Thursday, December 1, 2011

என் வாழ்வாதாரம்.

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நான் உன்னை காதலிப்பது தரும் மகிழ்ச்சியைக்காட்டிலும்,

நீ என்னை காதலிப்பதே அதிக சந்தோஷம் தருகிறது..




உன்னுடன் வெளியில் செல்லவே தயக்கமாக உள்ளது..

எதிரில் வருபவர் இறைவனே ஆனாலும் நான் பார்க்க 

கூட மறுக்கிறேனாம்..




பல நேரங்களில் நான் உயிர்த்தெழ மருந்தாய் இருந்த நீ..

இன்று ஏனடி பக்கவிளைவுகள் தருகிறாய்..




நீ என்னை காதலிக்கவேண்டுமேன்பது கட்டாயமல்ல..

ஆனால் நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை காட்ட

மட்டும் தடை போடாதே..



சில நேரங்களில் உன்னுடனான உறவை தக்கவைக்க 

நான் மவுனமாகிறேன்..என் மவுனத்தை தவறாக 

புரிந்து கொண்டு நீ விலகையிலே தான் மரித்து போகிறேன்..


நிஜங்கள் எதுவாய் இருப்பினும்,உன் நினைவுகள் தரும் 

சுகங்களே என் வாழ்வாதாரம்.


காதல் தோல்வி என்று ஒன்று இருக்கவே முடியாது..


அப்படி தோற்க கூடியதாய் இருப்பின்


அது காதலே இல்ல..




நான் இறந்த பிறகு என் செய்வாய் என்று கேட்பவளே..



எனக்கு எப்படி தெரியும்..



நீ இன்றி நான் வாழந்தால் தானே..


இறந்து கொண்டிருக்கும் காலத்தில்,நான் உன்னுடன் 

உரையாடும் இந்த ஒரு சில நிமிடங்களே என்னை 

உயிர்ப்பிக்கும் ஒரே வழி..



என் கவிதைகளின் கருவும் நீ..

என் உயிரின் உருவும் நீ..
 

No comments: