Saturday, November 26, 2011

இதயத்தின் சாவி

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




என் காயத்திற்கு காரணமான காதலும் நீ,

அதற்கு மருந்தும் நீ..




வலிகளும் வேதைனைகளும் நிரம்பிய என் இதயத்தின் 

சாவி நீ தானடி..நீ இன்றி அவைகளை வெளியே எறிய முடியாது..

#சீக்கிரம் வாடி ஹனி..




இப்போதெல்லாம் என் இதயத்துடிப்பு என்பது ஒரு நாளைக்கு

  15 முதல் 25 என்று ஆகிவிட்டது.. ஆம்..

உன் குறுஞ்செய்திகளினால் மட்டுமே அது துடிக்கிறது..



உன் இதயத்தில் இடம்பிடிக்க நான் என்றுமே முயன்றதில்லை..

அதை நான் திருடி வெகு நாட்கள் ஆகிவிட்டதே...



அடித்தாலும் அன்னையிடமே அடைக்கலம் புகும் 

குழந்தையைப் போல , நீ எத்தனைக் காயப்படுத்தினாலும் 

உன்னிடமே ஓடி வருகிறேன்..



சிப்பிக்குள் விழுந்து முத்தாய் மாற தவிக்கும் 

மழைத்துளியைப்போல , உனக்குள் நிறைந்து உறைந்து 

முக்தி பெறவே தவமிருக்கிறேன் நான்..

வரம் கொடு வானவில்லே..



பேசிய மணிகளை விட,பேசாமல் இருக்கும் 

நிமிடங்களே மிகவும் நீளமாய்த் தோணுதடி..



உன் ஓரவிழிப்பார்வையினால் பற்றி எரிகிறேன் நான்..

ஒரு தீக்குச்சியைப் போல..எரிந்து கொண்டே தான் இருப்பேன்..

நீ வந்து உன் உதடுகளால் என்னை அணைக்கும் வரை..



எல்லோரும் கவிதை எழுதிக் காதலிக்க,நான் மட்டும் 

கவிதையைக் காதலிக்கிறேன்..ஹ்ம்ம்..எனக்கான 

கவிதை எங்க இருக்கோ..

என்ன பண்ணிக்கிட்டு இருக்கோ..?



உன்னைக்காண காத்திருந்த நிமிடங்களை விட 

உன்னைப்பார்த்து கொண்டு இருக்கும் நிமிடங்கள் 

வேகமாய் கரையுதடி..

No comments: