Monday, January 28, 2013

தேநீர் தேவதை

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நீ வருந்தக்கூடாது என நானும்,எனக்காக நீயும் மகிழ்ச்சியாய் 

இருப்பது போல நடித்துக்கொண்டு இருக்கிறோம்.. 

பொய்யாய் நாம்..நமக்கிடையில் உண்மையாய் / ஊமையாய் காதல்..




காதல் வழியும் உன் கண்களின் ஒளியே காயம் பட்ட 

என் உயிரின் வளி..(ஆக்ஸிஜன்) 


உன்னை சமாதானப்படுத்த கவிதைகளை தூது அனுப்புகிறேன் 

நான்.. என்னை சமாதானப்படுத்த கண்ணீருடன் காதலை 

தூது அனுப்புகிறாய் நீ..# ஹ்ம்ம்..கெட்டிக்காரிடி நீ ஹனி..
 



என் மீதான உந்தன் காதலை மறைக்க,என் கண்களைப் 

பார்ப்பதை தவிர்த்து காற்றுக்குள் ஒளிந்துக்கொள்ளும் 

வித்தையை எப்படி கற்றாய் ஹனி…?

 



சற்று அதிகமாக பால் கலந்த தேநீர் நிறத்தில் இருக்கும் 

ஒரே தேவதை, நீ மட்டுமே ஹனி..லவ்யூடி பம்ப்ளிமாஸ்..

 



என்னுடைய இதயம், காதலால் முழுமையடயவில்லை என்று 

எனக்கு நெடுநாள் வருத்தம்..உன் கண்களைக் கண்டதும் தான் 

காதலின் முழுமை அடைந்த இதயத்தை உணர்ந்தேன்..

லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 



சூரிய வெளிச்சம் பெற்ற நிலவை அனைவரும் நேசிப்பது

போல..மகிழ்ச்சியையும்,காதலையும் நான் உன்னிடம் 

பெற்றே பிரதிபலிக்கிறேன் என தெரியாமல் 

என்னைக் கொண்டாடுகிறார்கள்..

 



எந்த நேரம் உன்னை நான் நெருங்கினாலும் உன்னிலிருந்து 

காதல் வீசிக்கொண்டே இருக்கிறது..என் மீது..லவ்யூடி ஹனி..

 



இத்தனை அழகையும் நீ ஒருத்தியே வைத்துக்கொள்வது 

தவறு ஹனி.. ஒரு குட்டி தேவதைக்குக் கொடுப்போம்..வா..!!!

 



கண்கள் முழுக்க காதலை நிரப்பிக்கொண்டு, வெளிவரத் 

துடிக்கும் வார்த்தைகளை கொஞ்சம் விழுங்கி பின் நீ பேசும் 

அழகைக் காணவேணும் உன்னுடனே இருந்துவிடுகிறேன் ஹனி..

No comments: