Monday, March 28, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 13

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
போதை தராத சரக்கு எல்லாம் கெட்ட சரக்கும் அல்ல… 

போதை தருபவை எல்லாம் நல்ல சரக்கும் அல்ல… 

போதை சரக்கடிப்பவர்களை பொறுத்தே இருக்கும்… 

சரக்கை பொறுத்து அல்ல…



கூட்டமாய் இருந்து சரக்கடிக்கும் போது ஒரு கேஸ் 

புல் லும் கொஞ்சமாகத்தான் தோன்றும்… 

தனியாய் இருந்தால் ஹாப் பே அதிகமாகத்தான் தோன்றும்…

மனதை பொறுத்து தான் அளவும்…





அதிகமாய் குடித்திருப்பவனும் , அந்த கூட்டத்தில் 

குடிக்காமல் இருப்பவனும் பர்சுக்குள் பணத்தை 

பதுக்கி வைத்திருப்பான்…





குடிகாரர்களின் மனசு ஒரு தினுசு..

குடிக்கும் முன்பு தான் மட்டும் குடிச்சா போதும்னு 

நினைப்பான்..குடிச்ச பிறகு எல்லாருக்கும் ஊத்து னு

குடைச்சல் கொடுப்பான்..





பஞ்ச பூதங்கள் போல சரக்கடிப்பது என்பது

சந்தோசம் , துக்கம் , கோபம் , எரிச்சல் , அன்பு 

என 5 நிலைகளில் அரங்கேறும்…


உன்னை மட்டை ஆக்க எந்த சரக்கும் இல்லை

என்று எண்ணாதே… எந்த சரக்காலும் என்னை மட்டை

ஆக்க முடியாது என்று கர்வம் கொள்… 

குடிகாரனுக்குனு ஒரு கொழுப்பு இருக்கணும்…





எப்படி குடிப்பது என்று யோசித்து மலைக்காதே…

எப்படி எல்லாம் குடிக்கலாம் என்று யோசி… 

வித விதமா ரக ரகமா…





பிராந்தி குடித்தே போதை ஏறவில்லை 

என்றால் நீங்கள் எல்லாம் பீர் குடித்து என்ன பயன்…?



சரக்கடிப்பது என்பது மூன்று விஷயங்களை 
 
உள்ளடக்கியது… 1.வெற்றி 2. தோல்வி 3. பகிர்தல்…
 
. கவலையை வெற்றி கொள்வது…
 
. போதையிடம் தோற்று போவது…
 
.சங்கடங்களையும் , சைடு டிஷ்களையும் 
 
பகிர்ந்து கொள்வது…





வாந்தி எடுத்தவன் காரணம் சொல்லாமல்

இருப்பதில்லை…வாந்தி எடுக்காதவன் 

சலம்பாமல் இருந்ததில்லை…

No comments: