Saturday, September 8, 2012

சிரிக்கும் கண்கள்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


 


முத்தத்தின் தொடக்கத்தில் உறைய வைத்து உயிரை 

உறிஞ்சும் நீ,முத்தத்தின் முடிவில் அதை திரும்பத்தந்து 

திகைக்க வைக்கிறாய்..



சூழலுக்கு ஏற்றவாறு உருமாறி அலையும் ஆறு,

ஆழியில் அடங்குவதைப் போல… 

என் அத்தனை உணர்ச்சிகளும் உன் ஒருத்தியிடம் மட்டும்..

# ஹனி..



*எனக்கு பிடிக்காதவைகளையே உனக்கு பிடித்த ஒரே 

காரணத்தினால் ஏற்றுக்கொண்ட என்னால்,நமக்கு 

அதிகம் பிடித்த உன்னை , பிடிக்காததுபோல் 

எப்படி நடிக்க முடியும்..?*
*








 

பிரச்சினைகளுக்கு இடையில் சிக்கி மூச்சுத் திணறுகிறேன்..

ஒரு புன்னகை வீசி செல் போதும்..பிழைத்து விடுவேன்..*



*என் காதலினால் உன்னில் அடங்குகிறேன் நான்.. 

உன் காதலினால் உன்னில் என்னை அடக்குகிறாய் நீ..

# அப்போ மொத்தத்தில நான் அடிமை..வெளங்கிடும்*



 


உன்னுடன் இருந்த இனிமையான நினைவுகளே  என்னை 

இம்சிக்கும் இரவுகளுக்கு காரணமாய் அமைவது முரண்..

#என்னடா நடக்குது இங்க…என் கூட இருந்தவ எங்க..*


*

 


என்னைக் காதலித்துவிடக் கூடாதென தவிக்கும் உன் 

போராட்டம் தெரிந்தும் எப்படி நான் நண்பனாய் பழக..?

 


சிறு தூறலாய் என்னுள் நுழைந்த உன் நினைவுகள்,ஈர்ப்பு சாரலாய் 

மாறி இன்று காதல் பெருமழையாய் உருவெடுத்து 

என்னை வதைக்கிறது…வெள்ளம் வரும் முன் வந்து 

அடக்கி விடு அன்பே..

 



சிலருக்கு மட்டுமே கண்களிலும் சிரிப்பு இருக்கும்..என்னை 

நீ பார்க்கும் ஒவ்வொரு முறையும் காதலுடன் கூடிய 

கள்ளச்சிரிப்பை காண்கிறேனடி..உன் கண்களில்…



 



அதிகமாக பேசுவதும் உன்னிடம் தான்..

அதிகமாக மவுனிப்பதும் உன்னிடம் தான்..#ஹனி..  

No comments: