Showing posts with label வாய்துக்கள்.... Show all posts
Showing posts with label வாய்துக்கள்.... Show all posts

Sunday, January 1, 2012

HAPPY NEW YEAR PEOPLE

மக்கள் அனைவருக்கும் 

I WISH YOU A VERY HAPPY AND SUCCESSFUL NEW YEAR ...







பயபுள்ளைங்க JANUARY  1  அன்னைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்  னு

தமிழ்ல சொல்றாங்க.. சித்திரை 1 அன்னைக்கு HAPPY NEW YEAR னு

சொல்றாங்க..சரி போயித்தொலையுறாங்க..

அப்புறம் ஆறு வருடங்களுக்கு பிறகு சிகரெட்,சரக்கு னு எந்த 

போதையும் இல்லாம எனக்கு இந்த புது வருடம் 

ஆரம்பிச்சி இருக்கு...ம்ம்ம்..இதுவும் நல்லாத்தான் இருக்கு...


பார்க்கலாம்...


எனக்கும் SELF DISCIPLINE ( சுய ஒழுக்கம் )  , SOCIAL DISCIPLINE 

 ( சமூக ஒழுக்கம் ) வந்து இருக்குனு நினைக்கிறேன்..


இப்படியே தொடர்ந்தா என்னை விட , எனக்கு 

பிடிச்சவங்களுக்கு சந்தோசம்.. அதனால முயற்சி பண்றேன்..


முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் நல்லதே நினைப்போம்..


சாலைகளில் செல்லும் போது கவனமா இருங்க.. 

உயிர் உங்களுக்கு மட்டும் முக்கியம் இல்ல..

மத்தவங்களுக்கும் தான்..


விழிப்புடன் இருப்போம்..விபத்துகளை தவிர்ப்போம்...


என்றும் அன்புடன்..


உங்கள்  3G @ CG ...

Monday, June 6, 2011

நட்டு மாட்டிக்கிச்சு..




என் அலுவலக நண்பர் திரு.நடராஜபெருமாள் அவர்களுக்கு இன்று 

திருமணம் நடைபெறுவதை ஒட்டி அவருக்காக 

இதோ எனது வாழ்த்துக்கள்..


இதை படிக்கும் நீங்களும் அவர்களை வாழ்த்துமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..



தனிமை சிறகுகளை கொண்டு 

பறந்து திரிந்த நண்பன்..

இனி சந்தோஷ சிறகுகளை  கொண்டு 

குடும்ப வானில் பறக்க போகிறான்.. 

இந்த தேவதையுடன்…







பூக்கள்  நிரம்பிய  பூமியில்…

தனக்கான ரோஜாவை இன்று 

கண்டுக்கொண்டான்…

தன் வானில் வானவில்லாய் ..

மார்கழியில்  இளஞ்சூரியனாய் ..

மழை நேர தேநீராய்..

நுரையீரல் சுவாசமாய்…

சொர்க்கத்தின் பாதியாய்…

மகிழ்ச்சியின் மீதியாய்…

ரயில் பயணத்தில் ஜன்னலோரமாய்…

வாழ்க்கை முழுதும் அவனுடன் பயணிக்க..

இதோ அவன் சக ( லமுமான ) பயணி ( ஜனனி ) ..

நண்பர்களும் நல்ல எண்ணங்களும் போல...

உறவுகளும் மகிழ்ச்சிகளும் போல..

தமிழர்களும் விருந்தோம்பலும் போல...

நீங்கள் இருவரும் என்றும் 

இணைந்தே இருக்க..

தேவதைகள் பரிசளித்த இந்த 

தருணத்தில்..

வானத்து தேவர்கள் ஆசியுடன்

உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு.. 

நண்பர்களின் வாழ்த்துக்களும்..

 
என்றும் அன்புடன்..








Friday, October 15, 2010

வாய்துக்கள் ...





அல்லாருக்கும் ஸ்வீட்டான ஆயுத பூஜை வாய்துக்கள்  ...

நாளைக்கு காத்தால அல்லாரும் அவங்க 

அவங்க சாமான வச்சி பூஜை போடுங்க...


( எந்த டபுள் மீனிங்கும் இல்ல... ) 


அப்பாலிக்கா  இது நாள் வரைக்கும் புஸ்தகத்தையே  தொடாதவங்க ..


ஆத்தா மேல பாரத்த  போட்டுட்டு ....


சண்டே அன்னிக்கு தொறந்து வச்சி

உக்காந்தீங்கன்னா ( புஸ்தகத்தை... )


பாஸ் பண்ணிடலாம்...















Monday, February 15, 2010

காதலர் தின வாழ்த்துக்கள்..

பூமியில உள்ள நிலங்களை எல்லாம்




குறிஞ்சி



முல்லை 



மருதம் 



 நெய்தல் 


 பாலை னு ஐந்து வகையா பிரிக்கலாம்...








ஆனா இது எதுலயும் சேராம ஆறாவது

வகையான நிலம் ஒண்ணு இருக்குது...






அது காதலும் , காதல் சார்ந்த இடமும்...






நான் அதுல தான் வாழ்ந்துகிட்டு

இருக்கேன்...






இறைவனோ இல்ல இயற்கையோ...








 

ஆணையும் பெண்ணையும் வெவ்வேறா

படைச்சதே காதலிக்க தான்னு

நம்புறவன் நான்...






காதலிக்கிறவங்களும் ...

காதலிக்க படுறவங்களும்

கடவுளால ஆசிர்வதிக்க பட்டவங்க...





 



காதலிச்சு பாருங்க..

அப்பத்தான் அத உணர முடியும்....






குழல் இனிது..

யாழ் இனிது என்பர்..

தம் காதலி கொஞ்சல் மொழி கேளாதவர்...

( எப்படி இருக்கு என் புது மொழி...)






ஆதலினால் ஒரு காதல் செய்வீர்...






உங்களுக்கு பிடிச்சு இருக்கோ

இல்லையோ என் கவிதையை படிச்சி

 தான் ஆகணும்....அது உங்க விதி...






கீழே விழாத தஞ்சை கோபுரத்தின்

நிழல் மட்டும் அதிசயம் அல்ல...








கீழே விழும் உன் நிழலும்

அதிசயம் தான்...










என்றும் காதலுடன்...


உங்கள் கணேஷ்....

Saturday, January 2, 2010

அனைத்து உள்ளங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்














Bombs - தீவிரவாதம்




Nuclear Weapons - வல்லரசு நாடுகளின்


 பயங்கரவாதம்...


 


இறைவனோ.. இல்ல


இயற்கையோ.... தான்
 


பூமிய காப்பாத்தனும்....





மனுஷனுக்கு ஒரு



பிரச்னைனா...





இன்னொரு மனுஷன்



தான் காப்பாத்தனும்...





காப்பாத்துவான்....




கடவுள் நேர்ல லாம்


வரமாட்டார்....




நானும் கடவுள் இல்லை னு


சொல்லலை...



இருந்தா நல்லா இருக்கும்னு தான்


சொல்றேன்....


மனிதநேயம் தான்


மகேசன்....



இது அன்பே சிவம் க்கு



ALTER ....







அனைத்து

உள்ளங்களுக்கும்


ஆங்கிலப்




புத்தாண்டு


வாழ்த்துக்கள்....