Showing posts with label கவுஜ... Show all posts
Showing posts with label கவுஜ... Show all posts

Monday, May 25, 2015

கண்களின் சிரிப்பு



இறப்பில் மட்டுமே முழுமையான இழப்பின் வலியை

உணர முடியும் என்றிருந்தேன்..இப்போது 

இருக்கும்போதே உணர்கிறேன்..# ஹனி பெயர்ச்சி..




உன் பார்வையின் கூர்மையே என்னால் தாங்க 
முடியாது..நீ கண்களில் சிரிக்கையில் கரைந்தே 
விடுகிறேனடி..




என் மீதான அத்தனை காதலையும் இரண்டு 
கண்களில் கொண்டுவர உன்னால் மட்டும் 
எப்படி முடிகிறது ஹனி..?

 
நீ கேட்கும் "சாப்பிட்டியா"வில் அடங்கி விடுகிறது..
என் மீதான உனது மொத்த அக்கறையும்..




உன் கோப முள்ளால் மற்றவர்களுக்கு சப்பாத்திக் 
கள்ளியாய் தெரிகிறாய்.. உன்னுள் இருக்கும் அன்பு 
நீரை உணர்ந்தவன் நான் மட்டுமே ஹனி ..

Monday, May 4, 2015

உன் நான்



மனுஷன் எத்தனை விஷயங்களை கண்டுபிடிச்சாலும்

நெருக்கமானவர்களின் இழப்புக்கு மட்டும் மருந்து 

கண்டுபிடிக்க முடியல..#ஹனி பெயர்ச்சி..



என் கண்ணீர் துளிகளின் அர்த்தம் உணராத 

உன்னிடம் வார்த்தைகளால் விவரித்து என்ன 

பயன்..? # போடி..போ..



செய்வது அற்ப விஷயமெனினும்,செய்வது உனக்காக 

என்றிருக்கையில் அத்தனையும் ஆனந்தமே ஹனி..


 


இத்தனை நாள் உனக்கு மட்டுமே தெரிந்த 

உண்மையான நான்,இனி எனக்குள் மட்டும்..

#ஹனி பெயர்ச்சி..


 


எனக்கு விருப்பமான பல விஷயங்களை 

உனக்காக விட்டதென்னவோ உண்மைதான்..

அதற்காக என் காதலையும் விட சொன்னால் எப்படி..?

Tuesday, April 14, 2015

CAPARO காதல்


உன் பெயராய் உச்சரிக்கும் என் இதயத் துடிப்பை 

எவரேனும் கேப்பாரோ..

 

என் மீதான உன் காதலை சொல்ல விடாமல் தடுப்பது 

யார் உன் அப்பாரோ..?
 

என் மனது WHEEL HUB பாய் உன்னை சுற்றியே சுழல..
 

உன் காதலே என் இதய இன்ஜினின் CONNECTING ROD

டாய் உழல..
 


வாழ்வினில் முன்னேற உன் சிரிப்பு ஒன்றே 

DRIVE SHAFT டாய் என்னை உந்தும்..
 


காதலுடன் நீ அணைக்கையில் உன் கைகளிரண்டும் 

SUPPORTING ARM மாய் என்னை ஏந்தும்..
 


ஜல் ஜல் என கொலுசு அணிந்து நீ ஜிங் என்று குதித்தால்,

எனக்கு மட்டும் கண்கள்,காதுகள்,இதயம், மெய் என 

ஃபோர்-ஜிங்காய் கேட்க..
 


உன் உதட்டு சுழிப்பு IBH (INTERNAL BLOOD HEATER) ஆக 

எனைத் தாக்க..
 


CLAW POLES போல உன் கண்களும் என் கண்களும் 

சேர்ந்து காதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்..
 


உன் வாசனை WORM COVER ராய் என்னை 

சூழ்ந்து கொய்யும்..
 


நீ காட்டும் அக்கறை INPUT SHAFT டாய் என்னை இயக்க..
 


GEAR போல உனக்கேற்ப செயல்படும் என் நிலையைக் 

கண்டு நானே வியக்க..
 


உன் வாழ்க்கை துணையாக வர விரும்பி 

விண்ணப்பித்த என்னை..
 


RECESSION என்று REJECT செய்யாமல் RECRUIT

செய்யடி பெண்ணே...

Thursday, January 15, 2015

அழகின் அர்த்தம்




கண்களில் சிரிக்கையில் கரைந்தே விடுகிறேனடி..



உன் கண்களின் வசீகரம் கண்ட பின் என் வாழ்க்கை 

கருப்பு வெள்ளையாகவே இருந்து விட ஆசைப்படுகிறேன் ஹனி..



வண்ணங்கள் நிறைந்த வானவில்லும் வாசனைப் பூக்களுமே 

அழகு என்று எண்ணி இருந்தேன் உன் கண்களை காணும் வரை..



நான் கற்றது கையளவு.. கல்லாதது கவிதைகள் பேசும் 

உன் கண்கள் அளவு..



அத்தனை மொழிகளின் அகராதியிலும் உன் அழகுக்கு 

அர்த்தம் தேடி சோர்ந்து விட்டேன்..இனி தேவலோகத்தில் 

தான் தேட வேண்டும் போல..

# செத்து போயி தேடிட்டுவானு கமெண்ட் போடுறவன்

செருப்படி வாங்குவான்.. 

Wednesday, December 17, 2014

காதல்



அன்பு காட்டி அக்கறை கொள்வது என் அன்னை எனில்,

காதலுடன் கண்டிப்பு காட்டுவது நீயடி ஹனி..



எல்லாருக்கும் தாய் தான் முதல் தேவதை.. 

நீ எனக்கு இன்னொரு தாயாய் வந்த தேவதை..

# லவ்யூடி ஹனி..


பல பெண்களின் கண்கள் கவிதை பேசும்..

ஆனால் கவிதையாய் கண்கள் கொண்டவள் நீயடி..


அன்பான பார்வையில் ஹைக்கூவையும்,

காதல் பார்வையில் கஸலையும் பேச உன்னால்

மட்டுமே முடிகிறது..



உன் கண் அசைவுகளின் முன்னே கவிதையின் 

அத்தனை வடிவங்களும் சரண்டர் ஆகுதடி..

Sunday, September 28, 2014

ஹனி




என் தூக்கம் கெடாமலிருக்க உனதாசையை மறைத்து 


மவுனிக்கிறாய் நீ.. உன் ஆசை அறிந்த பின் தூக்கம் 

தொலைத்து தவிக்கிறேன் நான்..

 


என் காதலை உனக்கு உணர்த்த வேண்டுமென 

நினைக்கிறேன் நான்.. என்னை உணர வைக்கிறாய் நீ..


 

செடிகளில் பூக்கள் பூப்பது  இயற்கை தான்.. உன்னைப் பார்க்கையில் 

என் ஒவ்வொரு செல்களிலும் பூக்கள் பூக்கிறதே..!!!




உன் ஓர விழிப்பார்வையில் என் ஐம்புலன்களிலும் 

ATOM BOMB வெடித்து விளையாடுகிறாயே ஹனி..




நீ சாதாரணமாக தான் புன்னகைக்கிறாய்..
 
எனக்குள் தான் எண்ணிடலங்கா பூகம்பங்கள்..



உன் மீதான அதீத அக்கறையில் நான் செய்யும் செயல்களை
 
கண்டிக்கிறாய்.. உன் கண்களில் வழியும் காதலுடன் கூடிய
 
சிரிப்பை நான்  அறியேன் என்றெண்ணி..



நான் வாசனைத் திரவியங்களை உபயோகிக்க மறுப்பதன்
 
காரணம் , உன் வாசனைக்கு நிகரான ஒன்று இதுவரை
 
கிடைக்கவில்லை ஹனி..

Thursday, November 14, 2013

என் வாழ்க்கை நீ


காதல் வழியும் உன் கண்களின் வெளிச்சம் பட்டு என் 

தேகமெல்லாம் நிறம் மாற , என்னை சூழ்ந்திருந்த கவலை 

மேகங்களும் நிறம் மாறுகின்றன..


காலம் முழுதும் நீ சேர்த்து வைத்த காதலை , என்னைப் பார்த்த 

அந்த நொடியில் உன் கண்களின் வழியே கண்டேன்..

 
எனக்காக காத்திருக்கையில் வெட்கம் பூசிய வெள்ளைத் 

தாமரையாய் உன் முகம்,ஆனால் தவிப்புடன் அலைபாயும் 

கண்கள் ..# ராட்சசி..லவ்யூடி..


 
உன் காதல் இன்றி இத்தனை நாள் எப்படி வாழ்ந்தேன் 

என தெரியாது.. ஆனால் இனி நீ மட்டுமே என் 

வாழ்க்கை என தெரியும் ..


அத்தனை உறுப்புகளின் வலியும் கண்களில் தெரிவது 

போல என் அத்தனை உறவுகளும் உன் காதலில் தெரிகிறது...


எத்தனையோ அழகிகள் கண்டபோதிலும் , உன்னைப்போல் 

ஒருத்தி இருப்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்னால்..

# தேவதை ஸ்த்ரீயடி நீ..






உன் அழகைக் கண்டு அச்சப்பட்டு விலகுகிறேன் நான்..

கண்களில் காதலைக் காட்டி காந்தம் போல் ஈர்க்கிறாய் நீ..



நம் நலன் குறித்து செய்வன அனைத்தையும் உன்னை 

ஆலோசித்தே செய்கிறேன்..என் நலன் குறித்து 

மட்டும் நீயே முடிவெடுப்பது ஏன் ஹனி..?





எனக்கு வலிகளைத் தர, நீ பேசும் வார்த்தைகளின் 


தொனியை மாற்றினாலே போதும்..

# துடிக்க வைக்காதே ஹனி.. ப்ளீஸ்..




எத்தனை முறை என்னை உயிர்ப்பிக்கிறாயோ, அத்தனை 


முறை என்னை மரிக்கவும் செய்கிறாயே ஏனடி..? 

# ஹனி பெயர்ச்சி..

Saturday, February 23, 2013

சமாதான முத்தம்

 
 
 
காதல் ததும்பும் உன் கடைக்கண் பார்வை என் மீது படும் 
 
சில கணங்கள் , பலமணி நேரம் என்னுள் இருக்கும்..
 
 
 
கண்களை மூடினால் நீ மறைந்து விடுவாயோ என் அஞ்சியே 
 
இமைக்க மறுத்து வெறித்து பார்க்கிறேன்... 
 
# தேவதை ஸ்த்ரீயடி நீ..(காஞ்சு போயி இருக்கேனும் சொல்லலாம்..)
 
 
 
உன்னிடம் மட்டுமே எனக்கு தெரிந்த மூன்று மொழியிலும் 
 
மவுனம் சாதிக்கிறேன்..ஆனால் என் கண்களில் ஒளித்த 
 
காதலைக்கண்டு புன்னகைக்கிறாய் நீ..#லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
தன்னைத்தானே இயக்கும் சக்தி மிக அரிது..நீயோ 
 
சுலபமாய் செய்கிறாய்..ஆம்..என் உலகத்தை 
 
இயக்குபவள் நீ தானே..
 
 
 
கடற்கரை இரவில் ,மிக அழகாக உள்ளதென 
 
நிலவை சுட்டிக்காட்டுகிறாய். நானும் ஆம் என்கிறேன்..
 
உன் விரல் நுனியைப் பார்த்தபடி..
 
 
 
 
இதயத்தை இடம் மாற்றிக்கொள்வோம்..
 
இரக்கமின்றி இறுக்கி அணையேன் ஹனி...
 
 
 
 
உன் கண்களின் கள்ளச்சிரிப்பின் வழியே கண்டு கொண்டேன்.. 
 
காதல் கொண்ட உன் மனதை..ராட்சசி.. 
 
லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
 
சிரிக்கும்போதும்,சிலிர்க்கும்போதும் அழகாய் இருப்பது 
 
பெண்கள் மட்டுமே...ஹ்ம்ம்ம் 

 



உன் ஒரே ஒரு சமாதான முத்தம் பெற வேண்டி 

சண்டையிட்டு,எண்ணிலடங்கா சமாதான முத்தங்களை 

உனக்கு அளிக்கிறேன் நான்..


 


உன் அத்தனை வலிகளையும் மறைக்க முயல்கிறாய்..

உன்னை கண்ணீர் சிந்த விடக்கூடாது என நினைக்கும் நான் 

கலங்காமல் இருக்க..லவ்யூடி ஹனி..

Wednesday, February 13, 2013

கண்களின் மொழி



நீ வித்தியாசமானவள் தான் ஹனி. நீ இருக்கும் இடத்தில் 

அழகு மட்டுமே தெறித்து சிதறுகிறது..

 

பேசாமல் அருகில் அமர்ந்து இருக்கையில் உன்னில் 

இருந்து வெளிப்படும் வாசனை கூட என்னிடம் 

காதலையே சொல்கிறது.

 



உன்னுடைய சந்தோஷம் தான் நான்...ஆனால் 

என்னுடைய எல்லாமுமே  நீ மட்டுமே ஹனி..

# புரிஞ்சிக்கோ பம்ப்ளிமாஸ் 

 


சூழ்நிலைகளால் எதிரில் இருக்கும் அனைவரும் "மனிதர்களாகவும்" 

தோன்ற,நீ மட்டும் சிறகுகள் இல்லாத தேவதையாய் 

தோன்றுகிறாய்  எனக்கு..ஆசிர்வதித்து அணைத்துக்கொள் 

ஹனி..ப்ளீஸ்

 

பசி தீர உண்ணும் என்னைக்காட்டிலும் , நான் பசியாறுவதைப்

 பார்த்துப் பூரிக்கும் உன் கண்களிலே தான் தேவ திருப்தி 

# லவ்யூடி ஹனி..

 


காதல் வழிய நீ பேசும் தருணங்களில் என் காதுகள் 

அதைக் கேட்பதேயில்லை..என் கண்களிரண்டுமே 

பார்க்கவும் , கேட்கவும் செய்கின்றன...

#அவ்வளவு அழகு ஹனி நீ..



 


எனக்கு என்ன தேவை என்பது நான் சொல்லாமலே உனக்கு 

தெரிவது ஆச்சர்யம் இல்லை அது எனக்கு தேவையான 

நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறாயே அது தான்  ஆச்சர்யம் ..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..

 


பிரிவுக்கு பின் வரும் சந்திப்பில் , கண்களில் நீருடன் துடிக்கும் 

உன் உதடுகளின் துடிப்பிலே தானடி என் உயிர் 

இன்னும் துடித்துக்கொண்டு இருக்கிறது..கட்டி 

அணைத்துக்கொள் ஹனி.




கோபத்தின் மிகுதியில் போடி என்கிறேன்..கண்களில் நீருடன் 

நீயும் வாடா என்கிறாய்..#அதிரப்பள்ளி கூட்டிப்போயி 

தள்ளி விட்டுடுவா போலேயே..அவசரப்பட்டுடனோ..?அவ்வ்வ்வ்….



 
 
ஏதோ ஒரு நாட்டில் , ஏதோ ஒரு மொழி பேசித் திரிந்த 
 
என்னை , கண்களின் மொழி பேசி காதல் தேசத்தில் 
 
அலைய வைத்தாய்..# ஐயாம் லவ்விங் பெங்காலி பிகர்..

Wednesday, February 6, 2013

ஹனி




என்னை உணராத உன் கோபங்களைக் காட்டிலும்,என் நலனுக்காக 

நீ என்னை விட்டு விலகுவதே அதிகம் வலிக்குதடி..# ஹனி பெயர்ச்சி..

 


சுற்றியுள்ள பிரச்சினைகளுக்காக என்னை விட்டு விலகும் நீ, 

நீ விலகுவதால் நமக்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள் 

குறித்து சிந்திக்க மறந்தது ஏனோ..? பைத்தியக்காரி..

 # ஹனி பெயர்ச்சி..

 


எதுவாயினும், அதை எனக்கு முதலில் நீயே தரவேண்டுமென 

ஆசைப்படுவாய்..அதற்காக மரணவலியையும் நீயே 

தரவேண்டுமா..?# ஹனி பெயர்ச்சி..

 



நீ என்னைப் பிரிந்து போய்விடுவாய் என நான் என்றுமே 

பயப்பட்டதில்லை..ஆனால் என்னைப் பிரிந்து நீ எப்படி 

இருப்பாய் என்றே அஞ்சுகிறேன்..# ஹனி பெயர்ச்சி..

 


"என்னை விட்டுப் போடா" என்றே சொல்கிறாய் நீ..பைத்தியக்காரி.. 

என் மீதான உந்தன் காதல் மீது எனக்கு நம்பிக்கையும்,உனக்கு 

பயமும் இருப்பதே அதற்கு காரணம் என்று தெரிந்தும் நான் 

எப்படி உன்னைப் பிரிய….?

 



என் மீது நீ கொண்ட அதிகப்படியான காதலின் சுமை தாங்காமல், 

என்னைப்பிரிகிறேன் என்று சொல்வது என்ன நியாயம் ஹனி..? 

# ஹனி பெயர்ச்சி..

 


"நான் உனக்கு வேண்டாம்டா" என்றே சொல்லும் நீ..ஒருமுறை 

கூட "நீ எனக்கு வேண்டாம்டா" என சொன்னதே இல்லை..

உன்னை விட்டு நான் எங்கேடி செல்ல..? பைத்தியக்காரி..

# ஹனி பெயர்ச்சி..

 



"என்னை மறந்து விடு" என சொல்லத் துணிந்த நீ,அதை என் 

கண்களை பார்த்துக் கூற மறுப்பது ஏன் என புரிந்தும் நான் 

உன்னை விட்டு எப்படி விலக பம்ப்ளிமாஸ்..? # ஹனி பெயர்ச்சி..

 



நீ இல்லாத என் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று 

நினைப்பதை விட…ஏன் இருக்க வேண்டும் என்று 

நினைக்க ஆரம்பித்துவிட்டேன்..என்னைக் காப்பாத்து 

ஹனி..ப்ளீஸ்..

 



எனக்குள் இருந்த என் காதலை நீயே கண்டெடுத்து விட்டு,

இப்போது அதை நீயே தொலைக்கவும் போகிறாயா..? 

சொல்லுடி பம்ப்ளிமாஸ்..

Monday, January 28, 2013

தேநீர் தேவதை



நீ வருந்தக்கூடாது என நானும்,எனக்காக நீயும் மகிழ்ச்சியாய் 

இருப்பது போல நடித்துக்கொண்டு இருக்கிறோம்.. 

பொய்யாய் நாம்..நமக்கிடையில் உண்மையாய் / ஊமையாய் காதல்..




காதல் வழியும் உன் கண்களின் ஒளியே காயம் பட்ட 

என் உயிரின் வளி..(ஆக்ஸிஜன்) 


உன்னை சமாதானப்படுத்த கவிதைகளை தூது அனுப்புகிறேன் 

நான்.. என்னை சமாதானப்படுத்த கண்ணீருடன் காதலை 

தூது அனுப்புகிறாய் நீ..# ஹ்ம்ம்..கெட்டிக்காரிடி நீ ஹனி..
 



என் மீதான உந்தன் காதலை மறைக்க,என் கண்களைப் 

பார்ப்பதை தவிர்த்து காற்றுக்குள் ஒளிந்துக்கொள்ளும் 

வித்தையை எப்படி கற்றாய் ஹனி…?

 



சற்று அதிகமாக பால் கலந்த தேநீர் நிறத்தில் இருக்கும் 

ஒரே தேவதை, நீ மட்டுமே ஹனி..லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 



என்னுடைய இதயம், காதலால் முழுமையடயவில்லை என்று 

எனக்கு நெடுநாள் வருத்தம்..உன் கண்களைக் கண்டதும் தான் 

காதலின் முழுமை அடைந்த இதயத்தை உணர்ந்தேன்..

லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 



சூரிய வெளிச்சம் பெற்ற நிலவை அனைவரும் நேசிப்பது

போல..மகிழ்ச்சியையும்,காதலையும் நான் உன்னிடம் 

பெற்றே பிரதிபலிக்கிறேன் என தெரியாமல் 

என்னைக் கொண்டாடுகிறார்கள்..

 



எந்த நேரம் உன்னை நான் நெருங்கினாலும் உன்னிலிருந்து 

காதல் வீசிக்கொண்டே இருக்கிறது..என் மீது..லவ்யூடி ஹனி..

 



இத்தனை அழகையும் நீ ஒருத்தியே வைத்துக்கொள்வது 

தவறு ஹனி.. ஒரு குட்டி தேவதைக்குக் கொடுப்போம்..வா..!!!

 



கண்கள் முழுக்க காதலை நிரப்பிக்கொண்டு, வெளிவரத் 

துடிக்கும் வார்த்தைகளை கொஞ்சம் விழுங்கி பின் நீ பேசும் 

அழகைக் காணவேணும் உன்னுடனே இருந்துவிடுகிறேன் ஹனி..

Friday, January 11, 2013

கறுப்புக் கற்றைகள்




நீ கூந்தல் உலர்த்தியதை பார்த்த கணம் முதல், என் 

உலகின் கொடி "கறுப்புக் கற்றைகள்" என்றானது..

 


மனது முழுக்க காதலுடன் ஆண்மகனாய் உன்னை நெருங்கும் நான், 

உன் கருவிழிகளையும்,புன்னகையையும் கண்டவுடன் 

மருண்டு நிற்கும் சிறுவனாகிறேன்..# ராட்சஸி.. லவ்யூடி ஹனி..

 



நீ ஒவ்வொரு முறையும் வார்த்தைகளை விழுங்கி விழுங்கி 

பேசுகையில், உன்னை விழுங்கிவிடலாம் எனக் 

கூட யோசித்திருக்கிறேன்..

#ஹ்ம்ம்..அழகென்ற சொல்லுக்கு ஹனி..

 


உன்னைக்கண்டு திரும்பிய பின் நான் கண்களை 
மூடுவதேயில்லை.. இமையும்,இமையும் சேரும் இடத்தில் 
என் இதயம் துடிக்குதடி..உன்னை மீண்டும் காண..

 

நான் சில "பொய்களால்" உன்னை வர்ணிப்பது தெரிந்தும்,
நீ "உண்மையாய்" காதலை மட்டுமே கண்களில் காட்டுகிறாய்..
#லவ்யூடி ஹனி..

 

பூங்காவின் இருக்கையில்,ஒரு மூலையில் நீயும் மறு 
மூலையில் நானும்..நமக்கிடையே யார் அமர்வது என 
காற்றும்,காதலும் சண்டையிட முடிவில் வென்றதென்னவோ 
காதல் தான்..

 

"ஒருவருக்கொருவர் நம்மை பிணைத்திருப்பது காதலா..?"
என்கிறாய்..இல்லை ஹனி.. நாம் தான்.. உனக்குள் 
இருக்கும் நானும்..எனக்குள் இருக்கும் நீயும்...

 

நீ என்னுடன் இருக்கும் நாட்களில் பகலின் நீளம் குறைந்தும் , 
இல்லாத நாட்களில் இரவின் நீளம் நீண்டும் இம்சிக்கிறது 
என்னை..# MISS YOU HONEY.. 
நீ இன்றி தனியாய் இருக்கும் என்னை நோக்கி நாளுக்கு நாள் 
சூரியன் நெருங்கி வருவது போன்று ஒரு 
தவிப்பு..நிலாப்பெண்ணே..நெருங்கி வந்து என் வெப்பம் 
தனியேன் ஹனி..

 
பலரும் பலதை தொலைத்து பின் கண்டுபிடிப்பார்கள்..
நானோ தொலைக்காத என் காதலை கண்டுபிடித்துவிட்டேன்..
உன் கண்களில்..# லவ்யூடி ஹனி..

Sunday, January 6, 2013

சிதறும் காதல்



காதலைத் தொலைப்பவர்கள் மத்தியில் நான் சற்றே

வித்தியாசமானவன்.. என் காதல் உன்னிடம் தான் இருக்கிறது 

என்று தெரியும்.. நான் தான் தொலைந்து விட்டேன்..

உன் கண்களில்..

 


உறவுகளுக்காக சுயம் தொலைத்து வாழும் நான்..

என் சுயத்தினால் கண்டு கொண்ட ஒரே உறவு..

நீ மட்டுமே ஹனி..# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 



வலிகளை மறைத்து நடித்துப் பழக்கப்பட்ட நான்..

உன்னிடமும் நடிக்கிறேன்..உனக்கு தெரியும் என அறிந்தே..

மவுனமாய் நீ..மரணத்தை நோக்கி நான்..

 


காற்றைக் கண்டதும் வெடித்து சிதறும் நீர்க்குமிழ் போல, 

உன் கண்களைக் கண்டதும் என் காதல் சிதறுதடி..

 


உடலைத் துளைத்து வெளியேறும் உன் கோபப் பார்வையைக் 

கூட என்னால் தாங்க முடியும்..ஆனால் அதீத காதல் 

கொண்டு நீ என்னைப் பார்க்கும் பார்வையில் கரைந்தே 

விடுகிறேன் நான்..# ராட்சஸி..லவ்யூடி ஹனி..

 


நீ கண்களில் சிரிக்கும் ஒவ்வொரு முறையும், அந்த சிரிப்பு 

உடனே என் இதயத்துக்கு சென்று ஒரு துடிப்பை தவறவிட 

செய்கிறது..# ராட்சஸி..

 


எனக்கும் உனக்கும் இடையில் வெறும் காற்று இருந்ததாக 

நினைத்ததால் நீ என்னைப் பார்க்கவில்லை..காதல் 

இருந்ததாக நினைத்ததால் நான் இமைக்கவே இல்லை..

 



நீ இருக்கும் இடத்தில் உன்னால் சற்று ஒளி 

கூடியே இருக்கிறது..

 



நீ கோபமாய் என்னைப் பார்க்கும் தருணம்..துடிக்கும் இதயம் 

ஏனோ விலா எலும்பில் விட்டு விட்டு அடிக்குதடி..

# அப்படி பார்க்காதே ஹனி..



 


உனக்காக காத்திருக்கையில் நகர மறுக்கும் கடிகார முட்களை 

விட, உன் மீதான என் காதலின் சுமையே அதிகம் 

அழுத்துகிறது ஹனி..

Thursday, January 3, 2013

கல்லாதது காதலளவு..


இரவும் , பகலும் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது 
 
என்பதை எப்படி கூற முடியாதோ..அது போன்றே 
 
நம்மிடையே காதல் உண்டான தருணமும்..
 
 
 
"எப்போதும் காதல் பற்றியே பேசுகிறாயே..உனக்கு வேறு 
 
எதுவும் தெரியாதா" என்கிறாய்..ஆமாண்டி ஹனி...
 
நான் கற்றது என் காதலளவு மட்டுமே..கல்லாதது உன் காதலளவு..

 
 
என்னைப் பிரியும்போதெல்லாம் தண்ணீரில் விழுந்த 
 
வெள்ளிக்காசைப் போல பளபளக்கும் உன் கலங்கிய 
 
கண்களைக் கண்ட பிறகு நான் எப்படி உன்னை விட்டு செல்ல..? 
 
# லவ்யூடி ஹனி..

 
 
 
நீ வந்ததை கவனிக்காதது போல நடிக்கவே அதிகம் 
 
கவனமாய் இருக்கிறேன்.. ஆனால் கண நேரத்தில் என் 
 
காதல் என்னை ஜெயிக்கிறது..# ரொம்ப வீக்கா இருக்கேனோ ஹனி..

 
 
 
ஐஸ் தரையில் நடப்பது போல,நீ கவனமாய் எடுத்து வைத்த 
 
ஒவ்வொரு அடியும்.. ஏனோ எனக்குள் சிலிர்ப்பை உண்டாக்குதடி..
 
# அழகுடி நீ ஹனி..

 
 
காதல் கொண்டு நீ பேசும் தருணங்களில் உன் உதடுகள் 
 
அசைவதை வைத்தே நீ பேசுகிறாய் என உணர்கிறேன்..
 
உன் காதலைக் காற்றுக்குக் கூட தராமல் எனக்கு 
 
மட்டுமே தரவேண்டுமோ..? ஹ்ம்ம்..# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 
 
என்னை சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும், நான் 
 
இயங்கிக் கொண்டிருப்பது என்னவோ உன் காதலால் 
 
தான்..# லவ்யூடி ஹனி..

 
 

நல்லவேளை என் இதயம் பாதுகாப்பாக உள்ளே இருக்கிறது..
 
இல்லையெனில் கண்கள் தளும்ப காதலை வைத்துக்கொண்டு 
 
நீ "ப்ளீஸ்டா" என்று கொஞ்சிய கணத்தில் அது தானாக 
 
உன் கைகளுக்குள் அடங்கி இருக்கும்…# அழகு ராட்சஸி…

 

உன்னோடு பேசுகையில் மட்டும் ஏனோ என் வாயில் 
 
இருந்து வார்த்தைகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு 
 
வெளிவரத் துடிக்கின்றன..# லவ்யூடி ஹனி..



 

உனக்கு / நமக்கு நல்லது என நீ எடுக்கும் அத்தனை 

முடிவுகளையும் ஏற்கிறேன். எனக்கு நல்லது என நீ 

எடுக்கும் முட்டாள்தனமான முடிவை ஏற்கமுடியாது 

என்னால்..# ஹனி பெயர்ச்சி…

Monday, December 31, 2012

ஹனி.. இச்சை செயல்..



என்னை மறந்துவிட்டாயா என்கிறேன்..

" நான் இன்னும் உயிரோடதான்டா இருக்கேன் " என்கிறாய்..

# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..



 


உன்னுடன் பேசவேண்டாமென நினைக்கிறேன்..கைகள் 

ஏனோ உன் அலைபேசி எண்களை தானாக அழைக்கிறது 

என்கிறாய்.. இது அனிச்சை செயல் இல்லை 

ஹனி.. இச்சை செயல்..


 


உன்னைப்பிரிய எத்தனிக்கையில் உன் குரல் கேட்டவுடன் 

மனம் மாறுகிறேன் என்கிறாய்.. பைத்தியக்காரி.. 

இப்போது புரிகிறதா..? எதுவாயினும் என் கண்களைப் 

பார்த்து சொல் என்பதன் அர்த்தம்..



 


 
என்னிடம் அத்தனை உண்மைகளையும் மறைக்காமல் கூறும் நீ,

நான் உனக்குள் இருப்பதை மட்டும் வெளிப்படுத்த மறுக்கிறாய்..

# ராட்சஸி..

 

 
எனக்காக வலிகளைத் தாங்கும் நீ,அதையே நான் செய்தால் 

மட்டும் ஏற்க மறுக்கிறாய்..உன்னை விட்டு நான் எங்கேடி 

செல்ல…? # பம்ப்ளிமாஸ்..


 


மிகவும் குளிர்ச்சியாக சூரியன் தோன்றிய தருணம் நீ 

என்னுடன் கடற்கரையில் இருந்த நேரம்..என்னைப்பிரிந்த 

ஐந்து நிமிட இடைவெளியில் அதே சூரியன் உக்கிரமாகவும் 

தோன்றுதடி..

 



நீ முத்தமிட்ட பிறகு நீண்ட நேரம் என் நாவில் ஏதோ ஒரு 

இனிப்பு கரைந்துக் கொண்டே இருக்கிறது.. முடிந்து விடும் 

முன் மீண்டும் ஒன்று தா..!!!

 



பத்து குதிரைகள் ஓடும் மைதானம் போல மாறுகிறது 

என் இதயம்..நீ முத்தமிட என்னை நெருங்கும் ஒவ்வொரு முறையும்..


 


ஆழ்கடலின் அமைதியும் அதீத அழுத்தமும் உண்டாகும் 

தருணம்..நீ என்னை முத்தமிட்ட கணம்..

 


மரணவலியில் துடிக்கிறேன்..உன் மார்பு சூட்டில் என்னைப் 

புதைத்து மருந்திடேன் ஹனி.. பிழைத்துவிடுவேன்..

Saturday, December 29, 2012

முற்றுப்புள்ளி முத்தம்


 
கண்களில் சிரித்து உதட்டில் நீ தரும் முத்தத்துடன் 

உதயமாகும் ஆசிர்வதிக்கப்பட்ட என் தினங்கள்,இரவினில் 

இறுக்கமான அணைப்பின் வழியே உன் 

கருங்கூந்தலில் அஸ்தமிக்கின்றன..


 
என் நினைவுப்பாசிகளை தெளிய வைக்கும் படிகாரமாய் 
 
உன் பார்வை..


உன் அருகில் வர எத்தனிக்கையில் ,ஏதோ ஒன்று என் 
 
கால்களைக் கட்டி இருக்கும் கயிறாய் இறுக்க..உன் 
 
புன்னகைக்கும் பார்வையில் கட்டவிழ்க்கிறாய் நீ.
 
#தேவதை ஸ்த்ரீயடி நீ..



பாழடைந்த கிணறாய் தோன்றும் இந்த 
 
வாழ்க்கையில்,படிகளெனத் தோன்றுதடி உன் பாதச்சுவடுகள்..



தென்னங்கீற்றுகளுக்கு இடையே தோன்றும் சூரிய ஒளியாய்..
 
உன் கற்றைக்கூந்தலின் வழியே என் மீது சிதறுதடி உன் 
 
வெட்கப் புன்னகைகள்..



உறைந்த கிணறாய் இருந்த என்னுள்..சிறுவர்களின் 
 
உற்சாகக் கூச்சலாய்  உன் சிரிப்புச் சத்தங்கள்..


நீ  குளித்து முடித்து வருகையில் பாதி ஈரத்தை தூவாலையால் 
 
நீயும்,மீதி ஈரத்தை என் விழிகளால் நானும் துடைக்கிறோம்


பூக்களால் செய்த உன் உடலில் பனித்துளிகளாய் 
 
தோன்றும் நீர்த்திவலைகள்.. என் உதடுகளால் ஒத்தி 
 
எடுக்கிறேன் வா.!!!

நீ கூந்தல் உலர்த்துகையில் தெறிக்கும் நீர்த்துளிகள்.. 
 
என் மீது மட்டும் பொழியும் இனிமை சாரல்..

 

நம் உரையாடலின் முற்றுப்புள்ளியாய் முத்தம் 
 
வைக்கிறேன் நான்..மேலும் சில முத்தங்கள் தந்து 
 
அதை தொடர் வாக்கியமாய் மாற்றுகிறாய் நீ 
 
# லவ்யூடி பம்ப்ளிமாஸ்

Monday, October 8, 2012

காதல் ரேகை




நண்பர்கள் கூட்டத்தில் நான் இருக்கையில்,சிறு பறவை 

போல என்னைக் கடந்து செல்கிறாய் நீ.. என் உடலை விட்டு 

உயிர் மட்டும் தொடர்கிறது உன்னை..


நீ அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் அழகாய் 


ஜொலிப்பது நீ போட்டிருக்கும் முகப்பருக்கள் தான்.. 

மான்களை விட புள்ளி மான்கள் தானே எப்போதும் அழகு..




பூமியில் இருந்து அழிந்துவிட்ட ஒரு தொல் விலங்கை 


போல என் காதலும் மாறிவிடுமோ என அஞ்சுகிறேன்.. 

என் காதலைக் காப்பாத்து ஹனி..




அதிகாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் பட்டு 


தெறிக்கும் பனித்துளிகளை போல, உன் அதரங்களின் 

அரை முறுவல்களில் பட்டு தெறிக்கிறது என் காதல்..




உன் கண்களின் வெளிச்சம் கொண்டே என் காதல் ரேகை..


 உன் அரவணைப்பின் சுகம் கொண்டே என் ஆயுள் ரேகை..


பொய்களை காப்பதை விடவும் உண்மைகளை மறைப்பது 


மிகவும் கடினம்.. லவ்யூடி ஹனி..


கண்களுக்கு பின்னால் காதல் சமுத்திரத்தை எப்போதும் 

தயாராக வைத்திருக்கிறாய் நீ..நீ நெகிழும் தருணம் 

அதை வெளிப்படுத்துகிறாய் என் மீது..நான் தான்

 நிலைகுலைந்து போகிறேன்..அந்த காதல் சமுத்திரத்தில்..



உன்னை வெல்கிறேன் நான்..என்னை வெல்கிறாய் நீ..


நம்மை வெல்கிறது காதல்..



என் சுவாசம் கூட முழுதாய் வெளிப்பட மறுக்கிறது..


நீ என்னுடன் இல்லாத நேரங்களில்..



கடவுள் மீதும்,காதல் மீதும் முழுதாய் நம்பிக்கை 

வை என்கிறேன்..

"ம்..நம்புறேன்டா.. உன்னை மட்டும்" என்கிறாய்.. 

லவ்யூடி ஹனி..

Thursday, October 4, 2012

ராட்சசி..



என் வலியை விட,உனக்கு வலிப்பதை என்னால் தாங்க 

முடியாது என தெரிந்தும் அடிக்கடி ஊடல் கொ(ல்)ள்கிறாய்..

# ராட்சசி..



உனதருகில் இருக்கையில் மட்டும் என் இதயம் வேறு 


விதமாய் துடிப்பது ஏனோ..?



பொங்கிவரும் காதல் கொண்டு நீ என்னைப்பார்த்து 


கண்களால் சிரிக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் 

ஒரு துடிப்பை தவற விடுகிறது..



நீ என்னை முத்தமிட நெருங்கும் அந்த கணம் 


எனக்குள் இன்னொரு இதயம் முளைக்குதடி..



உன்னைக்காணும் வரையில் சத்தமின்றி சூரியக்கடிகாரமாய் 


துடித்த என் இதயம்,உன்னைக்கண்ட கணம் முதல் 

அத்தனை இசைக்கருவிகளின் ஒலியோடு துடிக்கிறது.

மிக அழகாய்..




நீ தலைக்குளித்து ஈரக்கூந்தல் உலர்த்தும் காலை வெயில் 


நேரம் எனக்கு மட்டும் தெரியுதடி..அழகாய் ஒரு வானவில்..



என்னிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உன்னிடம் 


பதில் இருக்கிறது…சமயங்களில் கேட்காத கேள்விகளுக்கும்..




நீ என்னை நெருங்கி வரும் தருணம் மட்டும் நியூட்டனின் 


மூன்றாம் விதி பொய்த்துவிடுகிறது..

# அவ்வளவு காஞ்சு போயி கிடக்கிறேன்..



ஆள் அரவமற்ற அறையின் ஒரு ஜன்னலின் வழியே நுழைந்து 


மறு ஜன்னலின் வழியே வெளியேறும் சருகாய் என் காதல்..

 உன்னுள் நுழைந்து வெளியேறும் முன் கவனித்துவிடேன் ஹனி..

Sunday, September 30, 2012

ஒற்றை முத்தம்..




"உன் மனதிற்கு" விருப்பம் போல 

செயல்படு என்கிறேன்.."ஹ்ம்ம்..சொல்லுடா , 

என்ன பண்ணனும்" என்கிறாய்..லவ்யூடி ஹனி…



பிரிவின் வலியை பிரயத்தனப்பட்டு , பல வார்த்தைகளில் 

உனக்கு சொல்கிறேன் நான்..அதையே எளிதாக , 

ஒரு பார்வையிலும்,அணைப்பிலும் எனக்கு 

உணர்த்திவிடுகிறாய் நீ..


மோகத்தின் மிகுதியில் நான் தரும் அத்தனை 

முத்தங்களையும் அற்பமாக்கி விடுகிறது.. காதலுடன் 

நீ கொடுக்கும் ஒற்றை முத்தம்..



நீ இருக்கும் இடத்தில் நீ மட்டுமே சிறப்பு..



நமக்கிடையேயான இடைவெளியை முத்தத்தால் 


நிரப்புகிறேன் நான்..மவுனத்தால் நிரப்புகிறாய் நீ..



முரண்டு பிடிக்கும் உன்னை அடக்கும் 


அங்குசமாய் என் முத்தம்..



அடிக்கடி சந்திக்காமல் இருப்பது உன்னை 


தவிர்ப்பதற்காக அல்ல..என்னைப்பிரிகையில் நீ 

தவிப்பதைக் காண முடியாததால் தான்..



உன் பெயரில் உள்ளே ஒரே காரணத்தினால் 

வல்லினங்களும் மெல்லினங்களாக மாறி விடுகின்றன..



சனியின் பார்வை உக்கிரமாக இருக்கிறதாம் 


என் ஜாதகத்தில்..ஹனி..காதல் வழியும் கண்களுடன் 

என்னை ஒரு முறை பாரேன்..சாதகமாக மாறிவிடும்..



உன்னுடன் சண்டையிட முயற்சித்து.. உடனே கலங்கும் 


உன்னை சமாதானப்படுத்துவதில் முடிக்கிறேன்…

ஒவ்வொரு முறையும்...

Tuesday, September 25, 2012

தேவதை




முத்தத்திலேயே நன்றி சொல்லவும்,மன்னிப்பு கேட்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..லவ்யூடி ஹனி…



மகிழ்ச்சியை மட்டும் நம்முடையது என என்னும் நீ,


 வருத்தங்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்வது ஏனோ..?



என்னை எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் செயலிழக்க 


செய்வது உன் சிரிப்பும்,அழுகையும்..



என் மகிழ்ச்சிக்காக உன் வலியை மறைத்து சிரிக்கிறாய்.. 


நீ என்னுள் கலந்தவள் என்பதை மறந்து..பைத்தியக்காரி..



காரணம் தெரிந்த உன் கோபம் தரும் வலியை விட..

ஏதும் சொல்லா மவுனம் என்னைக் கொல்லுதடி..

# ஹனி பெயர்ச்சி..



உன்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் 

விடியலே வேண்டாம் என என்னும் நான், பேசி 

முடித்தவுடன் விடியலுக்காக காத்திருக்க தொடங்குகிறேன்.. 

உன் முகம் காண…



யாருக்கும் அடங்காமல் திமிராய் திரிந்தேன்..


அன்பால் அடக்கி , காதலால் கட்டுப்படுத்தி விட்டாய்..



நான் உன்னை அடித்த சோகத்தில் அழுகிறாய் நீ.. 

உன்னை அடித்ததால் என் மேல் உண்டான கோபத்தில் 

அழுகிறேன் நான்..



நான் காதல் கொண்டு தொடுவதற்கும்,மோகம் கொண்டு 

தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து அதற்கேற்ப 

முத்தங்கள் அளிக்கிறாய்..தேவதை ஸ்த்ரீயடி நீ..



உனக்காக என் விருப்பங்களை "மாற்றிக்கொள்ள 

முயற்சிக்கிறேன்' நான்.. எனக்காக "அப்படியே 

ஏற்றுக்கொள்கிறாய்" நீ..தேவதை ஸ்த்ரீயடி நீ..