Showing posts with label அலு (ழு ) வலகம். Show all posts
Showing posts with label அலு (ழு ) வலகம். Show all posts
Tuesday, May 7, 2013
Tuesday, March 27, 2012
அப்ரைசல் பூதம்.. நெருங்கி வருது..
எல்லா கம்பெனிகளிலும் இன்னும் ஒரு மாசத்துக்கு களேபரம் தான்..
இனிமே டாஸ்மாக்ல இன்னும் கல்லா கட்டும்.. எப்படியும்
எதிர்பார்க்கிறதை விட கம்மியா தான் அப்ரைசல் போடுவானுங்க...
அது எப்படி தான் வருஷம் பூரா வேலையே பார்க்காம அப்ரைசல்
பீரியட் ல மட்டும் எதிர்பார்ப்பானுங்களோ தெரியல..
சரி..இனி அப்படியே கொஞ்சம் வேகமா,சுருக்கமா
என்னோட புலம்பல்கள்..
PERFORMANCE APPRAISAL..போடப்போற நாமத்துக்கு
புதுப்பெயர்..போங்கடா புண்ணாக்கு ரங்கனுன்களா..
நாங்கள் அப்படி செய்தோம்..நாங்கள் இப்படி செய்தோம் னு
அரசியல்வாதிகள் போல அறிக்கை கொடுக்க சொல்றானுங்க..
# ஏதாவது செய்திருந்தா தானே டா சொல்ல முடியும்..?
சிகரெட்,சரக்கு விலை எல்லாம் எழுதி வச்சி…எல்லாமே விலை
ஏறி போச்சு…தயவு செய்து சம்பள உயர்வு கொடுங்க சாமின்னு
ரெண்டு ஸ்மைலி போட்டுடவா..?
எனக்கு உண்மை தான் பேச வராது…பொய் எல்லாம் நல்லா கதை
அடிச்சி விடுவேன்..ஆனா படிக்கிற என் பாஸ் க்கு
நெஞ்சுவலி வந்துடுமேனு பார்க்க வேண்டியதா இருக்கு…
என்ன பண்ணலாம்..?
வருஷம் பூரா வீக் எண்டு னு கூட பார்க்காம வேலை
செஞ்சிருக்கேன்டா..உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல
கொத்தடிமை கிடைக்க மாட்டான்டா னு HR கு
மெயில் அனுப்பலாமா..?
இந்த அப்ரைசல் போடுற வரைக்கும் ஒரு மாசம் நமக்கு
கீழ இருக்குறவங்களை வேலை வாங்குவது உண்மையிலேயே
ரொம்ப கஷ்டம்..# சாணி அப்பின மாதிரியே மூஞ்சிய
வச்சிக்கிட்டு திரியுறானுங்க..
என் பாஸ் க்கு அந்த பிரச்சினையே இல்ல..நான் தான் வருஷம் பூரா,
ஜட்டியில உச்சா போன குழந்தை போல ஒரே ரியாக்ஷன்
கொடுக்குறேனே..
அப்ரைசல் போட்டு முடிஞ்சதும் இந்த பாஸ் எல்லாம் வந்து
ஆறுதல் சொல்லுவானுங்க பாருங்க..பாவம்..நம்ம பக்கமும்
பேச முடியாம,மேனேஜ்மென்ட் பக்கமும் பேச முடியாம..
#பரிதாப ஜீவன்கள்..
ஒரு வருஷமா உண்டான காண்டை காட்டுவதற்கு சரியான
நேரம் அப்ரைசல் போட்டதுக்கு அப்புறம் வரும் நாட்கள் தான்..
காலில் விழாத குறையா கெஞ்சினாலும் வேலை செய்யவே
தேவை இல்லை..
அப்ரைசலுக்கு ஒரு மாசம் முன்னால ஆபிஸ்ல
இருக்குறவனுங்களைப் பார்க்கணுமே..அதுவரைக்கும்
பிகர் கூட நடப்பது போல போனவனெல்லாம்,பீக் அவர் ல
போறது போல பறப்பானுங்க..
அப்ரைசலுக்கு முன்னாடி , அவனவன் வேலையவே
அரைகுறையா செய்யும் அப்பாடக்கர் எல்லாம் இந்த ஒரு
மாசம் மட்டும் வாலண்டியரா வேலையைக் கேட்டு கேட்டு
வேற ஒருத்தன் கிட்ட கொடுத்து செய்வானுங்க..
#ஏண்டா இந்த மானங்கெட்ட பொழப்பு...
ஆபிஸ் டைம் முடிஞ்சதும் அடுத்த நிமிஷம் ஓடி போகும்
நாயெல்லாம்..பொறுப்பு வந்த பருப்பு போல படம்
போடுவானுங்க பாருங்க..அப்படியே பத்திக்கிட்டு வரும்..
#வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லைன்னு
ஆபிஸ்ல இருக்குறவங்க இந்த லிஸ்டில சேர மாட்டாங்க..
அப்படி பத்து மணி வரைக்கும் இருந்து என்னடா
பண்ணினான்னு பார்த்தா , காலையில செய்ய வேண்டிய
வேலை எல்லாம் சனியன் சாயங்காலம் தான்
செஞ்சி இருக்கும்..அதையும் தூக்க கலக்கத்தில
தப்பு தப்பா..
இன்க்ரிமென்ட் கம்மியா இருக்குது இல்லை , நான்
இவ்வளவு எதிர்பார்க்கிறேன்னு நம்ம பாஸ் கிட்ட
சொல்லபோகும்போது தான் அவரு நமக்காகவே காத்துக்கிட்டு
இருந்து நாம இன்னும் நிறைய இம்ப்ரூவ்மென்ட்
பண்ணனும் னு சொல்வாரு பாருங்க..
சரக்கு வாங்க காசில்லைன்னு நாம சொல்லும்போது
க்ளாஸ் கழுவவே இல்லைன்னு சொன்னா ஒரு
எரிச்சல் வரும் பாருங்க...அப்படி இருக்கும்...
நாமம் போட்டுட்டானுங்களேனு நாமே கடுப்பில இருப்போம்..
சும்மாவே சொம்படிச்சி சம்பளம் வாங்கும் சப்பை எல்லாம்
வந்து ச்ச..இவ்வளவு நாள் வேலை செஞ்சதுக்கு பலனே
இல்லை மச்சி..நம்மளை ஏமாத்திட்டாங்கன்னு
சொல்வானுங்க பாருங்க..அதை தான் தாங்கவே முடியாது..
3G ...
செம காண்டுடன்...கண்ணீரும் கம்பலையுமாக...
Saturday, January 29, 2011
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல 21 அட்டகாசமான வழிகள்
பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப்
பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.
2.வெளியில் போய் நின்று கொண்டு
போகிற வருகிற வண்டிகளை
எண்ணிக்கொண்டிருக்கலாம்.
3.உங்கள் எதிரி யாரேனும் இருந்தால்
அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில்
கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.
4.நெட் connection இருந்தால் சீரியல், சினிமா
கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப்
போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.
5.கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...
அதுதான் உண்மையிலேயே நேரத்தைக்
கொல்வது.
6.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும்
ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம்.
அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால்
கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.
7.கார்ட்டூன் போட்டுப் பழகலாம்.
முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப்
பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல்
பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.
8.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம்,
ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,
ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது
போல. கனவில் அமலா பால்,ஹன்சிகா
மோத்வாணி , தப்சி பண்ணு
வகையறாக்களை வரவழைத்தல் நலம்.
9.கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி,
ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன
போன்றவற்றை யோசிக்கலாம்.
10.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு
ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான்
கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம்.
இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம்.
(ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)
11.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய
கைவினைப் பொருட்களை செய்து பழகலாம்.
யார் அதிக தூரம் விடுவது
என கொலீக்குடன் போட்டி வைக்கலாம்.
ஆனால்,
வேலை பார்க்கும் யார் மேலாவது
மோத விட்டு பிரச்சினை வராமல்
பார்த்துக் கொள்வது முக்கியம்.
12.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம்.
இஷ்ட தெய்வம் இல்லையா?
பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத
முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.
13.ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட
கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம்.
செல்போன் கேமரா இருந்தால்
படம் பிடித்தும் வைக்கலாம்.
14.எல்லாவற்றையும் விட எளியதான
ஒரே வழி தூக்கம்.
15.காபி ஷாப்பில் / கேன்டீனில் கூட்டம்
அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர்
செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.
16 .வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில்
தப்பு கண்டுபிடிக்கலாம்.
முடிந்தால் அவரிடமே சொல்லி
வெறுப்பேற்றலாம்.
17.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு
உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற
ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம்.
லிஃப்டை தவிர்த்து படிகளில்
நடந்து போனால்
நேரமும் அதிகமாகும்,
அரட்டையும் அதிகமாகும்.
18.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர்
கேம்ஸை கொண்டு வந்து
டவுன்லோடு செய்து வைக்கலாம்.
போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.
19.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை
தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம்.
சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை
வரவழைத்தால் ஒரு முழு
நாளையும் ஓட்டலாம்.
20.ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன்
செய்து பிடித்த பாடல் கேட்கலாம்.
அதை உங்கள் சுபீரியருக்கு
டெடிகேட்-டும் செய்யலாம்.
21.உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்,
தெரியாதவர்கள் என யாருக்காவது போன்
செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம்
விசாரிக்கலாம். முன்னதாக போன் உரையாடல்
ரெக்கார்ட் ஆகிறதா என்பதை
செக் செய்து கொள்வது உசிதம்.
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான
ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ
(கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ
யோசிப்பது போல அதையே பார்த்துக்
கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள்
பிஸியாக இருப்பதாக நினைத்துக்
கொள்வார்கள்.
ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ
(கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ
யோசிப்பது போல அதையே பார்த்துக்
கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள்
பிஸியாக இருப்பதாக நினைத்துக்
கொள்வார்கள்.
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்.
அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும்.
ஏதாவது ரெண்டு வார்த்தை டைப்
செய்துவிட்டு யோசிப்பது போல்
பாவ்லா காட்டவும்.
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல்
கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை
செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது
வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால்
இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை
கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக்
கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு
பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...."
என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ
சொல்லுங்கள்.
7. எங்காவது எழுந்து போகும்போது மிக
வேகமாக நடந்து போங்கள். ஏதோ
முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள்
என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள்,
கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு
தட்டுங்கள்.
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும்
ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில்
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப்
புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள்
முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ
குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என
நினைப்பார்கள்.
11. ஆபீஸில் நடந்து செல்கையில்
எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு
பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு
பிஸியாக இருந்தேன், ஸாரி என்று
சொல்லிக்கொள்ளலாம்.
12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது
எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து
வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள்.
மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து
அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ
திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை
ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,
மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது
செய்து கொண்டேயிருங்கள்.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில்
போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல
பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை
வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும்
நடங்கள்.
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால்
(உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்)
உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது
டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது
மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு
வாருங்கள்.
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள்.
அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க
முடியவில்லை என (மற்றவர் காதில்)
விழும்படி சொல்லுங்கள்.
17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்)
ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து
இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த
அகால நேரத்தில் பெருந்தலைகள் யார்
கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப
முக்கியம்.
18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே
ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்
அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக
அறிவியுங்கள். நம் பெருமையை நாமே
பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்...?
Thursday, October 14, 2010
இது வாழ்க்கை...ஹ்ம்ம்....
I appreciate working in group projects … I can make best use of a computer… My wallpaper is my inspiration I don't go to hostel. There is enough space on my desk. People in my home are asleep when I am free to call them. So ….. I get 90mins. Of lunch break. The only time my eyes can rest. The chairs are so cozy. I don't need a bed. We wake together, We SWIPE together, We eat together, We study together, Hold it ………… we don't sleep together…….. We have separate hostels!!! My best take-away from the last 3 months. . Adaptability. |
Subscribe to:
Posts (Atom)













