Saturday, November 5, 2011

உயிர்ப்பிக்கும் நினைவுகள்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


இதயத்தை உன்னிடம் இழந்து விட்ட எனக்கு எப்படியடி வலி 

தெரியும்... நீ தருவது மகிழ்ச்சியோ,துக்கமோ அத்தனையும் 

உன்னையே சேரும்..




 

என் கண்களுக்கு மட்டும் காய்ச்சல் வருகிறதடி..

உன்னைக்காணாமல் தவிக்கும் கணங்களில்..



 

உன் மீது கோபம் கொள்ள எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் 

உன் குரல் கேட்டே உருகிவிடுகிறேன் நான்..

என்னமோ போடி..


 

உனக்கு உவமையாய் எதை சொல்லுவது என்று 

தேடித்தேடியே ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறேன்..

# தனித்து தெரியும் தேவதை நீ..

 

உன்னை சந்தித்து திரும்பும் ஒவ்வொரு முறையும் உயிரை 

உன்னிடம் விட்டு வெறும் உடலோடு திரும்புகிறேன்..

பின் உன் நினைவுகள் மீண்டும் என்னை உயிர்ப்பிக்கின்றன..


நீ குமரியாய் இருக்கிறாய் என்று எண்ணி உன்னுடன் 

ஊடல் கொள்ள எத்தனிக்கிறேன்..ஆனால் நீயோ உடனே 

குழந்தையாகி விட நானே சமாதானமும் செய்கிறேன்..




வார்த்தைகளை வசமாக்கி நான் எழுதும் கவிதைகளை விட,

உன்னுடன் பேசும்போது உணர்வு வேகத்தில் நான்

உளறிக்கொட்டுவதையே அதிகம் விரும்புகிறாய்..

ஒவ்வொரு முறை உன்னைப்பார்க்கும்போதும் மூர்ச்சையாகிறேன்..

பின் உன் முத்தத்தால் உயிர்த்தெழுகிறேன்..உன் முத்தம் 

பெறவேணும் உயிர்விட ஆசை..

சில கேள்விகளுக்கு வார்த்தைகளால் பதிலளிக்க முடியாது..

அதில் ஒன்று தான் நீ என்னைக் கேட்டது..

"என்னை ஏன்டா நீ இவ்வளவு லவ் பண்ற..?"



நமக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை அது சுலபமாக

கிடைக்கப்பெற்றவர் அலட்சியப்படுத்தும்போது வேதனையாய்

இருக்கும்.. உயிரற்ற பொருளுக்கே அப்படி என்றால் , 

உன்னை யாராவது அலட்சியப்படுத்தும் போது 

அதிகம் வலிக்குதடி..