Thursday, December 15, 2011

என்னை இயக்கும் ரிமோட்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




உன் கையால் நீ ஊட்டிவிட,உணவின் சுவை மறந்து,

உன் விரல்களின் சுவை உணர்ந்து பசியாறவே 

எனக்கு விருப்பம்.ஹ்ம்ம்..எப்போ கிடைக்குமோ..




அதை செய்யாதே என்று நீ அதட்டும்போது செய்து விட 

அடம்பிடிக்கும் என் மனது,அதையே நீ கொஞ்சலாய் 

சொல்லும்போது உன்னிடம் சரணடைந்து விடுகிறது..




உன்னிடம் வெளிப்படும் என் கோபமான வார்த்தைகளும்,

கொஞ்சல் போலவே இருக்கிறது..போடி பம்ப்ளிமாஸ்..




மழலையின் குரலில் அம்மாவென்று அழைக்க சொல்லி 

ஆனந்தப்படும் தாயைப்போல..என்னை ஐ லவ் யூ சொல்ல 

வைத்து அழகு பார்க்கிறாய் நீ..லவ்யூடி ஹனி..




உன்னைக்கேட்க நான் யாரு என்று நீ சொல்லுவதே 

ஊடலின் உச்சம்..

கோவிச்சுக்காதடி ஹனி..நான் பாவம்.. 


ALL ROADS LEADS TO ROME என்பதை போல என் 

அனைத்துக் கவிதைகளும் உன்னையே வந்தடைகின்றன .


I NEED YOU ALWAYS IN ALL WAYS..# LOVE YOU HONEY 


குதர்க்கமாய் பேசி என்னைக் கோபப்படுத்தவும் செய்கிறாய்..

கொஞ்சிப்பேசி என்னைக் குளிர வைக்கவும் செய்கிறாய்..

என்னை இயக்கும் ரிமோட் நீ..


மற்றப் பெண்களிடம்  இல்லாத எதுவும் உன்னிடம் 

ஸ்பெஷலாக இல்லை..ஒரே வித்தியாசம் எல்லாப் 

பெண்களிடமும் ஏதோ ஒன்று குறையும்..

உன்னிடம் மட்டுமே அத்தனையும் இருக்கும்..

அதீதமாகவே இருக்கும்..

 
நான் கொஞ்சம் கூட நடிக்காமல் நானாகவே இருப்பது 

உன்னிடம் மட்டுமே..லவ் யூடி ஹனி.. 

No comments: