Wednesday, November 30, 2011

மரித்து போகும் என் கவிதைகள்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


யாரைப்பற்றியும் கவலை இன்றி எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் 

என் விரல்கள்..ஏனோ குழந்தைகளை கண்டதும் உடனே 

மறைந்து கொள்கின்றன..




என்னை அதிகமாக மகிழ வைக்கவும்,நெகிழ வைக்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..

# தேவதை ஸ்திரீ..




என்னிடம் சிறந்தது எது என்பது என்னை 

விட உனக்கே தெரிகிறது..  


உன் புடைவைத்தலைப்பால் நீ என் தலை 
துவட்டவேண்டும் என்பதாலேயே நான் தினமும் குடை 
எடுத்து போக மற(று)க்கிறேன்..

யார் யாரோ சிலாகிக்கும் என் கவிதைகள் உன் கவனம் 
பெற முடியாமல் போகையில் மரித்து போகின்றன..
# மனுஷன் பீல் பண்ணி சொன்னா மொக்கை பண்றாளே

என்னை சிலிர்க்க வைக்க சில்லென்ற பனி தேவையில்லை..
உன் சிரிப்பும் பார்வையும் போதும்..
 
அழகிய பாவை நீ பக்கம் இருக்க செடியில் பூத்திருக்கும் 
பூவை ரசிப்பதற்கு நானென்ன ஆக்கங் கெட்ட கூவையா..?
#நீ நாசமா போவ னு எக்கோ கேட்குதே..யாருப்பா அது..?
 
இப்போதெல்லாம் மற்றவர்களுடன் அதிகம் பேசாமல் 
வார்த்தைகளை சேமிக்கிறேன்..உன்னுடன் உரையாடும்போது 
வார்த்தைப் பஞ்சம் வராமலிருக்க..

உன்னை விட்டு விலக நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நீ முன்பைக்காட்டிலும் 
என்னை முழுதாய் ஆட்கொள்கிறாய்..
 

உன்னைப்பார்த்த நாள் முதல் பற்றி எரிகிறேன் நான்.. 
என்னைப் "பற்றி " "அணைத்து" விடேன்..ப்ளீஸ்..

No comments: