அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
நீ வித்தியாசமானவள் தான் ஹனி. நீ இருக்கும் இடத்தில்
பேசாமல் அருகில் அமர்ந்து இருக்கையில் உன்னில்
இருந்து வெளிப்படும் வாசனை கூட என்னிடம்
உன்னுடைய சந்தோஷம் தான் நான்...ஆனால்
என்னுடைய எல்லாமுமே நீ மட்டுமே ஹனி..
சூழ்நிலைகளால் எதிரில் இருக்கும் அனைவரும் "மனிதர்களாகவும்"
தோன்ற,நீ
மட்டும் சிறகுகள் இல்லாத தேவதையாய்
தோன்றுகிறாய் எனக்கு..ஆசிர்வதித்து
அணைத்துக்கொள்
பசி தீர உண்ணும் என்னைக்காட்டிலும் , நான் பசியாறுவதைப்
பார்த்துப் பூரிக்கும் உன் கண்களிலே தான் தேவ திருப்தி
காதல் வழிய நீ பேசும் தருணங்களில் என் காதுகள்
அதைக்
கேட்பதேயில்லை..என் கண்களிரண்டுமே
பார்க்கவும் , கேட்கவும்
செய்கின்றன...
எனக்கு என்ன தேவை
என்பது நான் சொல்லாமலே உனக்கு
தெரிவது ஆச்சர்யம் இல்லை அது எனக்கு தேவையான
நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறாயே அது தான் ஆச்சர்யம் ..
பிரிவுக்கு பின் வரும் சந்திப்பில் , கண்களில் நீருடன் துடிக்கும்
உன் உதடுகளின் துடிப்பிலே தானடி என் உயிர்
இன்னும் துடித்துக்கொண்டு
இருக்கிறது..கட்டி
அணைத்துக்கொள் ஹனி.
கோபத்தின் மிகுதியில் போடி என்கிறேன்..கண்களில் நீருடன்
நீயும் வாடா
என்கிறாய்..#அதிரப்பள்ளி கூட்டிப்போயி
ஏதோ
ஒரு நாட்டில் , ஏதோ ஒரு மொழி பேசித் திரிந்த
என்னை , கண்களின் மொழி பேசி
காதல் தேசத்தில்
அலைய வைத்தாய்..# ஐயாம் லவ்விங் பெங்காலி பிகர்..
No comments:
Post a Comment