Showing posts with label காலேஜ் கானா... Show all posts
Showing posts with label காலேஜ் கானா... Show all posts

Sunday, December 18, 2011

என் ஆருயிரே நீ...


இது நான் 2005  ல காலேஜ் படிக்கும் போது எனக்கு 

வரப்போற மனைவியைப் பத்தி எழுதி பஸ்ல பாடிய பாட்டு..

இன்னைக்கு பதிவா போடுறேன்.. 

( ஆனா ட்யூன் சத்தியமா சுட்டது தான்..)




என் ஆருயிரே நீ..
என் கண்கள் காட்டிய காரிகையே..
என் தூயவளே நீ..
என் உயிரை பார்வையில் கொன்றாயே..

என் புன்னகையே நீ..
என் கனவை கலைத்து சென்ற பெண்ணே..
உயிர் காதலியே நீ..
என் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவுகளே..

நீ கோபமாய் பார்த்தாய்..
என் உள்ளம் பற்றி எரிகிறதே..
நீ புன்னகை பூத்தால்..
அது அமைதியாய் அடங்கி போய்விடுமே..

என்னோடு நீ கொண்ட கோபம்..
குழந்தையின் மீது ஒரு தாய் கொண்டது..
நான் எங்கு சென்றாலும்..
என் சொர்க்கம் உந்தன் மடி தானே..

உன் பூ முகம் பார்த்தால்..
என் மனம் இங்கு துள்ளுது குழந்தை போல..
நீ சம்மதம் சொன்னால்..
உன் காலடியில் நான் கிடப்பேனே..

இந்த மவுனம் வேண்டாம்..
என்னை புரிந்து கொள் என் காதலியே..
நீ என்னுடன் இருந்தால்..
இந்த உலகில் வேறேதும் வேண்டாமே..


நீ என்னுடன் பழகினாய்..
நான் முழுவதும் இன்று மாறிவிட்டேன்..
நீ உன்னைத்தந்தால்..
என் உயிரில் வைத்தே பார்த்துக்கொள்வேன்..

விரைவில் உன்னிடம் வருவேன்..
உந்தன் பிரிவு எனக்கு சித்ரவதை..
வந்து உன்னை அடைவேன்..
என் மெக்கா உந்தன்  மனம் தானே..

என் தேவதையே நீ..
உன்னை பார்த்த பின்பு நான் மோட்சம் பெற்றேன்.. 
என் வானவில்லே நீ...
உன் தாவணி தீண்டலில் தீட்சை பெற்றேன்..

என் ரத்த ஓட்டம் நீ..
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் உன்னைக்காண்கிறேன்..
என் சுவாசக்காற்றும் நீ..
இரு நுரையீரல் முழுவதும் உந்தன்  வாசம் வீசுதே.. 



ஏன் பேச மறுக்கிறாய்..
என் நெஞ்சில் காதலின் தீபத்தை ஏற்றி விட்டு..
தலைக்குனிந்து நடக்கிறாய்..
என்னைக்கண்ட வெட்கமா இல்லை தயக்கமா..

நீ என்னோடு பேசிய

முதல் நிமிடம் என்றும் நகராது..
நீ என்னைப்பிரிந்தாலும்..
என் காதல் என்றும் குறையாது..

உன்னைப்பார்த்த நொடி முதல்..

நீ என்னுடன் இரண்டறக் கலந்துவிட்டாய்..
உன் விழிகளைக்கண்டேன்..
நான் பிறந்ததன் அர்த்தம் புரிந்ததடி..

உன் பார்வையில் படவே..

உன் பக்கத்தில் வந்து நிற்கிறேனே..
உன் கை விரல் பட்டால்..
நான் காற்றில் கலந்தே போவேனே..

அல்ஜீப்ரா கூட ..

எனக்குப்புரிந்து விடும் போலிருக்கிறது..
நீ விழிகளால் பேசும்..
இந்த பார்வைகளின் அர்த்தம் புரியவில்லை..

அடி பெண்ணே போதும்..

நீ கண்களால் காதலை வளர்த்து விட்டது..
வாய் திறந்து ஒருமுறை..
சொல்..என் அச்சம் நீங்கி மகிழ்ச்சிக்கொள்வேன்..

Sunday, May 1, 2011

திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..(காலேஜ் கானா.. )

திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..

திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..

அழகு பொண்ணே..அனிதா..

உன் பின்னாலேயே அலையுறேனே..

எனக்கு ஒரு முத்தம் தா..

தாலிக்கட்டி நான் கூட்டிப்போறேன்..

டவுரி உனக்கு நானே தாரேன்..

சிரிச்சி பேசும் சிலையே..

உன்மேல நான் கொண்ட காதலுக்கு..

ஏது இங்க விலையே..


கண்டு சொன்னான் கவிஞன் அன்றே..

பெண்கள் செய்தால் தீதும் நன்றே..

நீ தேவதையின் மகளா..

இல்ல தேவலோக ரம்பையை எடுத்து..

செய்து வைத்த நகலா..


அழகுல அவ கிளியோபாட்ரா..

சிரிப்பினில் என்னை புரட்டிப்போட்றா..

என் உசுருக்குள்ள நீயே..

இப்போ உன்னால நான் உறைஞ்சு நிக்கிறேன்..

உயிர் கொடு தீயே..

கோபப்பட்டா கண்களில் மிர்ச்சி..

கொஞ்சி பேசி என்னை குளிரவும் வச்சி..

ஓரக்கண்ணில் நீ பார்த்தா..

அடி மூர்ச்சையாகி விழுந்த என்னுள் நீ..

கலந்துட்ட மூச்சு காத்தா..


என்கிட்டே நீ பேசவும் மாட்ற..

மனசுக்குள்ள காதலை பூட்ற..

உனக்கு இன்னும் ஏன்டி தயக்கம்..

நீ ஒதுங்கி ஒதுங்கி போறதால தான்

உன்மேல ஒரு மயக்கம்..


மரணமில்லா வாழ்க்கைக்கு அமுதம்..

தேவை இல்லை உன் அருகாமை போதும்..

பொண்ணு கேட்டு வரவா..

என் ஆயுளோட மீதி நாட்களை

உனக்காகவே தரவா..


Friday, March 11, 2011

பஸ்ல படம் போட்ட என்னோட காலேஜ் கானா

பக்கத்து வீட்டு நிர்மலா..

உன்னை மயக்கியது என்கண்களா

மனசுக்குள்ள என்னை நீயும் விரும்புற

நான் ஆசையோடு பக்கம் வந்தா ஒதுங்குற



அடுத்த வீட்டு தேவியே

உன்னை பார்க்காதவன் பாவியே
 
என் இதயத்துக்கு நீ தாண்டி சாவியே

என்னை கட்டிகிலேன்னா போடுவேன் நான் காவியே



அடியே பொண்ணு ரேவதி

என் உசுருல பாதி நீ

ரெண்டு பெரும் பீச்சுக்கு தான் போவோமா

நானும் கெஞ்சுறனே  நாலு நாளா பாவமா





வாடி யம்மா வளர்மதி

அழகுல நீ முழு மதி

படத்துக்கு தான் போய் வருவோம் ஜாலியா

உன்னால ஆயிடுச்சே என் பர்சு காலியா


மாடி வீட்டு மாலா வா

நான் நிக்குறேண்டி சோலோ வா

என் கூட பார்க்குக்கு  நீயும் கொஞ்சம் கூலா வா

உனக்கு பிடிச்ச கூல் ட்ரின்க் என்ன coca cola வா



எதிர் வீட்டு ஹேமா

நீ வாசலுக்கு வாம்மா

ஆசையோடு காத்திருக்கேன் உன் மாமா

அடி..கொஞ்ச நேரம் கொஞ்சி பேசுவோமா



கொடி இடையாள் வள்ளி

என் மனசு சுத்த வெள்ளி

சிரிப்பால் என்னை மயக்குறியே கள்ளி

உன்னை சீண்டி நானும் பார்க்கவாடி கிள்ளி





கோடி வீட்டு சுந்தரி..

நீ சீக்கிரமா எந்திரி..

காலேஜுக்கு போறியே நீ பஸ்சுல..

உன்னை பைக்ல நான் ட்ராப் பண்ணவா லஸ் ல..



புதுப்பொண்ணே  மோகனா

நான் உன்னை மறந்தே போவனா


பளபளப்பா இருக்குது உன் கன்னம்






உன்னை காதலிப்பது மட்டும் தாண்டி என் எண்ணம்



எங்கடி உங்கக்கா ப்ரியா..

இன்னிக்கு அவ ப்ரீயா..

நம்ம தெருவுலேயே இருக்கா நல்ல அழகா..

அவ ரொம்ப ரொம்ப ஜாலி தாண்டி பழக..



தங்க தாரகை தாரா..

அவ தனியாக போறா…

அழகுல அவள் ஒரு மணிப்புறா…

நான் வேற பொண்ணு கூட பேசினாக்கா முறைக்குறா..



தாவணி போட்ட தீபா..

ஒரு மாதிரியா என்னை பார்ப்பா..

அந்த பார்வையில மயங்கி நின்னேன் நானு..

எனக்கு பிரச்சனைனா அது அவ அண்ணன் சீனு..


 
அய்யர் வீட்டு அழகே காயத்ரி..

மாடிக்கு வா நீ ராத்திரி..

உன்னோட பார்வையில் நான் உருக..

ரொம்ப ஆசை படுறேன் உன் இதழ்களை  பருக…



கண்ணே கலைவாணி..

கோவிலுக்கு வா நீ..

கிடைக்காதா எனக்கு உன் தரிசனம்…

அன்பே காட்டு நீயும் என் மேல கரிசனம்…


 
மானே மணி மேகலை..

நான் உன்னை வெறுத்து போகலை..

காத்திருக்க சொன்னியேடி என்ன..

உன்னை எதிர் பார்த்தே நானும் அங்க நின்னேன்..



ஆனா நீ  கடைசி வரைக்கும் வரல..

நானும் நம்பிக்கையை விடல..

உனக்கு என்ன ஆச்சோ மணி இப்போ பத்தரை..

உன்னை நெனச்சி எனக்கு வரலயேடி நித்திரை…




பச்சை சுடிதாரு பத்மினி..

என்னை கட்டி புடிச்சிக்கோ சேர்த்து நீ..

பெண்களிலே நீ தாண்டி சிறப்பு…

நீ தேவலோக ரம்பையின் மறுபிறப்பு…

பச்சை கிளி பாத்திமா..

பஸ் ஸ்டாப்பில் உன்னை பார்த்தேன்மா..

மகுடி கண்ட பாம்பு போல் நான் மயங்குறேன்…

உன் பக்கம் வந்து பேச நானும் தயங்குறேன்…



அதுக்கு காரணம் உன் status..

நீ பணக்கார வீட்டு lotus…

ஒரு தடவ என்னை பார்த்து சிரிடி..

உன்னை இழுத்துக்கிட்டு ஓட நானும் ரெடி டி…




அழகு பொண்ணு அனிதா…

என்னை அலையவிட்டு பார்த்தா..

கொடைக்கானல் கூட்டிட்டு போக சொன்னா..

என்னை கொலை வெறியோடு தேடுறான் அவ அண்ணா..



மச்சி..நான் சொல்லுறதை நம்பு..

இந்த பொண்ணுங்க னாலே வம்பு..

திருவண்ணாமலை சுத்தினா அது கிரிவலம்..

இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தினா அது கேவலம்…




கண்ணுக்கு வெப்பாளுங்க கண் மை..

அவளுங்க பேச்சில இல்ல உண்மை…

தயவு செய்து நம்பிடாத பொண்ண.

உன்னை குழில தள்ளி மூடிடுவா மண்ணை…




படிக்க வச்ச தாய் தந்தையை நேசி நீ…

சுடிதார் , ஜீன்ஸ் எல்லாம் துடிக்க வைக்கும் யோசி நீ..

அரசர்கள் அன்று போனாங்க நகர்வலம்..

மச்சி..நாம இன்னைக்கு போறதெல்லாம் பிகர்வலம்..



 
நாமதான் பொண்ணுங்க பின்னாடி வருவோம்..

அவ மரணத்தின் மறு உருவம்..

காதல் னா கண் கட்டி வித்தை..

அவளுக்கு செலவு பண்ண அழிக்கணும் ங்கொப்பன் சொத்தை…



ராமனும் ஒடச்சானே வில்லை..

அப்புறம் நிம்மதியே இல்லை..

அவன் பட்ட துன்பத்துக்கு ஏது எல்லை..

மச்சான்..கல்யாணம்னா எப்பவும் படு தொல்லை...




So , Friends Avoid the Marriage…

Life ல இல்ல Damage..

So that we can live very Happy..

Beware of Beautiful baby..




 

Tuesday, December 28, 2010

தீமிதி திருவிழாவும்..திருட்டுத்தனமும்..திடீர் தேவதையும்..

இதெயெல்லாம் மறுபடியும்

நினைத்து பார்க்கும்போது..

கொஞ்சம் ஜில்லுனு 

தாங்க இருக்கு...


வருஷா வருஷம் என்னோட

அத்தை ஊருல

( மயிலாடுதுறை பக்கத்துல..)

அய்யனார் கோவில் தீமிதி நடக்கும்..

சில வருஷம் முன்னாடி 

வரைக்கும் தவறாம போயிடுவேன்..

அந்த காவிரி கரை ஓரம் பொண்ணுங்க

குளிச்சி வர்ற அழகே தனி..


எனக்கு கொஞ்சம் வாய் கொழுப்பு 

அதிகம்ங்றதால கொஞ்ச நேரம் 

பேசினாலே  சீக்கிரம் பொண்ணுங்களுக்கு

என்னை பிடிச்சி போயிடும்..

(ஆனா எவளுமே வந்து பேச மாட்றா..

என் மூஞ்சி அப்படி..நெத்தியிலேயே

இவன் சரியான தப்பானவன்னு 

( அயோக்கியன் ) எழுதி 

இருக்கும் போல..)




இருந்தாலும்..தனது முயற்சியில்

சற்றும் மனம் தளராத

மானங்கெட்டவன் ( நான் தான் )

பெண்களின் பின்னால் செல்வதை 

தொடர்ந்து கொண்டு இருந்தான்..




தீமிதி அன்னைக்கு முதல் வாரம்.. 

ஊர் பசங்க எல்லாம் ஒண்ணு கூடி..

தோரணம் கட்றது..

போடுறது ( சில பேரு மட்டும் பந்தல் )

னு கொஞ்சம் பிசியா இருந்தோம்..




அப்போ... ஆரஞ்சு நிற தாவணி

போட்டு..அந்த பொண்ணு..அவளை 

அப்போ தான் முதல் முறையா

நான் பார்க்குறேன்..அவளும் என்னை

போலவே யாராவது சொந்தகாரங்க 

வீட்டுக்கு வந்து இருப்பாள்னு..




பசங்க கிட்ட "மச்சி..யார்ரா 

அது னு கேட்டா"..அவனுங்க உடனே

ஓவரா ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க..

அப்புறம் ஒருவழியா.. அந்த பொண்ணோட

ஊரு மட்டும் சொன்னானுங்க.. முதல்

பார்வையிலேயே மனசு முழுக்க 

அவ வந்து உக்காந்துட்டா...




அப்புறம் அன்னைக்கு நைட்டு 

பூரா அவ தெருவுல 

தானே இருந்தேன்...

அவ கிட்ட பேரு என்னனு

கேட்க போனா..

அவங்க அப்பன்னு நெனைக்கிறேன்..

அந்த ஆளு யாரோ திருடன்னு ..

கம்ப தூக்கிகிட்டு வந்துட்டான்..

( ராத்திரி ஒண்ணே கால் மணிக்கு

அவங்க வீட்டு கொல்லைபுறம்

பக்கம் போனா..அப்படி தான் 

நினைப்பாங்களோ..) அந்த ஆளு 

கிட்ட மாட்டாம எஸ் ஆகி பசங்க

கூட்டத்துல கலக்குறதுக்குள்ள.. 

நாலு விஜய் படம் தொடர்ந்து 

பார்த்தா மாதிரி நாக்கு தள்ளிருச்சு...

அதுக்கு அப்புறம் ரெண்டு நாள்ல

அவளும் என்னை பார்க்க ஆரம்பிச்சிட்டா..

( வேற வழி..யார்ரா இவன்..

வில்லன்னுங்களை கண்ட விஜய்

மாதிரி இவ்வளவு வெறியோட 

பார்க்குறான்னு நெனச்சி இருப்பா போல..)



அதுக்கு பிறகு நடந்தது எல்லாம்..

(நாட்டுப்புற பாட்டு மாதிரி

மூணு வருஷம் முன்னாடி

முயற்சி பண்ணியது..)




கழி எடுக்க போகையில நான்

கன்னி பொண்ணு ஒண்ணை கண்டேனே..

காவல் வேலி ஓரம் நின்னு அந்த

கன்னி பொண்ணு பேரை கேட்டேனே..

அந்த பக்கம் வந்த அவ அப்பன்

எங்க ரெண்டு பேரையும் பார்த்தானே ..

தொரட்டி கம்பை எடுத்துகிட்டு 

என்னை தொரத்தி தொரத்தி வந்தானே...




சனிக்கிழமை சந்தையில என் 

தேவதையை நான் கண்டேனே..

என்னை பார்த்ததுமே அவ வெட்கப்பட்டு

மாயமா மறைஞ்சி போனாளே..

வளையல் மணி கடையினிலே 

வஞ்சி அவளை கண்டேனே..

ஆசைப்பட்டு நானும் வாங்கி 

தந்தேன்..அதை

வாங்க மறுத்து போனாளே...




மனசு வலிச்சி நின்னு இருந்தேன்..

அந்த மயிலு அப்போ வந்தாளே..

சந்தையில என் அக்கா இருந்தா..

என்னை மன்னிச்சுக்குங்கனு சொன்னாளே..



நான் வாங்கி தந்த..

வளையல் மணி போட்டுக்கிட்டு ..

அவ திருவிழாக்கும் வந்தாளே..

அந்த வளையல் மணி ஓசையிலே 

என் மனசு குலுங்க கண்டேனே..

பாவாடை தாவணியில் ஒரு 

பட்டாம் பூச்சியை பார்த்தேனே..

அவ இமைகள் ரெண்டும் படபடக்க..

அவ பார்வையில் நான் துடி துடிக்க..




ஊரு கூடி தேரிழுக்கும் போதும் 

பதுமை அவளை பார்த்தேனே..

தேர் இழுக்கும் போதே அவ என் 

மனசை சேர்த்து இழுத்தாளே..

பார்வைகளிலேயே பேசிகிட்டோம்...

நாங்க காதல் பாடம் கத்துகிட்டோம்..

சாதி சனம் எல்லாம் சுத்தி நிக்க...

நானோ அவ அழகுல 

சொக்கி நின்னேன்...




அய்யனாரு கோவிலுக்கு அவ 

பொங்கல் வைக்க வந்தாளே...

கோவிலுக்குள்ளே ஒளிஞ்சிருந்து

நானும் அவளை பார்த்து ரசிச்சேனே ..

ஒரு மறைவில் என்னை பார்த்துப்புட்டா..

என்னை பார்த்தஉடன்  மேனி வேர்த்துபுட்டா..

என் பார்வைகளால் அவ வெட்கப்பட்டா..

அவ நாணத்தில் நானும் புத்திகெட்டேன்  ..




ஆத்தங்கரைக்கு  என்னை வர சொல்லி...

சேதி சொன்னா என் தேவக்கன்னி...

ஆத்தங்கரையிலே காத்து இருந்தேன்..

அவ வருகையை எதிர் பார்த்திருந்தேன்...



அப்போ சுடிதாரில் வந்தா.. சூரியனா..

இவ பகலில் ஜொலிக்கும் விண்மீனா..?

இனிக்க இனிக்க பேசினா..

மோகப்பார்வைகள் வீசினா..



இவ வானத்தில் இருந்து வந்த பெண்ணா...??

எங்க ரெண்டு உசுருமே ஆச்சு ஒண்ணா...

இவளுக்கு ஒப்பிடலாம் அந்த வான வில்லை...

இனி இவ இல்லாம நானும் இல்லை..

இனி இவ இல்லாம நானும் இல்லை..

இனி இவ இல்லாம நானும் இல்லை..

 


மார்கழி குளிரா இல்ல வேற 

ஏதாவது எழவா னு தெரியலை..


பொண்ணுங்களை தவிர வேற

எதையுமே என்னால யோசிக்க முடியல..


அதனால தான் இப்படி பழசை

எல்லாம் தூசி தட்டி

எழுத வேண்டி இருக்கு...



எல்லாம் ஒரு கணக்கு தான்...

( யாராவது பொண்ணுங்க இத

எல்லாம் படிச்சிட்டு......

ஹ்ம்ம்...)