Sunday, November 17, 2013

ஏன் இப்படி ...77

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

உங்களைத் தவிர நாங்க வேற யார்கிட்ட சிரிச்சு பேசினாலும் 
 
சூர காண்டு ஆகுரீங்களே..ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?



உங்களுக்கு மட்டும் எல்லாரும் நண்பர்களா இருக்கணும்..
 
நாங்க ம்!@#$%^ பிடிச்சி இழுத்து சண்டை போட்டுக்கணும்..
 
இது என்ன நோய் பாஸ் / கேர்ள்ஸ்..?




எங்களுக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை 
 
இருக்குனு சொல்லும்போது ஒரு மொக்கை காரணம் சொல்லி 
 
எங்களை உங்க கூட இருக்க வச்சி இம்சை பண்றீங்களே.. 
 
ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?




பக்கத்தில இல்லைனாலும் நாங்க சந்தோஷமா இருக்கும்போது  

ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி எங்க நிம்மதியைக் 

கெடுப்பதில் என்ன ஆசை பாஸ் / கேர்ள்ஸ்..?











நாங்க சொல்ற எந்த கருத்தையும் ஒத்துக்காம ஏதாவது 

காரணம் சொல்லி தட்டிக்கழிக்குறீங்க..அப்புறம் ஏன் எங்க 

கிட்ட கேட்குறீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?




கொலைகாரனைக் கூட மன்னிச்சுடுவாங்க போல.. 

குடிக்கிறவன்னு சொன்னா கோரமா பார்க்குறாங்க..?


 



எக்ஸாம் ஹாலில் அடுத்தவன் பேப்பரை 

பார்க்கிறதை விட,ஹோட்டலில் அடுத்தவன் என்ன 

சாப்பிடுறான்னு பார்க்கிறதில நம்ம மக்கள் கில்லாடிங்க..




குழப்பத்தில் எடுக்கும் தவறான முடிவுகள் பெரும்பாலும் 

கூட இருப்பவர்களின் குடைச்சலாலேயே எடுக்கப்படுகின்றன..

#கொலை பண்ணிடலாமா.?

 



தன்னைப்பத்தி கேவலமா பேசுறதை சிரிச்சுக்கிட்டே 

ஏத்துக்குறவன் இன்னொருத்தனைப் பத்தி புகழ்ந்தா உடனே 

உர்ருன்னு ஆயிடுறானுங்க..#அட மானங்கெட்ட பதருகளா..



 


குழப்புவதில் தெளிவாகவும் , புரிந்துகொள்வதில் 

எப்போதும் குழப்பமாகவும் இருக்க பொண்ணுங்களாலும் , 

பாஸ்களாலும் மட்டும் தான் முடியும்..#ப்ப்பா... 

No comments: