Tuesday, September 4, 2012

மாத்தி யோசி .. 66

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



அடுத்தவங்களை முழுசா நம்பி அவங்க ஏமாற்றும் போது 

ஏற்படும் வலியை விட,நான் என்னை மட்டும் நம்பி 

எல்லாரையும் சந்தேகத்தோடையே  பார்க்குறது 

எவ்வளவோ பரவாயில்லை..


 


கல்யாணம் பண்ணுவதும்,கம்பெனி மாறுவதும் 

ஒண்ணுதான்..ஆரம்பத்தில நல்லா இருக்கும்..

சில மாதங்கள் / வருடங்களில் விட்டுப்போயிட்டா 

நிம்மதின்னு தோணும்..



பசங்களை கோபப்படுத்தவும்,சமாதானப்படுத்தவும் 

பொண்ணுங்களுக்கு சில நிமிடங்கள் தான் தேவைப்படுது..



பொண்ணுங்க எல்லாத்தையும் ரொம்ப நாளைக்கு ஞாபகம் 

வச்சிக்கிறது பசங்களுக்கு பிரச்சினை..பசங்க அடிக்கடி 

மறந்து போறது பொண்ணுங்களுக்கு ப்ளஸ்..



வீம்புக்கு காதலிச்சு வீணாய்ப் போவதை விட..புத்திசாலி 

பேச்சுலராவே இருக்கலாம்..#காதலி கிடைக்காத காண்டு..



கல்யாணம் பண்ணியும் பிரம்ச்சாரியா இருந்த விட்டுடுறீங்க..

ஆனா கல்யாணம் பண்ணாம சம்சாரியா இருந்தா 

தப்பா என்ன..#என்னாங்கடா உங்க நியாயம்…



உயிர் எப்போ போகும்னே தெரியாத இந்த வாழ்க்கையில்

ம__போச்சேன்னு கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது..?



அழகான பொய்யாய் இருக்குறதை விட..நான் கொஞ்சம் 

வருத்தப்பட வைக்கும் உண்மையாவே வாழ்ந்துட்டு போறேன்..


 
விஸ்வரூபம் படத்தின் பெயர் உருது எழுத்துகள் போல உள்ளது.

இது கண்டிப்பா முஸ்லிம் தீவிரவாதிகள் பத்தின கதைதான்னு 

இன்னுமா யாரும் கிளம்பலை..




 


விருப்பமில்லாம ஒண்ணை நல்லதுன்னு சொல்றதை விட,

அதை செய்வதில கிடைக்கும் திருப்தியும்,சந்தோஷமும் 

முக்கியம் ஆச்சே..

No comments: