Friday, November 4, 2011

மாத்தி யோசி ..47

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




தன்னிடம் வரும் அனைத்தையும் தன்னைப்போலவே மாற்றும் 

குணம் பயர் க்கு மட்டுமில்ல பிகர் க்கும் தான்..

#என்னையும் நல்லவனா மாத்திட்டாளுங்க சார்.




ஜெயிக்கிறவன் வழி நடத்துறான்..

தோத்துப்போறவன் புத்தி சொல்றான்..

அதனால எல்லாரும் காதலிங்க..தப்பில்ல..



அலுவலகத்தில் என்னை யாரும் தயவு செய்து வேலை 

செய்ய சொல்ல வேண்டாம்..அங்கு நான் எப்போதுமே 

ஆக்டிவாக இருப்பதில்லை..#மேலாளருக்கு..




பிகர் உஷார் ஆகும்போது என்னோட திறமையை கண்டு 

நான் பெருமைப்படுறதில்லை..ஆனா சிக்காம போற 

பிகர்களை பார்க்கும்போது எத்தனை பேரு நூல் விட்டு 

நொந்து போனாங்களோனு வருத்தமா இருக்கு.




பெரிய பேனா வாங்குவது ஈசி..ஆனா சின்ன பேனா மூடியை 

வாங்குவது கஷ்டம்..எனவே எல்லாரும் டிக் டிக் பேனா

வாங்குங்க..#இனிமே யாராவது தத்துவம் சொன்னீங்க 

நானும் ஆரம்பிச்சுடுவேன்..முடியல எசமான்..






திருடனுக்கு தேள் கொட்டியது போல - நமக்கு வேலை 

இல்லைன்னு நல்லாத்தெரிஞ்சுகிட்டு மொக்கை போடுற 

மேனேஜர்கிட்ட மாட்டிக்கிறது..# மாட்டிண்டேன்..






எப்போ நாம ஒரு தற்காலிகத் தீர்வை நிரந்தரம்னு 

நினைக்க ஆரம்பிக்கிறமோ..கடைசி வரை அந்த பிரச்சினை 

தீர்வதே இல்லை..#அனுபவம்..அவ்வ்வ்..




பிச்சை எடுக்க முடிவு பண்ண அப்புறம் பித்தளை

பாத்திரமென்ன,திருவோட என்ன,அலுமினியம் என்ன..

எல்லாம் ஒண்ணு தான்..பிகரை பிக்கப் பண்ண முடிவு பண்ண 

அப்புறம் ஜில் என்ன,ஜங் என்ன,ஜக் என்ன..

எல்லாம் ஒண்ணு தான்..






நாம மட்டும்னு நினைக்காம அடுத்தவங்களை 

சந்தோஷப்படுத்துவது தான் உண்மையிலேயே அதிக 

சந்தோஷத்தை தருது..




நீர் போகும் வழியில் போக நாம் இறந்த மீன்கள் அல்ல..

உயிருள்ள மீன்கள் போராடி எதிர் திசையில் செல்லும்..

#இந்த வாரமும் ஆடிட்டிங்காம்..அவ்வ்வ்வ்..

No comments: