Sunday, February 27, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஹ்ம்ம்…இப்படியாக என் பள்ளிக்கூட காதல்கள்

என்னை கடந்து போயின…

ரெண்டு பொண்ணுங்களை பத்தி சொல்லாம விட்டுட்டேன்…

அதுல ஒருத்தி ஜெயந்தி…

என்னைவிட ஒரு வருஷம் ஜூனியர்…எங்க தெருவில

தான் இருந்தா…அவங்களோடது தெலுகு குடும்பம்…

( காதலுக்கு ஏதுடா மொழி…" மொழியே " காதல் தானே..)

அவ அண்ணன் பேரு கிரி…அவர் எங்க ஏரியா கிரிக்கெட் டீம் ல

சீனியர் செட்டு… நாங்க ஜூனியர்…நான் ஆல் ரவுண்டர் னு  

நானே சொல்லிக்கிட்டு திரிவேன்…
 
( இந்தியன் ப்ளேயர்ஸ் போல…)

அவங்க வீட்ல இருக்குறவங்க யார்கிட்டயும் நான் 

அவ்வளவா பேசுனது இல்ல… அவளையும் அவ அண்ணனையும் 

தவிர… எப்பவுமே தெருவுல விளையாடிகிட்டு கூச்சல் 

போட்டுக்கிட்டு இருந்ததால எங்க  பசங்களை யாருமே 

வீட்டுக்குள்ள விட மாட்டாங்க… 
 
( எப்படிடா விடுவாங்க…எப்ப பாரு அழுக்கு டவுசரும்…

காஞ்ச தலையுமா தானே இருந்து இருப்பீங்க…)

எது எப்படியோ அவகிட்ட ஸ்கூல் ல வச்சி பேசிடுவேன்… 

அவளும் என்னை பேர் சொல்லி தான் கூப்பிடுவா… 

(கூப்பிட தானே நாயே பேரு வச்சாங்க… 

அப்புறம் என்னை பெருமை…)
 
நல்லவேளையா…என்னை அவ அண்ணா னு கூப்பிடலை… 

அப்படி மட்டும் சொல்லி இருந்தான்னா… 
 
( என்ன நாயே பண்ணி இருப்ப… வேற பிகர்

பின்னாடி போயிருப்ப…) 
 
ச்சி..இப்படி ஒரு கெட்ட எண்ணத்தோட என்கூட 

பழகாதேன்னு கண்டிப்பா சொல்லிருப்பேன்…
 
எங்க ஸ்கூல் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்டது… 



எங்க தொகுதி ல அப்பவெல்லாம் 4 , 5 வகுப்புகளில் முதல் 3 இடம் 


பிடிக்கும் மாணவ / மாணவியருக்கு ஸ்காலர்ஷிப் போல ஒண்ணை


தருவாங்க… கொஞ்சம் பணம்..எவ்வளவுன்னு ஞாபகம் இல்லை… 

ஒரு வருஷத்துக்கு தேவையான நோட்டுகள்… ஜாமின்ட்ட்ரி 


பாக்ஸ்…etc…with ஒரு மெத்தை… அந்த பஞ்சு மெத்தையை எங்க

அம்மா அழுக்கா இருக்குனு ஊற வச்சி துவச்சி உப்ப

வச்சி தூக்கி போட்டாங்க…
 
நான் ஏற்கனவே 4 வதில் அதை வாங்கி இருக்கேன்…

இந்த தடவை 5 வதில்… நான் , ராஜ் குமார் , ஜெனிபர், 4 வதில்

இருந்து ரெண்டு பசங்க மற்றும் ஜெயந்தி…
 
யார் இந்த ஜெனிபர் னு கேட்டீங்கன்னா… கொஞ்சம் wait பண்ணுங்க…


இந்த பதிவு முழுக்க ஜெயந்தியையும் , ஜெனிபர் ரையும் பத்தி

மட்டும் தான்… 
 
இந்த பதிவை எழுதும் போது தான் பழைய பிரெண்ட்

ஒருத்தனுக்கு போன் பண்ணி ஜெயந்தியை பத்தி விசாரிச்சேன்…

( என்ன…எதாவது சான்ஸ் இருக்கானு நாக்கை தொங்க போட்ருப்பே …)

வாய்ப்பு இருக்குமான்னு… ( நான் சொல்லலை…) 
கண்டிப்பா வாய்ப்பு இருக்குடா…ஆனா அதுக்கு அவ புருஷனும்

அவ குழந்தைகளும் ஒத்துக்கனுமேனு சொன்னான்…
 
(என்னது…குழந்தைகளா… 

பிம்பிளிக்கி…பிளாப்பி..மாமா…பிஸ்கோத்து…)
 
அட…கடவுளே இந்த கொடுமை எப்பட நடந்தது னு கேட்டா…


இந்த விபத்து நடந்து 3  வருஷம் ஆச்சாம்… 

பொண்ணு பேரு பூஜவாம்… ( அதெல்லாம் எதுக்குடா உனக்கு…)
 
சரி…நல்லா  இருக்கட்டும்…  ( இது வாழ்த்து மாதிரி தெரியலையே 

மவனே…வயித்தெரிச்சல் மாதிரில தெரியுது…)
 
அப்போ…அந்த மொட்டை மாடி பறக்கும் முத்தங்களும்… 

காக்கா கடி கடிச்ச தேன் மிட்டாயும்… அவங்க வீட்டு சூடான 

வெண் பொங்கலும்… ( நாயே…திங்கறதிலையே இரு… ) 

என் மேல காட்டிய அன்பும்..அத்தனையும் நடிப்பா…

சொல்லு ஜெயந்தி வெறும் நடிப்பா… ( ஆமாண்டா…)

சரி… விடுங்க சார்.. ஊருக்குள்ள இருக்குது ஆயிரம் கட்சி..

அவ இல்லைனா அவ தங்கச்சி… ஆனா அவளுக்கு தங்கை 


இல்லையே… ( உன் கூட தங்க இல்லை னு  புலம்புற…சரியா…? 
 
அடுத்ததா ஜெனிபர்… ஜெனிபர்…  
கூடவே இருக்குற வரைக்கும் அந்த அன்பு புரியாது… 

அவங்க பிரிஞ்சி போன அப்புறம் தான் நாம பீல் பண்ணுவோம்…

இதே தான் நடந்தது எனக்கும்.. இவ எனக்கு 3 வதில் இருந்தே நல்ல

பிரெண்ட்…நான் கிறிஸ்டியன் பிரபா வை காதலிக்கிறேன்னு இவ


கிட்ட தான் முதல்ல சொன்னேன்… எனக்கு அப்ப தெரியலை…

இவ பத்ரி பட பூமிகா போல இருந்து இருக்கான்னு…

அப்ப ஆரம்பிச்ச சண்டை…எங்க ரெண்டு பேருக்குள்ளையும்…

வழக்கம் போலவே நானும் இவ கிட்ட அவளை பத்தியே பேசி


இருக்கேன்…செம காண்டு ஆகிட்டா…
 
எனக்கு உண்மையிலே தெரியாது ஜெனி… 

தெரிஞ்சி இருந்தா உன்னை நான் மிஸ் பண்ணி இருக்க மாட்டேன்…

( பின்ன…என்ன கிஸ் பண்ணி இருப்பியோ…? )
 
அவ வீடு எங்க வீட்ல இருந்தும்..பிரகாஷ் வீட்ல இருந்தும் பக்கம்… 


பிரகாஷும் அவ கிட்ட ஒரு நல்ல பிரெண்டா தான் பழகினான்.. 

என்னை போலவே… எங்களால அப்போ அவளை தப்பா நினச்சி 

பார்க்க தோணலை… ஆனா.. ஜெனி யும் நல்ல அழகா தான் இருப்பா…

ஆனா என்ன கொஞ்சம் குள்ளம்…( இவரு அப்படியே ஆறு அடி 

இருந்தாரு...)

ஜெனி ..Do you remember…? நீயும் நானும் அந்த ஸ்காலர்ஷிப்
 
வாங்கிட்டு H.M மோட  மாருதி Omni ல வந்து கிட்டு இருந்தோம்… 


எனக்கு ஒரு பக்கத்தில நீ…மறுபக்கத்தில ஜெயந்தி… 
 
( உண்மையை சொல்லு…அவளுங்களாவா வந்து 

பக்கத்தில உட்காந்த்தாளுங்க…)

அந்த இடத்தை பிடிக்க நான் பட்ட பாடு இருக்கே…

அய்யையோ… அந்த ரெண்டு சின்ன பசங்களும்…
 
( என்னது..சின்ன பசங்களா…? அப்போ ஐயாவுக்கு என்ன வயசுங்க…? )
 
அதாங்க நாலாவது படிக்கிற அந்த பசங்க ரொம்ப கரைச்சல் 

குடுத்தானுங்க…அப்புறம் சீனியாரிட்டியை  காட்டி பயமுறுத்தி

நான் போயி நடுவுல உட்காந்துட்டேன்…
 
ஜெனி… தூக்கம் வருதுன்னு நீ என் தோள்ல சாஞ்சி படுத்த…

நான் உன்னை தட்டி விட்டுகிட்டே வந்தேன்… அப்ப நீ அழுத..


எனக்கு புரியலை…இப்ப நினச்சி பார்த்த ஏக்கமா இருக்கு ஜெனி…
 
( ரொம்ப காஞ்சு போயி இருக்குறதாலையா…? )

கடைசி வரைக்கும் நான் உன்னை கண்டுக்கவே இல்லை 

ஜெனி…அதுக்காக இப்போ மன்னிப்பு கேட்டுக்குறேன்…
 
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… ஜெனி… 4 மாசத்துக்கு 

முன்னால நான் பிரகாஷ்கூட பேசிகிட்டு இருந்தேன்…

அவனுக்கு நான் போன் பண்ணினதே உன்னை பத்தி எதாவது 

details தெரியுமான்னு கேட்கத்தான்…டே..பிரகாஷ் . சாரி 

மாமா ..கோச்சுக்காதே… நான் உன்கிட்ட அன்னைக்கே

உண்மையை சொல்லிட்டேன்…
( அந்த ராணியை பத்தி சொல்லும்போது இன்னொரு

பொண்ணுன்னு சொன்னியே…அது இவ தானா… 

இதெல்லாம் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு எப்படி 

Follow  பண்றேன் பார்த்தியா…? )


அப்ப தான் அவன் சொன்னான்… நீ இதுக்கு முன்னாடி நான்
 
குடி இருந்த அதே வீட்டுல தான் குடி இருக்குறதா… 

பிரகாஷுக்கும் , சந்தோஷுக்கும்  தெரியும்… நான் 


அன்னைக்கு எவ்வளவு சந்தொஷப்பட்டேன்னு…
 
நான் எட்டாவது படிச்சி முடிக்கிறவரையில் ஒரே வீட்டில் 

தான் குடி இருந்தோம்…அந்த ஓனருக்கு மூணு பசங்க…

ஒரு பொண்ணு.. அந்த மூணு அண்ணனுங்களுக்குமே நான் 

ரொம்ப  pet… அந்த அக்கா கிட்ட மட்டும் எப்பவுமே கொஞ்சம் 

Distance Keep up பண்ணேன்…ஏன்னே தெரியலை… 
 
( என்னது…நீ ஒரு பொண்ணு கிட்ட Distance Keep up 

பண்ணியா….ஆச்சர்யமா இருக்கு…!!!! ) 
 
அதுல ரெண்டாவது அண்ணனுக்கு தான் நான் அன்னைக்கு

உன்னை பத்தி விசாரிக்கலாம்னு போன் பண்ணேன்…


நான் : அண்ணா.. உங்க வீட்ல ஜெனிபர் னு ஒரு 

பொண்ணு குடி இருக்காளா…


அவர் : ஏண்டா கேட்குற…அப்படி யாரும் இல்லையே…
 
நான் : அண்ணா…நல்லா யோசிச்சி பாருங்க… எங்க பசங்க கிட்ட

இருந்து உறுதியான தகவல் வந்து இருக்கு…அவங்க மொத்தம் 


மூணு பேரு அக்கா , தங்கைங்க… முதல் பொண்ணு பேரு 


ஐயையோ…மறந்து போச்சே..சரி...ரெண்டாவது பொண்ணு 


ஸ்டெல்லா… இவ கடைசி ஜெனிபர்… அண்ணா…பொண்ணு 

கொஞ்சம் குள்ளமா இருப்பா…வட்ட முகம்… யார்கிட்டயும் 

அதிகம் பேச மாட்டா.. பார்த்தாலே நல்ல பொண்ணுன்னு

தெரியும்னா…

அவர் : அட…பாவி… அத்தனை அடையாளமும் சரியா


சொல்றியே டா…உண்மையை சொல்லுடா…


உனக்கு எப்படி தெரியும்…?

நான் : அவ என் கூட 5 வது வரைக்கும் படிச்சவன்னா…


அப்பவே எனக்கு அவ நல்ல பிரெண்ட்…

அவர் : டே…நீயெல்லாம் மனுஷனாடா… 5 வதில் படிச்ச 


பொண்ணை இத்தனை வருஷம் கழிச்சி ஞாபகம் வச்சி


இருக்கே…என்னடா...ஆட்டோக்ராப்பா ..

( ன்னா… உங்களுக்கு தெரியாதுனா… இது ஒரு மோசமான

ஆசாமி ண்ணா…)
 
நான்  : அண்ணா…அதெல்லாம் நேர்ல சொல்றேன்… 


மொதல்ல எனக்காக அந்த பொண்ணுகிட்ட நீங்க பேசணும்…

அவர் : யாராவது தப்பா நினைக்க போறாங்கடா…

நான் : அதனால தான்னா உன்னை பேச சொல்றேன்… 


உங்க தம்பிகிட்ட சொல்லாம்னா அவருக்கும் இன்னும்


கல்யாணம் ஆகலை…அதனாலதான்…நீங்க ண்ணா 


ஊருக்குள்ள ஓர் பவுசான ஆளு…Family Man…
 
அவர் : சரிடா…என்னனு போயி பேசுறது….?
 
நான் : உன் கூட 5 வதில் படிச்ச ஒரு பையன் உன்னை பத்தி 


என் கிட்ட கேட்டான்னு சொல்லுங்க… கண்டிப்பா அவ 


யாருன்னு கேட்பா…கணேஷ் னு சொல்லுங்க…


எனக்கு நம்பிக்கை இருக்கு… அவளுக்கு என்னை நிச்சயம்


ஞாபகம்  இருக்கும்…
 
அவர் : எல்லாம் சரி டா… அவங்க வீட்டை காலி பண்ணி


ஆறு மாசம் ஆகுதே…
 
நான் : ணோவ்…வெறுப்பேத்தாதேன்னா…


இதை மொதல்லையே சொல்ல வேண்டியது தானே…
 
( என்ன ராஜா பண்றது… உன் வாழ்க்கையில் இப்பவாவது 

ஒரு ஒளி விளக்கு தெரியுதேன்னு சந்தோஷப்பட்டேன்…

அதுவும் வழக்கம் போல தான்னு இப்ப தானே தெரியுது… )
 
அவர் : கோவப்படாதே டா… அந்த பொண்ணு இதே ஏரியா ல


தான் இருக்கான்னு நினைக்கிறேன்… போன வாரம் கூட 


ரோட்ல பார்த்தேன்…
 
நான் : ஏன்னா… அந்த பொண்ணு எவ்வளவு நாளா 


அங்க இருந்தா…
 
அவர் : ஒரு 5 வருஷம் இருக்கும்டா…
 
நான் : என்னது நாசமாய் போச்சு… அத்தனை வாட்டி 


என்னை வீட்டுக்கு வா…வீட்டுக்கு வாடா னு கூப்பிட்டீங்களே…

ஒரு தடவையாவது எங்க காம்பவுண்டுல வயசு பொண்ணு 


இருக்குதுடான்னு சொல்லி இருந்தா டிமிக்கி கொடுக்காம

உடனே ஓடி வந்து இருப்பேனே..ஏன்னா என் வாழ்க்கையில்


இப்படி எல்லாரும் சேர்ந்து விளையாடிட்டீங்க…
 
அப்புறம் அந்த ஏரியா வில இருந்தா பசங்களுக்கு எல்லாம் 


போன் பண்ணி கெட்ட கெட்ட வார்த்தையால வாயிலேயே


வயலின் வாசிச்சேன்…ஒருத்தன் கூட அந்த வீட்ல ஒரு 


பொண்ணு இருக்குனு சொல்லலைங்க… 
 
( உன் கோபம் நியாயமானது… என்ன ஒரு துரோகம்…)

அதுல ஒருத்தன் சொன்னான்… அவர் தம்பி தாண்டா

உன் ஆளோட அக்காவுக்கு நூல் விட்டாரு…அவர் கிட்ட வேணும்னா

கேட்டு பாருன்னு…அவர் தம்பிக்கு போன் பண்ணி அவரையும்


திட்டினேன்…ஏன்னா எனக்கு சொல்லலைன்னு …


அட பாவி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா…

ஸ்டெல்லாவுக்கு இப்ப கல்யாணமே ஆயிடுச்சி…நீ வேற எதாவது


சொல்லிக்கிட்டு திரியாதேனு சொல்ல… உன்னை பத்தி 

நான் கேட்க… அவர் மர்மமா சிரிச்சிகிட்டே என்னாடா…

லவ்வா…
அதெல்லாம் ஒண்ணுமில்லைனா…ரொம்ப நாள் கழிச்சி

அவளை பார்க்கனும்னு தோணுச்சி..அதான்னு நான் சமாளிக்க… 


மன்னிச்சிடு ஜெனி… நீ யாரையாவது காதலிக்கிறியான்னு 

நான் அவர் கிட்ட கேட்டேன்… அவரோ…ச்சி..ச்சி..அது 

ரொம்ப நல்ல பொண்ணுடான்னு சொன்னாரு…
 
எனக்கு தெரியும் ஜெனி… இருந்தாலும்… இத்தனை வருஷம் 

கழிச்சி உன்னை பார்க்கும் போது நான் வேற எதாவது பேசி

உன்னை சங்கடப்படுத்திட கூடாதுன்னு தான்…
 
நான் சென்னை வரும்போது…உன் வீட்டுக்கு என்னை

கூட்டிகிட்டு வர்றேன்னு சொல்லி இருக்காரு…
 
காத்துகிட்டு இருக்கேன் ஜெனி…

நிச்சயம் இந்த தடவை உன்னை

இழக்க மாட்டேன்…

No comments: