Showing posts with label நம்ம மாப்ளே.. விஜய்.... Show all posts
Showing posts with label நம்ம மாப்ளே.. விஜய்.... Show all posts

Wednesday, November 12, 2014

கம்யூனிசக் கத்தி..



எப்பவுமே கதை கேட்காதவரு இந்த படத்தில தான் கேட்டு 
 
இருப்பாரு போல..நல்லவேளை கத்தி அவ்ளோ 
 
மொக்கையா இல்ல..



கதிரேசனோட சுருக்கம் கத்தியாம்.. ஒருவேளை சுந்தரேசனு 
 
பேரு வச்சி இருந்தா படம் பேரு சுத்தினு இருக்குமோ..?



து.ம.து படத்துல வர்ற பாத்ரூம் அழுகை போல இல்லாம 
 
சுமாராவே அழுது இருக்காரு..இருக்காத பின்னே..?
 
சாரோட சமீபத்திய படங்களைப் பார்த்து நாம கதறி 
 
அழுததை கவனிச்சு இருக்காருல..



ப்ரோ..ஒரு சின்ன வேண்டுகோள்.. கண்ணை சிமிட்டி 
 
வாயைக் கோணி வசனம் பேசி காமெடி ட்ரை 
 
பண்ணாதீங்க ப்ரோ..கஷாயம் குடிக்கிற மாதிரி 
 
செம கடுப்பா இருக்கு..



கோலா கம்பெனிக்காரன் தான் இந்த வேலை 
 
பார்த்து விட்டுட்டான்..நகைக் கடைக்காரன் மேல 
 
ஏதாவது கேஸ் இருக்கானு பார்த்துக்குங்க ப்ரோ.. 
 
அப்புறம் ஈமு கோழி கதை ஆகிட போகுது..




நீங்க விளம்பரப்படம் நடிக்கிறதை நிப்பாட்டிட்டு கதைக் 
 
கேட்டுட்டு நல்ல படமா நடிங்க ப்ரோ..அது போதும்..
 
பயபுள்ளைங்க சமாளிக்க படாதபாடு படுறானுங்க பாவம்..



ப்ரோ..நீங்க எதுக்கும் சொல்வதெல்லாம் உண்மை,நீயா நானா
 
ஷோவெல்லாம் பாருங்க..ரியாக்ஷன் எப்படி குடுக்கணும்னு
 
தெரியும்..இன்னொரு விஜயை பார்க்கும் போது நீங்க கொடுத்த
 
ரியாக்ஷன்ல காலையில சாப்பிட்ட இட்லி வெளிய வர்றது 
 
போலவே இருந்துச்சு எனக்கு..



மக்கள் பிரச்சினையைப் பேசுற சமூகப்படம்னு சொன்னதும் 
 
எனக்கு புதிய கீதை,மதுர,தலைவா லாம் ஞாபகம் வந்து 
 
கிலி ஆயிடிச்சு..நல்லவேளை..நன்றி ப்ரோ..


மோடி கூட கை குலுக்கி,ராகுலை பார்க்கிறேன்னு
 
பீதியக்கிளப்பி அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கி அப்படியே
 
கம்யூனிசம் பேசி குழப்பி..#ண்ணா.. சூப்பர் ஸ்டார் ஆக 
 
அரசியல் தகுதி வந்துடுச்சிங்கண்ணா..

Saturday, January 18, 2014

கம கம பிரியாணியும் , இரண்டாம் நாள் புளி சோறும்..


கம கம பிரியாணி



ரெண்டு படமும் ஒண்ணா வந்ததுல எங்க இன்னொரு வில்லு ,

ஏகன் போல ஆயிடுமோனு ரொம்ப பயந்துட்டேன்..



நான் அப்பவே சொன்னேன் வீரம் னு  பேரு வச்சதுக்கு பதிலா  

காரம் னு  வச்சி இருக்கலாம்னு.. ஆனா இது டேஸ்ட்டான 

ஹைதராபாத் பிரியாணி..



ஹரிக்கு சரியான போட்டி இந்த சிவா தான்..எவ்வளவு அருவா , 

எவ்வளவு ஆட்கள்.. ஒரு குடும்பத்துல எத்தனை பேரு..



பொதுவா தல பஞ்ச் டயலாக் பேசினா எனக்கு கொஞ்சம் 

டர் ஆகும்..தமாசா ஆகிடுமோனு.. ஆழ்வார் , ரெட்னு அடி 

கொஞ்சம் பலம்ல.. 



ஆனா இதுல ஏகத்துக்கும் பஞ்ச டயலாக்..ஆனா ஒவ்வொண்ணும் 

ஜிந்தாக் தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாத் தத்தாக் 



டைரக்டருக்கு என்ன காண்டோ வேட்டில அழகா இருந்த 

அஜித்தை பாட்டுல கோட்டு போட்டு கோமாளி ஆக்கிட்டான்.. 

என்ன ரசனைடா உனக்கு.. பில்லா பார்க்கல நீ..



டிஸ்கவரில ஒருத்தன் போவானே அதை விட அருமையான 

காட்டுக்குள போயி பாட்டு வச்சி இருக்கான்..

மஞ்ச கலருல பேண்ட்டு வேற..



DSP காத்தாடி போல ஏண்டி பாட்டை ரீமேக் பண்ணி இருப்பாரே 

அந்த கருமத்தில பழைய கணக்கு பிள்ளை போல வேட்டிக்கு 

கோட்டு போட்டு ஆடவிட்டு இருக்கானுங்க 



தலையப்பத்தி எல்லாரும் தான் சொல்லிட்டாங்களே.. 

நான் இப்போ ஜொள்ளப்" போறது தமன்னாவைப் பத்தி 



தமிழ்நாட்டின் பெயரை தமன்னாடு மாத்த சொல்லி மீண்டும் 

ஒரு அறப்போராட்டமே பண்ணலாம்..எல்லாரும் தல 

வரும்போது சீட்டு நுனிக்கு வந்தா நான் தமன்னா வரும்போது..



சிறுத்தை படத்திலேயே சிலிர்க்க வச்சி இருந்தானுங்க டார்லிங்க..

வீரம் படத்தில தமன்னா  இன்னும் வீரியத்தோட இருக்கா..



ஒரு பாட்டுல மட்டும் கேவலமா மேக்கப் போட்டு காஞ்சுரிங் பேய் 

போல இருந்தா.. பால்கனியில இருந்து பார்த்தே பயந்துட்டேன்..



நேத்து நைட் ஷோ KG பிக் சினிமாஸ் ல பாதி பேரு

 தல னு  கத்துனானுங்க.. மீதி பேரு தமன்னான்னு கத்த சக்தி 

இல்லாம வாயில ஜொள்ளு வழிய பெருமூச்சு 

விட்டுக்கிட்டு இருந்தோம்.. 



வீரம்ல ஷேவ் பண்ண அஜித் பார்த்தா மனதை திருடி விட்டாய்

 பட அண்ணன் வடிவேல் கெட்டப் தோணுவது எனக்கு 

மட்டும் தானா..? அவ்வ்வ்வ் # எங்க ஆத்தா அப்பனுக்கு 

வேற அடுத்த வாரம் தானேடா ப்ரோக்ராம்மு 


இரண்டாம் நாள் புளி  சோறு



இப்போதான் ஜில்லா படம் பார்த்து முடிச்சேன் .. 

# இனி தூங்கினாப்போல தான் 


அட என்னத்த விமர்சனம் பண்ணிக்கிட்டு.. 

சுறா பார்த்தவுடனே வேட்டைக்காரன் தேவலாம்னு தோணுச்சு.. 

தலைவா பார்த்ததுக்கு இது எவ்வளவோ தேவலாம்..




என்னப்பா எதோ காஜலு பின்னாடின்னு ஏகப்பட்ட 

பில்டப் கொடுத்தானுங்க.. வெள்ளை டிரஸ் போட்ட ஒரு

 மழை டான்சுக்கு ஈடாகுமா..#ரொம்ப காஞ்சு

போயி இருப்பானுங்களோ 



ப்ரோ நீங்க டேப்பரா நடக்கிறதையும் , கண்ணை  சிமிட்டுறதையும் ,

ஐஸையும் அமிர்தாஞ்சனையும் ஒண்ணா தடவிக்கிட்டு 

பேசுவது போன்ற மாடுலேஷனையும் 

மாத்திட்டாலே போதும் ப்ரோ..




நம்ம டிம்மான் கும்கில கொம்பனுக்கு கொடுத்த மியூசிக்க 

ஆல்டர் பண்ணி அண்ணனுக்கு கொடுத்துட்டாரு போல..

ஹ்ம்ம்..NOT BAD NOT BAD 



வீரம்ல வந்த அஜித் வீடு தான் இதுல விஜய் தங்கச்சியோட புகுந்த வீடு..

# கருத்து - படம் பேரு தான் பட்டி பார்த்ததுனா வீட்டைக் 

கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா..



எல்லாரும் ப்ரோவ சக்தின்னு கூப்பிட்டா சம்பத் மட்டும் 

சரியா நந்தினு சொல்றாப்புல..#எனி உள்குத்து..



விஜயோட எந்த படத்திலயும் இல்லாம இந்த படத்தில

நிறைய குறியீடுகள் இருக்கும் போல..



போலிஸ பார்த்து யாரும் சிரிக்கக்கூடாதுன்னு சார் 

சொல்றப்பவையெ சிரிப்பு வந்துடுது.. சாரி ப்ரோ..



அமலா பாலுக்கு காக்கி சட்டைப் போட்டப்போ பால்வாடி 

புள்ளை போல இருந்துச்சு..காஜல் போடும்போது 

கான்வென்ட் புள்ள போல இருக்கு..

Wednesday, August 14, 2013

தலைவா ஆஆஆஆஆஆ



சந்துல சத்தம் அதிகமா இருக்கு ..பொதுவா ரெண்டு  விஜய் 

படத்திலையும்  கதையே இருக்காதே..அப்புறம் ஏன் 

இந்த சண்டை..? # சமாதானமா போங்கப்பா.. 



படம் சென்னையில தியேட்டர்ல ரிலீஸ் ஆகல..

ஆனா CD ல ரிலீஸ் ஆயிடுச்சு..




தமிழ்படத்துக்கு அப்புறம் அதிகமான படங்களோட சாயல் 

இதுல தான்..நாயகன்,பாட்ஷா,ஏன் இந்திரா உட்பட..

 


தமிழ்படத்துல கலாய்ச்சு காமெடி பண்ணி இருந்தாங்க..

இவனுங்க காப்பி அடிச்சி காமெடி பண்ணி இருக்கானுங்க.. 



என்ன  எழவுடா இது.. படம் தான் ரிலீஸ்  லேட்டாகுதுன்னு 

பார்த்தா அதைப் பத்தி பேசவும் எத்தனை தடங்கல்கள் எங்க ஆபிஸ்ல .. 



தலைவா படம் பார்த்த நாளில் சன்  டிவி ல சுறா படம்  

போட்டு இருந்தாங்க..அதையே பார்த்து இருக்கலாமோன்னு தோணுச்சு  




சுறா , வேட்டைக்காரன் மாதிரி "காவியங்கள்" கூட நடிங்க பாஸ்..

ஆனா தலைவா மாதிரியான "சமூகப்படங்கள்" வேணாம்..

ரொம்ப வலிக்குது. 



இதுல அமலா பாலுக்கு வேற யூனிபார்ம் போட்டு 

விட்டு வெறுப்பேத்துறானுங்க.. 


ஒரு உயிர் போயிடுச்சி..கருத்து சொல்லாம இருக்கலாமுன்னு 

இருந்தா விட மாட்டானுங்க போல.. 



எத்தனையோ மொக்கை படங்கள் பார்த்துட்டு நடைபிணமா 

வாழுற மக்களை நினைத்து பாருங்க பா..



படம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனா கண்டிப்பா அரை மணி நேர 

படம் கட் ஆகும்..இல்லைனா நிறைய இடங்களில் 

வசனக்கட்டு உண்டு..


தே போல Y.G மகேந்திரன் அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் 

படத்தில் ஆர்யா அண்ணனா வருவாரே அவங்க வீட்டுக்கு 

எல்லாம் கல்லடி கன்பார்ம். என்னா பில்டப்பு



விஜய் வீடை கோயிலாவும் அண்ணனை தெய்வம்னு சொல்லி 

ஒரு வசனம். காதுகளை இறுக்கமா மூடிக்கிட்டேன்.. 

அப்புறம் எப்படிடா படம் ரிலீஸ் ஆகும்


3 மணி நேரம் தவமாய் தவமிருந்த சேரனே 2 மணி நேரமா 
 
சென்னையில் ஒரு நாள்னு வந்துட்டாரு..இவனுங்க 3 மணி 

நேரம் மொக்கை போடுறானுங்க.



ப்ளாக் பஸ்டர் ஆகும்னு பார்த்தா கடைசியில 

பிளாஸ்டிக் பக்கெட் ஆயிடுச்சே..



தலைவா  படத்தில ஒரே ஆறுதல் டூயட் சாங் இல்ல.

அதனால தலையில கலர்கலரா நூடுல்ஸ் எல்லாம் 

கவுத்துட்டு எல்லாம் வரல..



மொத்தத்தில மாஸ் ஹீரோ னு சொல்லிட்டு இருந்த விஜயை 

தமாஸ் ஹீரோவா ஆக்கி விட்டுஇருக்கானுங்க..

Friday, April 1, 2011

இளைய தலைவலியின் அடுத்த பட ஆரம்ப பாடல்..


இந்த கருமத்தை நான் வேட்டைக்காரன் படம் 

ரிலீஸ் ஆகி சுறா ஷூட்டிங் ஆரம்பிச்ச போது 

எழுத ஆரம்பிச்சேன்..

ஆரம்பத்தில கொஞ்சம் கடுப்புல எழுதினாலும் 

அடுத்தடுத்து அவன் பண்ணப்போற படங்களை பத்தி 

நம்பிக்கை தரும் விதமா பேச்சு வருவதாலும்..

சரி சனியன் இப்பவாவது திருந்துச்சேனு கடைசியில 

பாவம் பார்த்து முடிச்சிட்டேன்..

தக்காளி..மறுபடியும் இவன் பழைய மாதிரி

ஆரம்பிச்சான்னா.. 

மக்களே..என்னை குத்தம் சொல்லாதீங்க.. 

நான் இவனை இன்னும் கேவலமா

பேச ஆரம்பிச்சுடுவேன்..


இதோ அந்த  ச( த ) ரித்திரம் வாய்ந்த பாடல்.. 





நான் கொருக்கு பேட்டை குமாருடா..

என் எதிர வந்தா நீ டமாருடா..

என் மூஞ்சி ரொம்ப சுமாருடா..

நான் வாய் தொறந்தா உதாருடா..







எங்கப்பனுக்கு நான் ஒரே புள்ளை..

கொடுப்பேன்டா நிறைய தொல்லை..

என் படம் எதுவும் நல்லா இல்லை..

ஆனா நீ சிரிச்சா உடைப்பேன்டா

உன் பல்லை..







மக்களுக்கு நான் இளைய தளபதி..

வில்லன்னுங்களுக்கு நான் என்னைக்குமே 

வாந்தி பேதி.

பட்டாசு வெடிச்சா அது தீபாவளி..

உண்மையில நான் ஒரு ஆகாவளி..




என் வசனத்தில பஞ்ச் இருக்கும்.. 

ஸ்க்ரீனை நோக்கி செருப்பு பறக்கும்..

இதுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்..

ஹோட்டல் ரூம்ல ஹீரோயினை

கொஞ்ச மாட்டேன்..




எனக்கு பலம் அது என் நடனம்..

அடுத்த படத்திலவாது ஆக்ஷனை விடணும்..

என் படத்தில இருக்காது கதை..

ஆனா நல்லா காட்டுவோம்டா

தமன்னா , அனுஷ்கா சதை..




சும்மா கொடுத்தானுங்க வாய்ப்பை..

சளைக்காம சொருகுறானுங்க ஆப்பை..

பெரிய இயக்குனர்களிடம் போடப்போறேன் நான் டாப்பை..

அதுவும் ஓடலைனா நான் ஒரு திராபை..




நடிக்கிறேன் நான் மூணுல ஒண்ணா.. 

இதையாவது ஒடவச்சிடுங்க ண்ணா.. 

பஞ்ச் சொல்லி படம் பார்க்கிறவங்களுக்கு

பாசக்கயிறை வீச மாட்டேன்.. 

ஆணழகன் அஜித் போல இனி அதிகம்

நான் பேச மாட்டேன்..






கண்ணை சிமிட்டி இனி காமெடி பண்ணி 

நடிக்க மாட்டேன்.. 

பல்லை கடிச்சிகிட்டே வசனம் பேசி உங்க 

கொரவளைய கடிக்க மாட்டேன்..

தேவை இல்லாம ஓவர் ஆக்டிங் பண்ணி 

துடிக்க மாட்டேன்..

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பன்னி வாயில

வச்ச பாம் மாதிரி  வெடிக்க மாட்டேன்..






நானும் நல்லாத்தான் நடிச்சேன் ஒரு காலத்தில..

ரமணா  தான் என்னை தள்ளி விட்டான் இந்த கூவத்தில.. 

அதுல பண்ணேன் ஒரு கேரக்டர் மெக்கானிக்கா..

அப்ப புடிச்சது ஆக்ஷன் சனி என்னை செம டெக்னிக்கா..





வரிசையா படம் எடுத்தான் பேரரசுனு

ஒரு டாபரு.. 

அன்னைக்கே கிழிய ஆரம்பிச்சுது என் 

கலையுலக டவுசரு.. 

அந்த கெரகம் புடிச்சவன்கிட்ட இருந்து 

தப்பிச்சி வந்த என்னை ங்க.

தாளிச்சானுங்க புதுசா படம் எடுத்த வெண்ணைங்க..





இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவே கிடையாதா.. 

என் படம் ஹிட் அடிக்க முடியாதா.. 

என் வானம் மட்டும் எப்பவுமே விடியாதா.. 

என்னை சுற்றி இருக்கும் தோல்வி 

வேலி உடையாதா..








இப்ப தான் நான் திருந்தினேன்.. 

செய்த தவறுகளுக்காக உண்மையிலேயே வருந்தினேன்..

இங்கிலீஷ் , தெலுங்கு படங்களை

பார்க்க மாட்டேன்.. 

இனிமே நான் கேவலமா தோற்க மாட்டேன்..









Wednesday, February 9, 2011

கவுண்டமணியும்… கண்டமேனிக்கு காமெடி பண்ணும் கேவலனும்…




ஆரம்பத்திலேயே அலாரம் அடிக்கிறேன்... 

இந்த உரையாடல் முழுக்க முழுக்க என் கற்பனையே...

விஜய் ரசிகர்கள் விருப்பம் இருந்தா கீழ்கொண்டு படிங்க... 

இல்லைனா அப்படியே போயிடுங்க...

முழுக்க படிச்சிட்டு குய்யோ..முயோனு கத்த கூடாது...


கவுண்டமணி :  வணக்கம் மக்களே..

நம்ம நிகழ்ச்சிக்கு மூஞ்சியில் சந்தானம் பூசி 
 
மாறுவேடத்தில் வந்தவரும்…

கால் முட்டியில் கர்ச்சீப் கட்டி கவர்மென்ட்டையே

ஏமாத்தியவருமான கேவலன் வர்றார்..




விஜய் :  தப்பா சொல்றீங்க ண்ணா, அது காவலன்


கவுண்டமணி : காவல் காக்க நீ என்னை டாபர் மேனா..

அப்புறம் ஏன்டா காவல் காக்குறேன்னு பிகரை கரெக்ட் பண்ண..


விஜய் :  அது எனக்கு தெரியாது…

நீங்க இயக்குனரை தான் கேட்கணும்..


கவுண்டமணி : ஆமா நாயே.. ஏதாவது நல்லதுனா அதை

நான் தான் செஞ்சேன்னு டமாரம் அடிப்பே.. 

அதுவே ஆப்பு வைக்கிற மாதிரி எதாவதுனா இயக்குனரை கை காமிப்பே..

ஏன்டா டபரா மூஞ்சா..பூவே உனக்காக னு ஒரு படம் நடிச்சியே அது

நல்லா தானே இருந்துச்சு.. இந்த படத்தில கூட ஏழு எட்டு சீன்ல நல்லா 

தானே நடிச்சி இருக்க… இதே போலவே நடிக்க வேண்டியதுதானே டா.. 

உனக்கு தான் காதல் படம் எல்லாம் நல்லா நடிக்க வருதுல்ல..

இல்லேன்னா உங்க அப்பனும் நீயும் சேர்ந்துகிட்டு சங்கவி , யுவராணி , 

சுவாதி னு சின்ன சின்ன பொண்ணுங்களை வச்சி செம கில்மாவா

படம் கொடுத்தீங்களே டா..





அது மாதிரியாவது நடிக்க வேண்டியது தானே.. 

ஏன்டா சண்டை படம் நடிச்சி வில்லன்னுங்களையும் எங்களையும் 

வளச்சி வளச்சி வெட்டுற…


விஜய் : ண்ணா.. ஆக்ஷன் படம் நடிச்சா தானே 

அரசியலுக்கு வர முடியும்…


கவுண்டமணி :ஆமாண்டா.. இதே நெனப்புல தான்…

தெருத்தெருவா தீவிரவாதிகளை புடிச்ச ஒருத்தன் ஒவ்வொரு

மேடையிலயும் கண்ணு சிவக்க சிவக்க பேசி எங்களை கட்சி 

மாறி கன்வர்ட் ஆக்க பார்க்குறான்.. இதுல நீ வேறயா..


விஜய் :  ஏண்ணா… அப்ப எனக்கு சண்டை படம் ராசி இல்லையா..



கவுண்டமணி : உனக்கு ராசி தாண்டா மவனே.. 

விநியோகஸ்தர்களுக்கு தான் ராசி இல்லை.. 

மேயுற மாடை நக்குற மாடு கெடுத்த மாதிரி.. 

உன்னை பார்த்துட்டு விக்ரமன் எல்லாம் பரத் தை வச்சி

சென்னை காதல் னு அட்டர் படம் எடுக்கிறாண்டா…


விஜய் :  ண்ணா.. நம்மை பார்த்து நாலு பேரு காப்பி அடிக்கிறான்னா

நாம வளர்ந்து கிட்டு இருக்கோம்னு தானே அர்த்தம்…


கவுண்டமணி : டே ஸ்பெக்ட்ரம் வாயா… 

நல்லது மட்டுமில்ல டா சமயங்களில் ரொம்ப கெட்டதும் மக்கள் 

கிட்ட வேகமா போய் சேர்ந்துடும்.. அப்புறம் என்ன சொன்னே.. 

உன்னை பார்த்து காப்பி அடிக்கிறாங்களா… டே நடுநிசி நாயே....

நீ நடிச்ச சமீபத்திய படங்கள் அத்தனையுமே ஆந்திரா ஜெராக்ஸ்

கடைல copy எடுத்தது தானே டா…

உன்னையும் அந்த ஜெராக்ஸ் ரவி யையும் தாண்டா ரொம்ப நாளா

தேடிக்கிட்டு இருந்தேன்.. மவனே நீ இன்னைக்கு மாட்டிகிட்டே…


விஜய் :  சரிங்ணா...அதை விடுங்க.. வேற ஏதாவது கேளுங்க…


கவுண்டமணி : ஹ்ம்ம்..மாட்டிகிட்ட மலை குரங்கே…

எதுக்கு Jaya TV ல பேட்டி குடுத்த...?


விஜய் :  அவங்க கூப்பிட்டாங்க.. நான் போனேன்...


கவுண்டமணி : அவ கூப்பிட்டா நீ போய்டுவ, அப்படிதானே..?


விஜய் :  ண்ணா…ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு…


கவுண்டமணி : டே சொறி புடிச்ச மொன்ன நாயே, உள்குத்தும் இல்ல..

காதுக்குத்தும் இல்ல..கேட்ட கேள்விக்கு பதில சொல்லு, 

ஆமாம், உன் மனுசுல என்ன பெரிய பச்சிலை புடிங்கின்னு நெனப்பா..?


விஜய் : :  ண்ணா…ஏண்ணா அப்படி கேட்குறீங்க… 


கவுண்டமணி :  பின்னே என்னடா… 

அவங்க கூப்பிட்டாங்க, நீ போன, இப்ப இந்த லூசு கிழவன்

கூப்பிட்டான்னு இங்கயும் போறியே, உன் படத்தில தான்  

அயிட்டம் சீன்சா வரும்னு பார்த்தா, 

நீயே அயிட்டம் ஆயிட்டியே டா ஆஸ்பெஸ்டாஸ் மண்டையா…



விஜய் :  நான் என்ன பண்றது…என் அப்பன் என் பேச்சை கேட்டாதானே…

அந்த பைத்தியம் புடிச்ச நாய் என்ன கோர்த்துவிட்டுட்டு

இளவயசு பொண்ணுங்களை வச்சி படம் எடுத்து ஜல்சா பண்ணுது…


கவுண்டமணி : ஆமாண்டா… நீ , சிம்பு , தனுஷ்னு வாரிசு நடிகர்கள்

யாருமே அவனவன் அப்பன் எடுக்குற படத்துல 

ஏன்டா நடிக்க மாட்றீங்க…




விஜய் :  உங்களுக்கு தெரியாதுனே.. ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் 

அடுத்து நீ என் படத்துல தாண்டா நடிக்கணும் னு எங்க அப்பா 

என்னை மிரட்டுவாருன்னா.. நான் தான் அப்படி எல்லாம் நடந்தா

நான் தற்கொலை பண்ணிக்கிட்டு அதுக்கு காரணம் நீ தான்னு 

கமிஷனர் க்கு லெட்டர் எழுதிபோட்டுடுவேன்னு பயமுறுத்தி

வச்சி இருக்கேன்…



கவுண்டமணி : நல்ல குடும்பம் டா ஏருல பூட்டின எருமை மாதிரி…

நல்ல துப்பு கேட்ட குடும்பம்… நீங்க எல்லாம் இருந்தா தமிழ் சினிமா 

கெட்டு போயிடும்…எங்காவது ஓடி போயிடு… 

நீயும் அஜித்தும் சந்தீச்சீங்களாமே.. 

வாட்ச் எல்லாம் குடுத்தியாம்..என்ன விஷயம்…



விஜய் :  அது வாண்ணா… எப்படியும் நம்ம ரெண்டு பேரும் இன்னும்

கொஞ்ச நாள் தான் படம் நடிக்க முடியும்..

அப்புறம் அவனுங்களே தொரத்தி விட்டுடுவானுங்க..

நான் நல்லா பிரியாணி செய்வேன்..அதனால ரேஸ் நடக்குற எடத்துக்கு

எல்லாம் போயி பிரியாணி வித்து பொழைக்க போறேன்னாரு..

நானும் நீங்க தான்னா உண்மையான தல…

என்னையும் பகுதி நேர பார்ட்னேரா சேர்த்துக்குன்கன்னு 

சோப்பு போட்டேன்…அதான் அதுக்கு அடையாளமா மாஸ்டர் க்கு

அட்வான்சா அந்த வாட்ச் கட்டி விட்டேன்…

கவுண்டமணி :அட மானங்கெட்டவனுங்களா…

எப்படியோ…உருப்பட்டா சரி…


விஜய் :  ரொம்ப நன்றிங்கண்ணா…


கவுண்டமணி : டே…அதுக்கு முன்னாடி ஒரு வாட்டி நல்லா

யோசிச்சிக்க டா அரசியல் வேணுமா…


விஜய் :  அண்ணே, உங்களுக்கு தெரியாது, 

நான் ஒருவாட்டி முடிவு பண்ணா என் பேச்சை 

நானே கேக்கமாட்டேன்...


கவுண்டமணி :ஏன் நீ ரெண்டு வாட்டி முடிவு பண்ணா தான் 

உன் பேச்சை கேப்பியா, ஏன்டா நாயே நீயே கேட்காத 

போது நாங்க எல்லாம் கேட்கணும் னு நீ எப்படி டா எதிர் பார்க்குற..

அப்புறம் உன் படத்த ரிலீஸ் பண்றதுக்கு பல ப்ராப்ளமாமே..

என்ன விளம்பரமா..


விஜய் :  இல்ல ண்ணா, யாரோ பண்றாங்க, 

ஆனா யார்னு தான் தெரியலை..


கவுண்டமணி : இந்த ரீல் எல்லாம் இங்க வேணாம் மவனே,

நான் உன்னவிட பெரிய தில்லாலங்கடி..யாரோ பண்றாங்களாம் , 

ஆனா யார்னு தெரியலையாம்.


விஜய் :  ண்ணா நீங்க வேணும் னா பாருங்க,

எலெக்ஷன் அப்ப தெரியும்...


கவுண்டமணி : மக்களே, நானும் இவன் திருந்துவான்னு பாக்குறேன் ,

ஆனா அது நடக்காது போல இருக்கே…ஏன்டா சினிமாவ கெடுத்தது

போதாதா, அங்கயும் வேற போனுமா…சரி டா.. 

இந்த பெட்டி கடைல கடன் சொன்னது, பீடிய திருடி குடிச்சது, 

கருப்பட்டிய நக்கிட்டு ஓடினது , திருட்டு ரயில் ஏறனது, 

எல்லாம் அங்கதான் இருக்கும்.. அப்டியே போய் மெர்ஜ் ஆயிடு..

மவனே தப்பி தவறி கூட இந்த பக்கம் வந்த, 

அப்புறம் நரிய விட்டு மூஞ்செல்லாம் நக்க விட்டுடுவேன்..

ஆமாம் ஒரு நரியை இன்னொரு நரி நக்குனா என்ன ஆகப்போது ..

ஆக்கத்தில் உதவி : கவிஞர் கோபிநாத்..

Sunday, October 31, 2010

விஜய் படங்களும்... வில்லங்க ( A ) படங்களும்..



விஜய் படங்களுக்கும்...  

வில்லங்கமான படங்களுக்கும் 

உள்ள வித்தியாசங்கள்  ..


1.கதை முக்கியம் இல்ல.. 

சதை தான் முக்கியம்...


2.எல்லா  SITUATION உம் 

ஒரே மாதிரி இருக்கும்... 


3.கதாப்பாத்திரங்கள் எத்தனை

இருந்தாலும் கவலை இல்ல..

நம்ம போகஸ் எல்லாம் ஹீரோ , 

ஹீரோயின்  மேல மட்டும் தான் இருக்கும்...


4.எல்லா படங்களும் ஒரே 

மாதிரி இருக்கும்... 




5.அடுத்த சீன் என்னனு 

ஈஸியா யூகிக்க முடியும்..


6.ஹீரோயின் செம 

கில்மாவா இருக்கும்...


7.படம் பார்த்தத நாலு 

பேருகிட்ட வெளியில 

சொல்லிக்க முடியாது..  



8.ஹீரோ பல பொசிஷன்களில் , 

பல ஆங்கிள் களில்

பெர்பார்மன்ஸ் செய்வார்... 



9.டைரக்டருக்கு வேலையே இருக்காது...


10.அனல் பறக்கும் அதிரடி

ஆக்ஷன் கண்டிப்பா இருக்கும்...


பறந்து பறந்து அடிப்பாரு...


11. படம் பார்த்ததும் நமக்கு 

கண்டிப்பா பயங்கர வெறி வரும்...


12. எப்படியும் கொஞ்ச நாளைக்கு 

தனியா இருக்குற நேரங்களில்

படம் பார்த்த பீலிங் 

நமக்கு இருக்கும்... 


13. முதல் முறையா பார்க்குறவங்க

வாந்தி  எடுக்கும் 

வாய்ப்புகள் இருக்கு..

14. காஸ்ட்யூம் செலவு கம்மி.. 

15. குறைந்த நாட்களில் எடுக்க முடியும்... 

16. படம் ஓடுதா .. ஓடலையானு கவலை

பட தேவை இல்லை...

கொஞ்ச நாளில் கல்லா கட்டிடலாம்..



என்ன மக்களே... 

சொன்னது பொருந்துதா...



அட ராமா.. 

எங்களுக்கு விடிவு காலமே

கிடையாதா...






Wednesday, September 29, 2010

வாராரு...வாராரு...





Assassins creed was one of famous game i heard...


but after this post .......

?

?

?

?

?

?

?

?



Is this justice or destiny or fate or whatever??

இது  வேலாயுதத்தின்  வெறி  ஆட்டம் ...



காப்பி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு...

அது  படமா இருந்தா என்ன...


வீடியோ கேமா இருந்தா என்ன...


நீங்க செய்யுங்க  அண்ணே  ...