Showing posts with label நீதிக்கதைகள். Show all posts
Showing posts with label நீதிக்கதைகள். Show all posts

Friday, November 25, 2011

நீதிக்கதைகள்.. 14





படுக்கையில் பல்வேறு பெண்களின் உரையாடல்கள்..

வேலைக்காரி – சீக்கிரம்..உங்க மனைவி வந்துடப்போறாங்க..
 
பக்கத்து வீட்டு பெண் – ஐயோ..பொறுமையாங்க..

சத்தம் கேட்டு யாராவது வந்துடப்போறாங்க..

காதலி – இன்னும் ஒரு தடவை டா..

மனைவி – என்னங்க..பேன் ல எவ்வளவு தூசி பாருங்க..

அப்புறமா அதை ஒட்டடை அடிங்க..



நீதி – இதுல கூடவா  நான் சொல்லணும்..புரிஞ்சுக்குங்கப்பா..


ஒரு கணவனும் மனைவியும் 8 வயசு பையன் கிட்ட நாங்க 

உள்ளே புதையல் எடுக்குறோம் ( கோட் வேர்ட் )..

நீ பால்கனியில நின்னுகிட்டு தெருவில என்ன நடக்குதுன்னு 

சொல்லு னு சொன்னாங்களாம்.. அவனும் வெளியில் நின்னு 

சொல்ல ஆரம்பிச்சானாம்..

கீழ் வீட்டு ஆன்ட்டி காய்கறி வாங்குறாங்க,பக்கத்து வீட்டு தாத்தா 

வாக்கிங் போறாரு,எதிர் வீட்டு அங்கிளும் ஆன்ட்டியும் 

புதையல் எடுக்குறாங்க..

அப்பா - என்னடா சொல்ற..பப்ளிக்கா வா எடுக்குறாங்க.. 

பையன் - இல்லப்பா . ஆனா அவங்க பையனும் பால்கனி ல 

நின்னுகிட்டு என்னைப்போலவே எல்லாத்தையும் 

சொல்லிக்கிட்டு இருக்கான்..

நீதி – வெஷம்..வெஷம்..வெஷம்..


ஒரு உடம்பு முடியாத கணவனைக் கூட்டிக்கிட்டு அவன் 

மனைவி ஆஸ்பத்திரி போனாளாம்..

டாக்டர் – அவருக்கு சத்தான உணவு கொடுங்க..அடுத்த 

வீட்டு பிரச்சினைகளை பத்தி அவர்கிட்ட பொறணி பேசாதீங்க..

அவரை வச்சிக்கிட்டு சீரியல் பார்க்காதீங்க..நகை வேணும்,

புடவை வேணும்னு கேட்டு தொல்லை பண்ணாதீங்க.. 

ஒரு 3 மாசத்தில அவர் சரியாயிடுவார்..

வீட்டுக்கு வரும் வழியில கணவன் கேட்டானாம்..

டாக்டர் என்னடி சொன்னாரு..

மனைவி – உங்க நிலைமை ரொம்ப சீரியஸா இருக்காம்..

நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்..



நீதி – கல்யாணம் பண்ணா காலன் கூடவே இருப்பான்..



ஒரு அப்பா தன் பசங்களுக்கு மான் கறி செஞ்சு தந்துட்டு 

அவங்களுக்கு என்னனு சொல்லாம ஒரு க்ளூ கொடுத்தாராம்..

அப்பா – இப்படி தான் உங்க அம்மா என்னை அடிக்கடி 

கூப்பிடுவா..( டியர் )

பையன் – யாரும் சாப்பிடாதீங்க..இது நாய் கறி..

நீதி – இந்த டர் வேலை எல்லாம் எங்க கிட்ட வேணாம்…



ஒரு லிப்ட் குள்ள ஒரு பையனோட கை முட்டி ( ELBOW ) தெரியாம 

ஒரு பொண்ணோட நெஞ்சு மேல மோதிடுச்சாம்..

பையன் – உங்க இதயமும் இது போலவே மென்மையானதா 

இருந்தா ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..

பொண்ணு – உங்க தம்பியும் இது போலவே ஸ்ட்ராங்கா இருந்தா 

என் ரூம் no 312..


நீதி – குத்துங்க..எஜமான்..குத்துங்க.. 

இந்த பொண்ணுங்களே இப்படி தான்..



இது பழசு தான்..இருந்தாலும் இப்போ மறுபடியும்..

ஒரு மேனேஜர்,ஒரு ஆபிசர்,ஒரு தொழிலாளி மூணு பேருக்கும் 

முன்னால ஒரு தேவதை தோன்றி வரம் தந்துச்சாம்..

தொழிலாளி – எனக்கு எக்கச்சக்கமா பணத்தோட எங்க சொந்த 

ஊருல ஒரு பங்களா கொடு..

ஆபிசர் – எனக்கு கனடா ல ஒரு பெரிய பேலஸ்..

நிறைய பொண்ணுங்க.. தேவைக்கு அதிகமா வே பணம்..

மேனேஜர் – அந்த ரெண்டு முட்டாப்பசங்களும் இன்னும் 

ஒரு மணி நேரத்துக்குள்ள என் ஆபிஸ் ல இருக்கணும்…


நீதி – எப்பவுமே முதலில் அந்த மேனேஜர் முதலை  

வாயனுங்கள பேச விடுங்க..இல்லைனா இப்படி 

தான் ஆப்படிப்பானுங்க..

Wednesday, April 27, 2011

நீதிக்கதைகள்..Part 13

ஒரு புருஷனும் பொண்டாட்டியும் படுக்கையில் 

பேசாம படுத்துகிட்டு இருக்காங்களாம்..

மனைவி : இவர் ஏன் என் கூட பேச மாட்றாரு..

ஒரு வேலை வேற எதாவது பொண்ணு கூட தொடர்பு

இருக்குமோ , இல்லை அவர் கண்ணுக்கு இப்போவெல்லாம் 

நான் அழகா இல்லையா , உடம்புல தேவை இல்லாத இடத்தில் 

எல்லாம் சதை போட்டு குண்டாயிட்டேனா , அவர் என்னை 

வெறுக்குறாரா , என் மேல வேற எதாவது கோபமா , 

இல்லை வரதட்சணை இன்னும் வேணும்னு கேட்பாரோ , 

ஏன் இவரு என் கிட்ட பேசாம இருக்குறாரு..?

கணவன் : இப்போவெல்லாம் RC டாஸ்மாக் ல ஏன்

கிடைக்க மாட்டுது..?



நீதி : இப்படிதாங்க நாம ஒன்னு நினைப்போம்..

அவளுங்க வேற எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு 

நம்மளை பிரிச்சி மேயுறாளுங்க..



பக்கத்து பக்கத்து வீட்டுல ரெண்டு நாய்கள் இருந்துச்சாம்..

ஒன்னு பேரு பிரபு , இன்னொன்னு பேரு தாரா. அந்த ரெண்டு 

நாயும் ரொம்ப தீவிரமா காதலிச்சுதாம். ஒரு நாள் 

ரெண்டும் கொல்லைப்புறத்தில் சந்திச்சு ஜில்லிப்பு தட்டும்போது 

ரெண்டு வீட்டுகாரங்களும் பார்த்துட்டாங்களாம்.உடனே அந்த 

ரெண்டு நாய்களையும் பிரிச்சி தனித்தனியா 

கூட்டிகிட்டு போயிட்டாங்களாம்.



நீதி : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..







ஒரு கம்பெனியில புதுசா ஒரு லேடி மேனேஜர் வந்தாங்களாம்.. 

நம்ம பையனை கூப்பிட்டாங்களாம்..

மேனேஜர் – உன் பேரு என்னப்பா..?

பையன் – ஜான்..

மேனேஜர் – உன்னோட SURNAME என்ன.. 

நான் எல்லாரையும் அவங்க SURNAME வச்சி தான் கூப்பிடுவேன்..

பையன் – டார்லிங்.. ஜான் டார்லிங் மேடம்..

மேனேஜர் – ஓகே ஜான்.. நீ போயி உன் வேலையை பார்க்கலாம்..



நீதி – எப்பவுமே மேனேஜர்கள் அவங்க சொல்றதை தான் 

செய்வாங்கன்னு நம்பக்கூடாது..

அது ஆம்பளையானாலும் சரி பொம்பளை ஆனாலும் சரி..







பையன் – கடவுளே..எனக்கு இந்தியாவிலேயே மிக சிறந்த 

“ தண்ணி “யும் சிறந்த பொண்ணும் வேணும்..

கடவுள் – அப்படியே ஆகட்டும் மகனே.. இந்தா நீ கேட்ட 

சிறந்த தண்ணி “ சிறுவாணி “ தண்ணி மற்றும் சிறந்த 

பெண் அன்னை தெரசா..



நீதி – Investments matters are subject to market risks..

 

Monday, March 14, 2011

நீதிக்கதைகள்...Part 12


என் நண்பன் ஒருத்தனுக்கும் எனக்கும் ஒரு சின்ன சண்டை…

அவன் மொபைல் நம்பரை delete பண்ணிட்டேன்… 

நாலு நாள் கழிச்சு பேர் இல்லாமல் ஒரு SMS வந்துச்சு…

நான் உடனே WHO ARE YOU ? னு அனுப்பினேன்…

அதுக்கு அவன் ரிப்ளை  அனுப்புனான்… 

சனியனே…HOW வுக்கும் WHO வுக்கும் கூடவா

உனக்கு வித்தியாசம் தெரியாது…

 
நீதி : ஆஹ்…ஆஹ்..ஆஹ்…

( இது நாயகன்…)
 
பளார்..பளார்… ( வேதம் புதிது ) 
 
தொப்பி..தொப்பி… ( சந்திரமுகி…)









ஒரு பொண்ணு அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சி னு

அவளோட தோழிகள் கிட்ட சொல்றா…
 
தோழி 1 : அவர் பேரு என்னடி…? 
 
தோழி 2 : எங்கடி வேலை செய்றார்…?
 
தோழி 3 : சம்பளம் எவ்வளவு டி…?
 
தோழி 4 : அழகா இருப்பாரா…?
 
தோழி 5 : வீடு , கார் எல்லாம் வச்சி இருக்காரா..?




இதே விஷயத்தை அந்த பையன் அவன்
 
நண்பர்கள் கிட்ட சொல்றான்…

பையன் 1 : மச்சி..ட்ரீட்..
 
பையன் 2 : மச்சி..ட்ரீட்..
 
பையன் 3 : மச்சி..ட்ரீட்..
 
பையன் 4 : மச்சி..ட்ரீட்..
 
பையன் 5 : மச்சி..ட்ரீட்..
 
நீதி : ஆண்களின் மனசு ஒரு தினுசு…
 
நாங்க எல்லாம் உத்தமபுத்திரன் தனுசு…




ஒரு பழைய  கதையோட புது வடிவம்.. 

ஒரு முறை மூணு பசங்க பரீட்சைக்கு ரொம்ப 

லேட்டா வந்தானுங்களாம்..
 
வாத்தி : ஏன்டா லேட்டு..
 
பசங்க : சார் , வரும் போது கார் டயர் பஞ்சர் 

ஆயிடுச்சி சார்.. தள்ளிகிட்டே வந்தோம் சார்..

அதன் சார் லேட்டு..எங்களை பரீட்சை எழுத 

விடுங்க சார்..ப்ளீஸ் சார்..

வாத்தி : சரி..ஆனா வேற கொஸ்டின் பேப்பர் 

தான் தருவேன்..நாளைக்கு காலையில வாங்க..


பசங்களை தனித்தனியா வேற வேற ரூம்ல 

உட்கார வச்சி..

பசங்களுக்கு கேட்கப்பட்ட ஒரே கேள்வி :

காரோட எந்த டயர் பஞ்சர் ஆச்சு..

௧.முன்பக்க வலது டயர்..

௨.முன்பக்க இடது டயர்..

௩.பின்பக்க வலது டயர்..

௪. பின்பக்க இடது டயர்..


நீதி : இதுக்கு பேரு தான் ஆப்பு..



பசங்க எழுதிய பதில்.. 

5 . ALL HE ABOVE ... 

( ஒரு டயர் பஞ்சர் ஆயிருந்தா ஸ்டெப்னி 

மாட்டி ஓட்டிகிட்டு வந்து இருப்போம்..

பஞ்சர் ஆனது எல்லா டயரும் தான்.. )


நீதி : இதுக்கு பேரு தான் ரிவிட்டு..



Wednesday, March 2, 2011

நீதிக்கதைகள்...Part 11

ஒரு பையன் தன்னோட அம்மாகிட்ட காதலியை 

அறிமுகப்படுத்தி வச்சானாம்…
 
அம்மா : இவளை நான் மருமகளா ஏத்துக்கறதுக்கு 

ஒரே ஒரு காரணம் சொல்லு…நான் உங்களுக்கு 

கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…
 
பையன் : நான் அவளோடு இருக்கும் போது 

உன்னை மறந்துடுறேன் அம்மா…ஆனா அவள் என் 

மேல காட்டும் அக்கறையை பார்க்கும்போதெல்லாம்

நீ தான்ம்மா ஞாபகம் வர்ற…

 
நீதி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்…


பையன் : அப்பா…எனக்கு பிரிட்ஜ்ல  இருந்து ஐஸ் 

வாட்டர் எடுத்து தாப்பா…
 
அப்பா : ஏன்டா…டே..நான் தான் வேலையா இருக்குறேன்ல.. 

நீ வெட்டியா TV தானே பார்க்குற…நீ போயி எடுத்து குடி…
 
பையன் : அப்பா..சீக்கிரம் எடுத்துட்டு வாப்பா…
 
அப்பா : டே ..என்னை வெறுப்பேத்தாதே… இன்னொரு 

தடவை கூப்பிட்ட உன்னை கட்டையாலையே அடிப்பேன்…
 
பையன் : என்ன அடிக்க கட்டை எடுத்துகிட்டு வரும்போது

அப்படியே ஐஸ் வாட்டரும் எடுத்துகிட்டு வாப்பா…
 
நீதி : எத்தனை துன்பம் வந்தாலும் நம் 

இலக்கை அடைய வேண்டும்…





16 வயசுல முதல் முறையா பண்ணும்போது ரத்தமே வந்துடுச்சு…
 
ரெண்டாவது தடவை பண்ணும்போது வலிச்சது…
 
மூணாவது முறை கொஞ்சம் எரிச்சலா இருந்தது…
 
நாலாவது தடவைக்கு அப்புறம் பழக்கமாயிட்டதால

எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா முடிஞ்சது…
 
இப்போவெல்லாம் வாரத்துக்கு நாலு முறை பண்றேன்…
 
அது என்னமோ தெரியலை…ஷேவ் பண்ணலைனா

சங்கடமா இருக்கு…
 
நீதி : பால் கொழுக்கட்டைனா சும்மா தானா…

ஆஹ்..ஆஹ்..பற்களை கடிக்கிறார் பதிவை படித்தவர்…








ஒரு பையனும்…ஒரு பொண்ணும் தற்கொலை பண்ணிக்க 

போனாங்களாம்… அப்போ அந்த பொண்ணு அழுதாளாம்…

இவன் ஏன்னு கேட்க…அவ சொன்னாளாம்…நானும் என்

தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா தான் இருப்போம்…

அவளை நெனச்சா தான் எனக்கு அழுகையா வருதுன்னு

சொன்னாளாம்…உடனே அந்த பையன் தற்கொலை 

பண்ணிக்க வேண்டாம்னு அவளை கூட்டிகிட்டு

போயிட்டானாம்…
 
நீதி : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…

மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…







ரயில் நிலையத்தில்…

பையன் : சார்…டைம் என்ன…
 
அரை கிழம் : ஆமாண்டா…நீ இப்ப டைம் என்னனு கேட்ப…

நானும் சொல்லுவேன்… ட்ரெயின் வரும்…நீயும் என்

கூடவே வருவே…ரெண்டு பெரும் பேசிக்கிட்டே போவோம்…

நீ நான் இறங்குற ஸ்டேஷன்லே இறங்குவே…அங்க என்னை 

கூட்டிகிட்டு போக என் பொண்ணு வந்து இருப்பா…நீங்க ரெண்டு

பேரும் பார்த்துக்குவீங்க…உடனே உங்களுக்குள்ள

காதல் முளைக்கும்…

நீ என் கிட்ட வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுவ… 

ஒரு வாட்ச் வாங்க வக்கில்லாதவனுக்கு நான் எப்படி

என் பொண்ணை கட்டி வைக்க முடியும்…
 
நீதி : அட…பாவிங்களா…டைம் கேட்டது ஒரு குத்தமாடா…



Saturday, February 12, 2011

நீதிக்கதைகள்..Part 10


1. ராமுவும் , ராஜாவும் நண்பர்கள்..

ஒரு நாள் ரெண்டு பேரும் கோவிலுக்கு

சைட் அடிக்க போனாங்களாம்.

ரெண்டு பேருமே ஒருத்தனுக்கு

தெரியாம ஒருத்தன்

ஒரே பொண்ணுக்கு நூல் விட்டானுன்களாம் ..

கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்குமே விஷயம்

தெரிஞ்சி போயி நாடு ரோட்ல

அவனுங்க சட்டை

கிழியுற அளவுக்கு சண்டை 

போட்டானுன்களாம்… 


நீதி : சண்டைனா சட்டை கிழிய

தான் செய்யும்.சண்டையில கிழியாத

சட்டை எங்க இருக்கு…







2. ஒரு பொண்ணு ராத்திரியில 

தனியாக போயிகிட்டு

இருக்கும் போது ஒருத்தன் வந்து

அவளை கற்பழிச்சிட்டானாம். 

அதுக்கு அப்புறம்...


ரவுடி : உன்னோட வீட்டில போயி 

என்னனு சொல்லுவடி..


பொண்ணு : ஒரு ரவுடி வந்து என்னை ரெண்டு

முறை கற்பழிச்சிட்டான்னு சொல்லுவேன்...

ரவுடி : அடியே..நான் உன்னை 

ஒருமுறை தானே கற்பழிச்சேன்..

பொண்ணு : உன்னை பார்த்தா களைப்பு 

அடைஞ்சா மாதிரியே தெரியலை..

நீ எப்படியும் என்ன ரெண்டாவது வாட்டி 

ரேப் பண்ணுவேன்னு எனக்கு தெரியும்..



நீதி : இந்த பொண்ணுங்களே இப்படி

தான் எஜமான்..

குத்துங்க எஜமான் குத்துங்க...







3. கம்பெனியோட மேனேஜர் ஒரு நாள்

ரவுண்ட்ஸ் வந்தாராம்...

அப்போ ஒருத்தன் சும்மாவே நின்னுகிட்டு 

வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தானாம்..

மேனேஜர் : ஹே..தம்பி..இங்க வா..

பையன் : சார்..சொல்லுங்க சார்...

மேனேஜர் :உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்..

பையன்: 5000 ரூபாய் சார்..

மேனேஜர் : இந்த...இதுல 15000 ரூபாய் இருக்கு...

உன்னோட மூணு மாச சம்பளம்..

என் கம்பெனில வேலை செய்ய தான் நான் 

சம்பளம் கொடுக்குறேன்..

வேடிக்கை பார்க்க இல்ல..

என் கண்ணுலேயே படக்கூடாது...

நீ நாளையில இருந்து 

வேலைக்கு வர வேண்டாம்..


பையனும் ஒண்ணும் 

சொல்லாம போயிட்டானாம்..

மேனேஜர் :யாருயா அந்த பையன்.. 

எந்த செக்ஷன் ல வேலை செஞ்சான்..

பியூன் : அவன் கொரியர்

கொடுக்க வந்த பையன் சார்...


நீதி : பெரும்பாலான மேனேஜர்கள்

மூளையே இல்லாத மக்கு 

மண்டையா இருக்காங்களே.. ஏன் சார்...






4. ஒரு பேங்க்ல கொள்ளை நடந்துச்சாம்.. 

எல்லாத்தையும் எடுத்துகிட்ட பிறகு...

அதுல ஒருத்தன் கேட்டானாம்...

கொள்ளைக்காரன் : யாராவது எங்களை

அடையாளம் காட்ட முடியுமா...?

ஒருத்தன் : என்னால முடியும்...

உடனே அவனை சுட்டு கொன்னுட்டாங்களாம்...

இன்னொருத்தனை பார்த்து அதே

கேள்வியை கேட்டானாம் அந்த 

கொள்ளைக்காரன்..

நம்ம பையன் : என்னால முடியாது சார்...

ஆனா என் மனைவி பார்த்தா..

அவளால அடையாளம் காட்ட 

முடியும்னு நினைக்கிறேன்...



நீதி : வாய்ப்புகளை தவற விடக்கூடாது..

சரியாக பயன்படுத்திகொள்ளவேண்டும்..





5. பரீட்சை ஹாலில்...

பையன் :  ஹே..ப்ளீஸ் டி...

ஸ்டார்டிங் மட்டும் சொல்லுடி..

நான் ஏதாவது கதை அடிச்சி விட்டுடுறேன்...

பொண்ணு : நான் சொல்ல மாட்டேன் ப்பா..

சார் பார்த்தா அப்புறம் என்னையும்

வெளியில அனுப்பிடுவாரு...

பையன் : நீ சொல்லலைனா நான் 

நிச்சயம் பெயில் ஆயிடுவேன் டி...

பொண்ணு : சரி போயி தொலை... 

இது தான் அந்த பதிலோட ஸ்டார்டிங்...

"THE "

நீதி : எக்ஸாம் ஹால்ல எந்த

பொண்ணு சார் ஹெல்ப்

பண்ணி இருக்கா...





Tuesday, February 8, 2011

நீதிக்கதைகள்..Part 9

 
1. ரெண்டு தருணங்களில்

மட்டுமே நான் குடிக்கிறேன்…

சந்தோஷத்திலும்..துக்கத்திலும்…

( குடிக்கிறனேனு நினைக்கும்போது

துக்கமா இருக்கு..குடிச்ச அப்புறம்

சந்தோசமா இருக்கு..)

நீதி : மீனும் நானும் எப்பவும் 

தண்ணில தான் இருக்கணும்..





2. ஒரு டீச்சர் ஒரு கழுதைக்கு 

முன்னால ரெண்டு பக்கெட்டை

வச்சாங்களாம்..

ஒண்ணுல தண்ணீர் இருந்ததாம்..
இன்னொண்ணுல சரக்கு ஊத்தி

வச்சி இருந்தாங்களாம்…

அந்த மானங்கெட்ட கழுதை தண்ணீர் 

பக்கெட்டை காலி பண்ணிடுச்சாம்..

உடனே டீச்சர் கேட்டாங்களாம்…

இதுல இருந்து என்ன தெரியுது…


பையன் : சரக்கு குடிக்காதவங்க 

எல்லாம் கழுதைங்கனு தெரியுது டீச்சர்…



நீதி : சரக்கடித்து வாழ்வாரே வாழ்வார்..

மற்றவர் எல்லாம் மானங்கெட்டு திரிவர்..





3. மனைவி : உங்களுக்கு டின்னருக்கு 

என்ன வேணும்னு சொல்லுங்க..

கணவன் :  சாதமும் பருப்பு குழம்பும் ..

மனைவி : நேத்து தானேங்க அதை செஞ்சேன்..

கணவன் : அப்படினா..கத்தரிக்காய் குழம்பு வை..

மனைவி : உங்க பையனுக்கு 

அதெல்லாம் பிடிக்காது..

கணவன் : அப்போ..முட்டை குழம்பு வை..

மனைவி : இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்க..

கணவன் : பூரி செஞ்சு தர்றியா…

மனைவி : ராத்திரியில போயி 

யாராவது பூரி சாப்பிடுவாங்களா..

கணவன் : நான் வேணா ஹோட்டலுக்கு 

போயி ஏதாவது வாங்கிட்டு வரவா…

மனைவி : ஹோட்டல் சாப்பாடு 

உடம்புக்கு ஒத்துக்காதுங்க…

கணவன் : சரிடி…ரசமாவது வச்சிக்கொடேன்…

மனைவி : புளி இல்லைங்க…

கணவன் : அப்படினா..இட்லியும் கொஞ்சம்

சட்னியும் செஞ்சிடு..

மனைவி : திடீர்னு இட்லி கேட்டா..

நீங்க காலையிலேயே

சொல்லி இருக்கணும்…

கணவன் : ஐயோ..மேகி யாவது 

செய்யேண்டி..அதை சீக்கிரம்

செஞ்சிடலாம் ல..

மனைவி : ஆனா ..சாப்பிட்டதுக்கு 

அப்புறம் உங்களுக்கு சாப்பிட்ட

மாதிரியே தெரியாதுங்க…

கணவன் :  அப்ப என்ன தாண்டி

செய்ய போற…

மனைவி : நீங்க எது சொன்னாலும் 

அதையே செய்யலாம்ங்க…



நீதி - மனைவி னா 

சும்மாங்காச்சுக்கும் அப்படிதான்

கருத்து கேட்பாங்க..


வாயை கொடுத்தீங்கன்னா அப்புறம்

இப்படிதான் டப்பா டான்ஸ் ஆடிடும்...



4. புதுசா கல்யாணம் ஆனா ஒரு

பையனுக்கு அவனோட மச்சினிச்சி

அர்த்த ராத்திரியில் மிஸ்ட் கால் 

குடுத்தாளாம்… 

அவனுக்கு என்ன பன்றதுனே

தெரியலையாம்…


நீதி : கண்ணா…ரெண்டாவது 

லட்டு தின்ன ஆசையா…?  

Saturday, February 5, 2011

நீதிக்கதைகள். Part...8

1. பாவாடையை தூக்கி  அவள் 

அதை அவனுக்கு காட்டினாள்.

அதை பார்த்ததும் அவன் அப்படியே 

மிரண்டு போயி விட்டான்.இதற்கு முன்பு

அவன் இது போல பார்த்ததே இல்லை.

அவன் வைத்த கண் வாங்காமல் அதையே

பார்த்து கொண்டு இருந்ததால் அவள்

சிரித்துக்கொண்டே அவனிடம் கேட்டாள்.

ஏன் இதுக்கு முன்னால இதை நீ

பார்த்ததே இல்லையா ..?

அவன் இல்லை என்று கூறினான்.

ஒரு சின்ட்ரெல்லா பட்டு பாவாடை

விலை 1500 ரூபாயாம்.


நீதி : நான் திருந்தவே மாட்டேன்.




2. ஒரு அஞ்சாம் கிளாஸ் ரூம்ல..

பொண்ணு : டீச்சர்..எனக்கு குழந்தை 

பிறக்குமா..?

டீச்சர் : அதுக்கு உனக்கு இருபது 

வயசாவது இருக்கணும்.

பையன் : நான் அப்பவே 

சொன்னேன்ல டி.. பயப்படாதேன்னு .


நீதி : இது நியூ ஜென்ரேஷன் மச்சி..




3.
டீச்சர் : மாட்டுக்கு நாலு இருக்கும்…

எனக்கு ரெண்டு தான் இருக்கும்..அது என்ன..

பையன் : கால்..

டீச்சர் : உன்னோட பேன்ட் குள்ள இருக்கு…

அது என்னோட புடவை குள்ள இல்ல..

பையன் : பாக்கெட்…

டீச்சர்  : முதல் முறையா குத்தும்போது

என்னால வலி தாங்க முடியல..

பையன் : காது குத்தும்போது…


நீதி : அந்த பையன் அந்த வேலைக்கு

சரிப்பட்டு வரமாட்டான் சார்…



4.
ஒருத்தர் பார் ல குடிச்சிக்கிட்டு

இருக்கும் போது திடீருன்னு போன் வருது..

அவங்க - என்னங்க . நான் t.nagar 

வந்து இருக்கேன்..புடவை எடுக்க..

எடுத்துக்கவா..

இவரு - என்ன கேள்வி இது..

RMKV ல 50000 கலர் பட்டு 

புடவை எடுத்துக்க..

அவங்க - தேங்க்ஸ்ங்க..அடுத்த வாரம் 

அக்கா பொண்ணுக்கு கல்யாணம்

வருது..நெக்லஸ் வேற பழசாயிடுச்சு ..

இவரு - அப்படியே கஜானா ஜுவெல்லரி 

போயி எடுத்துக்கோ..

என்னோட கிரெடிட் கார்டு எடுத்துகிட்டு 

போயி இருக்கேல்ல..

அவங்க - என் கிட்ட தாங்க இருக்கு..

நீங்க சொன்ன படியே செஞ்சிடுறேன்..

இத கேட்டுகிட்டு இருந்த அத்தனை 

பேருக்கும் போதை இறங்கிடுச்சு..

என்ன மச்சி.. பொண்டாட்டினா உனக்கு

அவ்வளவு பிரியமா..?

உடனே அவன் ஒரே ஒரு கேள்வி 

தான் கேட்டானாம்… 

எக்ஸ்க்யூஸ்மி..இந்த போன் யாரோடது…


நீதி - சரக்கடிக்க போகும்போது


செல்போனை கவனமா பார்த்துக்கணும்…