Showing posts with label அரசியல்.... Show all posts
Showing posts with label அரசியல்.... Show all posts

Friday, May 13, 2011

போய் வாய்யா லூசுக்கிழவா..

ஆத்தாவுக்கு ஒரு அறிமுகம்..

மரண அடி அடிச்சி மண்டையனை விரட்டியாச்சு..

ஆத்தா மறுபடியும் மலை ஏறாம இங்க இருந்து மக்களுக்கு 

நல்லது பண்ணா சந்தோசம்..

எப்படியும் நீங்க கொள்ளை அடிக்கத்தான் போறீங்க..

அப்போ அப்போ மக்களுக்கும் ஏதாவது பண்ணீங்கன்னா 

பொத்திக்கிட்டு போயிடுவோம்..



அந்த லூசுக்கிழவன் தெரிந்தோ தெரியாமலோ ஒண்ணு ரெண்டு 

நல்ல விஷயம் பண்ணி இருக்கான்..

அதை அந்தாளு ஆரம்பிச்சு ஒரே காரணத்துக்காக 

முடக்காம தொடர்ந்தீங்கனா மகிழ்ச்சி..



பழி வாங்கும் படலத்தை அப்புறம் பார்க்கலாம்..

பாவப்பட்ட மக்களுக்கு எதாவது நல்லது பண்ணா 

புண்ணியமா போகும்..



உங்களுக்கு விழுந்த அத்தனை ஓட்டும் உங்களுக்கு ஆதரவு 

மட்டுமே அல்ல..மண்டையனுக்கு எதிர்ப்பு னு உங்களுக்கு 

நல்லாவே தெரியும்.. புரிஞ்சி நடந்துக்குங்க..

இனி தாத்தாவுக்கு சமர்ப்பணம்..


போய் வாய்யா லூசுக்கிழவா..

நீ ஆண்ட கடந்த 5 வருஷத்தை நெனச்சி தமிழ்த்தாயும் 

தேம்பி தேம்பி அழுவா..
மொழி தான் உன்னுடைய மூச்சுன்னு கூவினாய்..

அது கனிமொழி மட்டுமேனு டக்குனு பேச்சு தாவினாய்..




வார்த்தை ஜால வித்தகனே..

வாலில்லா வானரங்களை பெத்தவனே..






பசி காமம் இவை வந்தா வெட்கம்,மானம்,சொரணை உள்ளிட்ட

பத்தும் பறந்து போகும்..

அதை அரசியலிலுள் கடைபிடித்த உனக்கு ராமதாஸே 

சரியான மாற்று ஆகும்..




சாணக்கியத்தனம்னு சொல்லி சாக்கடைத்தனத்தை 

கலந்த சாத்தானே.. 

தோத்த உன் புள்ளை
தில்லாலங்கடி வேலை 

செஞ்சி கடைசியில ஜெயித்தானே..

 

இன்னா செய்தாரை ஒறுத்தார் குறளுக்கு அர்த்தமா 

ஆஸ்பத்திரிக்கு நீ போவ.. 

அதுல சொன்ன ஆட்சிமுறைகள் பற்றிய குறள்களை 

நீ படிக்கலையா ஆக்கங்கெட்ட கூவை..





வயசுக்கு மரியாதை கொடுக்கலாம்னு பார்த்தா..

நீ வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கலையே தாத்தா..






வீட்டுக்கு ரெண்டு ஆடு தர்றாங்களாம் முதல்வரான மேடம்.. 

ஆட்டை கூட்டிக்கிட்டு அப்படியே ஓடும்..



ரெண்டு வீட்டுக்கும் நாலு..கூட கொஞ்சம் கேளு..

நமக்கு கூச்சமெல்லாம் இருக்கா..அதானே..

அதை வச்சிக்கிட்டு இருக்க உமக்கு என்ன கிறுக்கா..



அசைக்க முடியாதுன்னு நெனச்ச அமைச்சர்களின் 


ஆணிவேரேல்லாம் ஆடி போயிடுச்சே.. 

கொடுத்த காசுக்கு மேல கூவுன குரங்கு கூட்டம் 

எல்லாம் ஓடி போயிடுச்சே....

 


தோற்கடிச்ச காண்டுல மறுபடியும் எழுத ஆரம்பிக்காதீரும் 
 
பாடாவதி படங்களுக்கு கதை வசனம்..



அப்புறம் வேற வழியில்லாம நாங்க உன்னை கடலில் தான் வீசணும்..





 


அண்ணா சொன்னது கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு.. 
 
களவாணித்தனமாக நீ சொன்னது உறவு,ஊழல்,உஷாரு..





உறவுகள் தான் முக்கியம்னு உரைத்தாய் வலுவா..

அவனுங்க சீக்கிரமே உன்னை அனுப்பி வைப்பாங்க 

ரொம்ப சுளுவா.. ( ஈஸியா..)
 


போய் வாய்யா லூசுக்கிழவா.. 

அடுத்த பிறவியிலாவது நல்ல அரசியல்வாதியா..
 



வேணாம்.. நல்ல மனுஷனா திருந்தி வா..

Friday, April 29, 2011

விளம்பர இடைவேளை..

படங்கள் மின்னஞ்சலில் வந்தது..

அதோட என்னோட வழக்கமான குசும்பையும் சேர்த்து.. 

இதோ உங்களுக்காக..


இவங்க வாழ்வில் மட்டும் தான் இனி மலரும்.. 

காலம் போற வயசுல மக்களுக்கு பால் ஊத்திட்டு

கெழவனுக்கு காப்பி ஒரு கேடா..  

அக்காவும் , தங்கச்சி அக்காவும்.. 

ரெண்டையும் பார்த்தா குருவாயூர் கோவில்ல அலங்காரம் 

பண்ண அந்த யானைகள் ஞாபகம்  வருவதை தவிர்க்க முடியலை..

 
இவரு பேரு தான் மரு.டோமதாஸ். 

மரங்களை வெட்டி பேர் பெற்றவர் மரம் நட சொல்றாருப்பா..

 எவன் ஆட்சி வந்தாலும் என் புள்ளைக்கு மந்திரி பதவின்னு 

நல்லா வித்தை காட்டுவாரு..இந்த பொழப்புக்கு கவுரவமா 

வெள்ளை கலரு வட்ட மாத்திரை கொடுத்து பொழைக்கலாம்..

பொட்டிக்கடைல கடன் சொன்னது..

பீடியை திருடிக் குடிச்சது..சந்தையில கருப்பட்டியை 

நக்கிட்டு ஓடுனதுன்னு எல்லா கும்பலும் " கை " கோர்த்து 

இருக்குற இடம்.. எவன் எந்திரிச்சாலும் வேட்டியை உருவ 

ஒரு கும்பலே காத்திருக்கும்..


நம்ம ஊருல ஒலக அரசியல் தெரிஞ்ச ஒரே ஆள்.. 

ரோமாபுரியிலே , எகிப்திலே , மூத்திர சந்திலேன்னு இவர் வாய்

தொறந்து பேச ஆரம்பிச்சாலே அவன் அவனுக்கு 

அர்ஜென்ட்டா வந்துடும்..பேசி பேசி வீணாப்போன வீரர்..


இவரை தெரியாதா..

இவர் தாங்க விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு குரு.. 

டைட்டானிக் கப்பலை கவிழ்த்ததே கலைஞரும் 

அவாளோட கூட்டணிக்கட்சிகளும்னு கண்டுபிடிச்ச 

அரசியல் டூமா கோலி இவர் தானே..


ஓ..இவர் நம்ம ஊரு அரசியல்வியாதியா..

அது சரி எவன் தும்மினாலும் இவங்க தானே கர்சீப் மாதிரி 

அசிங்கமாகி நிக்கிறாங்க..தனக்கென இருந்த 

தனித்தன்மையை இழந்துட்டு இன்னைக்கு கை ஏந்தி நிக்கிற 

கேவலமான நிலைமை..


ஹே..இவரை பத்தி தெளிவா தெரியணும்னா நீ 

பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் போய் கேட்கணும்..

கப்பல்ல இருந்தா மட்டும் கேப்டன் இல்லடா..

கருப்பா இருந்தாலும் கேப்டன் தான்டா.. 

குடி குடியை கெடுக்கும்னு சொன்னது.. 

குடும்பம் இருந்தா குடிக்க முடியாது 

அப்படிங்கற அர்த்தத்தில..

பிரம்மச்சாரியா இருங்க..போதையில குளிங்க..

Friday, March 18, 2011

அன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு..

அன்புள்ள முதல்வர் அய்யாவுக்கு , 

அடங்காத ஆர்வக்கோளாறு எழுதுவது..



நம் நாட்டில் பெட்ரோலின் விலை என்ன ?

நாதாரிகள் சேர்ந்து சுருட்டிய ஸ்பெக்ட்ரம் 

ஊழலின் நிலை என்ன ? 





அத்தனையும் கூட்டா முழுங்கிட்டு நீங்க 

கோர்த்துவிட்ட அந்த 

ஆடு ஆ.ராசா வின் கதி என்ன ?

கண்ணாளனை இழந்து தவிக்கும் காதலி 

கனியின் கதை என்ன ? 





சாம்பார் வைக்க முடியாம சங்கடப்படுத்தும் 

வெங்காயத்தின் விலை என்ன ?

கொஞ்சம் கூட சொரணையே இல்லாம சீட்டுக்கு

சண்டை போடும் உங்க கூட்டணியின் நிலை என்ன ?





அப்படி இப்படின்னு மூணு சீட்டுல முடிஞ்சதா உங்க சண்டை ?

எல்லாத்தையும் பார்த்துகிட்டு உங்களுக்கு 

ஓட்டு போட்டா நாங்க தாங்க கேனை ____ .





கையோட சூரியன் சேர்ந்து தவிப்பதை விட..

இலையோட சேர்ந்து ஆட்சி அமைச்சா 

நாடே சொல்லும் அட..




ஏற்காட்டின் எகத்தாளமும் , கொடநாட்டின் 

கொழுப்பும் சேர்த்து வந்தா..

தமிழ்நாட்டு மக்களோட நிலைமை கோ விந்தா…




அரசியலில் யாரு உன்னை போல ராஜ தந்திரி..?

எங்க தாலி அறுத்தது போதும் முதல்வர் 

நாற்காலியை விட்டு முதலில் எந்திரி..



நீ பெற்றால் மட்டும் மட்டும் தான் அது பிள்ளையா..?

உங்க ஆட்சியில மக்களுக்கு எப்பவுமே

தீராத தொல்லை யா..





தேர்தல் நேரத்தில் மட்டுமே உமக்கு 

தமிழ்ப்பற்று வருமா..?

மேடையில் முழக்கமிட்டு கூட்டணியில்

மானங்கெட்டு நிற்பார் சிறுத்தை திருமா..





ஆறாவது முறை முதல்வராக ஆசைப்படும் தாத்தா..

இந்த அகிலமே அழும் தமிழ்நாட்டு மக்கள் 

நிலைமையை பாத்தா..




வழக்கம் போல வைத்திருப்பாயே ஜெயிக்க

பல ரூட்டு..

மக்களை விட நீ அதிகம் நம்புவது காந்தி

தாத்தா நோட்டு..





இந்த தேர்தலில் உன் துருப்புசீட்டு இலவசம்..

அதற்கு மயங்காதவர் போவர் இலை வசம்..

உங்க ரெண்டு பேரிடமும் மாட்டிகொண்டு 

தமிழ்நாட்டில் வாழ்வதை விட போகலாம் 

ஆழியின் அலை வசம்..



வயதானால் அனுபவம் கூடி அன்பும் கூடுமாம்..

உனக்கு மட்டும் ஏனோ ஆசை கூடி எங்களுக்கு

அவஸ்தை கூடுது..


 
மறக்காதீர்கள் தலைவரே..

நாங்களும் ஒரே உயிரே..



அன்புள்ள முதல்வருக்கு , ஆப்பு ஒண்ணு காத்திருக்கு..


Wednesday, March 2, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 5

கட்டு மரமாய் நான் மிதப்பேன்னு 

சொன்னீங்களே தாத்தா...எதுக்கு…

சக தமிழர்களின் சடலங்களை கரைக்கு

கொண்டு வரவா..?






நம்ம மாநிலத்தில அதிகமா 

குடிசைகளில் வாழ்வது 

மீனவர்களும் கூலித்தொழிலாளிகளும் தான்..

 

தமிழக பட்ஜெட்டில் 2250 கோடி ரூபாய் 

கலைஞரின் இலவச வீடு 

திட்டத்துக்கு ஒதுக்கீடு.... 

சிங்கார சென்னையா மாத்துறோம்னு 

கூலிதொழிலாளிகளை கூண்டோடு ஊருக்கு

வெளியில தள்ளியாச்சு... இப்போ மீனவர்களை

மொத்தமா அழிக்க ப்ராஜெக்ட் ப்ராசெஸ்ல

இருக்கு...திட்டம் போட்டு அந்த குடும்பங்களை

அழிச்சிகிட்டே யாருக்குயா வீடி கட்டி 

கொடுக்கப்போற...

கேக்குறவன் கேனையா இருந்தா 

இலியானாவுக்கு இடுப்பு 

இருக்குன்னு சொல்லுவ..






கடல்ல போயி ஓட்டு மொத்த 

பிணங்களையும் பத்திரமா கரைக்கு

கொண்டு வரவா..? இல்லை அதை 

எவனாவது எதிர்த்து கேள்வி கேட்டா  

அவனை போட்டு தள்ளவா..? 

இல்லை அரசியல்வாதிகள் போற அவங்க

சின்ன வீட்டுக்கு கூட பந்தோபஸ்து 

ஏற்பாடு பண்ணவா...? இல்லை

காவல்துறையினரின் குடும்பத்துக்கு 

ஏதாவது நல்லது செய்யவா..?

எதுக்கையா காவல் துறைக்கு 3239 கோடி

ரூபாய் ஒதுக்கீடு.. 

உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு 

அளவே இல்லையா தாத்தா...







Friday, February 18, 2011

லூசுக் கிழவனின் லுச்சாதனங்கள் ..

திருட்டு ரயிலேரியத் திருடனே..!

திரைஉலகை வைத்து தீராது 

திருகல் தரும் தில்லாலங்கடியே...!

மூன்று  மணம் புரிந்த மூதேவியே..!





மனைவி , துணைவி என்று 

வார்த்தையில் விளையாடும் வல்லூறே…
 
நீ இருக்கும் வரை தமிழ்நாடு 

ஆகாது நல்லூரே….

௨ன் ஆண்டும் ( வாழ்நாள் )

முடியவில்லை
நீ ஆண்டும் எங்களால் முடியவில்லை,

நீ வேண்டுமென்று நாங்கள் 

விரும்பவில்லை,
உன் ஆட்சியில்..மீன் பிடிக்க 

சென்றவனும் வீடு திரும்பவில்லை…






அகழியில்விழுந்தவனும்,
 
௨ன் அரசியல் வலையில் 

விழுந்தவனும்

கரைக் கண்டதில்லை...!


தமிழ்தான் தான் எனது 

மூச்சு என்றாய்…

ஆனால் அண்டை நாட்டிடமும் ,

இத்தாலி அன்னையிடமும்

கையேந்தி வாங்கி தின்றாய்…







தினம் தினம் கேட்குது 

மக்களின் கூப்பாடு…
குண்டு துளைத்த உடலுக்கு

சமர்ப்பணமாகுமோ

௨ன் ஒருவேளைச் சாப்பாடு

(கேட்டா உண்ணாவிரதமாம்)…!





பறவைகள் தங்க அவைகள் 

கட்டிக்கொள்ளும் கூடு,

௨ன் பதவித்தங்க நீ கட்டுவாய்

( படம் காட்டுவாய் ) பல வீடு...!





மதுரையை ஆண்ட மன்னரேல்லாம்

முன்னரே மாண்டு விட்டனர்

இருந்திருந்தால் மீண்டும் மாய்த்திருக்க

வேண்டும் உன் மகனால்...!



உன் அப்பாடக்கர் மகனின் பெயரோ

ஸ்டாலின்” 

ஆனால் தமிழில் பெயரிட

வேண்டுமென்கிறாய் திரைஉலகை,

இதில் என்னய்யா உனக்கு உவகை…



தள்ளாத முதுமையிலும் எழுதுகிறாய்

படங்களுக்கு கதை வசனம்…
விலைவாசியை பற்றியோ…

விகாரமாய் கொள்ளப்படும் மக்களை

பற்றியோ என்றாவது நீ பட்டதுண்டா விசனம்…

நாலு பேருக்கு நல்லது செய்வாய் 

என்று பார்த்தால்… 

நாட்டை நாலு துண்டாக்கி 

வாரிசுகளுக்கு கணக்கை தீர்த்தாய்…

வைத்திருக்கிறாய்

துணைக்கு மீடியா…

ஆப்பு வைத்தாலே 

உனக்கு ராடியா…







மகளுக்கும் மன்னனுக்கும் கனெக்ஷன்…

இந்த  மானங்கெட்டவனுக்கோ பல 

கோடி ரூபாய் கலெக்ஷன்…





மலை அளவு பிரச்சினை என்றாலும் ,

மக்கள் உயிர் போகும் பிரச்சினை 

என்றாலும்…

சளைக்காமல் நீ அடிப்பாய்

சிங்குக்கு தந்தி…

மதி இழந்த மனித உருவில் 

திரியும் நீ ஒரு மலை மந்தி ( குரங்கு )…





மறைந்தாலும் வாழ்பவர் உலகிலுண்டு,

நீ வீழ்ந்தாலும் உன் கிளையிலிருந்து

முளைக்கும் பல விஷக்கன்று...!
(துண்டாய்ப் போகும் தமிழ்நாடு)


ஒரே ஒரு உதவி செய்யுங்கள்…
உண்மை தலைவர்களை ஆள விடுங்கள்…
தமிழ்நாட்டு மக்களை வாழ விடுங்கள்…



( ஆனா…எவன் இங்க

உண்மையானவன்னு

தெரியலையே…)

ஆக்கத்தில் உதவி : கவிஞர் கோபிநாத்