
எத்தனை கவனமாய் இருப்பினும் காதல் கொண்ட மனதும்,

கள்ளம் செய்த மனதும் கண்களில் தெரிந்து விடுகிறது..

 

சம்சாரியா ஆகப்போறேன்னு சொன்னா பசங்க 

பயப்படுறாங்க..சாமியாரா ஆகப்போறேன்னு சொன்னா 

பொண்ணுங்க பயப்படுறாங்க..

 


ஆண்களால் காயப்பட்ட பெண்களைக் காட்டிலும்,

பெண்களால் காயப்பட்ட ஆண்களை தேற்றுவதே மிகக் கடினம்..
 


ஆனந்தத்தில் வரும் கண்ணீர் அற்புதமானது..

விரக்தியில் தோன்றும் சிரிப்பு வேதனையானது..
 

வார்த்தைகளில் வசமாக்க முடியாத கவிதைகளில் ஒன்று , 

குழந்தைகளின் முத்தம்..

 


அவள் மேல் உள்ள சந்தேகத்தில் குடிப்பவனை விட , 

தன் பலகீனங்களைக் கண்டு பயந்து குடிப்பவனே அதிகம்..
 


தன்னுடல் பற்றி அறிந்ததை விடவும் பெண்ணுடல் பற்றி 

அறிந்தவன் பிரகாசிக்கிறான் படுக்கையில்..ஹ்ம்ம்..

Friday, January 4, 2013

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 62




ண்டைக்கு அப்புறம், காதலி காட்டுற பாசத்தை விட, 

பசங்க போதையில காட்டுற பாசம் தாங்க முடியலைடா சாமி..
 


ரெண்டு பசங்க நட்புகொள்ளும் அளவுக்கு வேகமாக , 

ரெண்டு பெண்கள் நட்பு கொள்வதில்லை..
 


இப்போவெல்லாம் சண்டை போடுறதை விட அதை வேடிக்கை 

பார்க்க அதிக தைரியம் வேணும் போல..#ஏன் பயப்...ப..டு..ற ..

என்னை மாதிரி தை...ரிய..மா... இரு..அவ்வ்வ்வ்...
 


ஒரு விஷயம் தனக்கு கிடைக்கலையேன்னு நினைத்து

வருத்தப்படுறவங்களை விட,அடுத்தவனுக்கு கிடைத்து 

விட்டதேனு பொறாமைப் படுறவங்க தான் அதிகம்..
 



வலிகளை தாங்குவதைக் காட்டிலும்,இயலாமையில் 

துவள்வது பெருங்கொடுமை..

 



கதவு திறந்திருக்கையில் சாவித்துவாரம் வழியே

பார்க்கிறவனும்..பொண்டாட்டி இருக்கும்போது பிட்டு 

படம் பார்க்கிறவனும் ஒண்ணு ..

 
 
 
 தன் வீட்டுக் கதவு திறந்திருப்பதைப் பத்தி கவலைப்படாதவன் ,
 
அடுத்தவன் வீட்டு சாவித்துவாரம் வழியே எட்டிப்பார்த்தானாம்..
 
 
 
 
 
கவனம் - டைட்டா டிரஸ் போட்டு வெளிய வரும் 
 
பொண்ணுங்களை விட,லூசா டிரஸ் போட்டு
 
வீட்டிலையும்,வீதியிலையும் திரியும் ஆன்ட்டிகள்..

 


காதலனாய்  இருப்பதை விட கள்ளக்காதலனாய் 
 
இருப்பதே கடினம்..#ஹர ஒ சாம்பா.



மீசையை முறுக்கலைனாலும் பரவாயில்லை..

வெறுமனே மிக்சர் திங்கிறவனா மட்டும் ஆகிடக் கூடாது..

#ஹர ஒ சாம்பா.

Wednesday, October 10, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 61




சில்மிஷங்கள் செய்யும்போது சிரிக்கும் பிகர்களை விட,

சிலிர்க்கும் ஆன்ட்டிகளே அதிகம் ஈர்க்கிறார்கள்..

# ஹர ஓ சாம்பா..



வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வைக்கும் 


பிகர்களை விட,வாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும் 

ஆன்ட்டிகளை அரவணைப்போம்..# ஹர ஓ சாம்பா..



உயிர் எடுக்கும் பிகர்களைக் காட்டிலும்,உயிர் கொடுக்கும் 


ஆன்ட்டிகள் அற்புதமானவர்கள்..# ஹர ஓ சாம்பா..



ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒப்பாரி வைக்கும் 


பிகர்களை விடுத்து,பிரச்சினைகளுக்கு மத்தியில் 

இருப்பினும் புன்னகைக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..

# ஹர ஓ சாம்பா..



கர்வம் கொடுப்பது காதல்..


கர்வம் அழிப்பது காமம்..



கர்வத்தைக் கொடுக்கும் காதலியை விட,கர்வத்தைக் 


கொல்லும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்..

#ஹர ஓ சாம்பா..என்னா வனப்பு..



சுத்தலில் விடும் பிகர்களை விட, சுத்த விடும் ஆன்ட்டிகளே 


அதிகம் ஈர்க்கிறார்கள்..#நீங்கலாம் எந்த எந்த 

வீதியிலடி இருக்கீங்க..?


பசங்க பார்க்குறாங்கன்னு தெரிஞ்சா பிகர்கள் முகத்தில் 


வருவது கர்வம்..ஆன்ட்டிகள் முகத்தில் வருவது வெட்கம்..

# அழகு..ஹர  சாம்பா..

யார் வேணும்னாலும் காதலிக்கலாம்..ஆனா காதலிக்கும் 

எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை..

#புலம்ப விட்டுட்டாளுங்களே வாத்சாயனா..



அல்வா கொடுக்கும் காதலியை விட , 


அல்வா கேட்கும் ஆன்ட்டிகளை அன்போடு ஆதரிப்போம்...

#ஹர ஓ சாம்பா..

Saturday, July 21, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60




குளிர் தெரியாம இருக்க கல்யாணமானவர்களுக்கு

மாது..பேச்சிலர்களுக்கு மது..சாமியார்களுக்கு மட்டும்

இரண்டும்...ஹ்ம்ம்.. இருங்கடா நானும் ஆதினம் ஆகுறேன்..






பணக்கஷ்டத்திற்காக ஆன்ட்டியை நாடிச்

செல்லாதே..மனக்கஷ்டதிற்காக செல்வதில் தவறில்லை..

#ஹர ஓ சாம்பா..






பணக்கார ஆன்ட்டியை தேடுவதை விட,பாசக்கார ஆன்ட்டியை 

நாடுவதே நல்லது..# ஹர ஓ சாம்பா..






சீசனுக்கு வந்து சீன் போடும் சிட்டுகளை விட,அப்போ 

அப்போ கிடைக்கும் ஆன்ட்டிகளின் ...களே அலாதியானது..

ஹர ஓ சாம்பா...








சரக்கடிச்சி வாந்தி எடுக்குறதும்..சண்டே ல ஆபிஸ் வருவதும் 

ஒண்ணு..# தலை பாரமா இருக்கு..






கன்னிகளும் காற்றும் ஒன்று தான்..

காதலிக்கும்போது தென்றலாக,கல்யாணத்துக்கு 

அப்புறம் சூறாவளியாக..








காதலுக்கும் கக்காவுக்கும் நேரம் காலமே கிடையாது..

சில பேருக்கு வரவே வராது..சில பேருக்கு அடிக்கடி வரும்..



கலர்புல் வீக் எண்டு வாய்த்தவனுக்கு எப்போதான் 

பிகர்புல் வீக் எண்டு வாய்க்குமோ..#ஆனா பீஸ்புல் வீக் 

எண்டு அப்புறம் கேர்புல் வீக் எண்டு ஆயிடுமே..

Wednesday, May 16, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 59





அண்ணான்னு கூப்பிடுற அழகான பிகர்களை விட,

செருப்பை தூக்கிக் காட்டும் சுமார் மூஞ்சிகளே பரவாயில்லை..






பூ எதுவா இருந்தா என்ன..நமக்கு வாசனை தான் முக்கியம்..

#பிகர்களை சூப்பர்,சுமார்,டொக்குன்னு வகை பிரிச்சா 

சைட் அடிக்க முடியும்…?




காதலிக்கிறவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் கவிதை..




கல்யாணம் ஆனவன் கண்ணுக்கு காதலிக்கிறது எல்லாம் கழுதை..



லவ் மேரேஜ் பண்ணுறவன் விதியேனு புலம்பிக்கிட்டு

வாழுறான்..அரேஞ்டு மேரேஜ் பண்ணுறவன் சதியேனு 

நொந்துக்கிட்டு வாழுறான்..



பர்தாவுக்கும்,குர்தாவுக்கும் வித்தியாசம்

தெரியாதவனுக்கு…வோட்காவுக்கும்,ஒயினுக்கும் 

வித்தியாசம் தெரியவா போகுது..?




தவறென்று தெரிந்தும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு

வாழ்ந்து..பாரில் பீர் கூலிங் இல்லை என்றதும் 

கோபம் வந்தால்..வா..நீயும் என் நண்பனே..





கூரில்லாத ஆணியாலும்,பீரில்லாத சனியாலும் 

எந்த பயனும் இல்ல..






என்ன சாப்பிடலாம்னு ப்ளான் பண்ணுறதை விட..

எந்த சரக்கடிக்கலாம்னு ப்ளான் பண்ணுவதே 

சனிக்கிழமையின் சிறப்பு... 




வாழ்க்கையை ரசிச்சு ரசிச்சு வாழ வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..வெறுக்க வைக்கிறதும் 

பொண்ணுங்க தான்..#ஹனி பெயர்ச்சி..

Saturday, May 5, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 58




சீன் போடாத பிகர்களும் இல்ல..

சைட் அடிக்காத பசங்களும் இல்ல..






ஆன்ட்டிகள் எனும் அற்புதங்களை நோக்கி 

செல்லும் போது அவமானங்கள் எனும் சிறு கற்கள் 

வரத்தான் செய்யும்..தொடச்சு போட்டு 

போயிக்கிட்டே இருங்க..

#இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா..






அனாசின் போட்டும் போகாத தலை வலி கூட

 RC அடிச்சா போயிடுது..# RC னா ரிலாக்சிங் சிரப் பா..





ஆன்ட்டிகள் அவமானப்படுத்தினால் அதிர்ச்சி அடையாதீர்கள்..

அவள் அரவணைக்கும் காலம் மிக அருகில் என்று 

ஆறுதல் அடையுங்கள்..# ஹர ஓ சாம்பா..







போதை ஆவது சாணியை மிதிப்பது போல..

தண்ணி பட்டா போயிடும்..ஆனா பொண்ணுங்களைக் 

காதலிக்கிறது ஆணி மிதிப்பது போல..

காயம் ஆறினாலும் தழும்பு போறதில்லை..




பெண்களெல்லாம் பேயென்று போதையில் புலம்புவர் 

அரவணைக்கும் ஆன்ட்டி கிடைக்காதவர்..




ஆப்பிளைக் கடிக்கிறது சுலபம்..ஆனா ஆன்ட்டியை 

மடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்...#ஹர ஓ சாம்பா..



நான் என்ற கர்வமும்,எனக்கு என்ற சுயநலமும் அழிவது 

துக்க வீடுகளில் மட்டுமே..# நேற்று நேர்ல  

பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..







மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது.. 

மாதுப்பழக்கம் மன நலத்திற்கு தீங்கானது..#ஹர ஓ சாம்பா..



ஆபிஸ்ல எத்தனை டென்ஷன்,கவலைகள் இருந்தாலும் 

வெளியில வந்து பெண்கள் கூட்டத்தை பார்த்தாலே 

மனசு லேசாகி ஜில்லுனு ஆயிடுது..#நன்றி தேவதைகளே..

Sunday, April 1, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 57







பீட்டர் விடும் பிகருக்காக அரவணைக்கும் 

ஆன்ட்டிய அலட்சியப்படுத்துவது பிராந்தி இருக்கும்போது 

பீர் குடிப்பது போல..






கூட்டத்தோட குடிக்கும்போது பேசுற வார்த்தைகளில் 

கவனம் தேவை..தனியா குடிக்கும்போது கேட்குற 

வார்த்தைகளில் கவனம் தேவை..





வருத்தத்தில் இருக்கும்போது பிராந்தி..

சந்தோஷத்தில விஸ்கி..ரெண்டும் இல்லாம ஒரு 

வித காண்டா இருக்கும் போது பீர்..#எத்தனை…?






சரக்கு - INPUT ஒண்ணு..சந்தோசம்,துக்கம்,அழுகை,

கோபம் னு வகை வகையா OUTPUT..

# ஒண்ணுமே புரியல போ..






வானவில்லும்,வாந்தியும் சில நிமிடங்கள் வந்தாலும் 

எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்குது..# சோடா 

ஊத்திக்குங்கடானு சொன்னா எவன் கேட்குறான்..

ராவா குடிச்சு ரப்ச்சர் பண்றானுங்க ராஸ்கல்ஸ்..






சரக்கை குடித்து முடிக்க சில நிமிடங்கள் போதும்..

போதையை உணர தாமதமாகும்..காதலை சொல்வதை 

விட நிரூபிக்க நேரமெடுப்பதை போல..






புரிந்துக் கொள்ளாமல் பிரிந்து செல்லும் பிகர்களை பிக்கப் 

செய்வதை விட, அட்ஜஸ்ட் பண்ணி 

அரவணைத்துக்கொள்ளும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்.. 






பிகர்களை விட ஆன்ட்டிகளை நான் அதிகம் 

சிலாகிப்பதன் காரணம்..புது வண்டியை விட சர்விஸ் 

பண்ண வண்டி தான் அதிக மைலேஜ் தரும்..திடீருன்னு 

பிரச்சினை பண்ணாது..எல்லாத்துக்கும் மேல பிரச்சினை 

என்னனு நம்மால யூகிக்க முடியும்..



அதிகாரம் பண்ணி அலைக்கழிக்கும் காதலியை

விட,அனுசரித்துக்கொண்டு அரவணைக்கும் 

ஆன்ட்டியே சிறந்தவள்..#ஹர ஓ சாம்பா..


 
காயங்கள் தராத காதலும் இல்லை..அன்பு காட்டி 

அரவணைக்காத ஆன்ட்டியும் இல்லை..#ஹர ஓ சாம்பா..

Wednesday, February 29, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 56





எல்லாம் சில காலம் என்று தெரிந்தும் மகிழ்ச்சியாக 

இருப்பது RC யிடமும்,ஆன்ட்டியிடமும் மட்டுமே..





மூளை ஒண்ணு நினைக்கும்..உதடுகள் ஒண்ணு பேசும்..

இது காதலில் மட்டும் இல்ல..போதையிலையும் தான்.. 

# ஹர ஓ சாம்பா..




எதுவும் சில காலம் தான்னு கீதை ல சொன்ன போது 

ஒருத்தனும் நம்பலை..போதையில சொல்லும்போது 

வழி மொழியுறானுங்க.. # ஹர ஓ சாம்பா..





வாந்தி என்பது நீ செய்த தவறுக்கு உனக்கு நீயே 

கொடுக்கும் தண்டனை..# பிராண்ட் மாத்தி அடிக்காதனு 

சொன்னா எவன் கேட்குறான்..






அடுத்தவன் பிகரை தட்டி பறிப்பதை விட,ஆதரவின்றி 

தவிக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..





காதலிக்காக காத்திருப்பதை விட , கட்டிங்குக்காக 

காத்திருப்பதே மிக கொடுமையானது..# சரக்கு வாங்க 

போனவனை ஆளைக்காணோம்..



மட்டை ஆன மனிதனுக்கு,சரக்கு காட்டும் சினிமா தான் 

நினைவுகளின் நிஜங்கள்..





கண்களை பார்த்து காதலை கண்டுபிடிக்கிறாங்களோ 

இல்லையோ, சரக்கடிச்சதை கண்டு பிடிச்சுடுறாங்க..

# ஓவரா சிவந்துடுச்சோ





ஆல்கஹால் வாசத்தையும், ஆன்ட்டிகளின் பாசத்தையும் 

மறைக்கவே முடியாது..தாங்கவும் முடியாது..





தேவைப்படுவதை திருடுவதை விட,கேட்டு வாங்குவது 

கேவலமா என்ன..? # அந்த ஆன்ட்டியை இழுத்துக்கிட்டு 

தான் ஓடணும் போல..

Monday, February 13, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 55



உன்னை பார்க்குற பிகரை முதலில் மடக்க பழகு..

பிறகு நீ பார்க்கும் பிகரை..அப்புறம் உன்னை பார்க்காத 

பிகரை கூட மடக்கலாம்..



எந்த சரக்கையும் வெறுத்துடாதீங்க..சில சரக்கு போதை 

தந்தால்,சில புத்தியைத் தரும்..# மட்டி சரக்கு 

போல.. ஒத்துக்கல..



உன் தோழியை பார்த்ததும் உன் பக்கத்தில நெருக்கமா 

உட்கார்ந்தா அவ காதலி.உன் காதலியைப் பார்த்ததும் 

புன்னகையுடன் விலகி நடந்தா அவ தோழி.நீ யாரையுமே 

பார்க்காம நடந்தாலும் அங்கே என்ன பார்வைன்னு 

குமட்டில் குத்தினா அவ மனைவி..




ஓவரா குடிப்பேன்னு உதார் விட்டு மட்டை ஆகுறதை விட,

கொஞ்சம் கொஞ்சமா குடிச்சி குஜாலா இருக்குறது 

எவ்வளவோ பரவாயில்லை.



குடிக்கும் வரை உளறாம இரு..குடிச்சதுக்கு அப்புறம் 

உளறிக்கிட்டே இரு..# இல்லைனா மத்தவனுங்க 

அனத்த ஆரம்பிச்சுடுவானுங்க..தாங்காது.




போதை ஆகுறது பெரிய விஷயம் இல்ல..அந்த போதையை 

தக்க வைப்பது தான் சவாலே.#வாந்தி எடுத்துடுறானுங்க 

சின்ன பசங்க.




அழுகையை யார் வேணும்னாலும் தர முடியும்..ஆனா 

ஆறுதலை RC யும், அரவணைப்பை ஆன்ட்டியும் 

மட்டுமே தர முடியும்..




காதல் தோல்வியை எண்ணி கவலைப்பட்டுக்கிட்டே 

இருப்பதை விட , ஆன்ட்டிகளின் அரவணைப்பில் அடைக்கலம் 

புகுவதே சிறந்தது.




பிரச்சினையை சமாளிக்க அடுத்தவனை போட்டுக்

குடுக்குறவனை விட,அமைதியா போயி போதையை 

போடுறவன் பரவாயில்லை..# ஹர ஓ சாம்பா..




ஞானி நிலையை அடைய பிறப்பின் ரகசியம் புரியணும்னு 

அவசியம் இல்ல..பிராந்தி அடிச்சாலே போதும்..

#ஹர ஓ சாம்பா..

Saturday, December 31, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 54




போதை அதிகமானா தான்  புலம்பலும் அதிகம் இருக்கும்..

அலப்பறை அதிகம் ஆனா தான் அடி விழும்..

சலம்பாம குடிங்கடா சனியனுங்களா..




சாப்பாட்டில் கலந்திருக்கும் தீயவைகளை வெளிக்கொணர 

சரக்கு செய்யும் உதவியே வாந்தி..# குடிகார நாயிக்கு 

சரக்கு ஒத்துக்குச்சாம்..சாப்பாடு ஒத்துக்கலையாம்..



பெத்தவங்க,பெரியவங்க சொன்ன போது எல்லாம் 

கேட்காதவன் கூட பிடித்த பெண் சொல்லும்போது 

பூம் பூம் மாடு போல ஆட்டுறான்..மண்டையை..




காதல் உணர்வும்,போதை உணர்வும் மட்டும் தான் 

சம்பந்த பட்டவங்கள மட்டுமில்லாம கூட 

இருக்குறவங்களையும் சேர்த்து பத்திக்குது..




அவமானங்களை சேகரிக்கத் தொடங்கு .. 

ஆன்ட்டிகள் ஆட்டோமெடிக்காக மடங்கும்..





சோலோவா உட்காந்து ஸ்காட்ச் அடிக்கிறதை விட,

பசங்களோட சேர்ந்து சலம்பிக்கிட்டு மாடியில உட்காந்து 

மேன்சன் ஹவுஸ் அடிக்கலாம்..




பூந்தோட்டத்துக்கு போயி ரசிக்கிறவனைக் காட்டிலும் 

சாலையோர பூக்களை ரசிப்பவன் எந்த விதத்தில மட்டம்…?




சாந்தி முகூர்த்தம் நடந்து பொண்ணு வாந்தி எடுத்தா

சந்தோஷப்படுறாங்க..பிராந்தி முகூர்த்தம் நடந்து 

பையன் வாந்தி எடுத்தா வண்டை வண்டையா திட்றாங்க




குடல் பெருத்தவன் எல்லாம் குடிகாரனும் இல்ல..

#மிச்சத்தை நீங்களே தேவைக்கு ஏற்ப போட்டுக்குங்கப்பா…




சரக்கு இல்லாம சனிக்கிழமையை தனிக்கிழமையாய் 

மாற்றுவது பிகர் இல்லா பேஷன் டிவி பார்க்குறது போல..

# ஒரு பயனும் இல்ல..




குடிக்கிற பீரும்,குளிர்ந்து போன குடலும் பேசிக்கிற 

ஒரு அற்புதமான மொழி தான் ஏப்பம்..#ஏவ்வ்வ்வ்…