அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
சின்ன சின்ன விஷயங்களுக்காக அதிகம் வருத்தப்படுபவர்கள்,
அதிகம் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள்..
சில பிரச்சினைகளுக்கு முடிவு மரணம் மட்டுமேனு நினைக்கும்
பலர்,பல பிரச்சினைகளுக்கு அது தான் தொடக்கம்ன்னு
உணர மாட்றாங்க..
எழுதுவதற்கு மனதில் எண்ணம் இருந்தால் போதும்..
வார்த்தைகளை வசமாக்கவே சிறிது பயிற்சி அவசியம்..
பெரும்பாலான வார்த்தைகள், உண்மையை சொல்லப்
பயன்படுவதை விட,மறைக்கவே அதிகம் பயன்படுகின்றன..
பொண்ணுங்க கூட பழகும்போது ஒரு பிரச்சினையும் வராம
நல்லபடியா போய்க்கிட்டு இருந்தா, ரிலேஷன்ஷிப்
சீக்கிரமே முடியப்போகுதுன்னு அர்த்தம்..
தொலைந்த இடத்தில் இருக்கும் பொருளைக்
கண்டுபிடிப்பது சுலபம்..இந்த மானங்கெட்ட மனசை
தொலைச்சிட்டேன்..அது ஒவ்வொரு அழகான பொண்ணு
பின்னாடியும் அலையுது..# ஹே..ஓடாத..நில்லு...
சீக்கிரம் முடிக்கணும்னு எவனையாவது ஹெல்ப் கேட்டு
அது தப்புன்னு தாமதமா புரிஞ்சிக்கிட்டு அப்புறம் நாமே
செய்வதை விட, தாமதமானாலும் நாமே தப்பு செய்து
அதை திருத்திக்கிறது எவ்வளவோ நல்லது..
குழந்தைகளுக்கு HUGGIES போல, சில "பெரியவங்களுக்கு"
வாயில இருந்து வார்த்தைகள் அத்தனையும் உறிஞ்சிக்கிற
மாதிரி ஏதாச்சும் கண்டுபிடிங்கப்பா..வாங்கி கட்டி விடணும்..
தெரியாதுன்னு சொல்றதை விட,"நீங்க சொல்லுங்க..
தெரிஞ்சுக்குறேன்னு" சொல்லிப்பாருங்க .. பில்டப்
இருந்தாலும் பலன்கள் நல்லா இருக்கு..
No comments:
Post a Comment