அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இன்னைக்கு மேட்ச் இருக்கா..? என நீ
கேட்கும் தொனியிலேயே,தனிச்சையாய்
கூறுகிறேன்.. நான் ப்ரெண்ட் வீட்ல பார்த்துக்குறேன் மா..
உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாருங்க எனும்
உன் கேள்விக்கு "பண்டரிபாய்" என பொய்
சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய..???
உன்
காதல் பொங்கும் தருணங்களில் என் கண்களில்
ஜீவனே இல்லை
என கோபிக்கிறாய்..
#காஞ்சிப் பட்டா,கஜானா ஜுவெல்லரியா என
கலவரம்தான்
தோணுதடி..
என்னிடம் உங்களுக்கு பிடித்தது என்னவெனக்
கேட்கிறாய்.. இப்படி கேட்கும் உன் "நகைச்சுவை உணர்வு"
தான் என எப்படி சொல்ல..!!!
உன் தோழிகளுடன் எடுத்த குழுப்புகைப்படத்தை
காட்டி என் பார்வை உன் மீது மட்டுமே நிலைத்திருக்க
வேண்டுமென எதிர்பார்ப்பது ஏன்டி..?
No comments:
Post a Comment