Showing posts with label மாத்தி யோசி ... Show all posts
Showing posts with label மாத்தி யோசி ... Show all posts

Wednesday, April 29, 2015

மாத்தி யோசி .. 87



ப்ராஜெக்ட் விஷயமா சவுகார்பேட்டை போயிருந்தேன்..

நிறைய பேரு சட்டை போட்ட செட்டியார் பொம்மை

போலவே இருக்கானுங்க..# அரே நிம்பள் உடும்பை 

கொரைங்கோ ஜி..



JCB அருகே வண்டி ஓட்டுறதும்,நண்டு பிடிக்க போறதும் 

ஒண்ணுதான்..# எது முன்பக்கம்னே தெரியாம 

போயி மாட்டிக்கிறோம்.. 




"மன அமைதிக்காக ஓய்வெடுக்கிறார்" ராகுல் னு 

சொன்னா ஓ இது தான் இங்கிலிஷ்ல 

"REST IN PEACE" ஆ னு கேட்குறான்...


 


வேலைப்பளுவை சமாளிப்பதை விட,ஓபி அடிக்கும் 

டைம்பாஸ் பெருச்சாளிகளை சமாளிக்கிறதே பெரும் 

கஷ்டமா இருக்கு..



 


இந்த விராட் கோலியோட உடுப்பி வேற ,

லெமன் சோடா விளம்பரத்துக்கு வந்து மூடு 

கிளப்புறா..!!! ஏற்கனவே ஒருத்தி மாம்பழ ஜூசையே 

ஒரு மார்க்கமா குடிக்க வைக்கிறா...!!!

Friday, April 10, 2015

மாத்தி யோசி .. 86.





மீட்டிங்ல எவனாவது பேசும்போது கவுண்டமணி 

வசனங்களும்,என்னை யாராவது கேள்வி கேட்டா 

வடிவேலு வசனங்களும் தான் ஞாபகம் வருது..

# சிரிப்பை அடக்க எவ்ளோ சங்கடமா இருக்கு..!!!!



நண்பன் வீட்டுல இருந்த கிடார் எடுத்து வாசிச்சேன்.. 

என் வாய் தான் பாடுது..கிடாரிலிருந்து டொய்ங் 

டொய்ங்னு தான் வருது..(என் மைண்ட் வாய்ஸ் :

 "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை")




மனிதன் உயிர் வாழ என்ன வேண்டும்னு பக்கத்து


வீட்டு பையனைக் கேட்டா,"ஒரு கத்தி,கேமரா,ஷூ, 


கொஞ்சம் புரதம் நிறைந்த பூச்சிகள்"னு சொல்றான்..


#Bear Grylls அட்டகாசங்கள்..



DOCTOR ஐ சுருக்கமா DR. னு போடுறாங்க..

தமிழ்ல போடும்போது மரு. னு போடுவாங்களா 

இல்ல டாக். னோ, டார் னோ போடுவாங்களா...????


அனேகன் பார்த்தேன்.. GRAPHICS CARD மாட்டுறது..

MOUSE WIRE INSERT பண்றதுன்னு எவ்ளோ ஈஸியா 

இருக்குது SYSTEM ADMIN வேலை.. 

Thursday, March 26, 2015

மாத்தி யோசி .. 85



ஊருக்குள்ள பல "ஐ" வைரஸ் உலவுது..

அதாங்க "நான்" தான் எல்லாம்னு சொல்லிக்கிட்டு

திரிவானுங்களே அவனுங்களை சொல்றேன்..



லேடிகாகா வே பழசாயாச்சு.. மடோனா ஆல்பம்

ரிலீஸ் ஆகலையானு கேட்குறான் ஒருத்தன்..

# உங்க கூட எல்லாம் சகவாசம் வச்சா ஏன்டா 

என்னை 8 வது படிக்கிற பொண்ணு அங்கிள்னு கூப்பிடாது..???



பனியில பக்கத்துல இருக்குறவங்க பல்லைக் 

காட்டுறாங்களா இல்லையானு கூட தெரியலை..

# சிரிக்கலேன்னா சிடுமூஞ்சினு சொல்லிடுவாங்களே..



தினமும் ஆபிஸ் போகும்போது கசாப்பு கடைக்கு போற 

ஆடு போலவே போறேன்..

#இன்னைக்கு எவன்,எப்படி வெட்டப் போறானோ..!@#$%^&



பேய் பிசாசு எல்லாம் புடவைல தான் வருமான்னு

கேட்டான்..ஏன்டானு கேட்டா..எங்க எல்லா டீச்சரும் 

புடவைல தான் வர்றாங்கனு சொல்றான்..

#Good teachers.. Good students..

Saturday, February 21, 2015

மாத்தி யோசி .. 84


 

போன் பண்ணும்போது கால் வெயிட்டிங் வரலைனாலே 
 
பசங்க "நீ வேஸ்ட்டுடானு" கேவலமா கேட்குறானுக..
 
# ஹ்ம்ம்ம்..ஆடிய ஆட்டம் என்ன...?????




"நீ" என்பது ஒரு எழுத்துனு எவனாவது ஆரம்பிச்சாலே
 
"மூடு" என்பது இரண்டு எழுத்துனு மொக்கை 
 
போட்டுடுறேன்..# சாவடிக்கிறானுங்களே..!!!




FEB 14 உறவுக்கு பரிசு கொடுக்கலைனா விரிசல் 
 
வந்து பிரிவாமே..# நல்லவேளை எனக்கு காதலியும் 
 
இல்ல..காசும் இல்ல.."நல்ல கம்பெனியை" தேடணும்..




இன்னமுமா பசங்க காதல் கவிதைகள் எழுதி இம்ப்ரெஸ்
 
பண்ணனும்னு பொண்ணுங்க நினைக்கிறாங்க...???
 
4 பசங்க கவிதைகள் எழுதி வாங்கிட்டு போயி இருக்கானுங்க..



"கவிதைகள் விற்பனைக்கு" போர்டு வச்சிடலாம் போல..
 
# காசு இல்லாத .நேரத்துக்கு உதவும்..

Tuesday, February 17, 2015

மாத்தி யோசி .. 83



மதராசப்பட்டினத்தை தமிழ்நாடுனு மாத்தினாங்க..
 
ரியல் எஸ்டேட் காரனுங்க சென்னையை மறுபடியும் 
 
கன்னியாகுமரி வரை கொண்டு போயிடுவானுங்க போல..
 
#இப்போவே திண்டிவனம் வரை சென்னைக்கு மிக 
 
அருகில்னு ஆயிடுச்சு.. 



பரீட்சைக்கு பிரார்த்தனைக் கூட்டம் போட்ட மாதிரி
 
உலகக்கோப்பையை வெல்ல ஒரு உபவாசக்கூட்டம் 
 
போட்டா உபயோகமா இருக்கும்..
 
# இறங்கி வாரும் ஆண்டவரே..!!!!!



பீர் அடிச்சோமா,பிரியாணி சாப்பிட்டோமா,
 
பீடா போட்டோமான்னு இருக்குறது தானே அழகு..
 
பொக்கே வாங்கணும்,கிப்ட் கொடுக்கணும்,
 
மொய் எழுதணும்னு # BAD FELLOWS..



"என்னை அறிந்தால்"  இவ்வளவு எதிர்பார்த்து 
 
ஏமாந்து இருக்க மாட்டோம்..# தெரிஞ்சிக்காம 
 
போயிட்டோம் கவுதம் சார்..


 
ஒரு நல்ல விஷயம் உடனே எத்தனை நாளைக்கு 
 
இது தொடருமோனு இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக்குது..
 
#எல்லாம் மாயா..எல்லாம் சாயா..!!!!

Thursday, January 22, 2015

மாத்தி யோசி .. 82




உச்சி குளிர ஐஸ் வச்சி சொம்பு அடிக்கிறதே உரிச்ச 
 
கோழி கணக்கா உங்களைத் தொங்கவிட தான்னு
 
உங்களுக்கு எப்போதான்டா புரியப்போகுது..? 



இனி பிள்ளைகளுக்கு பேரு வைக்கிறதுக்கு பதிலா 
 
நிறைய யோசிச்சு ஃபேஸ்புக் ஐடி யும்,ட்விட்டர் 
 
ஹேண்டிலும் தான் வைக்கணும் போல..



RIO 2 படத்துல பறவைகள் பண்ற ரொமான்ஸைப் பார்த்து 
 
எல்லாம் நான் பொறாமைப் பட ஆரம்பிச்சுட்டேன்..
 
#SHAME ON YOU GIRLS.. எனக்கு யாராவது 
 
வாழ்க்கை கொடுங்க ப்ளீஸ்..



பஞ்சாயத்து பண்றேன்னு பிரச்சினையை பெருசாக்கி 
 
சட்டை கிழிய விடுறானுங்க..இவனுங்க சமாதானத்துக்கு
 
பயந்தே சண்டை போட்டவன் கூட சமரசம் ஆயிடலாம் போல..



ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு தான் 
 
காதலிக்கணும்னு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை..
 
நான் தான் ஒவ்வொருத்தியையும் பார்த்தவுடனே
 
லவ் பண்ண ஆரம்பிச்சுடுறேனே..# ஐ த்ரீ லவ்யூ..

Saturday, January 10, 2015

மாத்தி யோசி .. 81





கல்யாணம் பண்ணுற கொடுமையை விட மோசமானது 
போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது தான்..
#வேடிக்கை  பார்த்த எனக்கே கழுத்து வலிக்குது..
போஸ் கொடுத்தவன் நிலைமை..????



இந்த TIKONA 4G போஸ்டர் பார்க்கும்போது எல்லாம்
டிக்கிலோனா னு படிக்கிறேன்..# EFFECTS OF LEGENDS.



உழைப்பால் உயரணும் சரி தான்..யார் உழைப்பில யாரு
உயரணும்ங்கற விஷயம் தான் ஒருத்தொருக்கொருத்தர் மாறுபடுது..



விதவிதமா செல்ஃபி எடுக்குறதை நிறுத்திட்டு வண்டிக்கும்,
உங்களுக்கும் இன்சூரன்ஸ் எடுங்க..இப்போதான் 
அரசாங்கப் பிரதிநிதிக்கு 350 ரூபாய் மொய் எழுதினோம்..



எவனைப் பார்த்தாலும் பாரின் பேக்ரவுண்டுல போட்டோ 

அப்டேட் பண்றானுங்க.. இவனுங்க போறானுங்களா.. 

இல்லை போட்டோ ஷாப் வேலையா ..?? இருங்கடா 

நான் முதல்ல பாஸ்போர்ட் எடுக்குறேன்..

போட்டோ ஷாப் படிக்கிறேன்

Saturday, January 3, 2015

மாத்தி யோசி .. 80



இன்னைக்கு டாட்டா நானோ கார்ல போனேன்..
 
முட்டை போண்டாவுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரியே
 
ஒரு ஃபீலிங்..



இப்போவெல்லாம் பொண்ணுங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது அபூர்வம்னா பசங்க வெட்கப்படுறதைப்
 
பார்க்கிறது கொடூரம்..#ஐயோ..அம்மா..!!!



கல்யாணம் ஆகாம புலம்புறதே பரவாயில்லை போல..
 
பொண்ணு கெடச்ச அப்புறம் பயபுள்ளைங்க தாவணில 
 
குத்தின சேஃப்டி பின் மொதக்கொண்டு வர்ணிக்கிறேன்னு
 
வறுத்தெடுக்குறானுங்க..



இத்தனை நாளா நான் நம்பி இருந்த மீரா எனக்கு 
 
கிடைக்காததால நான் கார்த்திகா வைத் தேடி போக 
 
வேண்டியதா ஆயிடுச்சு..



இனி கல்யாணம்,காதுகுத்து னு எந்த விசேஷத்துக்கும்
 
போட்டோகிராபர் தேவையே இல்ல போல..
 
எங்கும் செல்ஃபி மயம்..

Tuesday, December 23, 2014

மாத்தி யோசி .. 79




"ஆ" படம் எப்படிடா இருக்குனு கேட்டான் ஒருத்தன்..

என் பொழப்பே "ஊ" னு  இருக்கு,ஏன்டா படத்தைப் பத்தி 

கேட்குறனு கடிச்சி வச்சிட்டேன்..



சீசனுக்கு சீசன் நல்லவன் வேஷம் போடுறவனை விட 

அயோக்கியனுங்க சவகாசமே தேவலாம்..

#சாமி சரணம்னு சாவடிக்கிறானுங்க..


முன்னெல்லாம் அரசியல் தலைவர்களை வரவேற்க பல 

பேனர் வைப்பாங்க..இப்போ ஒரே பேனரை பல இடத்தில் 

வைக்கிறாங்க..# கற்பனைப் பஞ்சம்..



ஜன்னல் மூடி இருந்தாலும் சாலையோர செடிகள்,

மரங்கள் வந்தா தலையை குனிஞ்சுக்கிறேன்..#அனிச்சை செயல்..



நம்ம ஊருல "ஒவ்வொரு குழிக்கும்" இடையில எவ்வளவு 

அழகா "ரோடு" போட்டு இருக்காங்க..!!! # மழைக்கால மெர்சல்கள்..

Friday, November 28, 2014

மாத்தி யோசி .. 78




கார்,பீர் ரெண்டுக்கும் பேரு வைக்கும் முன்னாடி நியூமராலஜி 
 
பார்க்க சொல்லணும்..நிறைய பிராண்டு வருது,
 
நல்லா இருக்கவும் மாட்டுது விற்கவும் மாட்டுது..



அண்ணா நகர்ல இருந்து நான் ஆபிஸ் வர்றதுக்கு 
 
பதிலா ஆப்போசிட்ல போனா ஆந்திராவுக்கே 
 
போயிடலாம் போல..# TERRIFIC TRAFFIC..



பீர் 100 ரூபாயா இருக்கும்போது கூலிங் இல்லாமையே 
 
110 க்கு வித்தானுங்க..இப்போ விலை ஏறினதுக்கு அப்புறம் 
 
கூலிங் பீர் மட்டும் தான் இருக்காம்..அது 130 ரூபாயாம்.. 
 
கேரளா போல இனி வீட்டிலேயே தான் காய்ச்சணும்..



வீடு வாங்குறீங்களானு கேட்டு ஒரு பொண்ணு 
 
போன் பண்ணுச்சு..கல்யாணம் பண்ணிக்க பொண்ணுதான் 
 
கிடைக்க மாட்டுது..மெயில் ஐடி கொடுங்க என் 
 
போட்டோவும் ஜாதகமும் அனுப்புறேன்..அப்புறம் தான் 
 
வீடு பத்தி யோசிக்கணும்னு சொன்னேன்..
 
சிரிச்சுக்கிட்டே போன் வச்சிட்டா..SMS வருமா...? 
 
# I am waiting  



சட்டையில 4வது பட்டன் 4சென்டிமீட்டர் கீழே இறக்கி 
 
காஜா எடுத்து இருக்கானுங்கன்ற ரேஞ்சுக்கு ஃபெயிலியருக்கு 
 
காரணம் சொல்றானுங்க..

Tuesday, November 25, 2014

மாத்தி யோசி .. 77



க்ளைமேட் மாறினதுல ஒரு தொல்லை ஆபிஸ்க்கு ரெண்டு 
மணி நேரம் பஸ்ல போறது தான்..# ஹக்கீஸ் 
போட்டுட்டா போக முடியும்.. நானும் எவ்ளோ நேரம் 
எச்சில் துப்பியே சமாளிக்கிறது.. 



சிகரெட் விளம்பரத்தில பிழியுறதைப் பார்த்தா நான் 
வெளியில இருக்குற கருப்பை விட பல மடங்கு உள்ளே 
இருக்கும் போலயே..# கிங்ஸ் குழிக்குள்ள தள்ளாம 
விடாது போல    



நான் கம்யூனிசத்துக்கு மாறிட்டேன்..இனிமே இட்லி 
சுடாதீங்கனு என் அம்மா கிட்ட சொன்னேன்..உனக்கு 
வேணாம்னா போடானு சொல்லிட்டாங்க..
#அவங்க அ.தி.மு.க. ஆதரவாளர் போல..



கோயம்புத்தூர் க்ளைமேட்கே எனக்கு எட்டாவது , 
ஒன்பதாவது ஓட்டையில புகை வந்துச்சு..இங்க வந்ததுக்கு 
எக்ஸ்ட்ரா ரெண்டு ஓட்டை உருவாகி புகையா போகுது..



இப்படி எல்லாம் புலம்பும்போது தான் தோணுது 
இன்ஜினியரிங் படிச்சதுக்கு பதிலா இட்லி மாவு 
அரைச்சி வித்து இருக்கலாம் போல..

Thursday, November 20, 2014

மாத்தி யோசி .. 76



லவ் பண்றவனிடம் கூட நட்பு வச்சுக்கலாம்..
 
ஆனா காலம் கடந்தும் இன்னும் கல்யாணம் ஆகாதவனுங்க 
 
கூட மட்டும் சகவாசமே வைக்கக்கூடாது..
 
#காது வலிக்க புலம்புறானுங்க



என் அண்ணனுக்கு(கஸின்) 3 வருஷமா பொண்ணு 
 
தேடுறாங்க..இப்போ வந்தவாசில ஒரு பொண்ணு 
 
இருக்குனு சொன்னாங்க..காட்டுவாசியா இருந்தாலும் 
 
ஓகே கட்டி வைங்கன்னு சொல்லிட்டேன்.. 



அவதார்ல வர்ற இக்ரானை கூட ஈஸியா மெயின்டைன் 
 
பண்ணிடலாம் போல..இந்த பொண்ணுங்களை மேய்க்கிறது 
 
கஷ்டம்டா சாமி..#எத்தனை கேள்வி கேட்குறாளுங்க..



எவன் தான் ஊழல் பண்ணலை,லஞ்சம் வாங்கலைன்னு 
 
நாமே சமாதானம் சொல்லிக்கிற அளவுக்கு கெட்டுப்போயி
 
இருக்கோம்..#சுஜாதா காலமாயிட்டார்..
 
ஷங்கர் மட்டும் போராடுனா போதுமா..? 
 
யோசிப்போம் மக்களே..



பாஸ் கிட்ட பேசும்போது நவரசங்கள் போக பாதரசத்தோட 

சேர்த்து பத்து ரசமும் காட்டுறானுங்க முகத்தில..

எங்கடா கத்துக்கிட்டீங்க இந்த வித்தையை..

# சொம்புகளின் சாகசங்கள்..

Sunday, November 16, 2014

மாத்தி யோசி .. 75


4 நாளா இந்த சமூகத்தை கம்யூனிஸக் கண்கள் 

கொண்டு பார்க்கிறேன்..#"சென்னைக் கண்" 

செமையா சிவந்துடுச்சு



யுவி எப்படியும் உலகக்கோப்பை அணியில் இடம் 
பிடிப்பார்னு இன்னும் நம்புறானுங்க..# தட் நெல்லா..? 
இனிமே தான் வயலை வாங்கி,நட்டு மொமெண்ட்..



ராயுடு,ரோஹித் சதமடிச்சதுக்கு திட்டுறானுங்க 
கம்பீர்,ஷேவாக்,யுவராஜ் சிங் எல்லாரும் அணியில் 
இடம் பிடிக்கணும்னா 20 பேரு வச்சி தான்டா விளையாடணும்..



மேட்சில ஒரு கட்டத்துக்கு பிறகு எவனுமே டீம்
ஸ்கோர் பார்க்கலை..ரோஹித் ஷர்மா ஸ்கோர் மட்டும் 
தான் கவனிச்சோம்..#நீ பின்னு மச்சி..இன்னும் நாள் இருக்கே..



தங்கம் தகதகனு மின்னும்னு சொன்னானாம் தமன்னா 

இடுப்பை பார்க்காதவன்..என்னை வேலை செய்ய 

விட்டாதானேடா தெரியும்..#நான் செய்வேன்டா..

நல்லா செய்வேன்..

Wednesday, November 5, 2014

மாத்தி யோசி .. 74





இன்னைக்கு லீவ் போடு மச்சி கத்தி படத்துக்கு போலாம்னு 

சொன்னான் ஒருத்தன்..நான் கம்பெனிக்கே போறேன்னு
 
சொல்லிட்டேன்..# ஏழாம் அறிவுக்கு 1000,அஞ்சானுக்கு 500,

யானுக்கு 420 செலவு பண்ணதே இன்னும் வலிக்குது



மழையில நனையும்போது அவ்ளோ ஆனந்தமா இருக்கு..

அப்புறமா நச நச னு அவஸ்தையா இருக்கு..#DELICATE POSITION



பொண்ணுங்களோட விதண்டாவாதத்துக்கு முன்னாடி 

பசங்க எவ்ளோ விவாதம் பண்ணாலும் எடுபட மாட்டுது..

என்னமா பேசுறாங்க..#அதனால தான் "MOTHER TONGUE " கோ..



விட்டுக் கொடுத்து வாழணும் இது TEAM WORK.. 

போட்டுக் கொடுத்து பொழப்பை ஓட்டணும்..

இது SHAME WORK..அது தான் நடக்குது இங்க..

#ஆபிஸ் அவஸ்தைகள்






இப்போ வெல்லாம் அப்புறம் மச்சி னு கேட்டாலே 

சரக்கடிக்கலாமா னு கேட்குறானுங்க..

# நல்ல நட்பு வட்டாரம்..(என்னையும் சேர்த்து தான்..)

Thursday, October 30, 2014

மாத்தி யோசி 73


Temple run ல வர்ற ராட்சசனை விடவும் மோசமா மேல 
 
விழுந்து பிறாண்டுரானுங்க உங்களை  follow up பண்றேனு 
 
# வேலை செய்ய விடுங்கடா டேய்..




பண்டோரா கிரகத்தில இருந்து பாகிஸ்தான்,பலுசிஸ்தான் 

வரைக்கும் நல்லா தமிழ் பேசுறாங்க..நம்ம பய புள்ளைங்க 

இன்னும் சரியா பேச மாட்டுதுங்க..




லிட்டருக்கு 4 சொட்டு உஜாலா விளம்பரம் போல 
 
ரெண்டு கண்களுக்கு 4 சொட்டு னு போய்க்கிட்டு இருக்கு..
 
#"சென்னைக் கண் " சங்கடங்கள்..




அடுத்த வீட்டுல என்ன நடக்குதுனே தெரியாம இருக்குற 
 
அபார்ட்மெண்ட் வாழ்க்கை எவ்ளோ நல்லதுனு உதவி 
 
வேணுமானு கேட்டு உதை வாங்கும்போது தான் தெரியுது




பசங்க பொண்ணுங்களோட போன்ல கடலை 

போடுறபோது ப்ரோமோஷன் கால்னு எதாவது 

பொண்ணு பேசுனா ஜிவ்வுனு இருக்கு..

#நானும் ரவுடிதாண்டா.. என் கையிலயும் முத்தம் குடுங்க..

Sunday, October 26, 2014

மாத்தி யோசி .. 72


லட்சுமி மேனன் குரல் , உஷா உதுப் 10 வருஷம் முன்னாடி
 
பாடியது போலவே இருக்கு..# மம்தா மோகன்தாஸ்,
 
ரம்யா நம்பீசன் வாய்ஸ்ல இருந்த கிக் இல்லையே..




ரேடியோ மிர்ச்சியில மறுபடியும் சுச்சி வாய்ஸ் 
 
கேட்டதுக்கு அப்புறம் செம எனெர்ஜியா இருக்கு..
 
# ப்ளைட் நம்பர் 983.. I am Waiting...



சட்டை போடாம கூட ஆபிஸ் போயிடலாம் ஆனா 
 
சன் ஸ்க்ரீன் லோஷன் போடாம போகக் கூடாது போல..
 
# ச்ச எவ்வளவு அலைச்சல்..இவனுங்க கஸ்டமர்ஸா 
 
இல்ல "கஷ்டமர்ஸா"..முடியலடா டேய்




அணில் - மகேஷ் பாபு புதுசா ஏதோ PARAGON னு ஒரு 
 
படம் நடிச்சி இருக்காறாமே.. ரீமேக் பண்ணிடலாமா

அணில் குஞ்சு - ண்ணா.. அது செருப்பு விளம்பரம் ங்ணா..



இந்த டோலக்பூர் எங்க இருக்குனு தெரிஞ்சா 

சொல்லுங்கப்பா.. மலை,கடல்,பாலைவனம்,காடு,பீம்,

சுட்கி,மானங்கெட்ட மகாராஜா னு எல்லாமே இருக்கு..

வெகேஷனுக்கு போகலாம்னு இருக்கேன்..

Wednesday, November 20, 2013

மாத்தி யோசி .. 71



ஒரு காலத்தில நானும் யோகாசனம் பண்ணுனேன்..

சவாசனம் பண்ணும்போது எங்க அம்மா பார்த்துட்டு 

தூங்குறேன்னு தண்ணி ஊத்திட்டாங்க..






 

இனிமே பொறுமைக்கு எருமையை உதாரணம் 

சொல்லாம ஆடித்தள்ளுபடியில பெண்களோட துணிக்கடைக்கு 

போகும் ஆண்களை சொல்லலாம்..# அசராம இருக்காங்கப்பா..

எனக்கு இன்னும் பயிற்சி வேணும் போல..



யா யா படம் பார்த்தேன்..சட்டியில இருந்தா தானே அகப்பையில் 
 
வரும் பழமொழிக்கு சிறந்த உதாரணம்..சிவாவின் 
 
சவ பெர்பார்மன்ஸ்..




என்ன தைரியத்துல இப்படி படம் எடுக்கிறானுங்க னு யோசிக்காம 
 
என்ன தைரியத்துல நீ தியேட்டருக்கு போனேன்னு எனக்கு 
 
நானே கேள்வி கேட்கும் நிலைமை.

 
 
கொலையும் கூலிங்க்ளாசும் இல்லனா  சரக்கும் சைடிஷ்ஷும் னு 
 
பெயர் வச்சாத்தானே அது மிஷ்கின் படமாகும்..என்னமோ போங்க..
 
 
 
ஐயையோ இவனுங்க கொடுக்குற அலப்பறையை பார்த்தா 
 
சற்குணம் தனுஷுக்காக சறுக்கிருப்பாரோ..? அடுத்த 
 
மர்ஷியல் குப்பையா இருக்கக்கூடாது ஆண்டவா..!!

 
நான் சொன்ன மாதிரியே சறுக்கிட்டார் சற்குணம். உங்க காசு 
 
தண்டமா போச்சேனு நமக்கும் தயாரிப்பாளருக்கும் 
 
நய்யாண்டி காமிச்சுட்டார்..




ரெண்டு நல்ல படம் கொடுத்து மூணாவதா கமர்சியல் படம் ,

பெரிய ஹீரோனு சுசீந்திரனுக்கு ராஜபாட்டை,

சற்குணத்துக்கு நய்யாண்டி.மாமா பௌ...

 

 
சிறுத்தைல ஆந்திரா வாடை ரொம்ப  அதிகமா இருந்துச்சே..
 
அஜித் படத்துக்கு "காரம்"னு  பேரு வச்சி இருக்கலாம்.

 
 

அஜித்தின் ஆரம்பம் பில்லா 2 போல "ஆ..ரம்பம்."னு  நம்மை 

அலற வச்சா அணில் குஞ்சுங்க அலப்பறை பண்ணி 

ஆகாசத்துல பறப்பானுங்களே..

Thursday, August 22, 2013

மாத்தி யோசி .. 70



ரெண்டு பெரும் மாறி மாறி கொடுத்துக்கிட்டா தான் அது கைமாத்து.. 

எப்பவும் ஒருத்தனே கொடுத்தா அது ஏமாத்து..

(வாங்குனா கொடுக்கவே மாட்றானுங்க..)



கூண்டுல மாட்டிக்கிட்ட அப்புறம் சிங்கமா இருந்தா என்ன..? 

சிறு முயலா இருந்தா என்ன..? தற்கொலை பண்ணிக்க 

காதலிச்சா என்ன..? கல்யாணம் பண்ணா என்ன...?

 


கொஞ்சநாளில் சரியாகிடும்னு  தனக்குத்தானே 

சமாதானம் சொல்லிக்கிறானுங்க..அது,சரி 

ஆகலைனா சலிச்சுக்குறானுங்க.. 

#இதுக்குதான் நான் ஆரம்பத்திலேயே 

அசால்டா இருக்குறது..அக்காங்..





நிறைய பேசினாலும் , இல்ல ரொம்ப நாள் பேசாம விட்டாலும் 

கருத்து வேறுபாடுகள் அதிகமாகுது.. #ஹ்ம்ம் .. எல்லா 

உறவுகளிலும் இடைவெளி அவசியமாகிறது..

 


கேள்விக் கேட்குறவனைக் காண்டாக்க ஒரே வழி..புரியாத மாதிரியே
 
நடிக்கிறது..#எவ்வளவு ஆடிட்டிங் பார்த்திருப்போம்..


 
ஆம் என்பது பெரும்பாலான நேரங்களில் புரியாமலையே 

சொல்லப்படுகிறது..# ஆமாங்கனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்..

 


தேவைகளைப் பொறுத்தே இப்போதெல்லாம் தேவதைகள் 

தீர்மானிக்கப்படுகிறார்கள்..#ஹ்ம்ம்...
 


 
நல்லவன் என்பவன் யாரெனில் எனக்கு தீங்கு செய்யாதவன்..# நல்லா 

இருக்குடா உங்க லாஜிக்..!!!



 
நேத்து நடந்த ஒரு நல்ல விஷயம் ஒருத்திக்கு புடவை 

எடுக்கப்போறேன்னு இன்னொருத்திக்கிட்டனு மாறி மாறி 

சொன்னேன்..#ரெண்டு பெரும் நம்பலை..# விஷயம் தெரிஞ்சா கூட நான் 

பொய் சொன்னேன்னு சொல்ல முடியாதுல.. 

Wednesday, January 2, 2013

மாத்தி யோசி .. 69




சின்ன சின்ன விஷயங்களுக்காக அதிகம் வருத்தப்படுபவர்கள்,

அதிகம் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள்..

 



சில பிரச்சினைகளுக்கு முடிவு மரணம் மட்டுமேனு நினைக்கும் 

பலர்,பல பிரச்சினைகளுக்கு அது தான் தொடக்கம்ன்னு 

உணர மாட்றாங்க..

 



எழுதுவதற்கு மனதில்  எண்ணம் இருந்தால் போதும்..

வார்த்தைகளை வசமாக்கவே சிறிது பயிற்சி அவசியம்..

 

பெரும்பாலான வார்த்தைகள், உண்மையை சொல்லப் 

பயன்படுவதை விட,மறைக்கவே அதிகம் பயன்படுகின்றன..

 



பொண்ணுங்க கூட பழகும்போது ஒரு பிரச்சினையும் வராம 

நல்லபடியா போய்க்கிட்டு இருந்தா, ரிலேஷன்ஷிப் 

சீக்கிரமே முடியப்போகுதுன்னு அர்த்தம்..

 



தொலைந்த இடத்தில் இருக்கும் பொருளைக் 

கண்டுபிடிப்பது சுலபம்..இந்த மானங்கெட்ட மனசை 

தொலைச்சிட்டேன்..அது ஒவ்வொரு அழகான பொண்ணு 

பின்னாடியும் அலையுது..# ஹே..ஓடாத..நில்லு...
 


சீக்கிரம் முடிக்கணும்னு எவனையாவது ஹெல்ப் கேட்டு 

அது தப்புன்னு தாமதமா புரிஞ்சிக்கிட்டு அப்புறம் நாமே 

செய்வதை விட, தாமதமானாலும்  நாமே தப்பு செய்து 

அதை திருத்திக்கிறது எவ்வளவோ நல்லது..


 



குழந்தைகளுக்கு HUGGIES போல, சில "பெரியவங்களுக்கு" 

வாயில இருந்து வார்த்தைகள் அத்தனையும் உறிஞ்சிக்கிற 

மாதிரி ஏதாச்சும் கண்டுபிடிங்கப்பா..வாங்கி கட்டி விடணும்..





தெரியாதுன்னு சொல்றதை விட,"நீங்க சொல்லுங்க..

தெரிஞ்சுக்குறேன்னு" சொல்லிப்பாருங்க .. பில்டப் 

இருந்தாலும் பலன்கள் நல்லா இருக்கு.. 

Tuesday, October 2, 2012

மாத்தி யோசி..68




ஒரு ஆபிஸ்ல வேலைக்குன்னு போனாலே ஏகப்பட்ட 

பிரச்சினைகள் இருக்கும்..அதுல முதல் பிரச்சினை அந்த 

ஆபிஸ்க்கு வேலைக்கு போறது தான்..

அதனால ஆபிஸை மாத்துங்க..

கூட்டத்தில இருக்கும்போது அமைதியாய் இருப்பவன் 

ஆடு என கொ(ல்)ள்க..



ராஜாவா,ரஹ்மானா னு ரெண்டு ஆண்களைப் பற்றி 

விவாதம் பண்றவங்க ஏன் அனுஷ்கா ஷர்மாவா, 

அனுஷ்கா ஷெட்டியானு விவாதம் பண்ண மாட்றாங்க..# ஏக்கம்..


நல்லவர்களுக்கு வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 


அவங்களே தான் காரணமா இருக்காங்க..# பைல்ஸ் ரீசன்



கெட்டவன் இன்னொரு கெட்டவனை நல்லவனாக் 


காட்ட முயற்சிப்பதில்லை..ஆனா நல்லவன் னு 

சொல்லிக்கிறவங்க அடுத்தவனைக் கெட்டவனாக் 

காட்டுவதில் தெளிவா இருக்காங்க..

# அப்போ யாரு கெட்டவன்..?




ரகசியங்கள் வெளியேற மட்டும் எத்தனையோ 


வழிகள் உருவாகின்றன..



ஒரு விஷயம் நமக்கு சரின்னு தோணியதுக்கு அப்புறம்,


அதை நியாயப்படுத்த எத்தனை காரணங்கள் கிடைக்குது..!!!!



குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குமரிகளுக்கு இடையிலும் 


போதிய இடைவெளி தேவை..# கூட்டமா வந்தா சைட் 

அடிக்க சங்கடமா இருக்கு..


ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடையாது / முடியாது னு 


இருக்கும் நிலையில் தற்காலிகத்தீர்வு 

தெரிந்தால் தொடரலாமே..வருத்தப்படுறதுல 

என்ன நன்மை…?


சில வருடங்கள் முன்பு மரங்கள்,கோவில்களை அடையாளமாக்கி 

வழி சொல்லுவாங்க..இப்போ டாஸ்மாக்,ATM 

மை பயன்படுத்துறாங்க..#வீதிக்கு வீதி இது ரெண்டும் 

தானே இருக்கு…ஹ்ம்ம்ம்….