அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இன்னைக்கு என்னோட பிறந்த நாள்..
அதான் அப்படி ஒரு பதிவும்..இப்படி ஒரு பதிவும்..
இந்த பதிவு போன பதிவு போட்டு வாங்கிக்கட்டிக்கிட்ட
பாவத்திற்கு பிராயச்சித்தம்..
நீ நடந்து வரும்போது மட்டும் தானடி
இதுவரை எனக்கு வந்த பிறந்த நாள்
பரிசுகளில் உன் முத்தத்திற்கு
ஈடாய் எதுவுமில்லை..
உன்னுடன் இருக்கையில் என்னை நானே
உணரமுடிவதில்லை..உன்னால் மட்டுமே முடிகிறது..
அக்கம் பக்கம் கவனித்துக்கொண்டே காதலிக்க..
ஒரு பார்வையில் உயிரை உறிஞ்சி எடுக்கவும்
மறுபார்வையில் அதை திருப்பி தரவும் உன்னால்
மட்டுமே முடியும்..
முரண்பாடுகளின் மூட்டையாடி நீ..
ஒரு பெண் சாதாரணமாக ஏதேனும் என்னிடம் கேட்டாலே
ஏனடி உனக்கு இவ்வளவு ஆவேசம்..
சக்களத்தி பயமா..அடி காதல் கிறுக்கி..
2 comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணேஷ்...
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா... உங்களை சந்திக்க விரும்புகிறேன்... இயலுமா...?
Post a Comment